Search This Blog

Saturday, 11 July 2015

“தல” மகன், “குட்டி அஜித்”தின் ஜாதக நிலை

தலமகன், “குட்டி அஜித்தின் ஜாதக நிலை
      தலபடம் ரிலீஸ் என்றாலே மாஸ் ஓப்பனிங் தான். அப்படியிருக்க அஜித்துக்கு இரண்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தால் சும்மா இருப்பார்களா ? - ரசிகர்கள். டுவீட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என பிறக்கும் போதே, ஒரு வழி பண்ணிவிட்டார் குட்டி அஜித். நாமும் நம் பங்குக்கு குட்டி அஜித் அரசனாவாரா ? – எனப் பார்ப்போமா !
       கடக இராசி யில் பிறந்தவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள், மனக் கிளர்ச்சி மிக்கவர்கள், கற்பனையில் மிதப்பவர்கள், எதற்கும் வளைந்து கொடுத்துச் செல்பவர்கள், வெளியில் பார்க்கக் கரடு முரடானவராகக் காணப்பட்டாலும் உள்ளத்தால் மென்மையானவர்கள். கடமை தவறாதவர்கள், அன்பு கொண்டவர்களுக்கும், பெரியவர்களுக்கும் உண்மையாக நடப்பவர்கள். இசை கேட்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் மிக்கவர்கள். நிலையற்ற மனம் உடையவர்கள் ஆயினும் உள்ளுணர்வு மிக்கவர்கள். தனது குடும்பத்தாருடன் மிக உன்னதமான, அன்புமிக்க உறவினை உடையவர்கள். முக்கியமாகத் தாயுடனான அன்பு, உறவு மிக உன்னதமான ஒன்றாய் இருக்கும். தாங்கள் அவமானப்படுத்தப் படுவதை எப்போதும் விரும்பமாட்டார்கள். சிலநேரங்களில்  அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டை விரும்புபவர்கள். சில நேரங்களில் காயப்படக் கூடியுவர்கள். மிகவும் பிரியமாக இனிப்பினை விரும்பி உண்பவர்கள். பயணங்களில் ஆர்வமுடையவர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் ஆயினும் வெளிநாட்டுப் பயணங்களிலும் ஆர்வங்கொள்வர். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் திறந்த மனமுடையவர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுபவர்கள் போல் இருந்தாலும், நிறைய விஷயங்களில் உண்மையை வெளிக்காட்டாமல் மனதுக்குள்ளேயே மறைத்துவிடுவார்கள்.  கோபமும், பொறுமையின்மையும், சுறுசுறுப்பற்ற தன்மையும், இவர்களின் பெரிய குறையாக  இருக்கும்.
குட்டி அஜித் தின் ஜாதகம்.
02/03/2015 காலை 04 – 25 – சென்னை. ( நன்றி ; குமுதம் )
சுக்,கேது
செவ்




சூரி
லக்///
இராகு

சூரி

இராசி

சந்
குரு()

நவாம்சம்
புத
புத
லக்///

குரு
()

சந்

சனி

இராகு
சுக்
செவ்
கேது
சனி

சனி இருப்பு – 15 9 மா 04 நாள்.
       பூச நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள் புது நிறமான, நல்ல உயரமானவராக இருப்பார். எச்சரிக்கையுடன் இருப்பார். ஒழுக்கம் மிக்கவர். கொள்கைப் பிடிப்பு உள்ளவர், பழமையை, பாரம்பர்யத்தைப் போற்றிக் காப்பவர். புத்திசாலி, விவேகம் மிக்கவர். உண்மையானவர், அனுபவபூர்வமானவர், வேகமாகப் பேசுபவர். வாழ்க்கையில் மிக உயர்வான நிலைக்குச் செல்வார். பிற்காலத்தில் சக்திமிக்க அமைச்சர் ஆவார். தொழில் நுணுக்கமுடையவர், திறமைசாலி, அவருடைய திறமையை மற்றவர்கள் போற்றுவர். சிறு விஷயங்களுக்குக் கூட கவலைப்படுபவர், ஆயினும் மிகப் பெரிய துன்பம் வரும்போது துணிந்து தைரியமாக இறங்கிவிடுவார். கடவுள் பக்தியுடையவர். தத்துவவாதி போல் செயல்பட்டாலும் லௌகிகத்திலும் வெற்றிகரமானவராக இருப்பார்.
கிரக பலன்கள் --
சூரியன் – 2 இல் -
       செல்வ நிலையைக் குறிகாட்டும் இரண்டாம் பாவத்தில் உள்ள சூரியன், இவருக்கு அரசில் ஒரு நல்ல நிலையைத் தரும். ஜாதகர் இரக்கமுடையவராகவும், தர்ம குணமுடையவராகவும் இருப்பார். நல்ல உறவுகளாலும், குணத்தாலும் எதிரிகளை வெல்வார். இனிய, தர்க்கம் நிறைந்த பேச்சை உடையவர். அதிர்ஷ்டசாலி, செல்வம் மிக்கவர். தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருடக்களுக்கு உரியவராக இருப்பார். நல்ல செலவாளியாக இருப்பார். அநேக வெலையாட்களை உடையவராக இருப்பார். பல கால்நடைகளை உடையவராய் இருப்பார். உஷ்ண சரீரம் உடையவர். சுவையான உணவு வகைகளைச் சுவைத்து உண்பார். நாகரீகமான நவீன ஆடைகளை அணிவார். டாக்டர், லாயர் போன்ற வேலைகளுக்கு அனுகூலமான நிலை ஆகும்.
சந்திரன் – 7 இல் -
       7 இல் சந்திரன் ஜாதகரை இரக்கமுள்ளவராக, பணிவானவராக, அறிவுள்ளவராகவும், காமம் மிக்கவராகவும் இருப்பார். அழகானவர், ஆரோக்கியம் மிக்கவர். செல்வந்தர், புகழ்மிக்கவர். ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் அலைந்து கொண்டே இருப்பார். நகரத்தில் உள்ள பெண்களுடன் அதிகம் பழகுவார். 32 வது வயதில் பெண்ணின் தொடர்பு ஏற்படலாம். 24 முதல் 28 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வார். அரண்மணை போன்ற வீட்டில் வாழ்வார். வியாபாரம், வெளிநாட்டு வர்த்தகம், நிலம் போன்றவற்றின் மூலமாகச் செல்வம் சேர்ப்பார்.

செவ்வாய் – 3 இல்
       மிகவும் தைரியசாலி. வீரமுள்ளவன், செல்வமுள்ளவன், சந்தோஷம் மிக்கவன். இன்பத்தை விரும்புபவன், புகழ் மிக்கவன், பொறுமையானவன், திறமை மிக்கவன், சக்தி மிக்கவன், தெளிவானவன் ஆவான். முழுவதும் பலம் மிக்கவனாதலால், செல்வத்துக்கு அதிபதியான இலட்சுமி தேவியும் வீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பாள். எவரும் இவரை அடக்கி ஆளமுடியாது. அரசால் கௌரவிக்கப்படுவார். இவரது புகழ் உலகம் முழுவதும் பரவும். சகோதரியோடு மகிழ்ச்சியுடன் இருப்பார்.
புதன் – 1 இல் -
       தங்கத்தை போன்று ஒளிருகின்ற, பிறரைக் கவருகின்ற கட்டுடலை உடையவர். உடலில் மச்சம் இருக்கும்.பல நாடுகளுக்கு விஜயம் செய்வார். வாழ்க்கையில் சீரான முன்னேற்றம் இருக்கும். மத ஈடுபாடு உடையவர். அனைத்து சாஸ்திரங்களிலும், கலைகளிலும் ஈடுபாடு உடையவர். பாரம்பரிய மருத்துவ அறிவும் உடையவராக இருப்பார். மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். அனைத்து சுகங்களும் உடையவர்.
குரு – 7 இல்
       ஆஜானுபாகுவான உடல் அமைப்பை உடையவர். காந்தக் கவர்ச்சியும், தோழமை  உணர்வும் உள்ளவராதலால், மக்கள் இவரை சந்திப்பதினால் மகிழ்ச்சி கொள்வர். அசாத்தியமான மூளை உடையவர். அறிவாளி, தேன் போன்ற குரலை உடையவர். இவரின் விவேகம் மிக்க மூளை நல்ல பலன்களைத் தரவல்லது. திருமணத்திற்குப் பிறகு மேலும் சொத்துக்கள் சேரும். பின்னாளில் ஆகாயத்தை தொடுகின்ற அளவுக்கு சொத்துக்களும், முன்னேற்றமும் இருக்கும். 34 வது வயதில் புகழ் பெறுவார். அரசு மூலமான சொத்துக்கள் கிடைக்கலாம். வெகு விரைவில் அரசு அதிகாரம் பெற்று, இராஜனுக்கு இராஜனாக சந்தோஷ வாழ்க்கை வாழ்வார்.
சுக்கிரன் – 3 இல்
       ஒழுக்கத்துடன் நடப்பார். இரக்கமுடையவர். ஆர்வமும், ஊக்கமும், சந்தோஷமும் உடையவர். பயணத்தில் விருப்பமும், இனிய பேச்சும் உடையவர். கலைகளில் வல்லவர். பல மொழி அறிந்தவர், கவிஞர், கலைஞர், பாடகர், ஓவியர் ஆவார். தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வல்லவர். மனம் தீர்மானிக்கும் விஷயங்களைப் பின்பற்றி வெற்றி காண்பவர். கற்பதில் ஆர்வமுடையவர். மிகவும் அதிர்ஷ்டசாலி, முன்னேறக் கூடியவர். ஆரோக்கியமானவர், தைரியமானவர், செல்வம் மிக்கவர் மற்றும் அரசால் மதிக்கப்படுபவர். உலக சுகங்கள் அனைத்தையும் ஒரு சேர அனுபவிகக் கூடியவர். 29 வது வயதில் பொருளாதார உயர்வுகள் அடைவார். நல்ல ஆடைகளை அணிவார். வண்ணமலர்கள் மீது வண்ணத்துப்பூச்சி அலைந்து திரிவது போல் எப்போதும் அழகிய பெண்களுடன் அலைந்து, திரிவார்.
சனி – 11 இல்
       பூர்ண ஆயுள் உடையவர். தைரியமானவர், பகைகளை வெல்பவர். அலைபாயாத, அமைதியான மனம் படைத்தவர். பேராசை அற்றவர். கிடைத்ததைக் கொண்டு திருப்திகரமாக வாழ்பவர். நோயற்ற வாழ்வு வாழ்பவர். அரசு ஆதரவால் பல சொத்துக்களை அடைவார். அரசால் கௌரவிக்கப்படுவார். புகழின் உச்சிக்குச் செல்வார். நல்ல நண்பர்களின் அரவணைப்பில் இருப்பார். மகிழ்ச்சியை விரும்பும் இவர், அனைத்து மாறுபட்ட சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர். உயர்ரக வாகனங்கள், பல வேலையாட்களை உடையவர்.

இராகு – 9 இல்
       கடினமான உழைப்பாளி, இரக்க குணம் உடையவர். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் உடையவர். மத ஈடுபாடும், புனித யாத்திரைகளும் செல்பவர். அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டும், மதிக்கப்பட்டும், கௌரவிக்கப்படும் அறிஞர். கடவுளின் மீது பற்றும் மத ஆர்வமும் உடையவர். செய்நன்றி மறவாதவர். அனைவராலும் அறியப்பட்டவர். நன்கொடைகள், தர்மங்கள் பல செய்பவர். குடும்ப பாரம்பரியத்தை என்றும் பேணிக் காப்பவர். சீர்திருத்தவாதி, சுயகட்டுப்பாடு உடையவர். மக்கள் நலனுக்காகப் பாடுபடுபவர். சகலகலா வல்லவராய் இருப்பார். அரசு தொடர்புடைய மதிப்புமிக்க மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். பல்வகை உயர்ரக ஆபரணங்களையும், அலங்கரிக்கப்பட்ட ஆடைகளையும் உடைத்தாய் இருப்பார். பெரிய கூட்டங்களுக்கு மத்தியில் வெற்றியாளராய் இருப்பார். நகரத்திற்கோ அல்லது கிராமத்திற்கோ தலைவராய் வருவார். மனைவி சொல் தட்டமாட்டார்எந்தவொரு வேலையையும், அதில் தன் இலக்கை வெற்றிகரமாக அடைவதற்கு முன் பாதியில் விட்டுவிடாமல், கடினமாகப் பிரயத்தனப்பட்டு, முடிக்காமல் தூங்கமாட்டார்.
கேது – 3 இல்
       பொறுமையும், பலமும் மிக்கவர். தர்மகாரியங்கள் செய்யும் பெரியோர்களுடன் வாழ்வார். திறமை மிக்க இவர், உயர் செல்வ நிலையோடு மகிழ்ச்சிகரமாக வாழ்வார். எதிரிகள் அழிக்கப்படுவர், அடங்கிவிடுவர். ஆன்மீக விஞ்ஞானத்தில் திறமையுள்ள இவர் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, உலகில் மாறுபட்ட வாழ்க்கை வாழலாம்.
பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்.
கர்க சம்கிதா, யவன ஜாதகம் போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி ; -
இலக்னாதிபதிஇலாப பாவமான 11 ஆம் பாவத்தில் இருக்க
       இலக்னாதிபதி அனுகூலமான நிலையில் இருப்பதால் ஜாதகர் பல வழிகளில் நன்மைகளை அடைகிறார். ஜாதகர் முன்னர் கூறியது போல் மிகுந்த அறிவாளியாக இருப்பார். நன்னடத்தை, மதசம்பந்தமான அறிவு உள்ளவர். ஒரு நல்ல கிரகம் இணைந்துள்ளபடியால் ஜாதகர் பூர்ண ஆயுள் உடையவர். அரசருக்கு உரிய அனைத்து சுகங்களையும் அனுபவிப்பவர். விவேகம் மிக்க எண்ணங்களைக் கொண்ட இவர் மிக்க புகழை அடைவார். நல்ல நண்பர்களைப் பெற்று, பொருளாதார முன்னேற்றங்களை அடைவார்.
தனாதிபதியும், இலாப பாவத்தில் இருக்க
       உயர்ந்த செல்வ நிலை, மதப்பற்று, புத்திசாலித்தனம் ஆகியவை இருக்கும். குழந்தைப் பருவத்தில் நோயால் அவதிப்பட்டாலும், பிறகு சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பார். கீர்த்தி மிக்கவர். வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கப் பிறந்தவர். நற்குணமும், முன்னேற்றங்களும் உடைய இவர், அரசனுக்கே அறிவுரை கூறும் ஆலோசகராக உயர்வார். மக்களின் உயர்வுக்குக் காரணமாகி, புகழும் அடைவார். வியாபாரம் மூலமாக பல சொத்துக்களைச் சம்பாதித்து, மதிப்புமிக்க, விலையுயர்ந்த பொருட்களை உடையவராய் இருப்பதோடு, நண்பர்களுக்குப் பல வழிகளிலும் உதவுவார்.
சகோதர பாவாதிபதி, களத்திர பாவத்தில் இருக்க
       வீரமும், தைரியமும் குறைந்தவராக இருந்தாலும், அழகிய மனைவி அமைவாள். தர்க்கத்திலும், பிறருடனான சண்டைகளிலும் வெற்றியாளராகவே இருப்பார். வேறு இடங்களுக்கு பயணம் செய்யவார். சுயமுயற்சியில் திருமணம் செய்து கொள்வர்.
சுகாதிபதி, தைரியபாவத்தில் இருக்க
       தாராளமனம், தரும சிந்தனை உடைய, திறமைமிக்க இவர் தன் சுயமுயற்சியால் செல்வநிலையை அடைவார்வாகனங்களை உடையவர். நான்காம் அதிபதியுடனான சுப கிரக இணைவால் அதிக நண்பர்களை உடையவராய் இருப்பார். தந்தை புகழ் பெற்றவராய் இருப்பார். அவருடன் சண்டையிடுவார். ஆயினும், தந்தையின் உறவுகளை ஆதரித்துப் புகழுடையவர் ஆவார்.
பூர்வ புண்ணியாதிபதி சகோதர பாவத்தில்
       சங்கோஜ குணம் உடையவர். மற்றவர்கள் சொல்வதைப் பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார். பணவிஷயங்களில் ஆசை அதிகம் உள்ளவர். வீரம் மிக்கவர், அனைவருடனும் அனுசரித்துச் செல்லக்கூடியவர். இவரின் நண்பர்கள் அமைதியானவர்களாகவும், இனிய பேச்சு உடையவர்களாகவும் இருப்பர். உறவுகளிடையே புகழ் பெற்றவராய் விளங்குவார். கடவுள் பக்தி உள்ளவர். நல்ல காரியங்களைச் செய்பவர். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். அமைதியும், சந்தோஷமும் நிலைத்திருக்க ஆசிர்வதிக்கப்பட்டவர். இவர் செய்யும் வேலைகள் அனைத்துமே அசாதாரணமானதாக, சிறப்பானதாக இருக்கும்.
ருண பாவாதிபதி இலக்னத்தில் இருக்க
       திறமையானவர். வளர்ப்பு மிருகங்களை தன் பிள்ளைகளுக்கு மேலாக கவனிப்பார். தைரியமும், கர்வமும் உள்ளவர். செல்வந்தர். பகைவரை வெற்றி கொள்பவர். எதிரிகளும், பயமும் இல்லாதவர். பல வாகனங்களையும், வளர்ப்புப் பிராணிகளையும் உடையவர். பலம் மிக்கவர். சொந்த பந்தங்களுக்குக் தொல்லை தருபவர். ஆரோக்கியமானவர், ஊக்கமுடையவர்.

களத்திர ஸ்தானாதிபதி அங்கேயே இருக்க
       இரகசியங்களை பாதுகாக்கமாட்டார். எதிர்பாலரால் ஆசைகாட்டி மோசம் செய்யப்படுவார். சீக்கரமே திருமணம் ஆகும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
ஆயுள் பாவாதிபதி, குடும்ப பாவத்தில் இருக்க
      தேவைக்கு அதிகமாகவே சம்பாதிப்பார். ஆனால், செலவழிக்கும் பணத்தைத் திரும்பப் பெறமுடியாது. சாத்திர ஆறிவு உடையவர். தனது வருமானத்தை பயணங்கள் செய்வதின் மூலமாக ஈட்டுவார். புதையல் அல்லது பிள்ளையற்றவர்களின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படலாம். பங்குச்சந்தை, லாட்டரி மூலமான லாபங்கள் கிடைக்கும்.
பாக்கியாதிபதி இலக்னத்தில் இருக்க
       கணபதியை வணங்குவார். நல்ல காரியங்க்களைச் செய்வார். கஞ்சத்தனம் செய்வார். அரசுப் பணியாளராக இருக்கலாம். ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்குருவையும், தெய்வத்தையும் மதிக்கக் கூடியவர். குறைவாக உண்டு, ஆன்மீக வாழ்வு வாழ்பவர். ஈகை குணம் கொண்டவராதலால், தர்ம ஸ்தாபனங்களுக்கு நிறைய நன்கொடைகள் வழங்குவார். கோவிலைப் புதுப்பிப்பார் அல்லது கோவில் கட்டுவார்.
கர்ம பாவாதிபதி, தைரிய பாவத்தில் இருக்க
       கர்வமுடையவர், உணர்ச்சி மிக்கவர், உண்மையானவராக இருப்பார். உடலளவில் பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியாதவர். பிறர் உதவிகளை எதிர்பாரக்காமலேயே, சுதந்திரமாகத் தன் சுய முயற்சியிலேயே பெரிய வியாபாரம் செய்வதின் மூலமாக அதிகம் சம்பாதிப்பார். தைரியமானவர், சுதந்திர எண்ணமும், ஆர்வமும் உடையவர்.
இலாபாதிபதி, சகோதர பாவத்தில் இருக்க
       அனைத்துவகைப் பணிகளிலும் திறமை மிக்கவர். புனிதப் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வமுடையவர். உடன்பிறப்பு மற்றும் நண்பர்களின் பால் பிரியமுடையவர். தூய உள்ளம் உள்ளவர். சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மைகள், இலாபங்களை அடைவார்.
விரயாதிபதி, களத்திர பாவத்தில் இருக்க
       எதிர்பாலரால் ஏமாற்றப்படுவார். சளி, இருமல் தொல்லைகள் இருக்கும். அதிக செலவு செய்யும் மனைவி அமைவாள். வழக்கு விவகாரங்களுக்காக அதிகச் செலவுகள் உண்டாகும்.
யோகங்கள் ;-
கஜகேசரி யோகம்
       சந்திரா இலக்னத்தில் இருந்தோ / இலக்னத்தில் இருந்தோ கேந்திரத்தில் குரு இருக்கவும், அத்துடன் நீசமாகாத, அஸ்தமிக்காத, பகை இல்லாத சுபகிரகம் இணைய அல்லது பார்க்கவும் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பிரகாசமானவராகவும், அறிவு மிக்கவராகவும், புகழத்தக்க உயரிய நற்குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார். அரசரை மகிழ்விப்பவராகவும் இருப்பார்.


பர்வத யோகம்
       சுபகிரகம் கேந்திரத்தில் இருந்து, அதற்கு 7, 8 ஆம் இடம் கிரகங்கள் இன்றியோ அல்லது சுபகிரக அமர்வோ இருக்க பர்வத யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும், தர்ம குணம் உள்ளவராகவும், சாத்திரங்கள் அறிந்தவராகவும், உல்லாச விரும்பியாகவும், புகழ் மிக்கவராகவும், ஒரு நகரத்தின் தலைவராகவும் இருப்பார்.
அரச யோகங்கள்
1.   இலக்னத்தை சுபர் பார்க்க- ஜாதகர் அரசனாவார்.
2.   கேந்திரங்களில் சுபர் இருக்க ஜாதகர் அரசன் ஆவார்.
3.   ஆத்மகாரக கிரகம் சுப நவாம்சத்தில் இருக்க ஜாதகர் செல்வந்தர் ஆவார்.
4.   காரகாம்ச இலக்னத்திற்குக் கேந்திரங்களில் சுபர் இருக்க ஜாதகர் அரசராவார்.
5.   4 ஆம் அதிபதி அல்லது 5 ஆம் அதிபதி, 5 அல்லது 9 ஆம் அதிபதியுடன் இணைய ஜாதகர் ஒர் இராஜியத்தை அடைவார்.
6.   ஒன்று அல்லது 2 அல்லது மூன்று கிரகங்கள் உச்சமடைய, ஜாதகர் அரசவம்சத்தில் பிறந்தவரானால் அரசனாகவும், அவ்வாறு இல்லை எனில் அரசனுக்கு சமமானவராகத் திகழ்வார்.
7.   சுபகிரகங்கள் உச்சமாகி, ஒரு சுபர் கேந்திரத்தில் இருக்க ஜாதகர் அரசன் அல்லது அவருக்குச் சமமானவராக ஆவார்.
8.   குருவின் பார்வை புதன் மேல் விழ ஜாதகர் அரசனாவார். அவரின் ஆணைகள் மற்ற அரசர்களால் சிரமேற் கொண்டு நிறைவேற்றப்படும்.
ஹம்ச யோகம்
       குரு தனது சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்க ஹம்ச யோகம் ஏற்படுகிறது. இதில் பிறந்தவர்கள் சிவந்த முகத்துடனும், தீர்க்கமான மூக்குடனும், அழகிய பாதத்துடனும், வெண்மை நிறத்துடனும், அகன்ற நாடியுடனும், சிவந்த நகத்துடனும், அன்னத்தின் குரலோசையையும், உள்ளங்கையில் முக்கோண வடிவம், மீன், அம்பு வடிவம் தாங்கியும், வட்டவடிவமான, தேன் வண்ணக் கண்களை உடையவரும் ஆவார். நூறு வயதுவரை வாழ்வார்.
       இலக்ன  பதாவிலிருந்து 11 ஆம் இடத்தில் ஒரு கிரகம் இருக்க அல்லது பார்க்க ஜாதகர் பணக்காரராகவும், சந்தோஷத்தில் மிதப்பவராகவும் இருப்பார். இதுவே, அந்த கிரகம் சுபராக இருப்பின் பலவழிகளிலும் சொத்துக்கள் குவியும். அதுவே, உச்சம் பெற்ற அல்லது ஆட்சி பெற்ற கிரகமாக இருக்கக் கேட்கவே வேண்டாம். இலாபங்களும், சந்தோஷமும் கணக்கில் அடங்காததாக இருக்கும்.
எனவே, நண்பர்களே ! குட்டி அஜித்துக்கு வாழ்த்துக்கள் சொல்லி முடிப்போம். வாழ்க வளமுடன்.
       


No comments:

Post a Comment