Search This Blog

Sunday, 11 October 2015

இராகு, குரு திசை பொதுப்பலன்கள்.







இராகு தசா பலன்கள் – (18 வருடங்கள்)

இராகு புக்தி – 2 – 8 மா – 12 நாட்கள்

       விஷகண்டம், ஊழல் விவகாரங்கள், சண்டைகள், இடமாற்றங்கள், மனக் கவலைகள், நீரில் கண்டம், பிற மாதரோடு புணருதல், அன்பு உறவுகளை விட்டுப் பிரிய நேரல், கொடூரமானவர்களின் நடவடிக்கை மூலமாக மனவேதனை, உறவுவில் மரணம், குடும்பத் தலைமை, அரசன், உயர் அதிகாரி அல்லது கூட்டாளிகளில் முதன்மையானவர்.

குரு புக்தி – 2 – 4 – மா 24 நாட்கள்

       நல்ல மற்றும் ஆனந்திக்கும் காலம், மகிழ்ச்சி, சொத்துச் சேர்க்கை, அதிகாரத்திலுள்ள மற்றும் உயர்நிலையிலுள்ளவர்களின் மூலமாக வசதி வாய்ப்புகள் பெருகுதல், மத செயல்பாடுகள், அழகிய பெண்களுடன் / ஆண்களுடன் இணக்கம். எதிரிகள் மறைந்து ஒழிதல், மழலைச் செல்வம் மடியில் தவழுதல், முயற்சிகள் அனைத்திலும் முழுவெற்றி அடைதல்.

சனி புக்தி – 2 – 10 மா – 6 நாட்கள்.

       அவதூறு, அபகீர்த்தி, தீயோர் நட்பு, உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், கவலைகள், எதிரிகள் மூலமான இழப்புக்கள், மனக் கவலைகள், மனவேதனைகள், மனைவி, சகோதரன் அல்லது குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள்பதவி இயப்பு, ஆரோக்கியக் குறைவு, கலக்கம், குழப்பம், கலகம், மூட்டுவலி, ஜாதகரால் அனுபவிக்கப்படும் பித்த வாத, கப ரோகங்கள், வெளிநாட்டில் குடியேற நேரல்.

புதன் புக்தி -2 – 6 மா – 18 நாள்

புத்தியின் முதல் 11 மாதங்கள் அனுகூலமானதாக இருக்கும். குழந்தைப் பேறு உண்டாகும். சொத்துக்கள் சேரும். நண்பர்களின் சந்திப்பு, உயர் அதிகாரிகளின் அனுகூலமான செயல்பாடுகள், திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம். அறிவுபூர்வமான வியாபாரம் செய்வதற்கு உண்டான புத்திசாலித்தனம், திறமை மிக்க செயல்பாடுகள் ஆகும். கடைசி 12 மாதங்கள் தங்களது சுய செயல்பாடுகளால் எதிர்ப்பு மற்றும் எதிரிகள் ஏற்படுவர். வாகனயோகம், குழந்தைப்பிறப்பு, உற்றார் உறவினருடன் மகிழ்வோடு இருத்தல், எதிர்பாலருடன் இன்பம் துய்த்தல், வணிகம் மற்றும் ஏமாற்றுதல் மூலமாக இலாபம் பெறுதல் ஆகியவை ஏற்படும்.

கேது பக்தி – 1 – – 0 மா – 10 நாள்.

       தீ, காய்ச்சல், ஆயுதம் மற்றும் எதிரிகளால் தொல்லை ஏற்படுதல், தலைவலி, நண்பர்கள் மற்றும் பெரியவர்களுக்குக் காயம் ஏற்படுதல், விஷகண்டம், புண்கள் மற்றும் சண்டைகளால் ஏற்படும் கஷ்டங்கள், குழந்தைகளுக்கு நோய் ஏற்படுதல், மனைவிக்கு ஏற்படும் கஷ்டங்கள். உயர் அதிகாரிகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் அனைத்து வகையிலுமான துரதிர்ஷடங்கள்.

சுக்கிர புக்தி – 3 வருடங்கள்

        வாகன யோகம், பணம் மற்றும் திருமணம், நல்ல குடும்ப வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கப்படுதல், எதிர்பாலருடனான தொடர்பு, மனைவி மூலமான இலாபங்களால் மகிழ்ச்சி அடைதல். உயர் அதிகாரிகள் மூலமான நன்மைகள். உறவுகளுடன் சண்டை ஏற்படுதல். வாயுத் தொல்லைகள், தீயகுணமுள்ள நண்பர்களின் நட்பைப் பெறுதல் மற்றும் அவர்களால் நஷ்டம் அடைதல். ஆனால் இவ்விதமான அனைத்துத் தொல்லைகள், கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி தோல் உடனே விலகிவிடும். பூமி இலாபம், திருமணம் அல்லது குழந்தைப் பிறப்பு ஆகியவை ஏற்படும்.

சூரிய புக்தி – 10 மா- 24 நாட்கள்

       குடும்பத்தாரிடையே சண்டை, எதிரிகளால் தொல்லைகள், கண்களில் தொந்திரவு, தீ, விஷகண்டம் மற்றும் ஆயுதத்தால் ஆபத்துக்கள்,  வீண்பயம், புதிய எதிரிகள் உருவாகுதல் ஆகியவை ஏற்படும். மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, குடியிருப்பு மாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படும். உயர்பதவியில் உள்ளவர்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். தேர்வுகளில் வெற்றி அடைதல், வெளிவட்டார வாழ்க்கையில் சந்தோஷம் கிடைத்தல், நல்ல மரியாதை, புகழ் ஏற்பட்டாலும், மனதில் நிம்மதியின்மை ஆகியவை ஏற்படும்.

சந்திர புக்தி – 1 – – 6 மாதங்கள்

       பலம் மிக்க சந்திரன் எனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குதூகலமாய் இருத்தல். இடமாற்றம், தனலாபம் ஆகியவை ஏற்படும். பாதிப்படைந்த சந்திரன் எனில் மனைவி மூலமான பணயிழப்பு, மனக் குழப்பங்கள், சண்டைகள், சொத்து இழத்தல், நிலையில்லாத ஆரோக்கியம், உடலில் வலி மற்றும் நீரால் கண்டம் ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 1 – 0  மா - 18 நாட்கள்.

       உயர் அதிகாரிகள் மூலமாக இழப்புக்கள் மற்றும் ஆபத்துக்கள், தீ, ஆயுதம் அல்லது திருடரால் கஷ்டங்கள் ஏற்படும். பணம் இழத்தல், வழக்குகளில் தோல்வி, எதிர்ப்புகளால் பாதிப்பு அடைதல் அல்லது இடையூறுகள், இதயம் மற்றும் கண்களில் தொல்லைக்ள ஏற்படும். எதிரிகளால் ஆபத்து, வழக்கு விவகாரங்கள் மற்றும் மனக் குழப்பங்கள் ஆகியவையும் ஏற்படும்.


குரு திசை பொதுப்பலன்கள்.

குரு புக்தி - 2. 1.மா -6 நாட்கள்.

சொத்து லாபம், நல்லதிர்ஷ்டம், பிரகாசமான, மகன் பிறப்பு, கௌரவம், அரசு மற்றும் அதிகாரிகளின் மூலமான அனுகூலம். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, நல்லகாரியங்கள் செய்தல், நல்லாரோக்கியம், நம்பிக்கை. வெற்றி, விருப்பங்கள்,புனித பயணங்கள், மத சம்பந்தமான மற்றும் தர்ம ஸ்தாபனங்களுடன் தொடர்பு ஆகியவை ஏற்படும். பாதிப்பு அடைந்த குரு எனில் இதற்கு நேர்மாறான பலன்கள் ஏற்படும்.

சனி புக்தி - 2-6- மா 12 நாட்கள்.

தீய செயல்கள், குடித்தல்,போக்கிரிகளுடன் தொடர்பு, மனக்கவலைகள், திருமணமானவரானால் மகன்கள் மூலமாக சொத்து இழத்தல், வியாபார நஷ்டம், மனைவி அல்லது கூட்டாளியால் தொல்லைகள் ஆகியவை ஏற்படும். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஜாதகருக்கு உயர்வு, மேன்மை, புகழ், சந்தோஷம் மற்றும் செல்வச் சேர்க்கை, சொத்துச் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.

புதன் புக்தி - 2- 3 - மா 6- நாட்கள்.

பெண்களால் தொல்லை, சூதாடுதல், குடித்தல்,நோய் ஆகியவை ஏற்படும் என சில முனிவர்கள் அபிப்பிராயப்பட்டாலும், மற்றவர்கள் கடவுளைத் தொழுவதின் மூலமாகவும் புனிதத் தலங்களுக்குச் செல்வதன் மூலமும் பலன்கள் நன்யாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர். ஜாதகர் கலை ஆர்வம் மிக்கவராக இருப்பார். குழந்தைப் பிறப்பு, செல்வ சேர்க்கை, சந்தோஷம் ஆகியவை ஏற்படும். உயர்அதிகாரிகளின் அனுகூலம், அரசாள்பவரின் ஆதரவு, வசதி வாய்ப்புகள் பெருகுதல், வணிகம் மற்றும் வியாபாரத்தில் இலாபம் ஆகிய பலன்கள் நடக்கும்.

கேது புக்தி – 11 மாதம் 6 நாட்கள்

ஆயுதத்தால் ஏற்படும் காயங்கள், வேலைக்காரர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படுதல், உறவுகள் மற்றும் நண்பர்களை விட்டுப் பிரிதல், மனக்கவலை அதிகரித்தல், மனைவி, குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படுதல், புனித பயணங்கள் செல்லுதல், வீடு மாற்றம், சொத்துச் சேர்க்கை ஏற்படுதல், கூட்டுத்தொழிலில் கூட்டாளியிடம் இருந்து விலகல் ஆகியவை ஏற்படும்.

சுக்கிர புக்தி – 2 – 8 மாதங்கள்.

பல்வேறு பொருட்களை அடைதல், நல்லுணவு கிடைத்தல், பெண்களிடம் இணைவான தொடர்பு ஏற்படுதல், மதவுணர்வு கொள்ளுதல், சொத்துச் சேர்க்கை ஏற்படுதல், கௌரவம், மரியாதை கூடுதல்மகன்களின் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியான மண வாழ்க்கை ஏற்படுதல், கோசார சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம்  இராசிகயைக் கடக்கும் போது பூமிலாபம் மற்றும் வாகன யோகம் ஏற்படும். சந்தோஷம், குடும்பத்துடன் ஒன்று சேருதல் ஆனால் மதிப்புக் குறைதல். ஆகிய பலன்கள் சுக்கிர புக்தியில் ஏற்படும்.

சூரிய புக்தி – 9 மாதம் 18 நாட்கள்.

அரசு மற்றும் அதிகாரிகள் மூலமான அனுகூலங்களை  அனுபவித்தல், புகழ் அடைதல், இனிய சுபாவம், வாகனயோகம் மற்றும் வாழ்க்கையில் அதிகபட்சமான முன்னேற்றங்களை எட்டுதல், பூமிலாபம், எதிரிகளை வெல்லுதல், நல்ல செயல்பாடுகள் ஏற்படுதல், ஆனால் உடலில் சக்தியை இழத்தல் ஆகியவை சூரிய புக்தியில் ஏற்படும் பலன்கள் ஆகும்.

சந்திர புக்தி – 1 – 4 மாதங்கள்.

முன்னேற்றம் அதிகரிப்பு, அதிகமான கன்னிப் பெண்களுடன் பழக்கம், எதிரிகளை அழித்தல்., தனலாபம், விவசாயத்தில் இலாபம் அதிகரிப்பு, மிக உயர்ந்த புகழ் அடைதல். கடவுளின் மீதான அதீத பக்தி ஏற்படுதல், சொத்துக்கள் சேருதல், நல்ல உலோகங்களைப் பெறுதல், பெண் குழந்தை பிறத்தல், குடும்பத்தில் உள்ள ஆணுக்குத் திருமணம் நடத்தல், குழந்தைகள் மூலமான ஆதாயம் ஆகியவை சந்திர புக்தியில் ஏற்படும்.

செவ்வாய் புக்தி – 11 மாதம் – 6 நாட்கள்.

எதிரிகள் மூலமாக சொத்துச் சேர்க்கை, பூமிலாபம், முக்கிய நபராக உருவெடுத்தல் அல்லது பலம் பெறுதல், புனித பயணங்கள் செல்லுதல், செல்வமும் புகழும் சேருதல், சாதனை புரிதல் மற்றும் உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுதல் ஆகியவை பலம் மிக்க செவ்வாய் புக்தியில் ஏற்படும்.
செவ்வாய் பாதிப்பு அடைந்து இருந்தால் ஏமாற்றகளையும் கஷ்டங்களையும் எதிர் கொள்ள நேரும். பொருட்கள் திருடு போதல், விடுமுறை அல்லது இடமாற்றம் ஏற்படுதல், நம்பிக்கைகளும், வியாபாரத்திலும் தோல்வி அடைதல், அலைந்து திரிதல், அதிகமான ஜூரம், மூத்த சகோதரனையோ நண்பனையோ இழத்தல், இரணம், காயம், கட்டி போன்ற வியாதிகள் ஏற்படுதல், மன அழுத்தம் ஏற்படல், அபாயகரமான காரியங்களை துணிந்து செய்தல், இழப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்ட செவ்வாய் தனது புக்தியில் ஏற்படுத்தும்.

இராகு புக்தி – 2 – – 4 – மாதம் – 24 நாட்கள்.

கீழான மக்கள் மூலமாக வருமானம் அடைதல், உறவுகள் மூலமாக துன்பங்கள் அடைதல், அதிகப்படியாக மனக்கவலை கொள்ளுதல், நோய் ஏற்படுதல், திருடர்கள் மூலமாக அபாயங்கள் ஏற்படுதல், குடும்பத்தில் உள்ள இளையவர்களுக்கு அல்லது மூத்தவர்களுக்கு நோய் ஏற்படுதல், அரசாங்கத்தின் மூலமாகவும், உயர் அதிகாரிகள் மூலமாகவும் தொல்லைகள் ஏற்படுதல் ஆகியவையே குரு திசை / இராகு புக்தியில் ஏற்படும் பலன்கள் ஆகும்.


No comments:

Post a Comment