சனி மகாதிசைக்கான போதுப் பலன்கள் – தசா காலம் 19 வருடங்கள்.
சனி புக்தி – 3 – வ – 3 நாட்கள்.
சனி புக்தியில் ஜாதகருக்கு தனலாபம்
அதிகரிக்கும், பணியாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பாவ
காரியங்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களுடன் தொடர்பு ஏற்படும் என பலதீபிகாவில்
மந்தரேஸ்வரர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் மற்ற நூல்களில் பண இழப்பு, குழந்தைகள்
இழப்பு, உறவுகளுடன்
வழக்கு விவகாரங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கஷடங்கள், கடும்
வேதனை, சித்ரவதை, அதிகப்படியான
மனக் குழப்பங்கள், சொத்து இழப்பு, குடும்பத்தாருக்கு அதிக இன்னல்கள், வாய்வு
அல்லது கபம், சளித் தொல்லைகள், வழக்கு விவகாரங்கள், உறவுகள்
தரும் இன்னல்கள், குடும்பத்தாரிடையே சண்டைகள் ஆகியவை ஏற்படும்.
புதன்
புக்தி – 2 – வ – 8 மா – 9 நாட்கள்.
ஜாதகருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம்
இருக்கும். சந்தோஷம், பெண்களின் நட்பு, அரசாள்பவரால்
மற்றும் உயர்அதிகாரிகளால் கொடுக்கப்படும் மரியாதை, கௌரவம். வெற்றி மற்றும் நண்பர்களின் சங்கமம்
ஆகியவையும், ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது திசையில் அறிவு
தெளிவுபெறும். பகுத்தறிவு மற்றும் மேதாவித்தனம், தர்ம
காரியங்கள், குழந்தைப் பிறப்பு, குழந்தைகளின் முன்னேற்றம், உறவுகளுக்கு
வெற்றி, சந்தோஷம், சொத்து
மற்றும் புகழ் சேர்க்கை, மத விழாக்கள், வணிகம் மற்றும் விவசாயத்தின் மூலமான இலாபம்
ஆகியவை ஏற்படும்.
கேது புக்தி - 1 – வ – 1 மாதம்
. 9 நாட்கள்.
பணம் இழப்பு, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டை,
எதிரிகளால் தொல்லை, வாயு மற்றும் உடலில் ஏற்படும்
விஷத் தன்மையால் ஆரோக்கியம் பாதிப்பு,
கொடூரமான, இழிவான, அற்பமான, துஷட்டத்தனம் மிக்கவர்களுடன் தொடர்பு,
மூட்டுவலி, நோய் அல்லது பாம்பினால் அபாயம் ஆகியவை
ஏற்படும்.
சுக்கிர புக்தி – 3 – வ – 2 மாதங்கள்.
ஜாதகர் குழந்தைகள், மனைவி மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான
வாழ்க்கை வாழ்வார். சொத்து இலாபம், பரந்த
நிலப்பரப்பில் கீர்த்தியுடன் திகழ்வார். கடற்பயணம், மற்றவர்களின் அனுகூலம் உண்டு. திருமணம் மற்றும் குழந்தைப்
பிறப்பு, எதிரிகளை வெல்லுதல், தடைகளைத்
தகர்த்து எறிதல் ஆகியவை ஏற்படும்.
சூரிய புக்தி – 11 –
மா – 12 நாட்கள்.
அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுதல்,
காய்ச்சல் மற்றும் பிற வியாதிகள், உயர் அதிகாரிகளின்
ஆதரவின்மை, கண் உபாதைகள் மற்றும் சூரியன் காரகம் பெறும் உபாதைகள்,
உடல்வலி ஆகியவை ஏற்படும். சொத்து இழப்பு,
மனைவியின் உடல் நிலை பாதிப்பு, அதிகாரிகளின் தொல்லைகள்
ஆகியவை ஏற்படும்.
சந்திர புக்தி – 1 வ – 7 மாதம் –
ஒரு குறிப்பிட்ட திசையில் (பிரிவில்) அறிவுவாற்றல் அதிகரித்தல், புதிய திட்டங்களைத் துவங்குதல்,
செலவுகள் அதிகரித்தல், நண்பர்களுக்கு கஷ்டம் கொடுத்தல்.
சோகங்கள், உறவுகளை வெறுத்தல், நீரினால் பயம், கண்டம், பணிழப்பு,
சொத்துக்களை அடகுவைத்தல், அது மூழ்கிய பின்னரே
திரும்பப் பெறப்பட நேரும். கலகம், பீடை,
வீட்டில் சண்டை, வழக்கு ஆகியவை ஏற்படும்.
செவ்வாய் புக்தி – 1 வ – 1 மா – 9 நாட்கள்.
கொஞ்சம் கௌரவக் குறைவு ஏற்படுதல், அக்னியால் ஆபத்து, இடம்
அல்லது வீடு மாற்றம், நிலையில்லாத காலம், குலத்தில் ஈனம், கொடிய பகை, பழி,
ஊர் ஊராய் அலைந்து திரிதல், அனைவரையும் பகைத்துக்
கொள்ளுதல், பொன்னாபரணங்கள் திருட்டுப் போகுதல், சகோதர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுதல்.
பிறரால் பணவிஷயமாக ஏமாற்றப்படுதல், இழத்தல் ஆகியவை
ஏற்படும்.
இராகு
புக்தி – 2 வ 10 மா – 6 நாட்கள் –
சொத்து இழப்பு, பணம் இழப்பு, காய்ச்சல்
மற்றும் இதர நோய்கள், வெளிநாட்டு சுற்றுப் பயணம், விபத்து அபாயம், எதிரிகளால் தொல்லை, புண்கள், கல்லீரல் வீக்கம், உடலில்
கஷ்டங்கள் பொன் ஆபரண நாசம், பாம்பு கடித்தல் ஆகியவை ஏற்படும்.
குரு புக்தி – 2 வ – 6 மா – 12 நாட்கள்.
கடவுள் பக்தி அதிகரித்து, புனிதர்களின் தொடர்பு ஏற்படுதல்.
உயர் அதிகாரிகளின் அனுகூலமான நடவடிக்கைகள், வசதி
வாயப்புக்கள் பெருகுதல், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கிய மேன்மை, உயர்பதவிகள் அடைதல், அனைத்து விருப்பங்களும் நிறைவேறுதல்,
குடும்பப் பெருக்கம், உடல் தொடர்பான வசதிகள் கூடுதல்,
ஆடை ஆபரண சேர்க்கை, அரசர்களால் நன்மை, உறவுகள் சேர்க்கை ஆகியவை ஏற்படும்.
புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள் – தசா காலம் 17 வருடங்கள்.
புதன் புக்தி – 2 வ – 4 – மா 27 – நாள் ;
அழகிய வீடும், வியாபாரத்தின் மூலம் அதிக
சொத்துக்களும் சேரும். தொழில் மூலமாகவும், மதத் தொடர்புள்ள நபர்கள் மூலமான வருமானங்களும் வரும். அதிகப் புகழும், நல்ல கல்வியும், மேதாவித்தனமும், கற்றலில் ஆர்வமும் ஏற்படும்.
சந்தோஷம், குழந்தைப் பிறப்பும் ஏற்படும்.
வெற்றி, குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்தல்,
தர்மகாரிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல், உறவுகள் மூலமான
ஆதாயங்கள் ஆகியவை ஏற்படும். அதிக பாக்கியம், நன்மை பயக்கும் ஞானம், வித்தை, எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதமாக முடிவடைதல் ஆகியவையும் ஏற்படும்.
கேது புக்தி – 11 மாதம் 27 நாட்கள்.
பெரிய இடம்விட்டு மாறுதல், வியாதியால் கஷ்டங்கள்,
பொருட்சேதம், உறவுக்குக் கேடு, மருந்திடும் குணத்தால் துன்பம், அதிகமான மனக்கிலேசம்
உண்டாகுதல். ஆரோக்கியக் குறைவு, இன்னல்கள்,
கவலைகள், சண்டைகள், பூமி,
வாகனம் ஆகியவை இழப்பு, மதத்துக்கு எதிரான எண்ணங்கள்
மற்றும் நடவடிக்கைகள், மனக் குழப்பங்கள், உறவுகளால் தொல்லைகள், சுகம் இழப்பு, இடமாற்றம், உறவுகளுக்கு அதிர்ஷ்டமின்மை ஆகியவை ஏற்படும்.
சுக்ர புக்தி – 2 வ – 10 மாதங்கள்.
மதத் திருவிழாக்கள் மற்றும் குரு, ஆசிரியர்களுக்கு
மரியாதை அளித்தல், ஆகியவை ஏற்படும். தனலாபம்,
புத்தாடைகள், அணிகலன்கள் ஆகியவை கிடைக்கும்.
நண்பர்களின் சந்திப்பு, உறவுகளுக்கு நல்ல முன்னேற்றம்,
இலாபம், சுக்கிரனின் காரகம் பெறும் வர்த்தகத்தில்
ஆதாயம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். நீண்ட பயணங்கள்,
எதிர்பாலருடன் உறவு ஆகியவையும் ஏற்படுவதோடு, திருமணம்
ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். அருமை தங்கிய மக்கட்பேறும்,
ஸ்த்ரீயுடன் போகமும், உறவுகள் சினேகமும்,
வித்தையும், வேறு நாட்டுக்குச் சென்றவர் திரும்ப
வந்து சேருதல் ஆகியவையும் ஏற்படும்.
சூரியன் புக்தி – 10 மா – 6 நாட்கள். –
பொன், பொருள் சேர்க்கை, நல்ல உணவு மற்றும் பானம், அரசு மற்றும் உயர்அதிகாரிகளிடம்
இருந்து கௌரவம், மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
ஆனால், சூரியன் பாதிப்பு அடைந்து இருந்தால் கவலைகள்,
மக்களின் எதிர்ப்பைப் பெறுதல், உயர் அதிகாரிகளின்
அனுகூலமற்ற தன்மை, அக்னியால் ஆபத்து, மனைவிக்கு
நோய், தடைகள் ஆகியவை ஏற்பட்டாலும், சொத்துச்
சேர்க்கை ஏற்படும். அரசரால் துன்பம், இடையூறுகள்
ஆகியவை ஏற்படும்.
சந்திர புக்தி – 1 வ – 5 மாதங்கள்.
பெண்கள் மூலமான பண ஆதாயம், விவசாயம்,
வணிகம் மூலமான இலாபங்கள், வெற்றிகள், சந்தோஷம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் ஆகியவை ஏற்படும்.. சந்திரன் பாதிக்கப்பட்டிருக்க, ஜாதகர் வீக்கம்,
கால்களில் அடிபடுதல், தலைவலி, கண் நோய், படை, கழுத்துவலி போன்ற
நோய்களால் கஷ்டப்படுவார். பெண்களுடன் சண்டைகள், தவறுகளால் கஷ்டங்கள் ஆகியவை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது.
அனைவரிடத்தும் பகை உண்டாகுதலும் ஏற்படும்.
செவ்வாய் புக்தி – 11 மாதம் 27 நாட்கள்.
அக்னி மூலமான, ஆயுதம் மூலமான அபாயங்கள்,
கண் பிரச்சனை, திருட்டு பயம், அனைத்து அபாயங்களும் விலகுதல் அல்லது மறைதல், எதிரிகள்
தொல்லை ஆகியவை ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவதின் காரணமாகப்
புகழ் அதிகரித்தல், உயர் அதிகாரிகள் மூலமாக நன்மைகளும்,
அனுகூலங்களும் அடைதல் ஆகியவை ஏற்படும். காற்றால்
பரவும் நோய்கள், பக்கத்து வீட்டு நபர்களின் மூலமான தொல்லைகள்
ஆகியாவையும் ஏற்படும். பயணங்கள், புண்கள்,
குடித்தல், சண்டையிடுதல் மற்றும் தலைவலி ஆகியவையும்
ஏற்படும்.
இராகு புக்தி – 2 வ – 6 மாதம் – 18 நாட்கள்.
இராகு நல்லநிலையில் இருக்க அல்லது சுபர் பார்வை பெற, உறவுகள், நண்பர்கள் மூலமாக சொத்துச் சேருதல்,
பதவி உயர்வுகள் மற்றும் உயர் நிலையால் இலாபம் அடைதல், மகிழ்ச்சிப் பெருக்கம், புதிய வருமானங்கள், புதிய வீடு வாங்குதல் அல்லது வீடு மாற்றம் ஏற்படும். அந்நிய தேசத்தவரால் இலாபம் அடைவர். இதுவே, இராகு அசுப பாதிப்படைய பதவி இழத்தல், மரியாதை,
கௌரவம் இழத்தல், கொடுமையான, கீழான பெண்களுடன் தொடர்பு, ஏற்படுதல், தீயால், விஷத்தால் அல்லது நீரால் கண்டம். கண், வயிறு ஆகியவற்றல் உபாதைகள், வெளி நாட்டவரால் பயம், ஆபத்து ஆகியவையும் ஏற்படும்.
கெட்ட கனவுகள், தலைவலி ஆகியவை ஏற்படும்.
குரு புக்தி – 2 வ – 3 மாதம் –
சந்தோஷம் மிக்க காலம், எதிரிகள் அழிதல்,
வியாதிகளில் இருந்து விடுதலை பெறல், வெற்றிகள்,
பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு, அரசு மூலம் மரியாதை,
கௌரவம் அடைதல், உயர் அரசு அதிகாரிகளின் மூலமான
ஆதாயங்கள் ஆகியவை ஏற்படும். சொத்துக்கள் சேருதல், வாகன யோகம், புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படுதல்,
திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடத்தல், புதிய
உறவுகள் சேர்க்கை என அனைத்துமே நல்லனவையாகவே நடக்கும் யோக காலமாகும்.
சனி புக்தி – 2 வ – 8 மாதம் – 9 நாட்கள்.
பலம் மிக்க சனியானால் ஜாதகர் இலாபங்களை அடைவார், சொத்துக்கள் சேரும், வசதி வாய்ப்புக்கள் பெருகும்,
சனி காரகம் பெறும் பொருள்களை வணிகம் செய்வதால் இலாபம் பெருகும்.
விவசாயம், பயணங்கள் மூலமாக ஆதாயம் பெருகும்.
தர்ம காரிய ஈடுபாடு அதிகரிக்கும், அதனால் ஆதாயமும்
ஏற்படும். முறையற்ற வழிகளிலும் சம்பாத்யம் பெருகும்.
பலமற்ற சனி எனில் கஷ்டங்கள் அதிகரிக்கும், மகிழ்ச்சிகள் மறையும், கவலைகள் அதிகரிக்கும்,
நிலைமாற்றம், தாழ்வு நிலை அடைதல், சொத்துக்களை இழத்தல், வியாபாரத்தில் தோல்வி அடைதல்,
வாயு, கபம், சளி,
கோழை ஆகிய தொல்லைகள் ஏற்படுதல். சோகம் மிக்க மனம்,
தாழ்வு நிலையில் உள்ளவர்கள் எதிரியாகுதல் ஆகியவையும் ஏற்படும்.
உத்திராட நட்சத்திரத்தில் கேடு உண்டாகுதலும், உற்றாருக்கும்
கேடு உண்டாகுதலும், ஒவ்வொரு நாளும் நன்மை இல்லாது போகுதலும் ஆகிய
கெடு பலன்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment