உ
துர்முகி வருட உலகியல் பலன்கள்
துர்முகி வருடம் ஏப்ரல், 13 ஆம்
நாள் 2016 அன்று இரவு 07 – 48 மணிக்குத்
துவங்குகிறது.
சப்தமி - திதியில் பிறப்பதால், வருட ஆரம்பத்தில் போதுமான மழை அளவு குறைவாக இருந்தாலும் பின்னர்
நல்ல மழை பெய்யும். அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படும்.
புதன் - கிழமையில் பிறப்பதால் இரவு நேரங்களில் அதிக மழை பெய்யும்.
புனர்பூசம் -
நட்சத்திரத்தில் பிறப்பதால் வருட ஆரம்பத்தில் மழை இருக்கும்.
விலங்குகளுக்கும், மனித இனத்திற்கும் நோய்கள் அதிகரிக்கும்.
சுகர்ம - யோகத்தில் பிறப்பதால் அதிக மழை
பெய்வதோடு நாட்டில் சந்தோஷம் நிலவும்.
விஷ்டி - கரணத்தில் ஆண்டு பிறப்பதால் மோசமான
சூழ்நிலைகள், தடைபெறும் மழை. சந்தோஷம் நிலவும்.
துலா இலக்னத்தில் பிறந்ததால் பயங்கர மழை இருக்கும். போர் சூழல் ஏற்படும். அரசாங்கத்துக்கு இடையே சண்டைகள்.
நல்ல அறுவடை ஏற்படுதல். நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும்
பசுக்கள் நோய்வாய்ப்படும்.
துன்முகி வருட கிரக பதவிகள் –
இராஜா – சுக்கிரன் – நல்ல மழை பெய்து, பயிர்கள் விழைச்சல் அதிகரிக்கும்.
பசுக்கள் நிறைய பால் சுரக்கும். காதலர்களும்,
தம்பதிகளும் காதல் உணர்வோடு மகிழ்ச்சியாகத் திகழ்வார்கள்.
மந்திரி – புதன் - கலப்பு பலன்கள் ஏற்படும். காற்று மேகங்களைக் கலைத்துவிடும்.
மக்களும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
தளபதி – செவ்வாய் – ஆட்சியாளர்களுக்கிடையே சண்டை. பயிர்கள் அழிதல்.
மக்களுக்குக் கஷ்டங்கள், காய்ச்சல் மற்றும் பாதிப்புகள்
ஏற்படும்.
சஸ்யாதிபதி – சனி – கடுகு, கருப்பு உளுந்து, கொள்ளு
மற்றும் இதர கருப்பு தானியங்கள் ஆகியவற்றின் விளைச்சல் அதிகரிக்கும்.
தானியாதிபதி – குரு – நல்ல மழை பொழிந்து நவதானிய உற்பத்தி அதிகரிக்கும். அன்னதானங்கள்
பெருகும்.
இராசிகளுக்கான பலன்கள்
ஜென்ம இராசி
|
வருமானம்
|
செலவு
|
அரசு அனுகூலம்
|
மரியாதைக்
குறைவு
|
மேஷம்
|
2
|
8
|
1
|
7
|
ரிஷபம்
|
11
|
14
|
4
|
7
|
மிதுனம்
|
14
|
11
|
7
|
7
|
கடகம்
|
8
|
11
|
3
|
3
|
சிம்மம்
|
11
|
5
|
6
|
3
|
கன்னி
|
14
|
11
|
2
|
6
|
துலாம்
|
11
|
14
|
5
|
6
|
விருச்சிகம்
|
2
|
8
|
1
|
2
|
தனுசு
|
5
|
14
|
4
|
2
|
மகரம்
|
8
|
8
|
7
|
2
|
கும்பம்
|
8
|
8
|
3
|
5
|
மீனம்
|
5
|
14
|
6
|
5
|
முக்கிய கிரக நகர்வுகள் மற்றும்
கிரகணங்கள் –
சௌரமான வருடம் துர்முகியில்
சனி ஜூலை 9, 2016 வரை கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
அதற்குப் பின் அனுஷ நட்சத்திரத்தில் செப்டம்பர் 17 -2016 வரையும் பிறகு செப்டம்பர் 18 - 2016 முதல் 26
– ஜனவரி – 2017 வரை மீண்டும் கேட்டையில் இருக்கிறார.
விருச்சிகத்தை விட்டு தனுசு இராசிக்கு சனி 26 – ஜனவரி 2017 அன்று இரவு 7 – 30 க்கு
பெயர்ச்சி அடைகிறார்.
அனுஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் காஷ்மீரிகள், மந்திரிகள், குயவர்கள், வாணியர்கள்,
மணி தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு பாதிப்புக்கள் ஏற்படும். கேட்டையில் சஞ்சரிக்கும் போது ஆட்சியாளர்கள், அவர்களின்
குருமார்கள், அரசிடம் சாதகமான பலன்களை எதிர்பார்ப்பவர்கள்,
இராணுவ வீரர்கள், கருத்தரங்கு நடத்துபவர்கள்,
வணிக சங்கங்கள் ஆகியோருக்கு சிக்கல்கள் எழும். மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது கோசாலா, காசி,
பாஞ்சாலத்திலுள்ள மக்கள், பழவகைகள், மூலிகைகள் மற்றும் வீரர்களுக்குப் பிரச்சனைகள் எழும் என பிருஹத் சம்கிதாவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
விருச்சிகச் சனி – கால்நடைகளுக்கு நோய்கள்
பாதித்து சாவு எண்ணிக்கை கூடும். ஆட்சியாளர்களுக்குள் சண்டைகள்,
மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் மற்றும் மேன்மக்களுக்கு அபாயங்களும் ஏற்படும்.
ஒரு வருடத்திற்கும் மேலாக கஷ்டங்கள் தொடரும்
தனுசுவில் சனி அமரும் போது – மேகங்கள் திரண்டாலும்
மழை ஏமாற்றும். ஆள்பவர்களுக்கு அச்சத்தையும், பூகம்பம். குஜராத்தில் கஷ்டங்கள், குழப்பங்கள் மத்தியப் பிரதேசத்தில் கொள்ளைகள், இடையூறுகள்,
தீ விபத்துக்கள், அரசியலில் புயல் வீசுதல் ஆகியவை
ஏற்படும். மார்வாரில் கஷ்டங்கள், போர் போன்ற
சூழல்கள், மக்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் ஏற்படும்.
குரு ஆகஸ்டு 11 – 2016 இரவு 9 –
27 க்கு கன்னிக்குப் பெயர்ச்சி அடைகிறார். நல்ல
மழை தரும் அவர், மக்களுக்கு நல் ஆரோக்கியத்தையும், தானிய விருத்தியையும் அளிக்கிறார்.
செவ்வாய் ஏப்ரல் 13 – 2016 முதல் ஜூன்
– 4 – 2016 மற்றும் ஜூலை 12 – 2016 முதல் செப்டம்பர்
12 – 2016 வரை விருச்சிகத்தில், சனியோடு சமாகமத்தில்
உள்ளார். சனியுடனான சரியான செவ்வாயின் இணைவு ஆகஸ்டு
24 – 2016 அன்று மாலை 04 – 56 மணிக்கு ஏற்படுகிறது.
செவ்வாய் ஏப்ரல் 18 – 2016 ல் வக்கிரம் அடைந்து,
ஜூன் 30 – 2016 அன்று நேர்கதி அடைகிறது.
இந்த வக்கிர நிலை குஜ ஸ்தம்பனம் என அழைக்கப்படுகிறது. செவ்வாயின் ஆட்சி வீடான விருச்சிகத்தில் ஏற்படும் சனி, செவ்வாயின் சமாகம நிலை, குஜ ஸ்தம்பன நிலை உலக நாடுகளில்
பல பேரழிவுகளை, இயற்கை சீற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த இரு வானியல் நிகழ்வுகள் உலகின் சில பகுதிகளில் இயற்கை சீற்றங்களால்
அழிவுகள், வெப்ப அலைகளால் பாதிப்பு, தீவிர
பூகம்பம், வெள்ள பாதிப்புகள், சுனாமி,
நிலச்சரிவுகள், எரிமலை கொந்தளிப்பு, தீவிரவாத தாக்குதல்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள்,
தீ விபத்துக்கள், வெடி விபத்துக்கள், குண்டு வீச்சு, போர் சூழல்கள் அல்லது படைகளைத்தயார் நிலையில்
வைத்தல், போராட்டங்கள், கொலைகள்,
அரசியல் குழப்பங்கள், ஆட்சி மாற்றங்கள்,
ஜனநாயகப் படுகொலைகள் ஆகிய அனைத்துவித அழிவுகளையும் பல நாடுகள் சந்திக்கும்.
துருக்கி, சிரியா, இராக்,
ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம்,
லெபனான், அரேபியன் பெனின்சுலா, ரஷ்யா, பிரான்ஸ், ஹங்கேரி,
சிலி, பெரு, கொலம்பியா,
அமெரிக்கா, கனடா, நேபால்,
பங்களாதேஷ், தாய்லண்ட், சைனா,
சிங்கப்பூர், மலேசியா, வடக்கு
மற்றும் வடகிழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒன்று அல்லது அதற்கு மேலான கெடுதல்கள்
ஏற்படும்.
துர்முகி வருடத்தில் 2 சூரிய கிரகணம் மற்றும்
2 சந்திர கிரகணம் என 4 கிரகணங்கள் ஏற்படும்.
முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. 2 வது
சந்திர கிரகணம் பகுதி தெரியும், 3 வது சந்திர கிரகணம் இந்தியாவில்
தெரியும். அடுத்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.
இவை இந்தியா, பாகிஸ்தான், ஶ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றில்
அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment