Search This Blog

Sunday, 5 April 2015

ஜோதிட வாசலில்- மன்மத வருட பலன்கள்.


ஜோதிட வாசலில்- மன்மத வருட பலன்கள்.
துலாம் முதல் மீனம் வரை

துலாம்


(சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன்– ஆடி மாதத்தில்   தங்களுக்கு   வாழ்க்கையில்   வெற்றி மேல்   வெற்றி  கிட்டும்தங்கள் கல்வித் தகுதிதிறமை ஆகியவற்றிற்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன்  நல்ல  வேலை கிடைக்கும்தொழிலில் புதிய திட்டங்கள்புதிய சிந்தனைகள்புதிய  நுணுக்கங்கள்  ஆகியவற்றைப்  பயன்படுத்தி   அதிக   இலாபம்   காண   முயல்வீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம்,  செல்வம்   மற்றும்   நோயினின்று   விடுதலை   ஆகியவை ஏற்படுகின்றன.   ஆவணியில்   புதிய பதவிகளின் சொகுசை,  மகிழ்ச்சியை   அனுபவிக்கும் காலம்தனலாபம்,   மரியாதை   மற்றும்   முனேற்றங்களைத்   தருகின்ற   மாதம் ஆகும்.  வாழ்க்கையில் சிறப்பு மிக்க  மரியாதைகளும்நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும்பங்குனியில் மனஅமைதிஇலாபம்   மற்றும் உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.
        செவ்வாய் – புதிய வியாபார முதலீடுகள் மூலமாக அதிக இலாபங்களை ஈட்டுவீர்கள்சிறுதொழில் புரிவோர் தங்கள் பணியிடங்களில்தீ அணைக்கும் கருவிகளின் பணித்திறனை சோதித்து அறிவதுவிபத்தைத் தடுக்க உதவும்வரவுக்கு மிஞ்சிய வீண் செலவுகள்அதிகரிக்கும் மனவியுடன் மனஸ்தாபம் தவிர்க்கத் தாஜா செய்வது பலன்   அளிக்கும்வழக்குகளில் வெற்றியும்உயர்அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்அதன் பிறகு   பூமிலாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்சொகுசு மற்றும் ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
       புதன் – வருட துவக்கத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும்வாக்கால்      வருமானம் பெருகும்.  கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்தொடர்ந்து வரும் மாதங்களில்,  அலைச்சல் தரும் பயணங்களும்மரியாதையையும்புகழையும் தரும்.    புதிய பந்தங்கள்திருமண உறவுகள் ஆகியவை ஏற்படும்பின் வரும் மாதங்களில்   நம்பிக்கையான நட்புறவுநல்லுணவு ஆகியவை கிடைக்கும்உறவுகளுக்கு முன்னேற்றமும்நற்குணங்களும் ஏற்படுகின்றன.
சுக்கிரன் – வருடத் துவக்கத்தில் வீட்டில்  பெண்கள் மகிழ்ச்சி   அடையும்படியான   நிகழ்ச்சிகள் நடைபெறும்குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும்நல்ல   காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும்தொடர்ந்து வரும் காலங்களில்   ஆசிரியர் உதவிஅறிவு விருத்தி ஆகியவையும்பின் வரும் காலத்தில் தொழிலில் வெற்றி,  பணஆதாயம்முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டுமனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். .
       குரு – வருடத்   துவக்கத்தில்  கர்ம பாவத்திலும்,  பின்னர்   இலாபத்திலும்   சஞ்சரிப்பது  அதனால் ஆனி 20 க்குப் பிறகு அனைத்திலும் இலாபம்   அதிகரிப்பதால்  மகிழ்ச்சியும் அதிகரிக்கும்புகழ் ஓங்கும்,  பிறர் வழங்கும்  மதிப்பு,  மரியாதை   எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும்துயர்தந்த கடன் சுமைகள் குறையும்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்புத்திர பாக்கியம் ஏற்படும்.
       சனி – வருடம் முழுவதும் தனபாவத்தில் சஞ்சரிக்கும் சனிஇதுநாள்வரை ஜென்மச் சனிக் காலத்தில் பட்ட துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும்4, 8, 11 ஆம் இடங்களைப் பார்வை செய்யும் அவர்சீரான உடல் ஆரோக்கியத்தையும்,   வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றங்களையும்தைரியம்தன்னம்பிக்கை   ஆகியவற்றையும் தருகிறார்.  செய்தொழில்வியாபாரம் எதுவாகினும் ஜீவன அபிவிருத்திக்கு திருப்திகரமான சூழலை உருவாக்கும்கலைஞர்களுக்குத் தங்கள் துறையில் புகழ்பெருமை,  விருதுகள்புதிய ஒப்பந்தங்கள்வெற்றிகள் என அனைத்துமே ஏற்றம் பெறும்மொத்தத்தில்   இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
விருச்சிகம்

விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே!   தங்கள் இராசிக்கு மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன் – சித்திரை மாதத்தில்  எதிரிகளை வென்று, வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள்.   உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்ஆவணி மாதத்தில் நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும்.   புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டுகுடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  தை மாதத்தில் மலையென அந்தஸ்து உயரும்இரக்க குணம் அதிகரித்து தான   தர்மம் செய்வார்பிள்ளைகள் மூலமாக இன்பமும்துன்பமும் மாறிமாறி வரும்.
       செவ்வாய் – கடன்கள்   கட்டுக்குள்   இருக்கும்.  சுற்றுவட்டாரத்தில்   மதிப்புமரியாதைகள் கூடும்.  அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளுடன்   சுமுகமாக நடந்தால் சிறப்பான முன்னேற்றங்கள்   ஏற்படும்.  கூடுதலான தன வருமானத்தால் பசப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.  எல்லாம்   சுபமாகவே நடக்கும்ஆடை ஆபரணங்களும் சேரும்திருமணம்மக்கட்பேறு என வாழ்வின்  மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும்.  அடுத்து வரும் மாதங்களில் சிறு விபத்துக்கள்,   காயங்கள் ஏற்படலாம்.  பின் வரும் மாதங்களில் கோபத்தால் காரியங்கள் கெடலாம்சிலருக்கு எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.
   புதன் – புதிய தொழில்,  வணிக முயற்சிகள்   வெற்றி   பெற   புத்துணர்வோடு செயல்படுவது நல்லதுசோம்பேறித்தனத்தைக் குறைத்தும்செயல் திறனை அதிகரித்தும் செயல்பட்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் சிலருக்கு உயர் கல்வியில் தேர்ச்சியும்,   அரசு   உத்தியோகமும்      கிடைக்கலாம்.  எழுத்துத் தொழில் ஏற்றம்  தரும்பல   பரிசுகளும்,  கௌரவமும்   கிடைக்கும்மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பர்பின் வரும் காலங்களில் சாதுர்யமும்சாமர்த்தியமும் பெருகும்பங்கு மார்க்கெட் வகையில் அதிக லாபம் அடைவர்பயன்தராத முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது.
       சுக்கிரன் – குழந்தைகளின் வகையில் சுபச்செலவுகள் இருக்கும்.  உபயோககரமானதும்  மகிழ்ச்சிகரமானதுமான வெளியூர்ப் பயணங்கள் ஏற்பட்டுமனமகிழ்ச்சி அதிகரிக்கும்.   கடின உழைப்பால்விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும்மகனுக்குப் பலநாட்களாக எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும்பின்னர் வரும் காலத்தில் நல்ல குணமுள்ள நண்பர்களுடன் மட்டுமான சவகாசம் மட்டுமே உயர்வைத் தரும்.  சிலருக்கு வெட்டிச் செலவுகளால்   கடன்கள்,  அதிகமாகும்,  பெண்களால்   நஷ்டம்   ஆகியவை ஏற்படும்சொத்துக்கள் சேரும்.  விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர்.
       குரு – தற்போது   பாக்கிய   பாவத்தில்   சஞ்சரிக்கும்   குரு   ஆனி 20 க்குப் பிறகு கர்ம பாவத்தில் இடம் பெறுகிறார்தற்போதைய நிலைப்படிசனியின் பாதிப்பு குருவின் பார்வையால் குறைந்து நன்மை அடைவீர்கள்அதற்குப் பிறகு பணி மாற்றமோவீடு மாற்றமோநிலைமாற்றமோ ஏற்பட வாய்ப்பு உண்டுகுழந்தைகளுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு சிறந்த மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சீராகும்வீடுநிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது நல்லதுநல்ல வேலையைத் தேடிக்கொண்டுஇருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.
சனி– அபாயம்ஆபத்துமனக்கவலை என அளித்து வந்த சனி அதன் பிறகு ஜென்மச் சனியாகக்   களம் இறங்கி உச்சம் பெற்ற குருவின் பார்வையால் வருட ஆரம்பத்தை நல்ல  காலமாகமாற்றிவிடுகிறார்.3,7,10 ஆகிய இடங்களின் மீதான சனியின் பார்வையால்   முயற்சிகள் வெற்றி தரும்பணப்பிரச்சனைகளை சகோதரர்களின் உதவியோடு       லாவகமாகக் கையாள்வீர்கள்பதறிய காரியம் சிதறும் ஆதலால்நிதானமாகப்   பொறுமையுடன் காரியங்களில் ஈடுபட்டால் சிறப்பாக அமையும்புதிய திட்டங்களை   தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல் படுவது சிக்கல்களையும்சிரமத்தையும் குறைக்கும்சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடிஎள் தீபம் ஏற்றிகருப்பு வஸ்திரம் சாத்திமனதார வேண்டி வணங்ககதிரவனைக் கண்ட பனிபோல் கஷ்டங்களும் மறையும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.


தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு   மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்  பார்ப்போம்.
    சூரியன் – வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும்எதிரிகளின்      தொல்லை ஓரளவு குறையும்.  பங்காளிகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நண்பர்களின் ஒத்துழைப்பால் தீரும்புரட்டாசி மாதத்தில் அரசின் உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்அதிகாரிகளின் அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்வெளியூர் பயணங்கள் நன்மைதரும்ஐப்பசி மாதத்தில்  புதிய முயற்சிகளில் வெற்றி  கிட்டும்வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்மாசி மாதத்தில் ஆரோக்கியம் சீராகும்.   சகோதரரால் நன்மை உண்டு.
      செவ்வாய் – வருட ஆரம்பத்தில் சந்தோஷமும்சௌகரியங்களும் பல்கிப் பெருகும்.   தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும்எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும்   வெற்றிப் படியாக இருக்கும்அதைத் தொடர்ந்து வரும் காலங்களில் வெளிநாட்டுப்   பயணங்களால் அல்லது வாணிபத்தால் இலாபம் கிடைக்கும்அதன் பின்னர் வரும் காலத்தில் கால்நடைச் செல்வம் பெருகும்பெண்களுக்கு அடுப்படி வேலைகளின் போது கத்தியால்      அல்லது தீயால் சிறுகாயம் ஏற்படலாம்பொருளாதார நிலை உயரும்புகழும் ஓங்கும்.
      புதன் – வருட ஆரம்பத்தில் நிம்மதியும் சுகமும் ஏற்படும்புத்தி தெளிவுற்றுஅறிவுத் திறன் கூடி, உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும்ஓரு அரசனைப்போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகமிருப்பர்அடுத்து வரும் மாதங்களில் செய்யாத குற்றத்திற்காக                   பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்பேச்சாளர்களுக்கு வாக்குவன்மையால் வருமானமும்,   புகழும் உயரும்பின்வரும் மாதங்களில் பலவகை யோகமும்சந்ததி விருத்தியும் ஏற்படும்.    சிலருக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படும்.
      சுக்கிரன் – குழந்தைகள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும்பதிய ஆடைகள்பொன்   ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும்எல்லா வசதிகளுடனும் கூடிய எழிலான இல்லம்   அமையும்சொற்பொழிவுத் திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும்.  மனைவி வயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள்பின் வரும்   காலங்களில் அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு தலைமைப் பதவி தேடிவரும்தனக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள்.
குரு – தனுசுக்கு அதிபதியான  தேவகுரு,   ஆனி   20 இல்       அட்டம   ஸ்தானம்   விட்டுபாக்கிய பாவ மேறி சுய இராசியைப் பார்க்கிறார்இதுவரை நீங்கள்   செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்தொழில் வளர்ச்சி சிறப்பாகநல்ல முன்னேற்றத்துடன் இருக்கும்தொழில்வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும்.   குருவின் அருளால் மனைவி மூலம் பூரணசுகம் கிடைக்கும்அரசு மூலம் வெகுமதிகள்   மற்றும் பரிசுகள் கிடைக்கும்பின்னர் கீழ்நிலையில் உள்ளவர்களுடனான சினேகத்தால் அவமரியாதை ஏற்படும்.
    சனி –   7½ சனியின்   நுழைவு   வாயிலாக   அமையும் 12 ஆம்   பாவத்தில்   அமர்ந்து சக்திக்கு மீறிய செலவுகளையும்வெகு தூரப்பயணங்களையும் ஏற்படுத்துகிறார்.  வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமை என அனைத்துத் துயரங்களையும் ஒரு சேரத் தரும் சனியின் மீது   வருட   ஆரம்பத்தில்,  தனது   பார்வையைச் செலுத்தி தாக்கத்தை ஓரளவு குறைக்கிறார் தேவகுருகாளஹஸ்தி சென்று   சனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள் குறையும்.       காசியாத்திரை செல்லலாம்மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
மகரம்

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
    கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு   மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன் – ஆனி   மாதத்தில்   நல்ஆரோக்கியம்,  சந்தோஷம்,  மனஅமைதிஇலாபம் ஆகியவை ஏற்படும்ஐப்பசி மாதத்தில் எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும்.  செல்வநிலை உயரும். நோயிலிருந்து விடுதலை பெற்று சுகம் பெறுவீர்கள்கார்த்திகை மாதத்தில்  மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்..  பொதுச்சேவை   செய்பவர்களுக்குச்   சுற்று வட்டாரத்தில்   புகழ் பரவும்பங்குனி மாதத்தில் அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து   கிடைக்கும்உயர் அதிகாரிகளின்   ஆதரவு கிடைக்கும்.
       செவ்வாய் – வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும்தனியார்அரசுப்   பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும்பூமிலாபம்,  மகிழ்ச்சியான      குடும்ப   வாழ்க்கை   மற்றும்   நவநாகரீக,  நவீன   சுக சாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும்பின்னர் உணர்ச்சி மிகுதல்பெண்களால் தொல்லைஅதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும்.   வழக்குகளில்   வெற்றி,   காரிய வெற்றி,   கட்டுப்பாடற்ற சுதந்திர சுகமும் உண்டாகும்.
       புதன் – வருட ஆரம்பத்தில் நிதானமாகப் பொழியும் மழை போலப் பொருளாதார நிலை   சீராக இருக்கும்மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம்உங்கள் சிறந்த உழைப்புக்கான பாராட்டு மழையில் நனைவீர்கள்.   அன்புப்   பெற்றோர்க்கு     ஆரோக்கியக் குறைவு ஏற்படும்சிலருக்கு அவப்பெயர்     உண்டாகலாம்.  பின்   வரும்   காலத்தில் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்கௌரவம்   ஓங்கும்.  அழகிய மனைவி அமைவாள்பலவகை யோகமும்சந்ததி விருத்தியும் ஏற்படும்.   கௌரவப் பட்டங்கள் தேடிவரும்.
       சுக்கிரன் – வருட ஆரம்பத்தில் பொதுச் சேவையால் மதிப்பும்மரியாதையும் கூடி ஏழைப்   பங்காளன் என்று பெயர் எடுப்பீர்கள்செல்வம் கொழிக்கும்தானியவகைகள் குவியும்அரசு   ஆதரவு கிடைக்கும்அரசாங்க விருதுகள் கிடைக்கும்கண்கள் புத்தொளி பெறும்,           முகப்   பொலிவும்,   கவர்ச்சியும்      உண்டாகும்பின்னர் வரும் காலத்தில் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க நேரும். கண்டபடி வேண்டாத  அலைச்சல்கள் ஏற்படும்வெளிநாட்டுப் பயணவாய்ப்புகளால் ஆதாயம் ஏற்படும்இந்திரன்ருத்திரன் போன்று உயர்ந்த வாழ்க்கைத் தரம் அமையும்.
       குரு – ஆனி 20 க்கு அட்டமத்தில் அமரும்  குரு அதற்கு முன் உள்ள நாட்களில் இராசியைப் பார்ப்பதால் தெய்வகாரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைந்திருக்கும்பின்னர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும்வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும்.கையிலுள்ள பணமெல்லாம்   விரயத்தால் கரையும்உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும்.
      சனி – இலாபத்தில் அமரும் சனியின் பார்வை 1, 5, 8 ஆம் இடங்களில் விழுவதால் இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள்குறைபாடுகள்வேண்டாத வெறுப்புகள்தடைகள் அனைத்தும் விலகி       முன்னேற்றம் வரும் காரம் ஆகும்இனி கலகலப்புக்குக் குறைவிருக்காதுசாமர்த்தியமும்,   சாதுர்யமும் கூடிய செயல்பாடுகளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை            எதிர்கொள்வீர்கள்.   பொருளாதாரத்தில் ஒரு புதிய எழுச்சியும்நல்ல வளர்ச்சியும் ஏற்படுவதால்   உள்ளம் மகிழ்வீர்கள்.  புதிதாக சொத்துக்கள் சேரும்தனலாபங்கள் அதிகரிக்கும்புகழ்கௌரவம்உயருதல்,  பதவி உயர்வு,  அனைவரும்    சாதகமாக   நடப்பர்.  அரசாங்கத்திதமிருந்து பரிசுகள்      கிடைக்கும்   வாய்ப்பும்   ஏற்படும்.  மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
கும்பம்

அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
       கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு  மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன் – சித்திரை மாதத்தில் காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே   செல்லுவதால்அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம்வங்கிக் கடன் வாங்கி   வீடுநிலம்    வாங்கும்   பாக்கியம்   ஏற்படும்.   படிப்பில்   அதிக      அக்கறை தேவைஆடி மாதத்தில் வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லதுதொழில்   விருத்தி உண்டுகார்த்திகை மாதத்தில் பணம்  கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.    மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும்.
       செவ்வாய் – வருட   ஆரம்பத்தில்   தொழில்   முன்னேற்றங்களால்   பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும்வசதிகள் அனைத்தும் நிரம்பிய அழகிய வீடு அமையும்புத்திர   பாக்கியம்   ஏற்பட்டு   மனமகிழ்ச்சியும்   ஏற்படும்.  தீயவர்கள் தரும் தொல்லைகள் ஒரு முடிவுக்கு வரும்பின்னர் வரும் காலத்தில்   எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்அரசு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும்வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டுஆனந்தம் பொங்கும்அந்தஸ்து புகழ் ஓங்கும்.
       புதன் – மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள் மெத்தனமாக இராமல்கவனமாக படித்தால் நன்றாக மிளிரலாம்குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கான   நல்ல தருணங்கள் அமையும்உறவினர்நண்பர்களின் வரவு உற்சாகம் தரும்.   கலைஞர்களின் கௌரவமும்புகழும் கூடும்உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போகமுடியாத நிலையால்வரவேண்டிய பதவி உயர்வுகளில் இடைஞ்சல்கள் ஏற்படும்.    பின் வரும் காலத்தில் பேச்சாளர்களுக்கு தங்கள் வாக்குவன்மையால் வருமானம் பெருகும்அரசியல் வெற்றிகளால் ஏற்படும் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காதுபுத்தி கூர்மை,   பலம் மற்றும் திறமை ஆகியவை அதிகரிக்கும்.
       சுக்கிரன்.— கடினமான காரியங்கள் என நினைத்த காரியங்களைக் கூட எளிதில் முடித்து உங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் பாராட்டுப் பெறுவீர்கள்.   புதிய இடமாற்றங்கள் நன்மை அளிக்கும்சேமித்து வைத்த மற்றும் வங்கிக் கடன்கள்   மூலமாகக் கிடைத்த பணத்தால் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.  மிடுக்காக நல்ல   உடைகள்   அணிந்து அனைவரையும் கவர்வீர்கள்.      வாஸனாதி   திரவியங்கள்   மீதான              விருப்பம்.   மிகவும்   அனுபவித்து   உணரும் மனமகிழ்ச்சிதிருமணம்,   உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை ஏற்படும்
      குரு – ஆனி 20 க்குப் பிறகு ஏழாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார்திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும்புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்    புத்திர பாக்கியம் ஏற்படும்.   குடும்பத்தில்   நிலவிய   குழப்பங்கள்தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும்.  நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள்எதிரிகளை வெல்லுதல்அதிகரிக்கும்       சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும்சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.   ஏமாற்றங்கள்மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கைகணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள்   ஆகியவை தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும்.
      சனி – கர்ம பாவத்தில் இந்த வருடம் நிலைத்திருக்கும் சனி தன் பார்வைகளை 4, 7, 12 ஆம் இடங்களின் மீது வீசுகிறார்இதன் காரணமாக செல்வநிலை சிக்கலின்றி சீராக உயரும்ஸ்திரச் சொத்துக்கள் சேரும்தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் அதிக வருமானம் பெற கைகொடுக்கும்குடும்பத்தினரிடையே ஏற்படும் குழப்பங்கள் பெரியவர்களின்    தலையீட்டால் நேர்படும்புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்த்ததை விட இலாபம் கிடைக்கும். 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களில் மட்டுமே சாதகமான மற்றும் அனுகூலமான பலன்களைத் தரும் ரவிபுத்திரன் தங்களுக்கு அனுகூலமற்ற பலன்களையே தருவான்ஆயினும் குருவின்   பார்வையின் மகிமையால் குறையும் இன்னல்கள்காரியத்தடைகள்மனமகிழ்ச்சியின்மை,   வழக்குகள் மற்றும் அதற்கான தண்டனைகள் என சாதகமற்ற நிலையே நிலவுவதால் புனித   யாத்திரையாகத் திருநள்ளாறு சென்று சனிபகவானை சேவித்து வந்தால்பகலவனைக் கண்ட பனிபோல் பறந்து மறைந்துவிடும் துன்பங்கள்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித       நற்பலன்கள் ஏற்படும்.

மீனம்

பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு   மன்மத வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
       சூரியன் – வைகாசி மாதத்தில்  உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும்மனைவியால் குடும்ப சுகம் அதிகரிக்கும்எதிலும்   துணிந்து இறங்கும் மனோதைரியம் கூடும்அரசு மற்றும் மீடியாக்கள் மூலமாக சிறந்த   சேவைக்காக சிறப்பான கௌரவங்கள் வந்து  சேரும்ஆவணி மாதத்தில் பகைவர்களை வெல்வீர்கள்நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும்.   மன   விருப்பங்கள்   அனைத்தும் நிறைவேறும்மார்கழி மாதத்தில் வெற்றி மேல் வெற்றிகள் குவியும்எடுக்கும்     காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே முடியும்நல்ல தோழமை கிடைக்கும்தை மாதத்தில்   சூரியன் புதிய பதவிகௌரவம் மற்றும் அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கும்.
       செவ்வாய் – புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால்எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து,  சுவைதரும் காலம் கண்ணுக்குத் தெரியும்சரியற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம்சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில்   ஈடுபடுவர்பொருளாதார உயர்வு ஏற்படும்பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும்அதன்  பிறகு தனதான்ய விருத்தி ஏற்படும்எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்பகைவரால்   ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும்தகராறுகள்வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.
       புதன் – நீண்ட தூரப் பயணங்களால்    நன்மை ஏற்படும்.  புத்தாடை,  புது   ஆபரணங்கள் சேர்க்கை,  ஏற்படும்திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும்அழகிய மக்கட்பேறு உருவாகும்.  அதன் பிறகு   பிறருக்கு தான தருமம் செய்கிற புண்ணியம் கிடைக்கும்விவசாய  உற்பத்திகள் பெருகி   ஆதாயமும் பெருகும்சிலருக்குப் தகாத ஆசைகளும்கெட்ட   சவகாசங்களும் ஏற்படும்எனவேஎச்சரிக்கை தேவை.
    சுக்கிரன் – புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும்தாயாரின் உடல்   நிலையில் அக்கறை கொள்ளுங்கள்பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன்      வெளிப்பட்டு,   அவர்களால்   உங்களுக்குப்   பெருமை   சேரும்.   தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள்   ஏற்படும்.  உங்கள்   கடமை   தவறாத உணர்வால்உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.  உயர் வாகனாதிகள்   கிடைக்கும்கல்வியில் முன்னேற்றம் இருக்கும்சுப காரியச்    செலவுகள் கூடும்அச் சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சியும் கூடும்அதன் பின்னர்    வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும்புண்ணிய   யாத்திரைகள் மனஅமைதி   தரும்புதிய இடமாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
    குரு – ஆனி 20 ஆம் நாள் ருணபாவத்திற்கு இடம் பெயரும் குருவால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும்தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.  வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாதுகடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.   அதற்குப்   பின் வரும் காலங்களில்   மனைவி      மக்களுடன்   வாழ்க்கை   சந்தோஷமாகக்   கழியும்.  வீட்டில் மங்கள சுபகாரியங்கள்       இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
    சனி – பாக்கியத்தில் உள்ள சனிபகவான் ஓய்வற்ற நிலையைத் தருகிறார்எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம்கடின உழைப்புக்கு எப்போதும் கட்டாயம் பலன் உண்டுதகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு.   திருநள்ளாறு திருத்தலம் சென்று மந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள்   குறையும்ஆயினும் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க எடுத்ததுதானே இந்த மனிதப்பிறவிபுதிய பெண்கள் தொடர்பு ஏற்படும்பிரபலமாகிமுக்கிய நபர் என்று பெயர் எடுப்பார்உயரிய   பதவிகள் தேடிவரும்மிகுந்த செல்வங்கள் சேரும்மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.






   



No comments:

Post a Comment