Search This Blog

Tuesday, 29 September 2015

இரண்டாம் வீடும், தொழிலை அறிதலும் …….

இரண்டாம் வீடும், தொழிலை அறிதலும் …….



         ஒருவரின் தொழில் நிலை நிர்ணயம் செய்வது ஜோதிடருக்கு சுலபமான வேலையல்ல. ஏனெனில், பெருகிவரும் நவீன தொழில் நுட்பங்களின் காரணமாகத் தொழிலைப் ஏற்படும் போட்டி காரணமாக மாறுபட்ட புதுப்புதுப் பிரிவுகளில் சிறப்புப் பயிற்சி பெறுதல் போன்ற முனிவர்களின் காலங்களில் இல்லாத தொழில்களெல்லாம் உருவாகியுள்ள நிலையில் தற்கால சூழலுக்கு ஏற்ப கிரகங்களுக்கான தொழில் காரகங்களை அனுமானித்து ஜாதகரின் தொழில் நிலை காண ஜோதிடர்கள் புத்தி கூர்மையுடன் பலன் காண வேண்டியது அவசியமாகிறது.   
       பொதுவாக தொழிநிலை என்ற உடன் நம் கண்கள் 10 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதியை மட்டுமே நோக்கிச் செல்லும். ஆனால் அனுபவத்தில் 10 ஆம் பாவம்மற்றும் அதன் அதிபதியை மட்டும் கொண்டு தொழில்நிலையை நிர்ணயம் செய்யாமல் இரண்டாம் இடத்தையும், அதன் அதிபதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
       இரண்டாம் இடம் பொதுவாக ஜாதகரின் பொரிளாதார நிலையை சீர்தூக்கிப் பார்க்க உதவுகிறது. ஜாதகரின் வருமானத்திற்கான வழிமுறைகளையும் 2 ஆம் இடம் மற்றும் அதன் அதிபதி மூலமாக அறிய முடியும். எனவே, தொழில் நிலையைக் காண 2 ஆம் இடத்தையும் இணைத்துப்பார்பது அவசியமாகிறது.
       10 ஆம் பாவம் மற்றும் அதன் பலம் தொழிலில் ஒருவரின் உயர் நிலையையும், கௌரவத்தையும் குறிகாட்டுகிறது. உதாரணமாக, ஜாதகர் ஆசிரியத் தொழில் மூலம் வருமானம் அடைவாரென்று 2 ஆம் வீடு காட்டினாலும் 10 ஆம் இடமே அவர் ஆரம்பப் பாடசாலை ஆசிரியரா ? கல்லூரிப் பேராசிரியரா ? – என்பதை நிர்ணயிக்கிறது.
        10 ஆம் இடத்தின் , அதிபதியின் பலம், இலக்னாதிபதி பலம் இவற்றைப் பொருத்தே அவர் தலைமை ஆசிரியரா ? பேராசிரியரா ? துணைவேந்தரா ? – என்பதை நிர்ணயிக்க முடியும். ஆனாலும், ஆசிரியத் தொழில் மூலமாக வருமானம் அடைவாரா ? – என்பதை நிர்ணயிப்பது     2 ஆம் இடமே ஆகும்.
       ஜாதக பாரிஜாதத்தில் கூறியுள்ளபடி ; - சூரியன், புதன், குரு மற்றும் சனி ஆகியோர் பல்வேறு தொழில் காரகராகிறார்கள். சூரியன் = அரசர், அரசியல்வாதிகள், புதன் = வணிகம், வங்கி, தொழிற்சாலை, குரு = விவசாயம், பக்தி மார்க்கம், மதம் மற்றும் கற்பித்தல், சனி = சேவை மற்றும் யாசித்தல் ஆகும். ஆனால், எப்படி இத் தொழில்களுக்கான சரியான காரகரைக் கண்டறிவது ? ஜாதகர் உத்தியோகம் செய்வாரா ? வியாபாராமா ? அல்லது விவசாயமா ? – இந்தக் கேள்விகளுக்கான முடிவுகள் இந்த நான்கு காரகர்களையும் ஒன்றாகக் கலந்து முடிவுக்கு வர இயலாது. இது குழப்பத்தையே உண்டு பண்ணும்எனக் குறிப்பிடுகிறது.
       இரண்டாம் வீடு ; செத்து மற்றும் வருமானம் வரும் வழிகளைக் குறிகாட்டுகிறது. ஏனெனில், 11 ஆம் வீடு 2 ஆம் வீட்டுக்கு 10 ஆம் வீடு ஆகும். காலபுருஷனுக்கு 2 ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் ஆவார். எனவே, சுக்கிரனே பிரதான காரகர் ஆவார். 10 மற்றும் 11 க்கு உரியவர் சனி ஆவார். அவர் கர்மகாரகரும் ஆவார், சனி, சந்திரன் இணைவு எண்ணங்களில் நிலையற்ற தன்மையையும், உணர்ச்சி வசப்படுதலையும், கவலைகளுக்கும் காரணமாகின்றன. வெவ்வேறு இராசிகளில் சனியின் நிலை அந்த இராசியின் இயற்கை குணம், அதன் அதிபதியின் குணத்தைப் பொருத்தும் மாறுபடுகிறது.
       இவ்வாறாக இலக்னத்தில் இருந்து 2 ஆம் இடமும் ஜாதகரின் தொழில் மீதான கட்டுப்பாட்டையும் காலபுருஷனுக்கு 2 – 10 ஆம் அதிபதிகளான சுக்கிரன் மற்றும் சனியும் வாழ்வாதாரத்திற்கான காரகராகிறார்கள். ஜாதகத்தில் 10 ஆம் வீடு ஒருவரின் தொழில் நிலையை  காண மிக முக்கியமான பாவகமாகும். ஆனால், தனத்தைக் குறிக்கும் 2 ஆம் வீட்டை ஒதுக்கிவிடக் கூடாது.
       ஜோதிட மாணவர்கள் தொழில்நிலையைக் காண்பதற்கான கீழ்க்கண்ட விஷயங்களை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
1.   தொழிலா ? சேவையா ? வியாபாரமா ? என ஒவ்வொரு கிரகாத்தாலும், இராசியாலும் குறிகாட்டப்படுகிறது.
2.   தன யோகத்தின் பலமானது ஒருவரின் தொழிலின் கௌரவத்தை நிச்சியிக்கும். 10 இல் செவ்வாய் பலமிக்க தன யோகத்துடன் இருக்க ஜாதகர் இராணுவ ஜெனரலாக, காவல்துறை உயர் அதிகாரியாக அல்லது அத் துறை மந்திரியாக இருப்பார். அதுவே, பலமற்ற தன யோகமானால், அவர் ஒரு சிப்பாயாகவோ, காவலராகவோ மட்டுமே பணிபுரிவார். தனயோகத்தை நிர்ணயிக்க 2, 11, 5, 9 ஆகிய பாவகங்கள், அதன் அதிபதிகள், அவர்களின் இணைவுகள், பார்வைகள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவை காணப்பட வேண்டும். தரித்திர யோகத்தைத் தரக்கூடிய  கிரகம் ஜாதகரை பிச்சை எடுக்கக் கூட வைத்துவிடும். தனயோகமோ ஒருவரை அரசனாகவோ அதற்கு இணையானவராகவோ ஆக்கிவிடும்.
3.    ஒரு கிரகத்தை மட்டும் வைத்துத் தொழிலை நிர்ணயம் செய்ய முடியாது. ஒரு கிரக குழுக்களின் தாக்கம் மற்ற கிரகங்களுடனான இணைவு மற்றும் தொடர்பே அதைத் தீர்மானிக்கும். பாவங்களும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். உதாரணமாக, குரு , புதன், சுக்கிரன் ஆகியோர், குறிப்பிட்ட பாவகங்களுக்குத் தங்கள் தாக்கத்தைத் தரவேண்டும். ஒரு வக்கீலின் ஜாதகத்தில், தர்க்கம், வாதத்திறமைக்குக் காரகனான புதனின் தாக்கம் இருக்க வேண்டும். சுக்கிரன்துலாராசியின் அடையாளம் தராசு, நீதிக்கும் நேர்மைக்கும் காரகர்குரு நியாயத்திற்கும், உண்மைக்கும் காரகர் ஆவார். 5 மற்றும் 6 ஆம் பாவங்களும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. 6 ஆம் வீடு வழக்கு விவகாரங்களையும், 5 ஆம் வீடு சாதுர்யத்தையும், அறிவு பூர்வமாக வாதிடும் திறமையையும், தந்திரமாக உண்மையைத் திரித்துப் பேசும் திறமையையும் குறிக்கிறது. நவீன காலத்தில், ஒவ்வொரு கிரகமும் பல தொழில்களுக்கான காரகங்களைக் கொண்டுள்ளன. எனவே, தொழிலைத் தீர்மானிக்க பல காரணிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். அவையாவன ;-
1.   2 மற்றும் 10 ஆம் அதிபதியின் இராசிகள் மற்றும் அவை நவாம்சத்தில் இருக்கும் இராசிகள்.
2.   காரகர்கள்- சுக்கிரன் மற்றும் சனியைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
3.   2 மற்றும் 10 ஆம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள். அந்த பாவங்களின் அதிபதிகள் நிற்கும் இடங்கள்.
இவை அனைத்தையும் ஒருவரின் தொழில்நிலை காண அலசி ஆராயப்பட வேண்டிய காரணிகள் ஆகும்.

       முந்தைய பதிவில் ஒரு ஜாதகரின் தொழில்நிலை காண அலசி ஆராயப்பட வேண்டிய காரணிகள் பற்றி அறிந்தோம். இனி, ஜாதகரின் தொழில் பற்றி அறிய சில ஜாதகங்களை ஆராய்வோம்.

ஜாதகம் -1
     இந்த ஜாதகர் கம்பீரமான, சக்திமிக்க. தைரியம் மிக்க பெரிய தொழில் அதிபர் ஆவார். இவரது ஆண்டு வருமானம் சுமார் ஒரு நூறு கோடிக்கும் மேலாகும். இவர் ப்ளாஸ்டிக் பிலிம்ஸ், பாலித்தின், லேமினேஷன் ஆகியவை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வந்தார்.  
    இவரது ஜாதகத்தில் தனாதிபதி செவ்வாய், சுக்கிரனின் ஆட்சி வீடான துலா லக்னத்தில் உள்ளார். கர்ம ஸ்தானத்தில், இலாபாதிபதி சூரியன், இலக்னாதிபதி மற்றும் கேதுவுடன் அமர்வு. கர்மாதிபதி சந்திரன் பாக்கிய பாவமான புதனின் வீட்டில் உள்ளார். யோக்காரகன் சனி சுக்கிரனின் நவாம்சத்தில் உள்ளார். இங்கு புதனின் தாக்கம் ஜாதகரை ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் ஆக்கியது. இலாபாதிபதி சூரியன் 10.81 ரூப பலத்துடன் சக்தி வாய்ந்தவராக கர்ம பாவத்தில் இருப்பது இவரை மிகப்பெரிய தொழில் அதிபர் ஆக்கியது.


குரு


சந்




 செவ் கேது
புத

சனி




இராசி
சூரி, கேது .சுக்
சந்

நவாம்சம்


இராகு
புத

 லக்//

 சூரி






லக்//
செவ்
 சனி


குரு

சுக்

இராகு


பிறந்த தேதி 20- 07 – 1952 பிறந்த நேரம் – 12- 45 பகல்
      தனாதிபதி  செவ்வாய் சுக்கிரன் வீட்டிலும், சுக்கிரன் கர்ம பாவமான சந்திரன் வீட்டிலும் இருப்பதின் காரணமாக பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட தொழிலைக் குறிகாட்டுகிறது. ஜாதகர் கார்மண்ட்ஸ், பாலித்தின் பிலிம் தயாரிப்பு, கண்ணாடி வேலைகள், பேப்ரிக்ஸ், ரப்பர், வாக்ஸ், பி. வி ஸி பைப்புக்கள் தயாரிப்பு என அனைத்துத் தொழில்களையும் செய்தார். சுக்கிரன் சுய நவாம்சத்தில், நவாம்ச இலக்னத்துக்குப் 10 ஆம் இடத்தில் சர இராசியில் உள்ளார். இது சுய தொழிலுக்கு அதிபதி சந்திரன் 7.65 ரூப பலத்துடன் 11 ஆம் அதிபதி சூரியனுடன் பலமான இணைவில் உள்ளார். 11 ஆம் வீடு 12.8 பாவ ரூப பலத்துடன், ஒரு சாதாரண ஆசிரியரின் மகனாகப் பிறந்த இவரை, மிகப் பெரிய செல்வந்தர்  ஆக்கியது.  
ஜாதகம் – 2
     இது பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் ஜாதகம். கும்ப இலக்கினம். தனாதிபதி குரு இராசியில் உச்சநிலை மற்றும் நவாம்சத்தில் வர்கோத்தமத்தில் உள்ளார். கர்மாதிபதி செவ்வாய் ஆயுள் பாவத்தில் உள்ளார். அவர் கடக நவாம்சத்தில் உள்ளார். அது செவ்வாயின் நீச நவாம்சமாகும். யோக காரகன் சுக்கிரன் இராசியில் நீசம் பெற்று, சுய நவாம்சத்தில் உள்ளார். கர்ம பாவத்தை மட்டும் வைத்து இவரது நடிப்புத் தொழிலை நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் கர்மாதிபதி செவ்வாய் கன்னி இராசியில், நவாம்சத்தில் நீசமாக உள்ளார். கர்ம பாவம் குருவின் பார்வை மற்றும் வக்ர சனியின் பார்வையையும் பெறுகிறது. இது மட்டுமே, ஒரு சூப்பர் நடிகரின் தொழிலை நிர்ணயிக்கப் போதுமானதல்ல.


சனி ()



லக்//

சுக்


 ராகு சனி

லக்//
கேது


  ,uhrp
குரு



ethk;rம்
 குரு செவ்


ராகு

 சந்
சூரி புத



சந்

சூரி புத()
செவ்
சுக்

கேது





பிறந்த நாள் – 11 – 10 – 1942 பிறந்த நேரம் 16 – 00 மணி.
     தற்போது. தனபாவம் மற்றும் தனாதிபதியைக் கருத்திற் கொள்ள வேண்டும். தனாதிபதி குரு உச்சமாகி ருணபாவத்தில் உள்ளார். அவர் வர்கோத்தம நிலையில் உள்ளார். தனபாவத்தை சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் பார்க்கின்றனர். குருவின் பார்வையும் அந்த பாவத்தின் மீது விழுகிறது. இது பல்வேறுபட்ட வழிகளில், மாறுபட்ட பல வேலைகளைச் செய்யும்போது ஜாதகருக்கு வருமானம் வருவதைக் குறிகாட்டுகிறது.
       சுக்கிரன் சுய நவாம்சத்திலும் சனி இராசிக் கட்டத்தில் சுக்கிரனின் இராசியிலும் உள்ளனர். இவ்வாறாக, சந்திரன் மற்றும் சுக்கிரனின் தாக்கம் இவரை ஓர் உன்னதமான முன்னணி நடிகராக்கியது. அநேக கிரகங்களின் புதனின் மீதான தாக்கம் இவரை ஒரு சிறந்த வியாபாரியாகவும் ஆக்கியது
ஜாதகம் – 3
          இது ஒரு தலைமை மருத்துவ அதிகாரியின் ஜாதகம் ஆகும். இவர் ஒரு திறமை மிக்க பல்கலை நிபுணரும் ஆவார். மருத்துவத்துறையில் பலமகத்தான சாதனைகளைப் புரிந்தவர். இவரது ஜாதகத்தில், செவ்வாய் மற்றும் சூரியன் 10 இல் உள்ளனர். அவர்களை சனி பார்க்கின்றார். இந்த இணைவு மருத்துவத் தொழிலைக் குறிகாட்டுகிறது. கர்மாதிபதி குருவின் நவாம்சத்தில் இருப்பது இதை மேலும் உறுதி செய்கிறது. தனாதிபதி சூரியன் கர்மபாவத்தில் உள்ளார். இது ஜாதகரின் தொழிலை பலமாக ஆமோதிக்கிறது. பொதுவாக சூரியன், குரு, செவ்வாய் இணைவு ஒருவரை மருத்துவராக்குகிறது.
பிறந்த தேதி – 10 – 04 – 1953 – 11 – 32 முற்பகல்.
சுக்
பு

சூரி செவ்

குரு

சந்


 சந் சுக்


சூரி
ராகு



இராசி
லக்// கேது
 

 நவாம்சம்

லக்//
ராகு
  

குரு




னி


செவ்

கேது

சனி

புத


கர்மகாரகன் உச்சம் பெற்று, வர்கோத்தமும் ஆகி அதன் தாக்கம் இவரது தொழிலுக்கு உதவுகிறது. சனி வியாதிகளையும், தீராத நெடுநாளைய நோய்களையும் குறிக்கிறது. குரு, அவற்றை குணப்படுத்தும் சக்தியையும், செவ்வாய் உடலிலுள்ள தசைப் பிரிவுகளையும், இரத்தத்தையும் குறிக்கின்றன. சூரியன் உலக வாழ்க்கையையும், சக்தியையும், ஆன்மாவையும் குறிக்கிறது.
தொழிலுக்கான முக்கிய காரணிகள் --
1.   தனம் மற்றும் கர்மாதிபதியைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
2.   இராசி மற்றும் நவாம்சத்தில் 2 மற்றும் 10 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவர் நிலையறியவும்.
3.   தனம் மற்றும் கர்மா பாவத்தில் உள்ள கிரக நிலைகளைக் காணவேண்டும்.
4.   தனம் மற்றும் கர்மா பாவத்தைப் பார்க்கும்  கிரக நிலைகளைக் காண வேண்டும்.
5.   சுக்கிரன் மற்றும் சனியின் நிலை அறிய வேண்டும்.
6.   தனம் மற்றும் கர்மா பாவத்திபதிகள், காரக கிரக  நிலைகளை அறிய வேண்டும்.
7.   இயற்கை குணம், மூலம், இராசியின் குணம், கிரகங்களின் குணம் காண வேண்டும்.
8.   தசாம்சக் கட்ட கிரக நிலைகளையும் ஆராய வேண்டும்.
9.   தொழிலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களை அறிய நடப்பு தசா / புத்திகளுக்கான பலன் காணவேண்டும்.
 மேற்படி, காரணிகளைக் கொண்டு தொழில் நிலை அறியலாம்.
              


No comments:

Post a Comment