Search This Blog

Wednesday, 27 January 2016

கர்மா ?





கர்மா ?

நாம் நம் குழந்தைகளுக்குப் பணம் சம்பாதிக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறோமேயன்றி, நாம் செய்கின்ற சஞ்சித கர்மாக்களைக் குறைக்க அவர்களுக்கு வழிகாட்டுவதில்லை. முற்பிறவியில் செய்த பாவங்களின் பாக்கிகளைத் தொலைக்க வேண்டியதற்கான வாய்ப்பை அளிப்பதே இப்பிறவியின் வாழ்க்கையல்லவா ?
அந்த பாக்கிகளை முழுவதுமாக முடியும் வரை, நம் வாழ்க்கையில் அவற்றைச் சுமந்து செல்ல வேண்டியதாகிறது. இவ்விஷயத்தில் நாமே சுத்தமாக இல்லாத போது, குழந்தைகளிடம் எங்ஙனம் எதிர்பார்க்க முடியும். எனவே, நமது கர்மாக்கள் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனத் தொடர்கின்றன. ஆனால் தற்காலத்தில் அது அர்த்தம், தர்மம், காமம் மற்றும் மோட்சமாக மாறிவிட்டது.
கர்மா – கர்மா என்பது க்ரியா எனும் செயல்பாட்டைக் குறிக்கும். செயல்பாடற்ற மனிதன் இறந்தவன் ஆகிறான். கர்மங்கள் மூன்று அவை க்ரியாமான், சஞ்சித கர்மா மற்றும் ப்ராப்த கர்மா ஆகும்.
1. பசிக்கிறது – சாப்பிட்டேன் பசியாறினேன் என்பது உடனடி முடிவுகிடைக்கும் க்ரியாமான் கர்மாவாகும்.
2. விதைத்த விதை பல மாதங்களுக்குப் பிறகு வளர்ந்து, மரமாகி, பூ புத்துக் காய்ப்பது போன்ற கர்மா – சஞ்சித கர்மா ஆகும்.
3. ப்ரார்ப்த கர்மா – இது தீர பல வருடங்கள் – பல ஜென்மங்கள் கூட ஆகலாம்.
திருதுராஷ்டிரன், கடவுளிடம், “நான் ஏன் எனது 100 மகன்களையும் இழக்க நேர்ந்தது ?” - எனக் கேட்க, அவர் – “பல பிறப்புக்களுக்கு முன் நீ ஒரு வேடனாய் இருந்த போது 100 குஞ்சுகளைக் கொன்ற பாவத்தின் பலனே இது” - எனக் கூறினார். அதன் காரணமாக அவன் புண்ணியம் சேர்க்கப் பல பிறவிகளை எடுக்க வேண்டியதாயிற்று என்பது பழைய கதை. இதன் மூலமாக நாம் செய்த வினைகள் ஜென்ம ஜென்மத்துக்கும் தொடர்கிறது என்பதை உணர்ந்து நாம் வாழ முற்பட வேண்டும்.

No comments:

Post a Comment