Search This Blog

Thursday, 2 June 2016

பண்டைய நூல்களில் குறிப்பிடப்படும் தத்துப் புத்திர யோகம்.

பண்டைய நூல்களில் குறிப்பிடப்படும்     தத்துப் புத்திர யோகம்.



       குழந்தையற்றவர்களுக்கு, குழந்தைப் பிறப்பு என்பது, கற்பனைக்கு எட்டாத அல்லது விவரிக்கமுடியாத, இறைவனின் ஆசிர்வாதம் மற்றும் உணர்வுபூர்வமான செயல் எனக் கருதப்படுகிறது. இயற்கையாகக் குழந்தை பிறக்கவில்லையெனில் அடுத்து தத்து எடுத்துக்கொள்வதோ, சோதனைக் குழாய் அல்லது வாடகைத் தாயின் மூலமாகக் குழந்தையை அடைவதோ, தம்பதியருக்கான சிறந்த முடிவாக இருக்கும்.

       பண்டைய நூல்களில் தத்துக் குழந்தைக்கான குறிப்புகளைக் காணலாம்.

       முனிவர் பராசரர், தனது ஹோரா சாஸ்த்ராவில் சனி தனது சுயவீட்டிலோ, 5 ஆம் வீட்டிலோ, புதனின் வீடுகளிலோ அல்லது மாந்தியுடன் இணைவு பெற்று இருந்தாலோ தத்துப் புத்திர யோகம் ஏற்படுவதாகக் குறிப்பிடுகிறார்.


ஜாதகம் – 1

       ( டாக்டர். பீ.வி. இராமன் அவர்களின் முன்னூறு முக்கிய இணைவுகள் என்ற நூலிலுள்ள ஜாதகம். )



சனி
மாந்தி
செவ்
இராகு
இராசி
ஆண்- 22-1-1914
06-40 காலை
13 0 – 80 கி 14
ஜாதகம் - 1

லக், சூரி
புத, குரு
சுக்
கேது

சந்


                                         
புதன் தசா இருப்பு – 14 வரு 4 மாதம் 19 நாட்கள்

       இலக்னாதிபதி சனி, 7 ஆம் அதிபதி சந்திரன் மற்றும் குரு ஆகியோர் பலமற்ற நிலையில்அனபத்திய யோகம் ‘ ( குழந்தை இன்மை ) ஏற்பட்டது. 7 ஆம் அதிபதி சந்திரன் 11 ஆம் பாவத்தில் உள்ளார். 5 ஆம் அதிபதி சுக்கிரன் சுபரோடு இணைந்து, சனி 5 ஆம் இடத்தில் அமர்ந்து, மாந்தியும் இணைவதால், தத்துப் புத்திர யோகம் ஏற்பட்டது.

       கல்யாண வர்மா தனது சாராவளியில் ‘ 5 ஆம் இடம் சனி அல்லது புதனின் வீடாகி, மாந்தியுடன் அல்லது சனியுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டோ  இருப்பின் தத்துப் புத்திர யோகம் ஏற்படும் எனக் குறிப்பிடுகிறார்.    மேலும், 5 ஆம் அதிபதி பலமற்றவராகி, எந்த விதத்திலும் இலக்னம் மற்றும் 7 ஆம் இடத்தின் அதிபதியோடு தொடர்பற்ற நிலை இதே முடிவைத் தருகிறது எனலாம்.

       ஜாதக பாரிஜாதத்தில் குறிப்பிடப்படுவதென்னசந்திரன் அசுப இராசியில் இடம்பெற்றிருக்க, 5 ஆம் அதிபதி பாக்கிய பாவத்தில் இருக்கவும், இலக்னாதிபதி திரிகோணத்தில் அமரவும் தத்துப் புத்திர யோகம் ஏற்படுகிறது.

       தத்துப் புத்திர யோகத்துக்கான இதர கிரக இணைவுகள்

1.   கேது புத்திர காரகன் குருவுடன் மிக குறைவான பாகையில் இணைந்து இருந்தாலோ அல்லது குருவுக்குப் 12 இல் கேது இடம் பெறவும்.

2.   புத்திர பாவாதிபதி (5 ஆம் அதிபதி) அல்லது 5 ஆம் வீடு 6, 8 மற்றும் 12 ஆம் அதிபதிகளுடன் தொடர்புற அல்லது பாபகர்த்தாரியில் இருக்கவும்

3.   5 ஆம் வீடு செவ்வாயின் வீடாகி சனி மற்றும் இராகுவும் இடம்பெறவும்

4.   5 ஆம் அதிபதி புதனின் இராசிகளில் இருக்க, புத்திர காரகர் குரு அவற்றில் ஒன்றில் இடம் பெறவும்.

5.   5 ஆம் இடத்தில் சனி இருக்க, 1 மற்றும் 5 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று, புத்திர காரகன் குரு பலமற்று இருக்கவும்.

6.   புத்திர பாவாதிபதி மற்றும் புதன் இணைந்து 6, 8 12 ஆம் பாவங்களில் இருந்து இயற்கை சுபரால் பார்க்கப்படவும்

7.   புத்திர பாவாதிபதி, செவ்வாயுடன் இணைந்து சனியால் பார்க்கப்படவும்.

8.   புத்திர பாவத்தில் 8 ஆம் அதிபதி இருக்கவும், 5 ஆம் அதிபதி 12 ஆம் இடத்தில் இருக்க, புத்திர காரகன் குரு கேந்திரத்தில் இருக்கவும்.

9.   புத்திர பாவத்தில் சனி இருந்து, இராகு, அசுபருடன் கூடி 4 ஆல்லது 12 ஆம் வீட்டில் இருக்கவும்.

10.  சந்திர இராசிக்கு 5 ஆம் இடத்தில் 5 ஆம் அதிபதி, சுக்கிரனுடன் இசைந்து மலட்டு இராசிகளில் இருந்து அசுபகிரகங்களால் பார்க்கப்படவும்.

11.  7 ஆம் அதிபதி 5 ஆம் வீட்டில் அசுபகிரகம் மற்றும் பலம் மிக்க புத்திர காரகன் குருவுடன் இருக்கவும்.

12.  இலக்னம் இரட்டைப்படை இராசிகளில் அமைந்து, 5 ஆம் அதிபதி சனி நவாம்சத்தில் 4 இல் இருக்கவும்

13.  5 ஆம் அதிபதி, சூரியன், புதன் ஆகியோரின் இணைவு சனி நவாம்சத்தில் இருக்கவும் அல்லது இரட்டைப்படை இராசிகளில் இருக்கவும்.

14.  சுபரால் பார்க்கப்படாமல் 5 ஆம் வீட்டில் ஒரு சுபர் அமர்ந்திருக்கவும்.

15.  5 ஆம் இடம் மகரம் அல்லது கும்பமாகி, சனியை சந்திரன் பார்க்கவும்.

16.  சனியின் இராசிகளில் சந்திரன் மற்றும் பலமற்ற புதன் இணைந்து இருக்கவும்.

17.  புதனோடு அல்லது புதனின் இராசியில் செவ்வாயும், சனியும் புத்திர பாவத்தில் இருக்கவும்

18.  சூரியன் 7 ஆம் அதிபதியாகி, இலக்னத்தில் சனியோடு இணைந்து இருந்து செவ்வாயால் பார்க்கப்படவும்.

19.  சனி அல்லது மாந்தியின் தொடர்போடு ( பார்வை அல்லது சேர்க்கை ) 5 ஆம் வீடு மிதுனம், கன்னி, மகரம் அல்லது கும்பமாகவும்.

20.  9 ஆம் வீடு சனி மற்றும் மாந்தியால் பாதிக்கப்படவும், இலக்னாதிபதி 9 இல் மோசமான நிலையில் இருக்க அல்லது  9 ஆம் அதிபதியால் பாதிக்கப்படவும். 5 ஆம் அதிபதி திருநங்கை கிரகமாகி, 5 ஆம் வீடு திருநங்கை கிரகத்தோடு இணைய அல்லது பார்க்கப்படவும் மற்றும் மாந்தி இணைந்திருக்கவும், குருவும் பலமுடன் இருக்கவும்.

       மேற்சொன்ன கிரக நிலைகள் வர்க்கக் கட்டங்களில் இருந்தாலும் பலம் மிக்க தத்துப் புத்திர யோகத்தை அளிக்கிறது.

சுக், சந்
சூரி, புத
செவ்

கேது


குரு
சனி
சூரி

இராசி
ஆண்
20/4/1936
15 – 30
மும்பை
ஜாதகம் - 2



நவாம்சம்
இராகு

லக்///
சந், கேது

குரு, இராகு



சுக்

செவ்
மாந்
புத, லக்//
   
புதன் தசா இருப்பு – 11 வருடம் 0 மா – 0 நாள்

       இங்கே, இலக்னாதிபதி சூரியனுடன் புதன் இணைந்துள்ளது மகப்பேறுக்கான வாய்ப்பைக் குறைத்துள்ளது. புத்திரபாவாதிபதி , புத்திர காரகன் குரு, இராகுவுடன் இணைவானது அனபத்திய யோகத்திற்கு பலம் சேர்க்கிறது. முனிவர் பராசரரின் கூற்றுப்படி, சுயபாவத்திலுள்ள சனி சுக்கிர நவாம்சம் ஏறியதால் ஒரு பெண்குழந்தையை தத்து எடுக்கும் நிலைக்கு பலம் சேர்த்தது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ள விதி எண் 14 படி பலம் மிக்க சுபர், சுப பார்வையற்று புத்திர பாவத்தில் அமர்ந்ததும் தத்துப் புத்திர யோகம் தந்தது.

       இந்தியாவில் ஒரு பெண் கருவுறவில்லையெனில் மலடி என இகழப்பட்டு பிறரால் மேலும் கீழும் பார்க்கப்படுவாள். இதற்குக் காரணம் அவள் ஜாதகத்தில் அனபத்திய யோகம் ஏற்படுவதின் பலனே ஆகும். கீழ்கண்ட இணைவுகள் மூலமாக பெண்ணின் ஜாதகத்தில் இந்த நிலையைக் கண்டுபிடிக்க முடியும்.

1.   சுக்கிரன், சந்திரன் ஆகியோர் சனி அல்லது செவ்வாயுடன் இணைந்து இலக்னத்தில் அமர்ந்தோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டோ இருக்க பெண்ணிடம் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

2.   சூரியன் 8 ஆம் இடத்தில் அமர்ந்து, சந்திரன் சுயவீட்டில் அமர அந்தப் பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது.

3.   ஜாதகயின் இலக்னம் சனி, செவ்வாயின் வீடுகளான மகரம், கும்பம், மேஷம், விருச்சிகம் ஆகி சுக்கிரனும் சந்திரனும் இலக்னத்தில் இருக்கவோ அல்லது இலக்னத்தைப் பார்க்கவோ செய்தால் அப்பெண்ணுக்கு அனபத்திய யோகம் ஏற்படும்.

       குழந்தை இல்லாத பெண்கள் கீழ்கண்ட மருத்துவ காரணங்களுக்காக குழந்தைகளுக்கான மாற்று ஒப்பந்தம் செய்ய  முடிவெடுக்கலாம்.
·         அவளுக்கு மருத்துவ ரீதியான கர்ப்பை பிரச்சனைகள் இருக்கலாம்.
·         அவளுக்கு கர்ப்பபை நீக்கப்பட்டிருக்கலாம்.

·         தீவிர இதய நோய் காரணமாக கர்ப்பம் தரிக்காமல் இருக்க மருத்துவரால் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம்.

       இயற்கையாக பிறப்புத் தர இயலாத, மாற்று ஒப்பந்தங்கள் செய்ய நினைக்கும் பெண்ணுக்கு, பிரசவலியோ, உணர்வால் ஏற்படுகிற வலிகளையோ அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான மருத்துவ விஞ்ஞான முன்னேற்றங்கள் மூலமான புதிய வழிமுறைகள் பல தம்பதிகளின் கைகளில் மழலைகள் தவழும் நிலைக்கு உதவுகிறது என்றால் மிகையாகாது. வாடகைத்தாய் மூலமான குழந்தைப் பிறப்புக்கும் ஜோதிடம் வழிகாட்டுகிறது.

       புத்திர பாக்கியத்துக்கான வீடு 5 ஆம் வீடு என்பதை நாம் அறிவோம். புத்திர பாக்கியத்திற்கு வளம் மிக்க இராசிகளாக நீர் இராசிகள் மற்றும் ரிஷப, துலா இராசிகள் ஓரளவுக்குக் கருதப்படுகின்றன. பலம் மிக்க, நல்ல இடத்திலுள்ள குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நன்மை அளிப்பனவாகக் கருதப்படுகின்றன.  5 ஆம் வீடு, அதன் அதிபதி மற்றும் இயற்கை புத்திர காரகனான குரு, ஜெய்மினி சூத்திரப்படி புத்திர காரகன் ஆகியவை பலம் மிக்கதாக ஒரு தந்தையின் ஜாதகத்தில் அமைந்தால் நிச்சியமாக அவருக்குக் குழந்தைப் பிறப்பு உண்டு எனக் கருதலாம். நவாம்சம், சப்தாம்சம் போன்ற வர்க்கக்கட்டங்களும் இதை நிச்சயிக்கும் போது குழந்தைப் பிறப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏற்படுகிற அசுப தாக்கங்களால் குழந்தைப் பிறப்பில் பிரச்சனைகள், கர்ப்பம் தரிக்க முடியாமை, கரு உருவாதில் பிரச்சனைகள், தத்துப் புத்திர யோகம், வாடகைத்தாய் போன்ற மாற்று ஒப்பந்த நடவடிக்கைகள் ஆகியவை குறிகாட்டப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் நல்ல இணைவுகள் பெற்ற ஆண் கடைசியாகக் குறிப்பிட்ட மாற்று ஒப்பந்த நடவடிக்கை எனும் வாடகைத்தாய் மூலமாக குழந்தையை அடையலாம்.

       மாற்று ஒப்பந்தத்தின் மூலமாக, தத்து எடுப்பதின் மூலமாக  குழந்தையை அடையும் வழி, வேறு வழிகளில் குழந்தையை அடையும் முறை எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலமாக குழந்தை இல்லா தம்பதிகள் மற்றும் அவர்கள் குழந்தையை தன் கருப்பையில் சுமக்க சம்மதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுகிற ஒப்பந்தம் குழந்தையை தம்பதிகளின் கைகளில் தவழவிட உதவுகிறது. சில இடங்களில் இது தவறான மருத்துவ வழிமுறையாகக் கருதப்படுகிறது.

       ஜாதக பாரிஜாதத்தில், புத்திர பாவ பலம் பகுதியில் பலம் மிக்க கிரகம் 5 ஆம் பாவத்தில் இருக்க, 5 ஆம் அதிபதி வேறுகிரகங்களால் பார்க்கப்படாதிருந்தால் ஜாதகர் தத்து எடுப்பதாலோ, வெறுவழிகளிலோ குழந்தையை அடைவார்.

       ஜாதகாபரணம்சனியின் சொந்த வீடுகள் ( மகரம், கும்பம் ) 5 ஆம் வீடாக அதில் சனி இடம் பெற்று, சந்திரனால் பார்க்கபட தத்துப் புத்திர யோகம் ஏற்படும். சனியை புதன் பார்க்க அதுவே குழந்தையை தத்துக் கொடுப்பவர்களுக்குப் பணம் கொடுத்து  தத்து எடுக்க வேண்டியது வரும்.  

        ஒரு வாடகைத் தாய் தனது தாய்மையைத் தியாகம் செய்கிறாள். வாடகைத்தாய் பத்து மாதம் கருவை சுமக்கிறாள். ஆனால், அவள் சுமக்கும் கருவுக்கு உயிரியல் ரீதியான தொடர்பு அவளுக்குக் கிடையாது. ஜீவப் பொருளின் ஆரம்ப நிலையான சூலானது பெற்றோர் அல்லது அன்பளிப்பாக அளிப்பவர்களின் கருமுட்டையின் மூலமாக உருவாக்கப்படுகிறது. வாடகைத்தாயின் கருமுட்டைகள் பயன்படுத்தப்படுவதில்லை. சூலானது மிகச் சிறப்பான நவீன முறைகளைக் கையாண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு சூல்கள் வாடகைத் தாயின் கருப்பைக்கு மாற்றப்படுகிறது.  அவள் கருவுற்று, ஒப்பந்தம் செய்து கொண்டவர்களின் அன்பு மற்றும் உதவியுடன் அழகிய குழந்தையைப் பெற்றெடுத்து அவர்கள் கைகளில் தவழவிடுகிறாள்.

       வாடகைத்தாய் அமையும் முறை இருவகையானது ஒன்று மேற்சொன்னபடியானது. இதில் குழந்தையின் குணங்கள் கருக்கொடுத்த பெற்றோர்களின் மரபணு மூல குணங்களை ஒத்ததாக இருக்குமேயன்றி வாடகைத்தாயின் குணங்கள் இருக்காது.  இரண்டாவது முறை, பாரம்பரிய முறைப்படி, வாடகைத்தாயை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கருத்தரிக்கச் செய்யும் போது பிறக்கும் குழந்தைக்கு  அவளின் மரபணுத் தொடர்பு இருக்கும்
  


ராகு
குரு
மாந்

சனி ()
செவ்
ராகு
சுக்


சனி()
இராசி
ஆண்
02/11/1965
02-30 காலை
டெல்லி
ஜாதகம் - 3

சூரி


நவாம்சம்
சந்
சந்
லக்//

புத
சுக்
செவ்
புத
கேது
சூரி

குரு
மாந்

கேது
லக்///


சந்திர தசா இருப்பு 1 வரு – 4 மா – 4 நாட்கள்.

       இந்த ஜாதகர் இரண்டு புத்திர பாக்கியத்தோடு ஆசிர்வதிக்கப்பட்டார். இயற்கை புத்திர காரகர் மற்றும் புத்திரபாவாதிபதி குரு இலாப பாவம் ஏறி, மற்றுமொரு சுபரான சுக்கிரனால் பார்க்கப்படுகிறார்இது புத்திர பாக்கியத்தை உறுதி செய்கிறது. இந்த ஜாதகர் தன் மனைவியின் உடல்நிலை இரண்டாவது குழந்தை பிறப்பைத் தாங்கக் கூடிய வலிமை இல்லாத காரணத்தால், வாடகைத் தாயை ஏற்பாடு செய்ய நினைத்தார். பராசர முனிவர் சனி சொந்த வீட்டிலோ, 5 ஆம் வீட்டிலோ அல்லது புதனின் வீடுகளிலோ அல்லது மாந்தியோடு இணைந்து இருக்கவோ தத்துப் புத்திர யோகம் ஏற்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.


      எனவே, நண்பர்களே தத்துப் புத்திர யோகத்துக்கான பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்ட இணைவுகளை உதாரண ஜாதகத்தோடு அறிந்தது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறேன். வாழ்க வளமுடன்.        

No comments:

Post a Comment