சூரியனின் கோசார பலன்கள்
.
சூரியனின் கோசாரம், ஜன்ம இராசியில் அல்லது சந்திரனில் இருந்து 3,
6, 10, 11 ஆகிய இடங்களில் நற்பலன்களை அளிக்கிறது. மற்ற இடங்களில் அசுப்பலனகளைத் தருகிறது.
கோசார சூரியன் இலக்னத்தில் வரும்போது வீடுஇழப்பு, பதவி இழப்பு, கௌரவ பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
இரத்த அழுத்தம், செல்வம் இழத்தல், வயிறு உபாதைகள், மார்புவலி, ஆஸ்துமா, கண் நோய் ஆகியவையும் ஏற்படலாம்.
குறிக்கோளற்ற, வெறுக்கக் கூடிய, அலைச்சல் மிக்க பயணங்களை மேற்கொள்ள நேரும். காரியத் தடைகள், தாமதங்கள் ஏற்படும். பயமும், குடும்பத்தினரிடம் இருந்து பிரிவும்
ஏற்படும்.
கோசார
சூரியன் ஜனன இராசிக்கு 2 ஆம்
இடத்தின் மீது நகரும் போது பணம் இழப்பு, பொருளாதாரக்
கவலைகள், பயம், சந்தோஷமின்மை
ஆகியவை ஏற்படும். பிடிவாத குணமும், கவலைப்படுதலும், சூது, ஏமாற்றும் குணங்களும் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சண்டை
ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வீணாகும்.
கோசார சூரியன் இராசிக்கு 3 இல் - தனலாபம், புதிய பதவிகள், புதிய அந்தஸ்து, சந்தோஷம், நல் ஆரோக்கியம், நோய்களில் இருந்து விடுதலை, எதிரிகளை வெல்லுதல், இலாபங்கள், வாழ்க்கை சுகங்கள், உயர்அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல், விசேஷ கௌரவம், உயரிய நிலை, பதவி. நல்ல மனிதர்களின் நட்பு ஆகியவை ஏற்படும்.
கோசாரத்தில் இராசிக்கு 4 இல் சூரியன்வர
கஷ்டம், பயம், சந்தோஷமின்மை, ஆரோக்கியக்குறைவு, பணம் கொடுத்தவர்களால் தொல்லை, நோயால் பயம், கௌரவக்குறைவு, பொருளாதார கஷ்டங்கள், கவலைகள், மணவாழ்க்கையில் இடையூறுகள், காமத்தில் திருப்தி இன்மை, சண்டைகள், தகராறுகள், நண்பர்கள், உறவுகளிடம் வழக்கு விவகாரங்கள் ஆகியவற்றை அனுபவிக்க நேரும்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 5 ஆம் இடத்தின் மீது நகரும் போது பணிவு, அடக்கத்தையும், மனக்கிளர்ச்சியையும், எதிரிகளால் கலவரப்படுதலும்,
தர்மசங்கடங்கள் ஏற்படுதலும், தனக்கும்,
தன் குழந்தைகளுக்கும் ஆரோக்கியக் குறைவு ஏற்படுதலும், வீண் செலவுகளும், விபத்துக்களும், அரசாங்கத்தின் அதிருப்தியும், பதவியில் உள்ள அரசியல்வாதிகள்,
அதிகாரிகள்,ஆகியோரின் அதிருப்திக்கு ஆளாகுதல்,
எல்லா வழிகளிலும் தர்மசங்கடங்கள், பணம் இழத்தல்,
கவலைகள், உறவுகளிடம் இருந்து பிரிதல் ஆகிய நிகழ்வுகள்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 6 ஆம் இடத்தின் மீது நகரும் போது எதிரிகளின் அழிவையும், நல் ஆரோக்கியத்தையும்,
சந்தோஷத்தையும், மனக் குழப்பங்களையும்,
மனக் கவலைகளையும் நீக்குதலையும், மனஅமைதியையும்,
இலாபத்தையும், உற்சாகத்தையும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியையும் அளிக்கவல்லது.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 7 ஆம் பாவத்தில்
நகரும்போது அலைச்சல் மிக்க பயணங்கள், வயிறு, அனூஸில் வியாதிகள் ஆகியவை ஏற்படும். வயிற்றுப்போக்கு,
சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல், காய்ச்சல்,
களைப்படைதல், அஜீரணம், மனைவியுடன்
தகராறு, மன அழுத்தம் மற்றும் கவலைகள் ஏற்படும்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 8 ஆம் பாவத்தில்
நகரும்போது பயத்தையும், கஷ்டங்களையும், நோயையும், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு, உயர் அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினரின் வெறுப்பு, அதிக
வெப்பத்தால் கஷ்டப்படுதல், நண்பர்களுடன் சண்டையிடுதல்,
கொடியவர்களுடன் தொடர்பு, எக்குத்தப்பாக செலவிடுதல்,
உயர் இரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு,
இறப்பு ஆகியவை ஏற்படும். சிடுமூஞ்சித்தனம் உடையவராய்
இருப்பார்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 9 ஆம் பாவத்தில்
வரும்போது அபாயம், மதிப்பு, மரியாதை,
கௌரவம் ஆகியவற்றை இழத்தல், பெரியவர்களுடன் பகை,
நம்பிக்கை இழத்தல், உற்றார், நண்பர்களைவிட்டுப் பிரிதல், மனஅழுத்தம், தீயநடவடிக்கைகளில் ஈடுபடுதல், அவமானப்படுதல்,
ஏக்கம், மனச்சோர்வு ஆகியவை ஏற்படும். பணவிஷயத்தில் பகைமை ஏற்படும்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 10 ஆம் பாவத்தில்
வரும்போது சூரியன் வெற்றியைக் குறிக்கிறார். எந்தவொரு முக்கிய
விஷயத்தில் இறங்கினாலும் வெற்றிகரமாக முடிக்கும் திறனை வழங்குகிறார். சந்தோஷத்தையும், சொத்துக்களையும், நோய்களில் இருந்து விடுதலையையும், தனலாபத்தையும்,
ஆடம்பரமான, நவநாகரீகப் பொருட்களையும், நல்ல பண்புள்ள மனிதர்களின் அருகாமையையும், உயர் அதிகாரிகளின்
ஆதரவையும் தருகிறார்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 11 இல் வரும்போது சந்தோஷ அளிக்கக் கூடிய
புதிய பதவி கிடைக்கும், மதிப்பு, மரியாதை
உயரும், தனலாபம், இடைவிடாத வெற்றிகள்,
எடுத்த காரியங்களில் முன்னேற்றங்கள், வாய்க்கு
ருசியான உணவுவகைகள்,
மகிழ்ச்சியான மணவாழ்க்கை ஆகியவற்றைத் தருகிறார்.
கோசார சூரியன் ஜனன இராசிக்கு 12 ஆம் இடத்திற்கு வரும்போது கவலைகளையும், சொத்துக்கள் இழப்பையும், நண்பர்களுடன் சண்டையையும்,
காய்ச்சல், தேவையற்ற விசாரங்கள், நோயால் பீடிக்கப்படுதல் அல்லது கஷ்டப்படுதல் ஆகியவற்றைத் தருகிறார்.
No comments:
Post a Comment