Search This Blog

Monday, 30 May 2016

சனி – செவ்வாய் இணைவு தரும் அழிவுகள்.

சனிசெவ்வாய் இணைவு தரும் அழிவுகள்.




       விருச்சிகத்தில் சனிசெவ்வாய் இணைவு மற்றும் சனி, குரு மற்றும் செவ்வாய் வக்கிர நிலையானது,  237 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலையாகும். இதற்கு முந்தைய நிகழ்வானது 7 ஏப்ரல் 1779 அனுஷ நட்சத்திரத்திலும், குரு உத்திர நட்சத்திரத்திலும் ஏற்பட்டது. இந்த வருடம் செவ்வாய் 17 ஏப்ரல் 2016 அன்று வக்ரநிலை அடைகிறது. அப்போது செவ்வாய் அனுஷத்திலும், சனி கேட்டையிலும், குரு பூரத்திலும் இருப்பர். இது ஒரு அசாதாரண நிலையாகும்இத்தக் காலத்தில்  உலகம் சில அசாதாரண நிகழ்வுகளை எதிர் நோக்கலாம்.
       இக் கிரகங்களின் இந்த நிலை நிச்சியமாகத் தரும் முக்கிய உலகியல் காரக தாக்கங்களைப் பற்றி அலசுவோம். செவ்வாய்தீ, மூலகங்கள், இராணுவம், போருக்குத் தேவையான குண்டுகள், ரவை, வெடி மருந்து போன்ற தளவாடச் சாமான்கள், போராட்டங்கள், விபத்துக்கள், உக்கிரமான, கொடுமையான குண்டுவெடிப்புகள் ஆகியவற்றைக் குறிகாட்டுகின்றன. சனியானவர்நோய்கள், கஷ்டங்கள், சோகங்கள், விவசாய நிலங்கள், விவசாயிகள், ஆகியவற்றை உலகியல் ரீதியாகக் குறிகாட்டுகின்றன. இவ்விருவரின் வக்கிர நிலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் குழப்பங்களுக்குக் காரணமாகின்றன. குருவும் வக்கிரம் பெறுவதால் அரசியல் உறவுகளில் குழப்பங்களை அதிகரிக்கும். உலக வணிக நிலவரங்கள் ஏற்றம் பெறாது, இறக்கத்தைத் தழுவும். சட்ட விரோதமான பணப் பரிமாற்றங்கள் ஏற்பட்டு பொருளாதார நிலை சீரழியும். இராஜாங்க இராசியான சிம்மத்தில் குரு, இராகு இணைவு அரசியல் விவகாரங்களில் எதிர்மறைப் பாக்கங்களை ஏற்படுத்தும். சனி, செவ்வாய் இணைவு பர்மா, வடகொரியா போன்ற குழப்பமுள்ள நாடுகளில் உள்ள நிலைகளை மேலும் மோசமாக்கும்.
       இதற்கு முன்னர் இவ்விணைவுகளின் போது ஏற்பட்ட அசாதாரண நிலைகளைக் காண்போம்.
       1986 இல் சனிசெவ்வாய் இணைவு விருச்சிகத்தில் ஏற்பட்டபோது சேலஜ்சர் விண்கலம் வெடித்துச் சிதறியது உலகின் கவனத்தைக் கவர்ந்தது. (28 ஜனவரி 1986)
       4 ஜனவரி 1956 – செவ்வாய் விருச்சிகத்துக்கு வந்த போது இராகு, சனி இணைவும் சேர்ந்து கொண்டது. லாஸேன்ஜல்ஸில் மிகப் பெரிய இரயில் விபத்து ஏற்பட்டு 30 பேர் மாண்டனர்.
       1897 நவம்பர் ஏற்பட்ட இவ்விணைவு பெரிய எதிர்மறை நிகழ்வுகளைத் தரவில்லை என்றாலும் யூதர்களின் போராட்டங்கள் ருமேனியாவில் தொடர்ந்தது. இந்த வருடம் ஏற்பட்டுள்ள இணைவு அமெரிக்க அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இதைப் பற்றி பிருஹத் சம்கிதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன ?
       சனி / செவ்வாய். இணைந்து ரிஷபத்தில் உள்ள சூரியனை 3 ஜூன் 2016 முதல் பார்க்கும். சூரியன். சுக்கிரனை, வக்கிர சனி மற்றும், செவ்வாயும் பார்க்கும். சூரியனுக்கு 7 ம்பாவத்தில் உள்ள அசுப கிரகங்கள் பயிர்களை அழிக்கும் என பிருஹத் சம்கிதா குறிப்பிடுகிறது. எனவே, இக்காலத்தில் உலகின் சில பாகங்களில் தீவிர பஞ்சம் ஏற்பட வாய்ப்புண்டு. ( ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ) ஸ்திர இராசிகளில் ஏற்படும் பாதிப்பு பூகம்ப நிகழ்வுகளை ஏற்படுத்தலாம் என ஹெச். ஆர். கிரீன் குறிப்பிட்டுள்ளார்.
       24  ஆகஸ்டு 2016 அன்று ஏற்படும் சனி செவ்வாயின் அனுஷ நட்சத்திர சாரத்தில் ஏற்படும் இணைவு, சனியின் தாக்கத்தை அதிகமாக விருச்சிகத்திற்குத் தருகிறது. விருச்சிகத்தின் இரண்டாவது திரேகாணம் குருவால் ஆளப்படுகிறது. இதன் காரணமாக நீர் மூலகத்தால் அதிக பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது நமக்கு ஆழமான கடல், பீச், போன்ற கடல் சார்ந்த பகுதிகளில் பூகம்பம் ஏற்படலாம் என எச்சரிக்கிறது. யுத்தக்கப்பல் மூழ்குதல்,  துறைமுகங்களுக்கு பாதிப்பு, ஆகியவை ஏற்பட்டு அழிவைத் தரலாம். கடல், கப்பற்படை போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.
       சனி, செவ்வாயின் முக்கிய நகர்வுகள் விருச்சிகத்தின் மூன்று நட்சத்திர சாரங்களில்  ஏற்படுவதால் அது தென் மேற்குப் பகுதிகளைக் குறிக்கிறது. சூரியன் ரோகிணியில் நேர் எதிரே வருவது ஒரு நாட்டின் மத்தியப் பகுதிகளைக் குறிப்பிடுகிறது. எனவே, தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, க்யூபா, சிலி, ப்ரேஸில், வடாப்பிரிக்கா பகுதிகள், எகிப்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படலாம். இந்தியாவைப் பொருத்த வரை குஜராத், மத்தியப் பிரதேசம், போபால் மற்றும் கேரளப் பகுதிகளில் பாதிப்புக்கள் இருக்கலாம்.


No comments:

Post a Comment