உ
நல்ல பலன் அளிக்கும் நவநவாம்சக் கட்டம்.
மிகத் துல்லியமான பலன்களைக் காண உதவுவது நவநவாம்சக் கட்டம் ஆகும். இதுவொரு, தெளிவான ஜோதிட கணித முறையாகும் என பீ.வி. இராமன் தனது பிரசன்ன மார்க்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
ஜோதிட ஆராய்ச்சியாளர்கள், நவநவாம்ச பலன் காணும் முறையானது, மிகவும் நம்பத் தகுந்தது எனக் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக, இரட்டைப் பிறவிகளின் ஜாதகங்களில் ஏற்படும் துல்லியமான பலன் மாறுபாடுகளை கணிக்க இது பெரிதும் உதவுகிறது. நவாம்சம், நவாம்ச இலக்னம் ஆகியவை தரும் துல்லிய பலனைக் காட்டிலும், நவநவாம்சக் கட்டம் மிகத் துல்லியமான பலன்களை அளிக்கிறது என்றால் மிகையாகாது. இராசி, நவாம்சக் கட்டத்திலுள்ள கிரக நிலைகள் மற்றும் கிரக பலங்களோடு ஒப்பிடும் போது, நவநவாம்சக் கட்டத்திலுள்ள கிரக நிலைகள், அவைகளின் மிகத் தெளிவான, உண்மையான பலத்தைக் காட்டும் விதத்தில் அமைகிறது.
இந்த கணிதமுறைக்கான விதிமுறைகள் மற்றும் பொதுவான விதிகள் ஆகியவற்றை இக்கட்டுரையின் மூலமாகத் தெளிவாக அலசுவோம்.
எந்த ஒரு ஜாதகத்திலும் இராசி என்பது 30 பாகைகளைக் கொண்டது என்பது நாம் அறிந்ததே. நவாம்சம் என்பது 30÷9 = 3°. 333333333. ஆகும். நவநவாம்ச கணிதத்திற்கு மீண்டும் 9 ஆல் வகுக்கவும். அதற்கு விடை =
0. 37037037 வரும்.
இதை நிமிடங்களாக்க 60 ஆல் பெருக்கவும். அதற்கான விடை = 22. 22222222 = 22.22. ஆகும்.
ஓர் இராசியானது சுமாராக 2 மணி நேரம் அல்லது 120 நிமிடம் எனக் கொண்டால், ஒரு நவாம்சம் = 120 ÷ 9 = 13’. 33333333, இதை 9 ஆல் வகுக்க வரும் 1. 48148148 நிமிடங்கள் என்பது ஒரு நவநவாம்ச அளவு ஆகும். இது வினாடியாக மாற்றப்படும் போது 88. 88888889 நிமிடம் = 89 வினாடி ஆகும். நவநவாம்சத்தின் இடைவெளி அளவு மற்றும் கால அளவு 1 : 4 ஆகும்.
இரட்டை பிறவிகளின் பிறப்பு, சாதாரணப் பிறப்பாக இருக்கும் போது, இருவர் ஜாதகத்தின் நவாம்சம் அல்லது நவநவாம்ச இலக்ன வேறுபாடு 89 வினாடிகள் இருக்கும்.
பிரசன்ன மார்க்கத்தில், பீ.வீ. இராமன் அவர்களின் அறிபூர்வமான விளக்கத்தில், உதாரணமாக கடகத்தில் 23° - 12’ அல்லது 113” – 2’ நிற்கும்
சூரியனின் நிலைக்கான, நவநவாம்ச கணிதத்தைப் பற்றி விளக்குகிறார். இந்தப் பாகையை 81 ஆல் பெருக்க நவநாவாம்ச நிலை கிடைக்கும் எனக் குறிப்பிடுகிறார். 113.2 × 81 = 9169°.2 ஆகும்.
இந்த விடையை 360° ஆல் வகுக்கத் தேவையில்லை. 169°.2 ஐ மட்டும் எடுத்துக் கொண்டால், 5 இராசியும், 19°.2’ இல் நவநவாம்சத்தில் சூரியன் இடம் பெறுவார். அதாவது கன்னி இராசியில் இடம்பெறுகிறார். இதைப்போலவே மற்ற கிரக நிலைகளை அறியலாம்.
ஜாதகம் – 1
ஜாதகி பிறந்த தேதி – 13 – 07 – 1971 – 16-55 , 9 வ 55, 78 கி 07. குரு திசை இருப்பு 9 வ 1 மா 21 நாள்.
சூரி
புத
|
சனி
|
|
|
|
கேது
|
|
சந்
|
செவ்
|
லக்///
5.34
|
இராசி
|
|
கேது
|
|
நவாம்சம்
|
சூரி
சுக்
|
||
சுக்
இராகு
|
|
|
|
|||||
செவ்
|
குரு
|
சந்
|
|
|
லக்///
சனி
|
புத
குரு
|
இராகு
|
|
|
செவ்
புதன்
குரு
|
இராகு
|
|
நவநவாம்சம்
|
சந்
|
|
லக்//
சூரி
|
|
|
|
சனி
கேது
|
சுக்
|
|
|
மற்றும் ஒரு
முறை ;-
கிரகங்களின் நவாம்ச
நிலை
|
நவ-நவாம்சம் ஆரம்பிக்கும் இராசி
|
மேஷம்,
சிம்மம், தனுசு.
|
மேஷம்
|
ரிஷபம்,
கன்னி, மகரம்.
|
மகரம்
|
மிதுனம்,துலாம், கும்பம்,
|
துலாம்
|
கடகம்,
விருச்சிகம், மீனம்.
|
கடகம்
|
“ ஜாதக தேச மார்க்கம்” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதப்படி –
இலக்னம் – மீனம் – 27°.44’.
ஃ 27° - 44’ – ( 8 × 3°20’ ) = 27°-44’ -- 26°.40’ = 1° - 4’
= 64’.
64
÷ 22.22 = 2.86135.
நவாம்ச இலக்னம் மீனம் ஆவதால், நவ - நவாம்ச இராசி கடகத்தில் தொடங்கும். முன்னர் கண்ட கணக்கின் முடிவு 2.86135, கடகத்தில்
இருந்து 3 வது இராசி. கன்னியே நவ-நவாம்ச இலக்னம் ஆகிறது. இதே முறையைப் பின்பற்றி இதர கிரகங்களுக்கும் கணக்கிட வேண்டும்.
ஜாதகம் - 2
லக்//
27.44
|
சுக்
|
சூரி
செவ்
|
புத
|
|
லக்//
|
|
சுக்
|
சூரி
|
சனி
|
இராசி
|
கேது
|
செவ்
|
நவாம்சம்
|
குரு
இராகு
|
|||
இராகு
|
|
கேது
|
|
|||||
சந்
|
|
|
குரு
|
சந்
|
புத
சனி
|
|
|
செவ்
|
சந்
|
|
சுக்
|
புத
கேது
|
நவ-நவாம்சம்
|
குரு
|
|
|
இராகு
|
||
|
சனி
|
சூரி
|
லக்///
|
வேத ஜோதிட விதிகளின் படியே இதற்கும் பலன் காணலாம். கிரகங்களின் இயற்கை குணம், நிலை, பார்வைகள், இணைவுகள் ஆகியவற்றை வைத்து இராசிச் சக்கரத்தில் பலன் காண்பது போலவே காணலாம். தசா முறைகளையும் அது போன்றே கையாளலாம்.
ஆயினும், சில ஆறிஞர்கள் குறிப்பிடுவது போல் ஜெய்மினி முறையைக் கையாள்வது சிறப்பு.
நவ-நவாம்ச
சக்கரத்தை பயன்படுத்தும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்.
1. நவ-நவாம்சக் கட்டத்தில் ஒரு கிரகம் பாதிப்படையாத நிலையில் இருந்தால், அது நல்ல குடும்பத்தை அல்லது அதன் தசா, புத்தி, அந்தர, சூட்சும காலங்களில் நல்ல பலன்களை அளிக்கிறது.
2. ஒரு கிரகம் மூன்று கட்டங்களிலும் வர்க்கோத்தமம் ஆனால், உச்ச கிரகம் தரும் பலனைத் தருகிறது. ஜாதகத்தில் உள்ள அசுப தாக்கங்களை அகற்றிவிடுகிறது.
3. ஒரு கிரகம் நவ-நவாம்சத்தில் நீசம், பகை என பாதிப்பு அடைந்தால் தசா மற்றும் இதர காலங்களில் தீய பலன்களைத் தருகிறது.
4. சுய வீட்டில் இருந்தால் தசா மற்றும் இதர காலங்களில் நல்ல பலன்களை அளிக்கிறது.
5. நவ-நவாம்சத்தில் கிரகம் பகை வீட்டில் அமர்ந்தால் தசா மற்றும் இதர காலங்களில் அனுகூலமற்ற பலன்களை அளிக்கிறது.
6. இராசியில் நீசமான ஒரு கிரகம், நவ-நவாம்சத்தில் உச்சம் பெற்றால் தசா மற்றும் இதர காலங்களில் நல்ல பலன்களையே அளிக்கும்.
7. ஆண்-பெண் ஜாதகங்களுக்குள் பலன் காண்பதில் எவ்வித வேறுபாடும் இல்லை.
இராசியில் பார்ப்பதை விட துல்லியமான பலன்களை நவ-நவாம்சத்தில் பெறுகிறோம் என்பதை, மேற்கண்ட ஜாதகங்களின் மூலமாக
அலசுவோம்.
முதலாவது ஜாதகத்தில், அனுகூலமற்ற, 7 ஆம் அதிபதி சூரியன், 8 ஆம் அதிபதி புதன் ஆகியோரின் இணைவு, குடும்ப பாவத்தில் இருப்பது, மணவாழ்க்கையில் அழிவுகளைக் குறிகாட்டுகிறது. புதன் சூரியனுக்கு 10° க்குள் இருந்து, நீச நிலையில் இருப்பதும் நல்லதல்ல.
நவ-நவாம்சக்
கட்டத்தில் பார்க்கும் போது, 7 ஆம் அதிபதி சந்திரன், தனது சுய வீட்டில் இருப்பதும், 8 ஆம் அதிபதி சூரியன், தனது பகை வீட்டில் அமர்ந்து, 7 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதியைப் பார்த்தாலும், இராசிக் கட்ட பாதிப்பை விட குறைவானதாகவே இருப்பதால் மணவாழ்க்கையில் பிரச்சனைகள் குறைவாகவே இருக்கும் என முடிவு எடுக்கலாம். மணவாழ்க்கையில் அழிவுகளை விட, கருத்து வேறுபாடுகளோடு வாழ்வது நல்லதுதானே ? எனவே, இராசி சக்கர பலன் பயமுறுத்துவதை போல் அல்லாமல், நவ-நவாம்ச பலன் நல்ல தெளிவான பலனைக காட்டுவதைக் காணலாம்.
இரண்டாவது ஜாதகத்தில், இலக்னாதிபதி குரு நட்பு வீடான
7 ஆம்
வீட்டில் அமர்ந்து, 7 ஆம் அதிபதி புதன் தன் சொந்த வீட்டில் இருப்பதும், திருமண விஷயத்தில் நல்ல நிலையைக் காட்டினாலும், நவ-நவாம்சத்தில்
7 ஆம் அதிபதி குரு, இலாப வீட்டில் உச்சமாகி இருப்பினும்,
3 மற்றும் 8 ஆம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் 7 இல் அமர்ந்து இலக்னத்தைப் பார்ப்பது,
மணவாழ்க்கையில்
பிரச்சனைகள் வரும் என்பதைக் காட்டுகிறது. இவர்களைத் தாமதமாகத் திருமணம் செய்து கொள்ள ஆலோசனை வழங்கலாம். இங்கும் நவ-நவாம்சத்தின் மூலமாக ஜோதிடர் தெளிவான முடிவுக்கு வந்து சரியான, துல்லியமான பலன் காண ஏதுவாகிறது..
ஜோதிடத்தில் துல்லிய பலன் காணப் பல வழிமுறைகள் இருப்பினும், அதிக நம்பகத்தன்மையுடைய, நவ-நவாம்ச முறையின் மூலமாக மேலும் ஆழமான ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.