Search This Blog

Monday, 30 May 2016

ஜோதிடம் என்பது

ஜோதிட மேதை அமரர் பி. எஸ். ஐயர் அவர்களின் கூற்று.






         ஜோதிடம் என்பது இந்தியாவின் புராதன சொத்து ஆகும். உலகம் தோன்றிய நாள் முதலாய் ஜோதிட சாஸ்திரம் நிலவி வந்துள்ளது. இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களும் இதற்குச் சாட்சியாகும். இது வேதத்தின் கண்களாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இன்றைய இந்தியாவில் இரட்டைவேடதாரிகளான அரசியல்வாதிகள் ஒரு பக்கம்ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை ‘ – என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு போலியான அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்கள்தான் ஜோதிடத்தின் முதல் எதிரிகள்.
       ஜோதிடத்தின் பெயரைக் கெடுக்கும் இரண்டாவது எதிரிகள் ஜோதிடர்கள்தான். முக்கியமாக தமிழ்நாட்டில் ஜோதிடர்கள் சிறந்த நூல்களைப் படிப்பதும் இல்லை. முறைப்படி இந்த சாத்திரத்திலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயல்வதும் இல்லை. ஏதேனும் இரண்டு நூல்களைப் படித்துவிட்டுத் தம்மைத் தாமே பெரிய பண்டிதர்கள் அல்லது விசித்திர ஜோதிடர்கள் என்கிறார்கள். ஜோதிட வித்தை குருகுலத்தில் படித்தால்தான் பலன் அளிக்கும் என்பது சாஸ்திரம். ஆனால் தமிழ்நாட்டில் வாளெடுத்தவர்கள் எல்லாம் பூசாரிகள் ஆகிவிடுகிறார்கள். குரு சிஷ்ய பரம்பரையே இல்லாமல் போய்விட்டது. கேரளத்தில் இன்றும் கூட ஜோதிடர்கள்நான் இன்னாரது சீடன் ‘ – என்று சொல்லிக் கொண்டு பெருமைப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் இப்படிச் சொல்லிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
       இரண்டாவதாக, தமிழ் நாட்டில் ஜோதிடம் வளர்ச்சி அடையாததற்கு முக்கிய காரணம் ஆதாரபூர்வமான புத்தகங்கள் இல்லாததுதான். தமிழில் ஜோதிட நூல்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ‘ “குமாரசுவாமியம்” ‘, வேதாந்த தேசிகரது – ‘ “ஜாதக மார்க்கம்”மற்றும் கீரனூர் நடராஜனின் ‘ “ஜாதக அலங்காரம்”இவற்றைத் தவிர வேறு நூல்கள் எல்லாம் முரண்பாடு உள்ளவைகளாகக் காண்கின்றன. காக புஜண்டர் நாடி போன்ற நூல்கள் அச்சுப் பிழை, மொழிப் பிழை இவற்றின் காரணத்தால் பயனற்றதாகிவிடுகின்றன. சமீபத்தில் சென்னை ஓரியண்டல் லைப்ரரிக்கார்ர்கள் ‘ “சப்த ரிஷி நாடி”யின் முதல் ஆறு இராசிகளை மட்டும் பிரசுரித்தார்கள். அதற்குப் பிறகு அவற்றின் பிரசுரத்தை அறவே நிறுத்திவிட்டார்கள்.
       கேரளத்தில் இன்றும் கூட பரம்பரை ஜோதிடக் களரிகள் அனேகம் இருக்கின்றன. அவர்கள் தத்தம் சீடர்களை முதலில் ஸமஸ்கிருத மொழியில் சப்தம், தாது, வியாகரணம் இவற்றைப் படிக்க வைத்துவிட்டுப் பிறகு முறைப்படி கோளம், கணிதம் இவற்றைக் கற்பிக்கிறார்கள். அவர்களது கணித முறை பண்டைய காலத்தியது ஆகும். அது ‘ “கடபயாதி”முறையில் சூத்திரங்கள் கற்பிக்கப்பட்டன. எனவே அவர்கள் லீலாவதி”, “ஆரிய பட்டீயம்” முதலியவற்றை வெகு கிரக இருக்கைகள், கிரக சேர்க்கைகள், “வருஷாதி நூல்”, தெசா, புத்தி பலன்கள், யோகங்கள் அவற்றின் பலன்கள் இப்படி, பலவிதமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “பாவ குதூகலம்என்ற நூல் பாவ வாரியாக பலன்களை எடுத்துரைக்க உதவுகிறது. “ஜாதக ஆதேஷ தேச மார்க்கம்” – பல அதிகாரபூர்வமான நூல்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட தொகுப்பு நூலாகும். “பராசர ஹோரை” – ஜோதிட சாத்திரத்தின் அடிப்படை நூலாகும்.
       அதற்கு அடுத்ததாக வராஹிமிஹிரரது ஹோரா சாஸ்திரம்”, “சாராவளி”, “பலதீபிகை”, “ஜாதக பாரிஜாதம்”, “சௌனக ஹோரை”, ஸ்கந்த ஹோரை போன்ற பல அடிப்படை நூல்கள் மற்றும் பல பாவ முறை நூல்களும் மிகப் பழமையான ஆனால் ஆணித்தரமான வழிகாட்டும் நூல்களாகும். “தாசாத்யாயி” - என்பது வராஹிமிஹிரரின் ஹோரைபற்றிய அபூர்வமான விளக்க நூலாகும். இவையெல்லாம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். சமீபகாலமாக பணம் சம்பாதிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தம்மைத்தாமே பெருமைப் படுத்திக்கொண்ட, சில ஜோதிட சிகாமணிகள் அரை குறையாக ஸமஸ்கிருதம் தெரிந்தும், தெரியாமலும், சரியாகவோ , தப்பாகவோ இவற்றையெல்லாம் அர்த்தம் எழுதிப் பிரசுரித்து உள்ளார்கள். அவர்கள் இப்படிச் செய்ததில் அநேக கோடி தவறுகள் இருந்தாலும் கூட அவர்களின் முயற்சியை நாம் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் இனியாவது ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு அதன் பொருளை மற்றும் உபயோகத்தை நன்கு புரிந்து கொண்டு இத் தொண்டைச் செய்வார்களானால் ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும். ( இப்படி நாம் எழுதுவதை அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி கண்டிப்பதாக யாரும் தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.)


No comments:

Post a Comment