Search This Blog

Tuesday, 31 May 2016

செவ்வாய் மகாதிசை பொதுப்பலன்கள்

செவ்வாய் மகாதிசை பொதுப்பலன்கள்
                      7 வருடங்கள்.


       பலம் மிக்க இராசியில் இடம்பெற்ற, பலமுள்ள செவ்வாயின் திசை நடக்கும் போது சகோதர வழி இலாபம் அதிகரிக்கும். அவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்  அதிகாரிகளின் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் தோல்வி அடைவர். இராணுவத்தில் அல்லது சீருடைப் பணிகளில் சேருதல் அல்லது அங்கு பதவி உயர்வு அடைதல் ஆகியவை ஏற்படும். துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கையாளும் திறன் ஏற்படும். பூமி அல்லது சொத்து இலாபம், ஆபரணங்கள் கிடைத்தல் ஆகியவையும் ஏற்படும். தெற்குத் திசைப் பயணங்கள் அதிக ஆதாயம் கிடைக்கும். நல்ல ஆரோக்கியம், தைரியமான செயல்பாடுகள், முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். புகழ் கூடும்.

      பலமற்ற அல்லது பதிப்படைந்த செவ்வாய் ஆயின் ஜாதகர் கீழேவிழ நேரலாம், காயம், வெட்டு அல்லது புண்கள் ஏற்படலாம். இரத்தம் வீணாகும் அளவுக்கு விபத்து அல்லது அறுவை சிகிச்சை நடக்கலாம். சண்டையிடும் செயல்பாடுகளில் ஈடுபடலாம், முரட்டுத்தனம் அதிகரிக்கும். நீதிபதியின் முன் நிறுத்தப்படலாம்வழக்குகளில் தோல்வி, பிறரால் வெறுக்கப்படுதல், வியாபாரம் மற்றும் பிற வணிக சூழ்நிலைகளில் எதிரிகளால் நஷ்டமடைதல் ஆகியவை ஏற்படலாம். சகோதரர்களின் ஆரோக்கியம் குறையலாம். சொத்து இழப்பு, தீயால் மற்றும் பொருள்கள் உடைவதன் காரணமாக இழப்புக்கள் ஏற்படலாம். உயர் அதிகாரிகளால் மகிழ்ச்சி குறைதல். எலும்பு முறிவு, அப்பெண்டிசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

       செவ்வாய் இலக்னத்துக்கும் 8 ஆம் இடத்துக்கும் அதிபதியாகி, பார்வைகள் அவற்றின் மீதும் மற்றும் சூரியன், சந்திரன், 8 ஆம் அதிபதி ஆகியோரின் மீதும்  விழ, செவ்வாய் தனது தசா / புக்தி காலங்களில் நோய்களையும், விபத்தையும் அளிக்கவல்லது..

       செவ்வாய் மற்றும் அசுப கிரகங்கள் 4 மற்றும் 7 ஆம் இடத்தோடு தொடர்புற வாகனங்கள் மூலமாக விபத்து நிகழ வாய்ப்பு உண்டு.

       செவ்வாயும் கேதுவும் இணைந்திருக்க அல்லது வேறு தீயகிரக சேர்க்கை ஏற்பட முக்கிய உடற் பகுதிகளில், வீடுகளில், அதிபதிகள் மற்றும் காரகங்களில் பிரச்சனைகள் எழ தசாக்காலத்தில் பொருளாதார இழப்பும் அதன் காரணமாக வருமானக் குறைவும் ஏற்படும்.

செவ்வாய் திசை / செவ்வாய் புத்தி – 4 மாதங்கள் 27 நாட்கள்
      
       செவ்வாய் இருக்கும் இடத்தைப் பொருத்து சுய புக்தியில், காயங்கள், புண்களால் ஜாதகர் சிரமப்பட நேரும். செவ்வாய் தனது சுய வீடுகளான மேஷ, விருச்சிகத்தில் இருக்க ஒருவர் உயர்அதிகாரிகளால் பிரச்சனைகளுக்கு ஆளாவார். சிலருக்கு அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டினரால் கஷ்டங்கள் ஏற்படும். அற்பமான ஏவல் தொழில் செய்தலும் , பசுக் கூட்டம், நாய் இவை கடித்தலும், சித்திரை மாதத்தில் வெற்றி பெற்ற அரசரால் பயம் ஏற்படும். கார்த்திகை மாதத்தில் நீசரால் வெட்டும், குத்தும் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே ஆன நல்லுறவு கெடும் அல்லது கோபதாபங்களால் பிரச்சனைகள் எழும். திடீர் தாக்குதல்களால் அபாயம், தீயோர் சவகாசம் மற்றும் பணயிழப்புகள் ஆகியவை ஏற்படும். அதிக உஷ்ணம் மற்றும் பித்தம் காரணமாக நோய்களும், புண்களால் தொல்லையும், சகோதரர்களைப்  பிரிதலும்  ஏற்படும். எதிரிகள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், தீ மற்றும் திருடர்களால் தொல்லைகள் ஏற்படுதல். தனலாபம், பூமிலாபம் மற்றும் வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.

இராகு புக்தி – 1 18 நாட்கள்

       இராகு இடம்பெறும் பாவத்தைப் பொருத்து ஒருவர் விஷ பாதிப்புகளால் இன்னலுறுவார். அரசாள்பவர்களால், கொள்ளையர்களால், ஆயுதத்தால், நெருப்பால், எதிரிகளால் அபாயம் மற்றும் இழப்பும் ஏற்படும். வயிறு, கண்களில், தலையில் உபாதைகள் ஏற்படலாம். வெளிநாட்டுக்குப் பயணம், ஊழல் விவகாரங்கள், பணயிழப்பு, மனைவிக்கு உடல் நலக்குறைவு, கீழே விழுவதால் அபாயம். வழக்கு விவகாரங்கள். இடம், வீடு மாற்றம். தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஆகியவை ஏற்படும்.

குரு புக்தி – 11 மா 18 நாட்கள்

       ஜாதகர் பக்தி மிக்கவராகவும், மத ஆர்வம் உள்ளவராகவும் இருப்பார். மகிழ்ச்சிகரமான விழாக்களிலும், மதத் தலைவர்களின் மூலமான ஆதாயங்களையும் அடைவர். புத்திர பாக்கியமும், புதிய நண்பர்களும் ஏற்படும். தீரச் செயல்களைச் செய்வர். அதிகார பதவியில் உள்ளவர்கள் மற்றும் உயர்அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவர். தனலாபம், உயரிய கௌரவம், மதிப்பு, மரியாதை மற்றும் சந்தோஷம் கிடைக்கும். எதிரிகளின் மூலமாக பணம் மற்றும் சொத்து இழப்புக்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பகை ஏற்படும். வசிக்கும் இடத்திலேயும், அதற்குத் தொலைவிலும் எதிரிகள் உருவாவர்.

       புத்தியின் முல் பாதியில், தீயபலன்கள் ஏற்பட்டாலும், பிற்பகுதியில் மேலே சொல்லியுள்ளபடி அதிர்ஷ்டம் உண்டாகும்.     

சனி புக்தி – 1 1 மா 9 நாட்கள்

       பெரியவர்கள், மனைவி குழந்தைகளுக்குக் கஷ்டங்கள் ஏற்படும். எதிரிகள் மற்றும் கொள்ளையர்கள் மூலமான பணயிழப்பு, ஏற்படும். வீண்சண்டைகள், வழக்கு விவகாரங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பதவி நிலையில் மாற்றங்கள், இடமாற்றங்கள், சொத்து இழத்தல் ஆகியவை ஏற்படும். வாயு மற்றும் உஷ்ணத்தால் ரோகங்கள் ஏற்படும். கலகம், பொருள் நாசம், தானிருக்கும் நிலை கெட்டுவிடுதல், மனக்கிலேசம் ஆகியவை ஏற்படும்.



புதன் புக்தி  11 மா 27 நாட்கள்

       புதன் புக்தி காலத்தில் கோசார புதன் மிதுனம் அல்லது கன்னியில் இருக்கும் போது ஜாதகருக்கு பூச்சிகள், மிருகங்களால் சிராய்ப்பு ஏற்படுதல் அடி படுதல், காயம்படுதல் ஆகியவை ஏற்படும். பிற வியாதிகளால் இன்னலுருவார். எதிரிகளைக் கண்டு அஞ்சுவார். திருடர்களால் தொல்லை, பணம் இழப்பு, உயர்அதிகாரிகள் மற்றும் பகைவர்களால் ஏளனப்படுவதோடு, பிரச்சனைகளுக்கும் ஆளாவார்.

       ஆனால் மற்ற இராசிகளில் வரும்போது, திருமண வயதானால், அதிர்ஷ்டசாலியாகி, நல்ல பெரிய இடத்துப் பெண்ணை மணப்பார். அழகிய  பெண்ணின் சேர்க்கையும், அதிகம் செல்வம் உண்டாகுதலும், வியாதிகள் நீங்குதலும், புரட்டாசி மாதத்தில் நிந்திக்கப்படுதலும்,, பாம்பு கடியும் ஏற்படும். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தனலாபம், எதிரிகளை வெல்லுதல், புதிய சொத்துக்கள் சேருதல், வியாபாரம், தொழில் மூலமான வருமானங்கள் அதிகரித்தல் ஆகியவை ஏற்படும்.


கேது புக்தி  4 மா 27 நாட்கள்

       ஆயுதம், நெருப்பு மற்றும் இடியால் ஆபத்து ஏற்படும். குடும்பப் பிரச்சனைகள், உறவுகளால் தொல்லைகள், நாட்டைவிட்டு வெளிநாடு செல்லுதல், சொத்துக்களை இழத்தல், தீயோர்களின் எதிர்ப்பு, அதிகமான பகைவர்கள் உருவாகுதல், பெண்களால் நிந்திக்கப்படல், பிரச்சனைகள் என பலவகையிலும் பிரச்சனைகள் எழும்.

சுக்கிரன் புக்தி  1 2 மாதங்கள் 

       வெகுகாலமாக எதிர்பார்த்த பொருள் சேருதல், தெய்வ பூஜை, அழகிய பெண் சேர்க்கை, நல்ல வாகனம் அமைதல் ஆகியவை ஏற்படும். இலாபகரமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். சொத்துக்கள் சேரும். வெற்றிகரமான காதல் அனுபவங்கள், மகிழ்சிகரமான மணவாழ்க்கை, மத ஆர்வம், அதிக இலாபங்கள், உயரிய மரியாதை, கௌரவம் கிடைத்தல், பயணத்தால் இனிய சுகம் ஆகியவை ஏற்படும். எதிர்பாலராலும், அவர்கள் சமுதாயத்தாலும் சந்தோஷ அனுபவங்கள் பெற்றாலும் அவர்களால் குற்றமும் சாட்டப்படுவர். சிரங்கும், தேமலும் உண்டாகும்.

சூரியன் புக்தி – 4 மா 6 நாட்கள்

       அரசு மரியாதை, புகழ் அடைதல், சக்தி மிக்க பதவிகளையும் அடைவார். புதிய சொத்துக்கள்நல்ல பணியாட்கள் ஆகியவற்றை அடைவர்அமைதியான மனம், வெளிவட்டாரத்தில் நல்ல மரியாதை ஆகியவை கிடைக்கும்.  குறிப்பறியும் குணம் கொண்ட மனைவியின் உடல் நிலையில் பாதிப்பு, எவரும் பகைவராதல் ஆகியவை உண்டாகும். தீக்காயங்கள், தோல் சம்பந்தமான நோய்கள், குஷ்டம், கழுத்தில் வியாதி ஆகியவை ஏற்படலாம்.        

சந்திர புக்தி – 7 மாதங்கள்
        ஆடை, அழகிய பொன்னாபரணங்கள் மற்றும் சொத்துக்கள் சேரும். பூமிலாபம், பசுக்கள் கர்ப்பம் தரித்தல், புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும். பெரியவர்களுக்குப் பிரச்சனைகள், மண்ணீரல் பாதிப்பு, வலிகள், பித்தநீர் சம்பந்தமான பிரச்சனைகள் எழும். புதிய வீடு கட்டுதல் அல்லது புனரமைத்தல் ஆகியவை ஏற்படும். எதிர்பாலர்பால் சுகம் அனுபவித்தல். அதிகமான காமம். சுகங்கள், நல்ல தூக்கம் வரும். ஆனால், புக்தியின் கடைசிப் பகுதியில் மேலே சொன்ன பலன்கள் குறையும். இடம் மாறுதல் ஏற்படும். உடலில் தளர்ச்சி உண்டாகும்.


Monday, 30 May 2016

சனி – செவ்வாய் இணைவு தரும் அழிவுகள்.

சனிசெவ்வாய் இணைவு தரும் அழிவுகள்.




       விருச்சிகத்தில் சனிசெவ்வாய் இணைவு மற்றும் சனி, குரு மற்றும் செவ்வாய் வக்கிர நிலையானது,  237 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலையாகும். இதற்கு முந்தைய நிகழ்வானது 7 ஏப்ரல் 1779 அனுஷ நட்சத்திரத்திலும், குரு உத்திர நட்சத்திரத்திலும் ஏற்பட்டது. இந்த வருடம் செவ்வாய் 17 ஏப்ரல் 2016 அன்று வக்ரநிலை அடைகிறது. அப்போது செவ்வாய் அனுஷத்திலும், சனி கேட்டையிலும், குரு பூரத்திலும் இருப்பர். இது ஒரு அசாதாரண நிலையாகும்இத்தக் காலத்தில்  உலகம் சில அசாதாரண நிகழ்வுகளை எதிர் நோக்கலாம்.
       இக் கிரகங்களின் இந்த நிலை நிச்சியமாகத் தரும் முக்கிய உலகியல் காரக தாக்கங்களைப் பற்றி அலசுவோம். செவ்வாய்தீ, மூலகங்கள், இராணுவம், போருக்குத் தேவையான குண்டுகள், ரவை, வெடி மருந்து போன்ற தளவாடச் சாமான்கள், போராட்டங்கள், விபத்துக்கள், உக்கிரமான, கொடுமையான குண்டுவெடிப்புகள் ஆகியவற்றைக் குறிகாட்டுகின்றன. சனியானவர்நோய்கள், கஷ்டங்கள், சோகங்கள், விவசாய நிலங்கள், விவசாயிகள், ஆகியவற்றை உலகியல் ரீதியாகக் குறிகாட்டுகின்றன. இவ்விருவரின் வக்கிர நிலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் குழப்பங்களுக்குக் காரணமாகின்றன. குருவும் வக்கிரம் பெறுவதால் அரசியல் உறவுகளில் குழப்பங்களை அதிகரிக்கும். உலக வணிக நிலவரங்கள் ஏற்றம் பெறாது, இறக்கத்தைத் தழுவும். சட்ட விரோதமான பணப் பரிமாற்றங்கள் ஏற்பட்டு பொருளாதார நிலை சீரழியும். இராஜாங்க இராசியான சிம்மத்தில் குரு, இராகு இணைவு அரசியல் விவகாரங்களில் எதிர்மறைப் பாக்கங்களை ஏற்படுத்தும். சனி, செவ்வாய் இணைவு பர்மா, வடகொரியா போன்ற குழப்பமுள்ள நாடுகளில் உள்ள நிலைகளை மேலும் மோசமாக்கும்.
       இதற்கு முன்னர் இவ்விணைவுகளின் போது ஏற்பட்ட அசாதாரண நிலைகளைக் காண்போம்.
       1986 இல் சனிசெவ்வாய் இணைவு விருச்சிகத்தில் ஏற்பட்டபோது சேலஜ்சர் விண்கலம் வெடித்துச் சிதறியது உலகின் கவனத்தைக் கவர்ந்தது. (28 ஜனவரி 1986)
       4 ஜனவரி 1956 – செவ்வாய் விருச்சிகத்துக்கு வந்த போது இராகு, சனி இணைவும் சேர்ந்து கொண்டது. லாஸேன்ஜல்ஸில் மிகப் பெரிய இரயில் விபத்து ஏற்பட்டு 30 பேர் மாண்டனர்.
       1897 நவம்பர் ஏற்பட்ட இவ்விணைவு பெரிய எதிர்மறை நிகழ்வுகளைத் தரவில்லை என்றாலும் யூதர்களின் போராட்டங்கள் ருமேனியாவில் தொடர்ந்தது. இந்த வருடம் ஏற்பட்டுள்ள இணைவு அமெரிக்க அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இதைப் பற்றி பிருஹத் சம்கிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன ?
       சனி / செவ்வாய். இணைந்து ரிஷபத்தில் உள்ள சூரியனை 3 ஜூன் 2016 முதல் பார்க்கும். சூரியன். சுக்கிரனை, வக்கிர சனி மற்றும், செவ்வாயும் பார்க்கும். சூரியனுக்கு 7 ம்பாவத்தில் உள்ள அசுப கிரகங்கள் பயிர்களை அழிக்கும் என பிருஹத் சம்கிதா குறிப்பிடுகிறது. எனவே, இக்காலத்தில் உலகின் சில பாகங்களில் தீவிர பஞ்சம் ஏற்பட வாய்ப்புண்டு. ( ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ) ஸ்திர இராசிகளில் ஏற்படும் பாதிப்பு பூகம்ப நிகழ்வுகளை ஏற்படுத்தலாம் என ஹெச். ஆர். கிரீன் குறிப்பிட்டுள்ளார்.
       24  ஆகஸ்டு 2016 அன்று ஏற்படும் சனி செவ்வாயின் அனுஷ நட்சத்திர சாரத்தில் ஏற்படும் இணைவு, சனியின் தாக்கத்தை அதிகமாக விருச்சிகத்திற்குத் தருகிறது. விருச்சிகத்தின் இரண்டாவது திரேகாணம் குருவால் ஆளப்படுகிறது. இதன் காரணமாக நீர் மூலகத்தால் அதிக பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது நமக்கு ஆழமான கடல், பீச், போன்ற கடல் சார்ந்த பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என எச்சரிக்கிறது. யுத்தக்கப்பல் மூழ்குதல்,  துறைமுகங்களுக்கு பாதிப்பு, ஆகியவை ஏற்பட்டு அழிவைத் தரலாம். கடல், கப்பற்படை போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
       சனி, செவ்வாயின் முக்கிய நகர்வுகள் விருச்சிகத்தின் மூன்று நட்சத்திர சாரங்களில்  ஏற்படுவதால் அது தென் மேற்குப் பகுதிகளைக் குறிக்கிறது. சூரியன் ரோகிணியில் நேர் எதிரே வருவது ஒரு நாட்டின் மத்தியப் பகுதிகளைக் குறிப்பிடுகிறது. எனவே, தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, க்யூபா, சிலி, ப்ரேஸில், வடாப்பிரிக்கா பகுதிகள், எகிப்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படலாம். இந்தியாவைப் பொருத்த வரை குஜராத், மத்தியப் பிரதேசம், போபால் மற்றும் கேரளப் பகுதிகளில் பாதிப்புக்கள் இருக்கலாம்.


ஜோதிடம் என்பது

ஜோதிட மேதை அமரர் பி. எஸ். ஐயர் அவர்களின் கூற்று.






         ஜோதிடம் என்பது இந்தியாவின் புராதன சொத்து ஆகும். உலகம் தோன்றிய நாள் முதலாய் ஜோதிட சாஸ்திரம் நிலவி வந்துள்ளது. இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களும் இதற்குச் சாட்சியாகும். இது வேதத்தின் கண்களாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இன்றைய இந்தியாவில் இரட்டைவேடதாரிகளான அரசியல்வாதிகள் ஒரு பக்கம்ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை ‘ – என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு போலியான அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்கள்தான் ஜோதிடத்தின் முதல் எதிரிகள்.
       ஜோதிடத்தின் பெயரைக் கெடுக்கும் இரண்டாவது எதிரிகள் ஜோதிடர்கள்தான். முக்கியமாக தமிழ்நாட்டில் ஜோதிடர்கள் சிறந்த நூல்களைப் படிப்பதும் இல்லை. முறைப்படி இந்த சாத்திரத்திலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயல்வதும் இல்லை. ஏதேனும் இரண்டு நூல்களைப் படித்துவிட்டுத் தம்மைத் தாமே பெரிய பண்டிதர்கள் அல்லது விசித்திர ஜோதிடர்கள் என்கிறார்கள். ஜோதிட வித்தை குருகுலத்தில் படித்தால்தான் பலன் அளிக்கும் என்பது சாஸ்திரம். ஆனால் தமிழ்நாட்டில் வாளெடுத்தவர்கள் எல்லாம் பூசாரிகள் ஆகிவிடுகிறார்கள். குரு சிஷ்ய பரம்பரையே இல்லாமல் போய்விட்டது. கேரளத்தில் இன்றும் கூட ஜோதிடர்கள்நான் இன்னாரது சீடன் ‘ – என்று சொல்லிக் கொண்டு பெருமைப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் இப்படிச் சொல்லிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
       இரண்டாவதாக, தமிழ் நாட்டில் ஜோதிடம் வளர்ச்சி அடையாததற்கு முக்கிய காரணம் ஆதாரபூர்வமான புத்தகங்கள் இல்லாததுதான். தமிழில் ஜோதிட நூல்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ‘ “குமாரசுவாமியம்” ‘, வேதாந்த தேசிகரது – ‘ “ஜாதக மார்க்கம்”மற்றும் கீரனூர் நடராஜனின் ‘ “ஜாதக அலங்காரம்”இவற்றைத் தவிர வேறு நூல்கள் எல்லாம் முரண்பாடு உள்ளவைகளாகக் காண்கின்றன. காக புஜண்டர் நாடி போன்ற நூல்கள் அச்சுப் பிழை, மொழிப் பிழை இவற்றின் காரணத்தால் பயனற்றதாகிவிடுகின்றன. சமீபத்தில் சென்னை ஓரியண்டல் லைப்ரரிக்கார்ர்கள் ‘ “சப்த ரிஷி நாடி”யின் முதல் ஆறு இராசிகளை மட்டும் பிரசுரித்தார்கள். அதற்குப் பிறகு அவற்றின் பிரசுரத்தை அறவே நிறுத்திவிட்டார்கள்.
       கேரளத்தில் இன்றும் கூட பரம்பரை ஜோதிடக் களரிகள் அனேகம் இருக்கின்றன. அவர்கள் தத்தம் சீடர்களை முதலில் ஸமஸ்கிருத மொழியில் சப்தம், தாது, வியாகரணம் இவற்றைப் படிக்க வைத்துவிட்டுப் பிறகு முறைப்படி கோளம், கணிதம் இவற்றைக் கற்பிக்கிறார்கள். அவர்களது கணித முறை பண்டைய காலத்தியது ஆகும். அது ‘ “கடபயாதி”முறையில் சூத்திரங்கள் கற்பிக்கப்பட்டன. எனவே அவர்கள் லீலாவதி”, “ஆரிய பட்டீயம்” முதலியவற்றை வெகு கிரக இருக்கைகள், கிரக சேர்க்கைகள், “வருஷாதி நூல்”, தெசா, புத்தி பலன்கள், யோகங்கள் அவற்றின் பலன்கள் இப்படி, பலவிதமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “பாவ குதூகலம்என்ற நூல் பாவ வாரியாக பலன்களை எடுத்துரைக்க உதவுகிறது. “ஜாதக ஆதேஷ தேச மார்க்கம்” – பல அதிகாரபூர்வமான நூல்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட தொகுப்பு நூலாகும். “பராசர ஹோரை” – ஜோதிட சாத்திரத்தின் அடிப்படை நூலாகும்.
       அதற்கு அடுத்ததாக வராஹிமிஹிரரது ஹோரா சாஸ்திரம்”, “சாராவளி”, “பலதீபிகை”, “ஜாதக பாரிஜாதம்”, “சௌனக ஹோரை”, ஸ்கந்த ஹோரை போன்ற பல அடிப்படை நூல்கள் மற்றும் பல பாவ முறை நூல்களும் மிகப் பழமையான ஆனால் ஆணித்தரமான வழிகாட்டும் நூல்களாகும். “தாசாத்யாயி” - என்பது வராஹிமிஹிரரின் ஹோரைபற்றிய அபூர்வமான விளக்க நூலாகும். இவையெல்லாம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். சமீபகாலமாக பணம் சம்பாதிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தம்மைத்தாமே பெருமைப் படுத்திக்கொண்ட, சில ஜோதிட சிகாமணிகள் அரை குறையாக ஸமஸ்கிருதம் தெரிந்தும், தெரியாமலும், சரியாகவோ , தப்பாகவோ இவற்றையெல்லாம் அர்த்தம் எழுதிப் பிரசுரித்து உள்ளார்கள். அவர்கள் இப்படிச் செய்ததில் அநேக கோடி தவறுகள் இருந்தாலும் கூட அவர்களின் முயற்சியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் இனியாவது ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு அதன் பொருளை மற்றும் உபயோகத்தை நன்கு புரிந்து கொண்டு இத் தொண்டைச் செய்வார்களானால் ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும். ( இப்படி நாம் எழுதுவதை அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி கண்டிப்பதாக யாரும் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.)