ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4
பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே!
தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – சித்திரை மாதத்தில் காரியங்கள் யாவும் வெற்றியின் திக்கை நோக்கியே செல்லுவதால், அச்சமின்றி அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடலாம்.
வங்கிக் கடன் வாங்கி வீடு,
நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும்.
படிப்பில் அதிக அக்கறை தேவை.
ஆடி மாதத்தில் வெகுதூரப்பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் விருத்தி உண்டு.
கார்த்திகை மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மார்கழி மாதத்தில் தெய்வ வழிபாடுகள் மனநிம்மதி தரும்.
செவ்வாய் – வருட ஆரம்பத்தில் தொழில் முன்னேற்றங்களால் பொருளாதார நிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும்.
வசதிகள் அனைத்தும் நிரம்பிய அழகிய வீடு அமையும்.
பின்னர் வரும் காலத்தில் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்பட்டு,
ஆனந்தம் பொங்கும்.
புதன் – மேற்படிப்புப் படிக்கும் மாணவர்கள்
மெத்தனமாக இராமல், கவனமாக படித்தால் நன்றாக மிளிரலாம்.
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கான நல்ல தருணங்கள் அமையும்.
கலைஞர்களின் கௌரவமும், புகழும் கூடும்.
உயர் அதிகாரிகளோடு ஒத்துப் போகமுடியாத நிலையால் இடைஞ்சல்கள் ஏற்படும். பின் வரும் காலத்தில் பேச்சாளர்களுக்கு தங்கள் வாக்குவன்மையால் வருமானம் பெருகும். அரசியல் வெற்றிகளால் ஏற்படும் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காது.
புத்தி கூர்மை, பலம் மற்றும் திறமை ஆகியவை அதிகரிக்கும்.
சுக்கிரன்.— கடினமான காரியங்கள் என நினைத்த
காரியங்களைக் கூட எளிதில் முடித்து உங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் பாராட்டுப்
பெறுவீர்கள். சேமித்து வைத்த மற்றும் வங்கிக் கடன்கள் மூலமாகக் கிடைத்த பணத்தால் அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மிடுக்காக நல்ல உடைகள் அணிந்து அனைவரையும் கவர்வீர்கள். உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை ஏற்படும்.
குரு – ஆவணி 27 க்குப் பிறகு ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம்
ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும்
யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்.
நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும்.
சனி – இலாப பாவத்தில் இந்த வருடம் நிலைத்திருக்கும் சனி தன் பார்வைகளை 1, 5, 10 ஆம் இடங்களின் மீது வீசுகிறார். இதன் காரணமாக செல்வ நிலை சிக்கலின்றி சீராக உயரும்.
தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் அதிக வருமானம் பெற கைகொடுக்கும். 3, 6 மற்றும்
11 ஆம் இடங்களில் மட்டுமே சாதகமான பலன்களைத் தரும் ரவி புத்திரன் தங்களுக்கு அனுகூலமற்ற பலன்களையே தருவான்.
ஆயினும் குருவின் பார்வையின் மகிமையால் குறையும் இன்னல்கள்.
புனித யாத்திரையாகத் திருநள்ளாறு சென்று சனிபகவானை சேவித்து வந்தால்,
பகலவனைக் கண்ட பனி போல் பறந்து மறைந்துவிடும் துன்பங்கள். மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி-
1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே!
தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.
சூரியன் – வைகாசி மாதத்தில் உடல் ஆரோக்கியம் உன்னதமாக இருக்கும். தொழில் நிலைகள் மேம்படும்.
அரசு மூலமாக சிறந்த சேவைக்காக சிறப்பான கௌரவங்கள் வந்து சேரும். ஆவணி மாதத்தில் நோய்கள் குறைந்து ஆரோக்கியம் பெருகும். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மார்கழி மாதத்தில் வெற்றி மேல் வெற்றிகள் குவியும்,
எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே முடியும். தை மாதத்தில் சூரியன். புதிய பதவி,
கௌரவம் மற்றும் அதனால் ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைத் தருவான்.
செவ்வாய் – புதிய முயற்சிகள் மற்றும் விஐ.பி களின் ஆதரவால்,
எதிர்காலத் திட்டம் எனும் காய் கனிந்து,
சுவைதரும் காலம் கண்ணுக்குத் தெரியும்.
சிலர் தேவையற்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்.
பொருளாதார உயர்வு ஏற்படும்.
பூமி போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும்.
எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.
பகைவரால் ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும்.
தகராறுகள், வழக்குகள் எல்லாம் தங்களுக்குச் சாதகமாகவே முடியும்.
புதன் – நீண்ட தூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். புத்தாடை,
புது ஆபரணங்கள் சேர்க்கை, ஏற்படும். நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். அழகிய மக்கட்பேறு உருவாகும். அதன் பிறகு பிறருக்கு தான தருமம் செய்கிற புண்ணியம் கிடைக்கும். விவசாய உற்பத்திகள் பெருகி ஆதாயமும் பெருகும்.
சிலருக்குப் தகாத ஆசைகளும்,
கெட்ட சவகாசங்களும் ஏற்படும். எனவே,
எச்சரிக்கை தேவை.
சுக்கிரன் – புத்தி கூர்மையினால் கல்வியில் சிறப்பான பலன்கள் ஏற்படும்.
பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் கலைத்திறன் வெளிப்பட்டு, அவர்களால் உங்களுக்குப் பெருமை சேரும். தொழிலில் உபரி வருமானத்திற்கான வழிகள் ஏற்படும்.
உங்கள் கடமை தவறாத உணர்வால்,
உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சுப காரியச் செலவுகள் கூடும். வீட்டில் மகிழ்ச்சியும் கூடும்.
அதன் பின்னர் வெளிநாட்டுப் பயணங்கள் அனுகூலமாக அமையும்.
புண்ணிய யாத்திரைகள் மன அமைதி தரும்.
புதிய இடமாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
குரு – ஆவணி 27 ஆம் நாள் குரு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். அதுவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்.
பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும்.
தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அதன் பிறகு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சனி – கர்ம பாவத்தில் உள்ள சனிபகவான்
ஓய்வற்ற நிலையைத் தருகிறார். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு. திருநள்ளாறு திருத்தலம் சென்று மந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும்.
ஆயினும் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க எடுத்ததுதானே இந்த மனிதப் பிறவி. சிலர் பொது வாழ்வில் பிரபலமாகி, முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார்.
மிகுந்த செல்வங்கள் சேரும். மொத்தத்தில் இவ்வருடம்
60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.