Search This Blog

Wednesday, 24 August 2016

மேஷம் இலக்னமாகி


மேஷம் இலக்னமாகி



மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சூரியன் இடம்பெற

       ஜாதகருக்கு முதலீடுகளின் மூலமாக இலாபம் கிடைக்கும். இன்பம் மற்றும் குழந்தைகள், ஜாதகரின் செல்வாக்கால் குழந்தைகள் இலாகம் அடைதல். பாதிப்படைந்த சூரியன் ஆனால் சூதாட்டத்தினால் இழப்புகள் ஏற்படும். இளைஞர்களால் இன்பம் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சந்திரன் இடம்பெற

       இனிமையானவர், மென்மையாகப் பேசக்கூடியவர். பூமி மற்றும் சொத்து விவகாரங்களில் இலாபம் ஏற்படும். வெளிநாட்டு மொழி அறிவு ஏற்படும். பயணங்கள் மூலமாக வியாபாரத்திலும், மற்ற நுண்கலைகளிலும் வெற்றிமேல் வெற்றி வரும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் செவ்வாய் இடம்பெற

       இலக்னம் மற்றும் ஆயுள் பாவத்திற்கு அதிபதியான செவ்வாய் தனபாவத்தில் அமர, ஆரோக்கியக் குறைவு ஏற்படும் அல்லது மழலைப் பருவத்திலேயே மரணம் நிகழலாம். ஆயினும் தப்பித்தால் நீண்ட ஆயுள் உண்டு. புகழில் குறைவும், அவமரியாதைகளும் ஏற்படும். தொழில் முறை நன்மைகள் ஏற்படும்.மறைந்தவர்கள் மூலமான நன்மைகள் ஏற்படும். ஆனால், பலம் குறைந்த நிலையானால் இழப்புகளும், வாழ்க்கையில் இன்னல்களும் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் புதன் இடம்பெற

       கல்வி மூலமான, சிறு பயணங்கள், எழுதுதல், இசைத்தல் ஆகியவற்றின் மூலமான ஆதாயங்கள் கிடைக்கும். மேலும், சேவைகள், பணியாட்கள் மற்றும் சிறு மிருகங்கள் மூலமாகவும் இலாபங்கள் கிடைக்கும். பாதிப்படைந்த புதனானால், அரசு மூலமாக இழப்புகளும், வாழ்க்கையின் மத்திய பகுதியில் எதிரிகள் மூலமாக இழப்புகளும் ஏற்படும். பண விஷயத்தில் உறவுகளால் தொல்லைகளும் ஏற்படும். நோயுற்ற உடல், வேலையாட்கள் மற்றும் மிருகங்கள் மூலமான இழப்புகளும் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் குரு இடம்பெற

       வெளிநாட்டு வணிகம், விஞ்ஞானம், கற்றல், பதிப்பித்தல் துறை, பயணம், புதியன கண்டு பிடித்தல், வங்கிப்பணி ஆகியவற்றால் இலாபங்கள் ஏற்படும். அனைவருடனும் நன்கு பழகுதல், மரியாதை பெறல், மத ஆர்வம், நாட்டுப்பற்று ஆகிய குணங்களை  உடைத்தாயிருப்பார். மறைபொருள், மாந்திரீகம், இரகசிய திட்டங்கள் மூலமாகவும் ஆதாயங்கள் கிடைக்கும். குரு பாதிப்பு அடைந்திருந்தால், எதிரிகள் மூலமாக பண இழப்பு, பொதுவாக அதிர்ஷ்டமற்ற நிலையும் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சுக்கிரன் இடம்பெற

       தனக்கே உரிய தனித் திறமைகள், சாமர்த்தியங்கள், தொழில் மற்றும் திருமணம் மூலமாக ஆதாயங்களை அடைவர். சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்வார். பாதிப்படைந்த சுக்கிரனாகில் கூட்டாளி, பங்குதாரர் மூலமாகவும், வழக்கு விவகாரங்கள், ஒப்பந்தங்கள், பெண்கள் மூலமாகவும் இழப்புகள் ஏற்படும். மனைவியோ, கூட்டாளியோ இறக்க நேரலாம்.


மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் சனி இடம்பெற

       தொழில், வணிகம், பணி அல்லது அரசு அலுவலகம் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் அடைவர். தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாகவும் இலாபங்கள் அடைவர். சுய முயற்சி மற்றும் சுயமாக ஒன்றை உருவாக்குதல் மூலமாக வாழ்க்கையில் முன்னேறுவர். பாதிப்படைந்த சனி எனில் மேற் சொன்னவைகளின் மூலமாக இழப்புகள் இருக்கும்.


மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் இராகு இடம்பெற

       நிச்சியமற்ற, நம்பிக்கையற்ற, சந்தேகப்படும்படியான, பொய்யான, கபடமான, வஞ்சகமான சொற்களை உடையவர், பேச்சை உடையவர். அன்பான, மிருதுவான இதயம் உடையவர். அரசாங்கம் மூலமான ஆதாயங்கள் ஏற்படும். சந்தோஷமுடையவர். கடுங்கோபமும் உடையவர். வாய் அல்லது முகத்தில் ரோகம் இருக்கும்.

மேஷம் இலக்னமாகி 2 ஆம் இடத்தில் கேது இடம்பெற

       இழிவான, அற்பமான, துஷ்டத்தனமான பேச்சை உடையவர். கபடமான, வஞ்சனையான, கெட்ட குணம் உடையவர். கல்வி கற்காத, பணம் இல்லாதவராக இருப்பார். எப்போதும் மற்றவர்கள் மேஜையில் அமர்ந்து உணவு அருந்தக்கூடிய குணம் உடையவர்.

       


Monday, 8 August 2016

இலக்ன பலன்கள்.-

இலக்ன பலன்கள்.



மேஷம்


இலக்னத்தில் சூரியன் -
             உச்சம் பெற்ற சூரியன் சொத்துக்களையும், நல் அதிர்ஷ்டத்தையும், கௌரவத்தையும், வாழ்க்கையில் நல்ல உயர்வான நிலையையும் தரும். மதிப்பு, மரியாதை மிக்க வாழ்க்கை அமைவதற்கான சக்தியையும் அளிக்கிறான். குழந்தைகள் மூலமான நன்மைகள் ஏற்படும். புத்திசாலித்தானம் மிக்கவராக, கற்றறிந்தவராக ஆக்கிவிடுகிறது. குடியிருப்பு மாற்றங்கள் ஏற்படும். எதிரிகளை வெல்லக் கூடிய அதிக சக்தியை அளிக்கிறான். வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இழப்புகளையும், செல்வ நிலை, தொழில் நிலை, பதவி ஆகியவற்றில் திடீர் சரிவுகளையும் தரும். ஜாதகர் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பார். சீரற்ற இதயத் துடிப்பினால், இரத்த ஓட்டமும் சீரற்றதாக இருக்கும். பித்த ரோகமும் இருக்கும்.
மேஷம் இலக்னமாகி சந்திரன் இருக்க --


              மேஷ இலக்னத்தில் சந்திரன் ஜாதகரை மிக்க அதிர்ஷ்டசாலியாகவும், சொத்துக்களை உடையவராகவும், மதிப்புக்கு உரியராகவும், மரியாதை, கௌரவத்துக்கு உரியராகவும் நிலையை உயர்த்திவிடுகிறது. நன்கு கற்றவராகவும், குழந்தைகளால் நன்மை அடைபவராகவும் ஆக்கிவிடுகிறது. இவருக்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் இருக்கும். மத்திய வயதில் சூரியனைப் போன்றே இவரும் நேர் எதிர் மாற்றங்களைத் தருகிறார். வெளிநாட்டுப் பயணம், கண்கள் பாதிப்பு, உறவுகளின் மூலமான இழப்பு, பொதுவாக தாய்வழி உறவுகள் மூலமான இழப்புகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாலரால் ஏற்படும் தாக்கம் அதிகமான இருக்கும்.

மேஷம் இலக்னமாகி செவ்வாய் இருக்க
       மேஷ இலக்னத்தில் செவ்வாய் இருக்க நல்ல ஆளுமையுடைய நிர்வாகியாக இருப்பார். நிலப் பிரபு, சொத்துக்களை உடையவர், வாழ்க்கையில் முழு வெற்றி அடைவார். அரசாலும் மக்களாலும் மதிக்கப்படுவார். நல்ல பேச்சாளர்களாகவும், சிறந்த ஆலோசகராகவும் இருப்பர். உடலில் காய அடையாளம் அல்லது மச்சம் இருக்கும்.

மேஷம் இலக்னமாகி புதன் இருக்க
       மேஷ இலக்னத்தில் புதன் இருக்க ஆரோக்கியக் குறைவு ஏற்படும். துர்குணம் உடையவர், சரியான சாப்பாட்டு இராமனாக இருப்பார். பொய்யர், சண்டைக்காரர்,   ஆனால், ஜோதிடம் மற்றும் மறைபொருள் விஞ்ஞானத்தில் ஆர்வம் உடையவராக இருப்பர். இவரது மனைவி பேரழிகியாக இருக்கமாட்டார். குணமும் கேள்விக்கு உரியதாவே இருக்கும். பூர்வீக சொத்துக்களை அழித்துவிடுவார்,

மேஷம் இலக்னமாகி குரு இருக்க        
    மேஷ இலக்னத்தில் குரு இருக்க மதத்தின் மீதும், மத குவின் மீதும் மரியாதை உடையவராக இருப்பார். கற்றவர், அனைவராலும் மதிக்கப்படுபவர், அறிவாளி, அரசில் உயர்பதவிகள் வைக்கக் கூடிய தகுதி உடையவர். உண்மையானவர். குணக்குன்றாய் இருப்பார். இரக்க முணமும் உடையவர். மக்களுக்காகப் பொதுச் சேவையில் ஈடுபாடு உடையவர்.                                                                                                                                                                                                                                      மேஷம் இலக்னமாகி சுக்கிரன் இருக்க

       வாகன யோகம், சொத்துக்கள் உடையவர். இனிய பேச்சு உடையவர். எதிர் பாலரிடம் உறவுகள், அதிக பெண்குழந்தைகள் உடையவர். பயணங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மத்திம வாழ்க்கையில் இந்த நிலைகள் தலைகீழாக மாறலாம். பணவிஷயமான வழக்கு விவகாரங்கள் ஏற்படலாம். கண்ணில் பிரச்சனைகள் ஏற்படும்.

மேஷம் இலக்னமாகி சனி இருக்க

மேஷத்தில் சனி நீசமாகி ஜாதகரின் வாழ்க்கையை கஷ்டம் நிறைந்ததாகச் செய்கிறார். வெற்றிகள் கிடைக்காத நம்பிக்கைகள், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள். பூர்வீக சொத்துக்களை அழித்துவிடுவார். தூர பயணங்கள் ஏற்படும். பொறாமை குணம் உடையவராய் இருப்பார். உறவுகளுடனான உறவு சுமுகமானதாக இருக்காது. சனி, ஜாதகரை கர்வம் மிக்கவராகவும், நம்பிக்கை அற்றவராகவும், தாயை எதிர்ப்பவராகவும் ஆக்கிவிடுகிறது.

மேஷம் இலக்னமாகி இராகு அல்லது கேது இருக்க


மேஷ இலக்னத்தில் இராகு அல்லது கேது அசுப கிரக தொடர்பு இன்றி இருக்க ஜாதகர் மரியாதை, கௌரவம் மிக்கவராகவும், சொத்துக்களை உடையவராகவும், வாழ்க்கையிலும், இராணுவத்திலும் உயர்பதவி வகிப்பவராகவும் இருக்க ஆசிர்வதிக்கப் படுகிறார். தைரியமும், ஆணையிடும் ஆற்றலும், ஆளுமையும் உடையவராகிறார். வாகனங்களும், அதிர்ஷ்டங்களும் தொடர்ந்து வருகின்றன. ஆனால், பார்வையாலோ, சேர்க்கையாலோ அசுப கிரக தொடர்பு ஏற்பட்டால் இதற்கு எதிர் மாறான பலன்களே ஏற்படும்.