உ
பரிகாரத்துக்கான பழமையான நூல் “லால் கிதாப்”
‘லால் கிதாப்’ - என்பது ஒரு பண்டையகாலத்து, மிகவும் சக்தி வாய்ந்த ஜோதிட பரிகார வழி முறையாகும். இந்த பரிகாரத்தின் பலனின் முடிவுகளை, அது செய்யப்படுகிற 45 நாட்களில், ஒவ்வொரு நாளும்
உணரமுடியும். இது இராவணனால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஹோமங்கள் போன்ற மத சம்பிரதாயங்களை விரும்பாத இராவணன், தனது பிரஜைகளின்
கஷ்டங்களைக் கண்டு, அவர்கள் செய்கின்ற
பரிகார பூஜைகள் சாதாரணமானதாகவும், உடனடியாக நடத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார். அதன் பலனே
இந்த எளிய முறை பரிகாரங்கள்.
1930 வருடத்தில், பஞ்சாபில், முதல் முதலாக
இராணுவ அதிகாரி ஒருவரால் லால்கிதாப் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் காலங்களில் பரிகாரத்துக்கான புத்தகம் என்ற அர்த்த்துடன் ‘டோட்காஸ்’ – என அழைக்கப்பட்டது. இந்த பரிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செய்யப்பட்டு, நல்லபலன் கிடைத்தவுடன் நிறுத்தப்படவேண்டும். அதன் பிறகு அதில் அடங்கியுள்ள விஞ்ஞானபூர்வமான விஷயங்களை அறிந்து, லால் கிதாப்
என பெயரிடப்பட்டது. “லால்” – என்றால் சிகப்பு வர்ணம்,
“கிதாப்” – என்றால் புத்தகம் என்பதாகும். இரத்தத்தின் நிறம் – சிகப்பு, நமது உடலில் ஓடக்கூடியது, நமது முன்ஜென்ம வினைகளையும், முன்னோர்களின் செயல்களுக்கும் தொடர்புறுத்துவது இரத்தம்தானே ? இதுவே. தற்போது நம் மருத்துவத் துறையிலும் நோயைக் கண்டுபிடிக்க முதலில் பரிசோதிக்கப்படுவதும் ஆகும்.
எனவே,
அதன் நிறமே இந்த ஜோதிடமுறைக்கு வைக்கப்பட்டுள்ளது.
“லால் கிதாப்” பரிகாரங்களுக்கு 9 கிரகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த முறையின் முக்கிய குறிக்கோளே பலன் சொல்வதைவிட, பரிகாரம் உரைப்பதுதான். ஏனேனில், கஷ்டங்களைவிட, கஷ்டத்துக்கு உரிய பரிகாரமே முக்கியம் எனக் கருதி பரிகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, வரப்போகிற பலனைவிட, இப்போதைய கஷ்டங்கள் தீர நிச்சியமான, எளிமையான பரிகாரங்கள் “லால் கிதா” ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. உலக துன்பங்களை கழைவதற்கு முன், தனிமனிதனுக்கு உள்ள
முன்னோர்களால் ஏற்பட்ட தோஷங்கள், இதர தோஷங்களுக்கான
பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இத் தோஷங்கள் ஜாதகரால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியவை ஆகும். ஒவ்வொருவரும், தங்கள்
முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இதுபோன்ற ரிண பித்ரு எனப்படும் முன்னோர் செய்த பாவங்களுக்குப் பரிகாரங்கள் செய்யவேண்டும். தொழில் முன்னேற்றமோ, திருமணத்தடைகளோ, புத்திர பாக்கியம் இன்மையோ, பயணத்தடை, பணநஷ்டங்கள்
என அனைத்து முன்னேற்றத் தடைகளுக்கும் உரிய பரிகாரங்கள் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவை
நம்மால் செய்யப்பட்ட முன்வினையால் அல்லது நாம் செய்யாத, முன்னோர்களால் செய்யப்பட்ட
பாவங்கள், அந்த குடும்பத்தில்
பிறந்ததின் காரணமாக, இக் கஷ்டங்களை
அனுபவிக்க வேண்டியதுள்ளது.
“லால் கிதா” ப்பில் வேறு மாயமந்திரங்களோ, தந்திரங்களோ இல்லை. தாயித்தோ, எந்திரங்களோ, தெய்வ விக்ர பரிகாரங்களோ எதுவும் கிடையாது. அதில் சொல்லப்பட்டுள்ளவை, மிக எளிமையான, சுலபமான, வீட்டில்
இருக்கும் பொருள்களை வைத்தே செய்யும் அளவுக்கு உள்ள பரிகாரகங்களே ஆகும்.
அதில், பொய் சொல்லாதே, கடவுளிடம் நம்பிக்கை வை, முழுமையான
அர்ப்பணிப்புடன் தெய்வத்திடம் பக்தி செலுத்து ஆகிய சீரிய கருத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மதுக் குடிக்காதே, மாமிசம் உண்ணாதே ( அசைவ பழக்கம் இருந்தாலன்றி ) கூட்டுக் குடும்பத்தில் வாழ முற்படு, மூக்கையும், காதுகளையும்
கூர்மையாக வை, பெண்
குழந்தைகளை வழிபடு, பெண்கள், விதவைகளுக்கு
உரிய மரியாதை கொடு, இவர்களுக்கு வேண்டியதை
தானமாகக் கொடு, எவரிடம் இருந்தும்
இலவசமாக எதையும் பெற விரும்பாதே, பசுக்களுக்கு காக்கை மற்றும் நாய்க்கு உணவளித்துப் பேணு, பற்களை சுத்தமாக
வைத்துக்கொள் என்றும், இது போன்ற, தற்கால உலக வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற நல்ல புத்திமதிகளைச் சொல்கிறது.
“லால் கிதாப்” ஜோதிடமுறை பலர் குறிப்பிடுவதுபோல் கற்றுக் கொள்ள கஷ்டமான வழிமுறையா ? – என்றால், இல்லை என்றே
சொல்ல வேண்டும். இது ஓர்
எளிதான முறை என்று இதில் அதிக திறமைபெற்ற ஜோதிடர், கர்நாடகா, ஹூப்ளியைச்
சேர்ந்த திரு. விஜய் வீர்
குறிப்பிடுகிறார். “லால் கிதாப்” முறைப்படி, தொடக்கத்தில் ஜாதகம்
அமைப்பதில் சிறு குழப்பங்கள் எழுந்தாலும், இது வேதஜோதிடத்தை விட எளிமையானதே.
“லால் கிதாப்”- ஜாதகம், நமது கையிலுள்ள
ரேகைகளை வைத்து எழுதப்படுவதாகும். உள்ளங் கையில் உள்ள ரேகைகள், மேடுகள், சதுரங்கள், விடுபட்ட வரிகள், விரல் மேடுகள்
அனைத்தும், ஒரு கிரகத்தைக்
குறிக்கின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து அவற்றின் நிலைகளை வைத்து, சரியான முறையில்
ஜாதகம் எழுதப் படவேண்டும். அதிகம் நேரத்தை எடுத்துக் கொள்வதும், மனம் ஒன்றி
ஈடுபட வேண்டியதுமான கைரேகைக் கலையில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் குழப்பங்களைத் தவிர்க்க, ஜாதகரின் ஜாதகத்திலேயே
சில மாறுதல்களை கைரேகைப்படி செய்து கொள்ளலாம். பூமியில் கிடைகக்
கூடிய பொருட்களைக் கொண்டே “லால் கிதாப்” பரிகாரங்களை செய்வது எளிது. தினமும் நம்
வாழ்க்கையில் சம்பந்தப்படக் கூடிய, கிரகங்களுக்குத் தொடர்புடைய இந்த
பொருட்களைப் பற்றி முழுமையான அறிவு நமக்கு வேண்டும். உதாரணமாக – கிரகங்களுக்கான
மரங்கள், நீர்,
கற்கள், உறவுகள், நண்பர்கள், வீடுகள், விலங்குகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள், வண்ணங்கள் போன்றவை
ஆகும்.
பிரபஞ்சத்தை ஆளும் ஈஸ்வரனின் கட்டளையை ஏற்று நடக்கும் கிரகங்கள், மனித வாழ்க்கையைக்
கட்டுப்படுத்தக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. செவ்வாய் – பூமி சம்பந்தமானவற்றையும், சுக்கிரன் – பொருள், குரு
– பக்தி மார்க்கம், புதன் – திறந்த
மனம், பரந்த மனப்பான்மை, காடுகள், சனி
– இருட்டு, இராகு – கேதுக்கள் சனியின் காரியதரிசிகளாகவும் செயல்படுகிறார்கள். இந்த கிரகங்களே நமது விதியை நிர்ணயிக்கும் முக்கிய குறிகாட்டிகளாக அமைகின்றன. பூமியில் தங்களுக்கு
உரிய பொருட்கள் மூலமாக, அனைத்தையும் மேற்பார்வை
இடுபவர்களும் இவர்களே ஆகும்.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பதன் காரணமாக, அந்த குடும்பத்தில்
உள்ளவர்கள் செய்த பாவங்கள், தோஷங்களாக ஒரு
ஜாதகருக்கு, தற்காலிக விதியாக அமைந்து விடுகிறது. இந்த தோஷமானது, முற்பிறவியில் அவரால் செய்யப்படாத வினையாகக் கூட இருக்கலாம். இதை, ஜாதகத்தின்
மூலமாக அறிந்து கொள்ளலாம். “நிச்சிய கர்மா” – எனப்படும் நிலையான விதி, இவரால் முன்
ஜென்மத்தில் நிகழ்தப்பட்டதாகும். இதை எவராலும் மாற்றவோ, திருத்தவோ முடியாது. ஒரு
ஜாதகத்தில் இவற்றை ஆராயும் போது, விதிப்படி எவ்வகை
வினைகள் செய்யப்பட்டுள்ளன, அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பரிந்துரைக்கலாம்.
இதை பரிசீலிக்கும் போது, “லால்கிதாப்” முறையில், பாவங்களே பிரதான
இடம் பெறுகின்றன, இராசிகள் அல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த இலக்னமானாலும்
மேஷ லக்ன பாவம் என்று மட்டுமே அழைக்கப்படும். மேஷ இராசி எனக் கூறக்கூடாது.
20 டிசம்பர் 1978 அன்று இரவு 10 மணி அளவில் பிறந்த ஜாதகரின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாமிடத்தில் சந்திரன், இராகு, சனி
ஆகியோர் இணைவு பெற்று அமர்ந்துள்ளனர். பொதுவாக, 2 மற்றும் 7 ஆம் அதிபதி, எப்போதுமே சுக்கிரனாகும். அவர் 4 ஆம் பாவத்தில் உள்ளார். 2 பாவத்தில் சுக்கிரனுக்குப் பகைவர்களான இராகு, சந்திரன் ஆகியோர்
சுக்கிரனைக் கொல்கிறார்கள். 4 ஆம் அதிபதி சந்திரன் 2 இல் அமர்ந்து இராகு, சனியால் பாதிப்பு
அடைவதால், இரு பெண்
கிரகங்களின் பாதிப்பு நிலை பெண்ணால் ஏற்பட்ட தோஷத்தைக் குறிகாட்டுகிறது என உறுதி செய்யலாம்.
IX
29° 03’
|
|
X
0° 32’
|
XI
0° 54’
|
கேது28°16
VIII
28° 05’
|
20 டிசம்பர் 1978
இரவு
10 மணி
பாவம்.
|
XII
0° 21’
குரு(வ)14° 30’ லக்//
29°
39’
|
|
VII
29° 39’
VI
0° 21
|
சந்12° 19’
சனி22°20’
ராகு28° 16’
II
28° 05
|
||
செவ்12°29’
சூரி04° 53’
V
0° 54’
|
IV
0° 32’
புத 13° 38
|
சுக் 22° 06’
|
III
29° 03’
|
“லால் கிதா” ப்பில் சுக்கிரன் -- திறந்த வெளி, ரொக்கம், தினசரி
உபயோகப்படுத்தும் பொருட்கள், பசு மேலும்
பல பொருட்களுக்குக் காரகராகிறார்.. எனவே, இவருக்கு பெண் தொடர்பான, விவசாய நிலத் தொடர்பான
பிரச்சனைகள், குடும்பத்தில் நகைகள், சொத்துக்கள் இழப்பு
ஆகியவை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. விசாரித்த போது ஜாதகருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சியமாகி, திருமணம் நின்று விட்டதாகவும், விவசாய நிலத்தை விலைபேசி அதிலும் நண்பனால் ஏமாற்றப்பட்டு பணம் இழந்ததாகவும் கூறினார். மேலும், 4 ஆம் பாவம்
சந்திரன், சுக்கிரனால் பாதிப்பு
அடைந்ததால், இவருக்கு முறையாக பிரிவினையால் வரவேண்டிய சொத்திலும் சமமான பங்கு கிடைக்கவில்லை. இவ்வாறாக, ஜாதகத்தின் மூலமாக
துல்லிய நிகழ்வுகளைக் கண்டறிய முடிந்தது.
கடவுள் படைத்த ஒவ்வொரு கிரகமுமே அதிக தூரத்தில் இருந்த போதும், அவரால் படைக்கப்பட்ட
ஒவ்வொரு பொருளுமே ஏதாவது ஒரு கிரகத்துக்கு உரியதாகப் படைக்கப்பட்டுள்ளது. இவற்றிலேயே “லால்
கிதா” ப்பின் பரிகார இரகசியங்கள் அடங்கியுள்ளது. “லால் கிதா” ப்பை
உருவாக்கிய ஆசிரியர், அப் பொருட்கள்
ஒவ்வொன்றையும் கிரக வாரியாக பல குழுக்களாகப் பிரித்து எழுதியுள்ளார். உதாரணமாக அரிசி, பால், உணவில் உள்ள நீர் சத்துக்கள், தாய், பாட்டி ஆகிய
சொந்தங்களையும், தாவரங்களில் – ரசமுள்ள பழங்களையும், மாமரத்தையும், விலங்குகளில் – குதிரை, முயல் ஆகியவற்றையும்
கடவுளில் ஈஸ்வரனையும், விலைமதிப்பு மிக்க உலோகங்களில் வெள்ளியையும், நீர் நிலைகளில் ஓடுகின்ற நீரையும், ஏரி,
குளத்தையும், உடலில் மனம், இதயம் ஆகியதையும்
சந்திரனுக்குப் பிரித்தார்.
சந்திரனால் ஏற்பட்ட தோஷத்திற்கு இந்த பொருட்களையே பரிகாரத்துக்குப் பரிந்துரைக்கலாம். தாயின் சாபத்துக்கு, வெள்ளிப் பொருட்கள், அரிசி, பால்
ஆகியவற்றை உறவுகளிடம் இருந்து சேகரித்து, ஓடும் நீரில்
சில காலங்கள் விடவேண்டும். இதன் காரணமாக தாயின் சாபம், தோஷம் நிரந்தரமாக
நீங்கிவிடும். இதுவரை அவர் அனுபவித்த துன்பங்கள் நீங்கி, சுகம் பெருகும். சந்திரனால் ஏற்பட்ட தோஷம், அவருக்கு உகந்த
பொருட்களை நம் கைகளால் தூக்கி எரியும் போதே நம் உடலைவிட்டு நீங்கி விடுகிறது. பொதுவாக சாபத்திற்கான
பரிகாரங்கள் ஒரு சில தடவைகள் மட்டுமே செய்யப்பட வேண்டும். மற்ற பரிகாரங்கள் 43 நாட்கள் செய்யப்பட வேண்டும். நடுவிலேயே நல்ல
பலன் தெரிந்தாலும் முழுமையாக 43 நாட்கள் இப் பரிகாரங்களை செய்வதே உசிதமாகும். அப்போதுதான் நிரந்தரமாக தோஷ பாதிப்புக்கள் மறையும்.
சந்திர தோஷத்துக்கான எளிமையான பரிகாரம் – தாயை தினமும் வணங்கி ஆசி பெறுதல், தாயால் கொடுக்கப்பட்ட
அரிசியை வீட்டில் வைத்திருத்தல், வெள்ளியினாலான காப்பு அல்லது மோதிரத்தைக் கையில் அணிந்து, அதை
43 நாட்களுக்குத் தொடரவேண்டும். இதற்குப் பின்னுள்ள விஞ்ஞான நிகழ்வு என்னவெனில், இந்தப் பொருட்களை நதியில் விடும்போது, நமது உடலில் சந்திரனால் ஏற்பட்ட கர்மாக்களின் பாவங்கள், நதியோடு கரைந்துவிடுகின்றன
என்பதே உண்மை. அதன் காரணமாக
குறிப்பிட்ட கிரக பாதிப்பால் ஏற்பட்ட தோஷங்களும், சாபங்களும் நிரந்தரமாக மறைந்துவிடுகின்றன.
“லால் கிதா” ப்பில் வாஸ்து தொடர்பான திருத்தங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திசைக்கும் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களுக்கு உரிய பொருட்களை மட்டும் இந்தப் பகுதியில் வைப்பதின் மூலமாகவே வாஸ்து திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
உதாரணமாக, சந்திரனுக்கு உரிய திசையான வடகிழக்குப் பகுதியில், அவருக்குரிய பால், வெள்ளி, அரிசி ஆகிய
பொருட்களை வைக்கவேண்டும். அதைவிடுத்து அதற்குப் பகை கிரகங்களின் பொருட்களான இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை
வைத்தால் குடும்ப வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்படலாம். இவ்வாறாக, வீட்டில்
உள்ள பொருட்களை மாற்றி அமைப்பதன் மூலமாக வாஸ்து பரிகாரங்களை நடைமுறைப்படுத்தலாம்.
ஓர் ஆண்டுக்கு உரிய ஜாதகத்தைத் தயாரித்து, அதன்படி வருட, மாத, வார, தின, பகல், இரவு என அனைத்துக் காலங்களுக்குமான பரிகார முறைகளையும் கடைப்பிடிக்கலாம். லால் கிதாப் ஜோதிடப் பிரிவு ஒரு பரந்த, சக்திமிக்க நம்
ஒவ்வொருவராலும் வாழ்நாள் முழுவதும் அர்பணித்துப் படிக்கக் கூடிய சிறந்த பிரபஞ்ச அறிவாகும்.
லால் கிதாப் பரிகாரங்களைச் செய்பவர்கள், தங்களுக்குச் சரியான பலன் கிடைக்க அனுசரிக்க வேண்டிய ஒழுக்கமான விஷயங்கள் – மது அருந்தக்கூடாது, புகையிலை , புகைபிடித்தல் கூடாது மற்றும் முறையற்ற உறவுகள் கூடாது. ஒழுக்கத்துடன் லால்
கிதாப் பரிகாரங்கள் செய்பவர்களுக்குப் பரிகாரத்தின் பலன் மிகக் குறுகிய காலத்தில், மிகச் சிறப்பாக
இருக்கும். தவறும் பட்சத்தில்
பாதிப்புக்கள் குறையாது.
“லால் கிதாப்“ பரிகாரங்கள், இரவில் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டாலொழிய, பகலில்தான் செய்யப்பட வேண்டும். பகல் நேரம்
சூரியன் காரியங்களை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க வைக்கிறார்.
அடுத்ததாக ”லால் கிதாப்“ பரிகாரங்களை கூடியமட்டும் சம்பந்தப்பட்ட ஜாதகர் மட்டுமே செய்ய வேண்டும். ஆயினும், ஜாதகர்
வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது உடல் நலக்குறைவு காரணமாகவோ செய்ய முடியவில்லை எனில், அவரின் தாய்
அவருக்காக, அவர் சங்கல்பம்
செய்தபின் செய்யலாம்.
திருமண
தாமதம்
இந்தப்
பெண்ணுக்குத் திருமணம் தாமதம் ஆனது. சில இடங்கள்
பேசிமுடித்துத் தடையானது. மேலும், இந்த
பெண்ணே தன் இஷ்டப்படி தனக்குத் தெரிந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தாள். அதற்கு, குடும்பத்தார் சம்மதிக்கவில்லை. வந்த 7 –
8 சம்பந்தங்களும் தோல்வியடைந்தன.
லால் கிதாப்பில், திருமணத்திற்கு, 2 மற்றும் 7 ஆம் வீடுகள் ஆராயப்பட வேண்டும். சுக்கிரன் 2 மற்றும் 7 ஆம் வீட்டுக்கான அதிபதி ஆவார். 2 ஆம் வீட்டில் செவ்வாய் மற்றும் இராகு அமர்ந்துள்ளனர். மேற் சொன்ன பாவங்களில் சுக்கிரனுக்குப் பகை கிரகங்கள் அமர்ந்ததால் இக் குடும்பத்தில் பிறப்பெடுத்ததால் பெண் சாபம் அல்லது தோஷம் ஏற்பட்டது. 2 ஆம் பாவம் குடும்பத்தைக் குறிப்பதல்லவா ? எனவே, இந்த பெண்ணுக்குப்
பெண் மூதாதையர்களின் சாபம் ஏற்பட்டது. இராகுவின் பார்வை
சுக்கிரன் மேல் இருப்பதால், இப் பெண்ணுக்கு காதல் ஏற்பட்டது. மேலும் பாதிப்புக்குக்
காரணம் 2 இல் உள்ள செவ்வாயே ஆகும்.
ராகு21° 58’
செவ்12°22’
II
14° 39’
|
III
17° 11’
|
IV
15° 06’
|
V 10°
46’
|
குரு26°39’
லக்//8° 30’
|
17 ஜனவரி 1987
காலை 09
ம 15 நி
பாவம்.
|
VI
07° 27’
சந்25° 25’
|
|
XII
07° 27’
புத 05°40’
சூரி02°49’
|
VII
08° 30’
|
||
XI
10° 46’
|
சனி23°26’
சுக் 15° 57’
X
15° 06’
|
IX
17° 11’
|
VIII
14° 39’
கேது21°58
|
இந்தப் பெண்ணிற்கு, பெண் சாபம் நிவர்த்தியாக பரிகாரமாக 100 பசுக்களுக்கு வெள்ளிக்கிழமை 2 வேளைக்கு உணவளிக்கவும் (வெள்ளைப் பசுவைத் தவிர) அதன் பிறகு
அமாவாசையன்று ஆஞ்சனேயரை வழிபடவும் அடிக்கடி அருகிலுள்ள விதவைப் பெண்களிடம் ஆசிர்வாதம் வாங்குதலும், ஊனமுள்ள பசுவுக்கு வெள்ளிக்கிழமைகளில் தீவனம் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதை அந்தப் பெண் 43 நாட்களுக்கு செய்த பிறகு, சிறிது சிறிதாக
அவள் மனம் மாறி, 60 நாட்களில் வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்து
வருகிறாள்.
லால்
கிதாப் – முன்னேற்றத்துக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான பொதுவான பரிகாரகங்கள் –
# தினமும்
சாப்பிடும் முன் சிறிது உணவினை மூன்று பங்காக வைத்து, சாப்பிட்ட பின் பசு, நாய்
மற்றும் காக்கைக்கு வைக்கவும்.
# திடீர்
அதிர்ச்சிகள், வீண் செலவுகள் போன்ற இராகுவின் பாதிப்பை முழுவதுமாக கட்டுப்படுத்த, எப்போதும் சமையலறையிலேயே உணவருந்துதல் வேண்டும்.
# ஒவ்வொரு
மாதமும், வீட்டில் உள்ள
நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 3, 4 அதிகமான
இனிப்புப் பலகாரங்களைத் தயாரித்து அதை பசு, எருது
அல்லது ஏதேனும் ஒரு மிருகத்துக்கு அளிக்கவும்.
# இரவு
தூங்கும் போது ஒரு குவளையில் நீர் அல்லது பாலை தலைக்கு அருகே வைத்து, காலையில் எழுந்ததும் அதை மரம், செடிகளுக்கு ஊற்றினால், வீட்டில்
சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள், விபத்துகள், அசிங்க அவமானங்கள், ஆரோக்கியக் குறைவுகள் ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
நோய்
பாதிப்புக்கள்
குறைய அல்லது தவிர்ப்பதற்கான லால்கிதாப் பரிகாரங்கள்.
# ஒவ்வொரு வருடமும் சிகப்பு பூசணிக்காயை கோவிலுக்கு தானமாக வழங்கவும்.
# இரவு
படுக்கும் போது சில காசுகளை தலையணைக்கு அடியில் வைத்து, காலையில் ஏழைகளுக்கு வழங்கவும்.
இந்த புத்தகம் pdf ஃபார்மட்டில் எங்கு கிடைக்கும்....?
ReplyDeletenetஇல் தான் தேடவேண்டும்.ஐயா. ஆங்கிலத்தில் புத்தகமாக சாகர் பப்ளிகேஷன் 72 ஜன்பத், வேத் மேன்ஷன். நியுடெல்லி 110001. கிடைக்கும். போன் - 23320648. www.sagarpublications.com
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஇது சந்திரனை அடிப்டையாக கொண்டதா அல்லது சூரியனை அடிப்படையாக கொண்டதா? திரு கணிதம் முறை படி என்னுடைய ராசி கடகம் மேலை நாட்டின் முறை படி கன்னி, குழப்பம் தீர்க வேண்டுகிறேன் நன்றி
ReplyDeleteதிருக்கணிதப்படி கடகமே. மேலை நாட்டினர் சூரியன் நிற்கும் இராசியை வைத்துக் கணக்கிடுவர்.
Deletei need in tamil
ReplyDelete