Search This Blog

Sunday, 12 June 2016

அம்மாவும், ஆட்சியும்………… ?

அம்மாவும், ஆட்சியும்………… ?



        அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும், மக்கள் முதல்வர் அம்மாவின் ஜாதகத்தை சென்ற பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அலசிய போது, அவருக்கு நடப்பு குரு திசை பலன்களைக் குறிப்பிட்டபோது, கீழ்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்.

         அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் விரும்பியபடி, கனிகளைப் பறிப்பர். யாகங்கள், வேதத்தைப்பற்றிய அறிவு, கடவுள் பக்தி, சாத்திர அறிவு ஆகியவற்றைப் பெறுவார். நல்லவர், ஞானிகளின் நட்பு கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். தலைமைப்பதவி தேடி வரும். கடந்த கால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவு பெருகும். அரசாட்சி கைக்கு வந்து சேரும். அனைத்து வசதிகளும் பெருகும். மக்களால் போற்றி வணங்கப்படும் நிலை உருவாகும்.

          யாகங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற அனுகூலமான நிகழ்ச்சிகள் மூலமாக சந்தோஷம் பெருகும். மக்கள் பணிபுரிபவர்களுக்குத் தலைமைப்பதவி ஏற்கும் நிலை உருவாகும். தர்க்கங்களிலும், போட்டிகளிலும் வெற்றிகிட்டும். உயர்பதவிகள் வந்து சேரும். உயர்பதவிகளுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று உயர்பதவியைப் பிடிக்கும் நிலை உருவாகும்.

          தற்போதைய சனி   புத்தியில் பொறாமை குணம், உடல் பலம் குறைவு, உள்ளூற மன சந்தோஷமின்மை ஆகியவை ஏற்படும். அரசாட்சியைக் கைப்பிடித்தல்அரசாங்கத்தில் உயர் பதவியை அடைதல் ஆகியவை ஏற்படும். அதிக செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள், செல்வநிலை உயருதல், வாகன வசதிகள் பெருகுதல் என எட்டாத உயரத்துக்குச் செல்லும் நிலையும் ஏற்படும். புகழ் மற்றும் உயர்நிலை ஏற்படும். அரசாள்பவரின் அனுகூலங்கள் கிடைக்கும். முன்னேற்றம், மதிப்பு, அதிர்ஷ்டம் யாவும் பெருகும். பல அரசர்களுக்கும் அரசராகத் திகழ்வார். சில இன்னல்களும் ஏற்படலாம்அதற்கு ருத்ர ஜபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் ஆகிய பரிகாரங்கள் செய்வது நலம்
          இனி, அம்மாவின் எதிர்காலம் என்ன ? – என்பது பற்றி தாஜிக முறைப்படி அவரது  68 - 69  வயதுக்கான  ( 2016-17 ) வருட பலன் பற்றி பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.

          இது ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்கு, அடுத்த வருடம் சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காண்பது வருட ஜாதகமாகும். வடமொழியில் இதை வருஷ பல்” – என அழைப்பர்.

         24 பிப்ரவரியில் பிறந்த அம்மா அவர்களின் முடிந்த வயது 68 – நடப்பு வயது 69 க்கான வருட ஜாதகம் 25 – 2 – 2016 அன்று பகல் 02 – 57 – 10  மணிக்கு வரும் சூரியனின் நிலை கணக்கின்படி உருவான ஜாதகம் கீழே ;

சுக்
கேது
சூரி, முந்தா
கேது
68- 69 வயது
2016 – 17
25-2-2016 முதல்    24–2-2017 வரை.
இராசி
சந், முந்தா


நவாம்சம்
புத
செவ்
புதன்
சுக்
குரு()
இராகு
சூரி
சனி
லக்//
லக்//
செவ்
சனி
சந்
இராகு
குரு()

       பண்டைய நூலான, “நீலகண்ட தெய்வஞர் எழுதிய தாஜிக நீலகண்டீயம் என்னும் நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.

       இந்த வருட ஜாதகத்தில்  “வருசேஷா அல்லது வருடாதிபதி  தேவகுருவான குரு ஆவார்.  சுமாரான பலமுடைய வருடாதிபதி குரு தரும் பலன்கள் ஆவன.

      பல்வேறு புத்தகங்களை  படித்து வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் எதிர்ப்புகள் நிலவும். ஜீரண உறுப்புக்களில் எழும் உபாதைகளால் தொல்லைகள் ஏற்படலாம்.

       அரசு சம்பந்தமான விவகாரங்களில் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.

              அடுத்து இந்த வருடத்திற்கான முந்தா வின் நிலை. “முந்தா என்பது வருட ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

        ஒருவர் பிறந்த காலத்தில், ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 68 வது வயது ஜாதகத்தில் முந்தா வின் நிலையைப் பார்ப்போம்.

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  வருட இராசிக் கட்டத்தில் இலக்னத்துக்கு 3ஆம் பாவத்தில் அமைகிறது.

இந்த வருட வருடாதிபதி (வருசேஷா) மற்றும் முந்தாவின் நிலைகள்.

வருசேஷா
குரு
முந்தா இருக்கும் இராசி
கும்பம்  – 20-43- 01
முந்தா இருக்கும் வீடு
3
முந்தேஷ் எனும் முந்தாதிபதி
சனி
முந்தாதிபதி இருக்கும் வீடு.
12

 மூன்றாம் பாவத்தில் உள்ள முந்தா தரும் பலன்கள் ;

தாஜிக நீலகண்டீயம் கூறும் பலன்.

       மூன்றாம் பாவத்தில் உள்ள  முந்தா வானது வாழ்க்கையில் மிக்க சந்தோஷ நிலையை தருகிறது.  செல்வ நிலை உயர்வையும், துணிவுமிக்க செயல்பாடுகளால் மிக்க புகழையும் அளிக்கும். நல்ல நண்பர்களின் நட்பும் ஏற்படும். நற்குணம் மிக்க பெரியோர்கள் மற்றும் கடவுளை வணங்குவதிலும் ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியம் மிக்கவராகவும், கருணை உள்ளம் கொண்டு மக்கள் மத்தியில் புகழ் மிக்கவராகவும், மத்திய அரசின் ஆதரவு பெற்றவராகவும் இருப்பார், என்கிறது.

ஹயான் பாஸ்கர் என்ற அறிஞரின் கூற்று என்ன ?

       “முந்தா” 3 இல் இருக்க வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று ஜெயம் கொள்வார். மதிப்பு, மரியாதை மேலும் உயரும். ஆரோக்கியமும் சீராக இருக்கும். மத ஆர்வங்கள் கூடும். அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் கூடும். என்று குறிப்பிடுகிறார்.
       3 ஆம் பாவத்தில் உள்ள முந்தா”   ஜாதகரை தனது புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகவும், உயர் குறிக்கோள்களின் மூலமாகவும் உயரிய குறிக்கோள்களை சுலபமாக எய்துவார். ஜாதகரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தும். கௌரவமும் கூடும். சக்தி மிக்க பெண்மணியாக விளங்குவதால் செல்வம், சுகம் மற்றும் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும். எதிர்ப்பவர்கள் சிதறி ஓடுவர், வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். மத்திய அரசின் அனுகூலமும், முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அருகிலுள்ளவர்கள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புக்கள் நன்மை பயக்கும். கடவுள் பக்தி, மத ஆர்வம் ஆன்மீகவாதிகளின் மீதான நம்பிக்கை கூடும். தீர்த்த யாத்திரைகள் ஏற்படலாம். சந்தோஷ சூழ்நிலைகளுக்கு மனம் இட்டுச் செல்லும்.


முந்தா உள்ள இராசி தரும் பலன் 

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  சனியின் ஆதிபத்தியம் பெற்ற கும்ப  இராசியில்  இடம் பெற்றுள்ளது.

       இதன் காரணமாக இந்த வருடம் சில அனுகூலமற்ற பலன்களும் நடக்கும்.  தடைகள், உடல் உபாதைகள் ஏற்படும். பயணங்களில் தொல்லைகள், இடமாற்றங்கள் ஏற்படலாம். வழக்குகளில் இழுபறி நிலை தொடரும்.
       “தாஜிக நீலகண்டி யில் – “முந்தா மீதான குருவின் பார்வை  ஜாதகி அரசியலில் சக்தி மிக்க பதவிக்கு வருவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, முந்தேஷ்  முந்தாதிபதி சனி, விரய பாவம் அமர்ந்து தரும் பலன்கள்.

        பொருளாதார முன்னேற்றங்கள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்எதிரிகளின் மூலமான தொல்லைகள் அதிகரிக்கும். மன உழைச்சல், உடல் உழைச்சல்கள் ஏற்படும். அரசாங்கம் மற்றும் அதிகாரிகளால் மனதில் படபடப்பு, டென்ஷன்கள் அதிகரிக்கும்.  உணர்ச்சி வசப்பட்ட மனநிலை, எரிச்சலூட்டும் தொடர்புகள், கால் தூசுக்குப் பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள், பணியில் அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

சனியின்  இராசியில் உள்ள முந்தா தரும் பலன் 

        தடைகள் மற்றும் ஆசைகள் நிறைவேறாத நிலை, ஆரோக்கியக் குறைவு, இடமாற்றம் மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவை ஏற்படும். வழக்குகளில் வெற்றியின்மை. முந்தா - சனியின் இராசியில் இருக்க அல்லது சனியால் பார்க்கப்பட அவமானங்கள் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும். குரு பார்க்க நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

       
         தற்போது - 69 வயது நடக்கும் போது, ( 24-2-2016 முதல் )  குரு மிகவும் சக்தி வாய்ந்த வருடாதிபதியாக வரும் போது மிக்க அனுகூலமான பலன்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.  நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். அதன் காரணமாக வெற்றி மேல் வெற்றி கிட்டும். குடும்ப சந்தோஷம், புகழ், செல்வம், சாதகமான விழாக்கள், மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். திட்டங்களை முடுக்கிவிட்டு முடித்து வைப்பதில் அதிகாரிகளின் ஆதரவு முழுவதுமாகக் கிடைக்கும்,  சமூக அந்தஸ்து மேலும் உயரும் மக்களின் நம்பிக்கை மற்றும் அரசியல் சேவைகள் கண்டிப்பாக வெற்றிக் கனியைப் பறித்துத்தரும். அதிகாரம் மற்றும் பொறுப்பு மிக்க பதவி கிடைக்கும் பதவி உயர்வு தவிர்க்க முடியாதது வெற்றிகள் மற்றும் போட்டிகளால்பணவரவு, வழக்குகளில் வெற்றி, மதிப்பு, மரியாதை, புகழ், பலம்,  பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றல் என அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கலாம். எதிரிகள் தானாகவே வந்து அடிபணிவர். மதிப்பு மரியாதை, கௌரவம் அனைத்தும் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். மத ஆர்வம் கூடும். ஏற்கனவே குறிப்பிட்டபடி, புதிய திட்டங்களாலும், கொள்கைகளாலும் உயர்ந்த குறிக்கோள்கள் எட்டப்படும்.
       எனவே, தாஜிக வருடபலன் காணும் முறைப்படி சூழ்நிலை அம்மாவுக்கு கண்டிப்பாக சாதகமாகவே உள்ளது. இதுவே அம்மாவின் ஆட்சிக்கு அச்சாரம் - அறிதியிட்டுக் காட்டிடும் முத்தாரம்.

( இக் கட்டுரை ஏப்ரல் 2016 முதல் வாரத்தில் எழுதப்பட்டு, கடைசிவாரத்தில் குருவருள் ஜோதிடம் மே 2016 மாத இதழில் வெளியானது )




No comments:

Post a Comment