Search This Blog

Tuesday, 7 March 2017

Secrets of Kerala Astrology - Kalathira bhava.









Secrets of Kerala Astrology - Kalathira bhava.

Karakatwa lose of money / property, curd, milk, music, renunciation, travels, anus all these have to be studied from the 7th house.
Timing of marriage
1.    The lord of 7th house in a benefic sign or Venus in exaltation, own house will result in early marriage of the native. 

சுப இராசியில் 7 ஆம் வீடு அமைய அல்லது சுக்கிரன் உச்சம் பெற திருமணம் சீக்கரமே நடக்கும்.

2.  The Sun in 7th and his dispositor in conjunction with Venus will result in early marriage of the native. 

7 இல் சூரியன் இருந்து அவனுக்கு இடம் கொடுத்தவன் சுக்கிரனோடு இணைய விரைவில் திருமணம் நடக்கும்.

3.  Venus in the 2nd  and lord of 7th in 11th will result in early marriage of the native .

குடும்ப பாவத்தில் சுக்கிரனும், 7 ஆம் அதிபதி இலாப பாவத்திலும் இருக்கத் திருமணம் விரைவில் நடக்கும்.

4.  Venus in quadrants from lagna and the lord of asc. In Capricorn or Acquarius will result in early marriage of the native. 

இலக்ன கேந்திரத்தில் சுக்கிரன் இடம் பெற்று, இலக்கினாதிபதி மகரம் அல்லது கும்பத்தில் இருக்க விரைவில் திருமணம் நடக்கும்.

5.  Venus in quadrants from lagna and Saturn in the 7th of Venus will result in early marriage of the native. 

இலக்ன கேந்திரத்தில் சுக்கிரன் இடம் பெற்று, சுக்கிரனுக்கு 7 இல் சனி இருக்க விரைவில் திருமணம் நடக்கும்.

6.  Venus in the 7th of Moon and Saturn in 7th of Venus will result in native’s marriage will be in the 18th year. 

சந்திரனுக்கு 7 இல் சுக்கிரனும், சுக்கிரனுக்கு 7 இல் சனி இருக்கத் திருமணம் 18 வது வயதில் நடக்கும்.

7.  Exchange of houses between lords of Asc. and 7th will result in native’s marriage will be in the 20th year. 

இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற ஜாதகரின் திருமணம் 20 வது வயதில் நடக்கும்.

8.  Lord of 7th in 11th house and lord asc in 10th will result in native marrying earlier. 

களத்திர ஸ்தானாதிபதி, இலாபாதிபதி, இலக்னாதிபதி மூவரும் இணைந்து கர்ம பாவத்தில் அமர சீக்கிரமே திருமணம் நடக்கும்.

9.  Venus in 7th or 9th and lord of 7th in 7th of Venus will result in native marring in his 27 or 30th year. 

களத்திர காரகன் 7 அல்லது 9 இல் இருக்க, சுக்கிரனுக்கு 7 இல் 7 ஆம் அதிபதி இருக்க, 27 அல்லது 30 ஆம் வயதில் ஜாதகருக்குத் திருமணம் நடக்கும்.

10.               Saturn in the 8th and lord of asc in conjunction of Venus will result in native’s marriage in 33rd year. 

சனி 8 இல் இருக்க, இலக்னாதிபதியும், களத்திரகாரகனும் இணைந்து இருக்க 33 வயதில்  திருமணம் நடக்கும்.

11.               Venus in 5th and Dragon’s head in 11th will result in native marrying in 32nd  year. 

சுக்கிரன் 5 இல் இருக்க, இராகு இலாப பாவத்தில் அமர ஜாதகருக்கு 32 வயதில் திருமணம் நடக்கும்.

12.               Venus in 5th and dispositer thereof in 9th will result in native’s marriage in 22nd or 27th year. 

களத்திரகாரகன்  5 இல் இருக்க, அவனுக்கு இடம் கொடுத்தவன் பாக்கிய பாவத்தில் இருக்க, ஜாதகர் திருமணம் 22 அல்லது 27 வது வயதில் நடக்கும்.

13.               Lord of 8th in 8th and lord of asc. In company of Venus indicates marriage in 25th or 33rd year.  

8 ஆம் அதிபதி 8 இல் இருக்க, இலக்னாதிபதி, சுக்கிரனுடன் இணைந்து இருக்க, ஜாதகருக்கு 25 அல்லது 33 வது வயதில் திருமணம் நடக்கும்.

14.               Marriage will takeplace (1) When Jupiter passes through the sign in which lord of Asc or 7th is standing in birth chart or (2) When Jupiter comes on the Navamsa on which the lord of the Star on which Moon is standing in birth chart.   

ஜனன ஜாதகத்தில் , இலக்னாதிபதி அல்லது 7 ஆம் அதிபதியை கோசார குரு கடக்கும் போதோ அல்லது சந்திரன் நிற்கும் நட்சத்திராதிபதியைக் கடக்கும் போதோ ஜாதகருக்குத் திருமணம் நடக்கும். 

Depending on the strength of Jupiter (by way of exalted navamsa, own navamsa etc. occurring at the time mentioned in sub paras (1) and (2) above) the native may be married to one or more. 

மேலே குறிப்பிட்ட நிலைகளில் குருவின் பலத்தைப் பொறுத்து ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பார்

15.               Marriage will take place in the Major or Sub-period of :-
a)  Dispositor of Venus . b). Lord of 10th c). lord of 8th d). Planet in conjunction with lord of 7th  e). Planet in 7th house. 

சுக்கிரனுக்கு இடம் கொடுத்தவன், பத்தாம் அதிபதி. 8 ஆம் அதிபதி, 7 ஆம் அதிபதியுடன் இணைந்த கிரகம், 7 ஆம் இடத்தில் உள்ள கிரகம் ஆகியவற்றின் தசா அல்லது புத்தி காலங்களில் ஜாதகரின் திருமணம் நடைபெறும்.

16.               If the lord of 7 is conjunct with lord of 5th and stays in Asc. With aspect of lord of 12th, the native will have Five wives. 

களத்திராதிபதியும், புத்திர ஸ்தானதிபதியும் இணைந்து இலக்னத்தில் அமர்ந்து, விரயாதிபதியால் பார்க்கப்பட்டால் ஜாதகருக்கு 5 மனைவிகள் ஏற்படும்.

17.               If lord of 7th stays in 11th, in conjunction with lord of 5th lord of 3rd the native will have 5 wives. 

இலாப பாவத்தில், 7 ஆம் அதிபதியும், 5 ஆம் அதிபதியும், 3 ஆம் அதிபதியும் இணைந்து இருக்க ஜாதகருக்கு 5 மனைவிகள் அமைவர்.

18.               Venus in Pisces, Gemini, Virgo or Sagittarius , Venus dispositor  in exaltation and if lord of 7th is powerful, the native will have many wives. 

மீனம், மிதுனம், கன்னி அல்லது தனுசு ஆகிய இராசிகளில் சுக்கிரன் இருக்க, அவனுக்கு இடம் கொடுத்தவன் உச்சமாகி, 7 ஆம் அதிபதியும் பலம் மிக்கவராகி இருக்க ஜாதகருக்குப் பல மனைவிகள் அமைவர்.

19.               If the lord of 7th is in exaltation or in a fixed sign and aspected by a benefic or Venus the native will enjoy the company of more than one wife. 

7 ஆம் அதிபதி உச்சமாகி அல்லது ஸ்திர இராசியில் அமர, அதை சுபர் அல்லது சுக்கிரன் பார்க்க ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்.

20.               If Venus, lords of 2nd and 7th are in quadrant, trine or exaltation or own house, the native will have only wife. 

களத்திர காரகன் , குடும்பாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி ஆகியோர் கேந்திர, கோணத்தில் இருக்க ஜாதகருக்கு ஒரே மனைவி அமைவாள்.

21.              If lord of 7th is in quadrant / trine and at the same time aspecting either the 2nd or 7th and having conjunction or aspect  of lords of 7th or 2nd , the native will have many wives. 

7 ஆம் அதிபதி கேந்திர கோணத்தில் இருக்க, அதே சமயம் 7 அல்லது 2 ஆம் அதிபதிகளை பார்க்கவோ அல்லது இணைந்தோ இருந்தால் ஜாதகருக்குப் பல மனைவிகள் அமைவர்.

22. Malefics ( more than one malefic is required here ) in 2nd or the lord of 7th is in  conjunction of malefic and if ketu (Dragon’s tail) is in conjunction with Venus, the native will possess three wives. 

ஒன்றுக்கு மேற்பட்ட அசுபக்கிரகங்கள் 2 இல் இருக்க அல்லது 7 ஆம் அதிபதி அசுபரோடு இருந்து, கேதுவுடன் சுக்கிரன் இருக்க ஜாதகருக்கு மூன்று மனைவிகள் அமைவர்.

23.              If the lord of 7th is in quadrant / trine possessing exaltation, own house or own varga and has the aspect of lord of 10th , the native will be, possessing many wives. 

7 ஆம் அதிபதி உச்சமாகி, சுய வர்க்கமாகியோ அல்லது ஆட்சி ஆகியோகேந்திர கோணங்களில் இருந்துகர்மாதிபதியால் பார்க்கப்பட ஒன்றுக்கு மேற்பட்ட மனவிகள் அமைவர்.

24. The number of wives a native will lose will be equel to the number of malefic planets in conjunction with lord of 2nd  or 7th .

  2 அல்லது 7 ஆம் அதிபதிகளுடன் இணைந்துள்ள அசுபக் கிரகங்களின் எண்ணிக்கையைப் பொருத்து  அவரின்  மனைவிகளின் இழப்பு  இருக்கும்.

The number of wives with whom a native will enjoy will likewise equal to the number of powerful benefics in conjunction with lord of 2nd and 7th and of these, if only one planet is powerful, the native will have one wife.       
25. If lord of 7th is in 6, 8, or 12 and is weak and at same time  Venus is in debilitation, there will be loss of wife. Venus in the 8th  and Venus’s dispositor in 7th will result in native losing his wife in the young age. 

7ஆம் அதிபதி, பலமிழந்து 6,8 அல்லது 12 இல் இருக்க அதே நேரத்தில், சுக்கிரன் நீசமாகி இருந்தால் மனைவியின் இழப்பு ஏற்படும். சுக்கிரன் 8 இல் இருந்து அவனுக்கு இடம் கொடுத்தவன் 7 இல் இருக்க ஜாதகர் தன் மனைவியை இளம் வயதிலேயே இழப்பார்.

26.              Lord of 7 in debilitation and Venus in 8th will result in death of wife in the 33rd year. 

7 ஆம் அதிபதி நீசமாகி, களத்திரகாரகன் சுக்கிரன் 8 இல் இருக்க ஜாதகர் தனது மனைவியை தனது 33 வது வயதில் இழப்பார்.

27.              If Venus or Jupiter happens to be the lord of 7th  and if such lord is powerful in horoscope, the native will possess a wife with beautiful scecret organs.
If the lord of 7th is hemmed in between Mercury and Saturn, the native’s wife will possess HRASWA BHAGA ( NARROW VAGINAL PASSAGE ). 

பலம் மிகுந்த சுக்கிரன் அல்லது குரு 7 ஆம் அதிபதியாக ஜாதகருக்கு அழகிய மர்ம உறுப்புகளைக் கொண்ட மனைவி அமைவாள். 7 ஆம் அதிபதி புதன் மற்றும் சனிக்கு இடையே மாட்டிக் கொண்டால், மனைவியின் மர்ம ஸ்தானம் ஒடுங்கிய வழி உடையதாக இருக்கும்.

28.              If 7th is a benefic sign or has benefic navamsa and benefic aspects, the native’s wife will hail from a good family. If in a malefic sign or attained malefic navamsa and malefic aspects, the native’s wife will be coming from a low family. 

7 ஆம் அதிபதி சுபராசியிலோ, சுப நவாம்சத்திலோ அல்லது சுபர் பார்வை பெற்றோ இருக்க ஜாதகரின் மனைவி ஓரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவளாக இருப்பாள். இவை அனைத்துமே அசுபத் தன்மை பெற்று இருந்தால் மனைவி கீழான குடும்பத்தில் இருந்து வந்தவளாக இருப்பாள்.

29.               Lord of 7th in a bensfic sign and Venus in 2nd and if both are powerful, the native would get an accomplished wife. 

7 ஆம் அதிபதி சுப இராசியிலும், சுக்கிரன் 2 ஆம் இடத்திலும் பலம்மிக்கவர்களாக இருக்க ஜாதகருக்கு அமையும் மனைவி அறிவுள்ளவளாக, புத்திசாலித்தனம் மிக்கவளாக இருப்பாள்.

30.               If lord of 7th is in quadrants, aspected by benefic or has attained bebefic navamsa or is staying in a benefic sign, the native will have a beautiful and dutiful wife. 

7 ஆம் அதிபதி கேந்திரத்தில், சுப இராசியில், சுப நவாம்சதிதில் இருந்து, சுபர் பார்வை பெற  ஜாதகருக்கு அமையும் மனைவி அழகுள்ளவளாக, கடமை உணர்வு  மிக்கவளாகவும் இருப்பாள்.

31.  If lord of 7th in conjunction with lord of 6th stays in asc. With aspect of Rahu, wife’s character will be questionable. 

7 ஆம் அதிபதி 6 ஆம் அதிபதியோடு இணைந்து இலக்ன பாவத்தில் இருந்து, இராகுவால் பார்க்கப்பட்டால் ஜாதகரின் மனைவியின் குணம் கேள்விக்கு உரியதாக இருக்கும்.

32.               If lord of 7th stays in 12th in conjunction with lord of 8th and with aspect of Rahu, the native’s wife will be over questioning his instructions. 

7 ஆம் அதிபதி 8 ஆம் அதிபதியுடன் இணைந்து விரய பாவத்தில் இருந்து இராகுவால் பார்க்கப்பட்டால் ஜாதகரின் மனைவி எதற்கு எடுத்தாலும் ஜாதகர் சொல்லுக்குக் கட்டுப்படாமல், கேள்வி மேல் கேள்வி கேட்பவராக இருப்பார்.

33.               Lord of 7th in the house of Mars or Saturn and dispositor thereof in 7th will result in native possessing a wife with questionable character. 

7 ஆம் அதிபதி செவ்வாய் அல்லது சனி வீட்டில் இருக்க, அவனுக்கு இடம் கொடுத்தவன் 7 இல் இருக்க ஜாதகரின் மனைவியின் நடத்தை கேள்விக்கு உரியதாக இருக்கும்.

34.               Venus staying in Aries or Scorpio or having his navamsa in there in conjunction with Mars and aspect of Moon will result in the native getting sexually perverted.   

 சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து, மேஷம் அல்லது விருச்சிக இராசியிலோ, நவாம்சத்திலோ இருந்து சந்திரனால் பார்க்கப்பட ஜாதகர் காமத்தால் சீரழிந்தவர் ஆவார் அல்லது காமத்தால் வழி தவறியவர் ஆவார்.

35.               Venus in Capricorn or Acquarius or having his navamsa in there and in conjunction of Saturn and with aspect of Moon would result in native getting sexually perverted. 

சுக்கிரன், சனியுடன் இணைந்து, மகரம் அல்லது கும்ப இராசியிலோ, நவாம்சத்திலோ இருந்து சந்திரனால் பார்க்கப்பட ஜாதகர் காமத்தால் சீரழிந்தவர் ஆவார் அல்லது காமத்தால் வழி தவறியவர் ஆவார்.


36.               The native will get sexually perverted if (1) the lord of 7th is in conjunction with Venus and stay in Taurus or Libra . (2) Lord  of 2nd is in conjunction with Venus and stay in Taurus or Libra (3) Mars in 7th or in conjunction with lord of 7th.  

1.) 7 ஆம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து ரிஷபம் அல்லது  துலா இராசியில் இருக்கவும், 2) 2 ஆம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து இதே இராசிகளில் இருந்தாலும்  அல்லது 3) செவ்வாய் 7 இல் அல்லது 7 ஆம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் ஜாதகர் காமத்தால் சீரழிந்தவர் ஆவார் அல்லது காமத்தால் வழி தவறியவர் ஆவார்.

37.               Saturn in 7th , the lord of 7th in 12 and if at the same time Venus is powerless, the  native will not enjoy happiness from his wife. 

7 இல் சனி இருந்து, 7 ஆம் அதிபதி 12 இல் இருந்து, சுக்கிரன் பலம் இழந்தவனாகி இருந்தால், ஜாதகர் மனைவியிடம் இல்லற சுகத்தை முழுமையாக அனுபவிக்கமாட்டார்.

38.  If lord of 7th is either in debilitation, combustion or in 6, 8 or in 12 with malefic aspect and at the same time If Venus is also conjunction or aspect of malefic to the 7th, the native will never enjoy in married life. 

7 ஆம் ஆதிபதி நீசமாகி, அஸ்தமனமாகி, அல்லது 6, 8, 12 இல் அசுபர் பார்வையுடன் இருக்க, சுக்கிரனும் இணைந்து அல்லது 7 ஆம் இடம் அசுபரால் பார்க்கப்பட ஜாதகருக்கு மகிழ்ச்சி அற்ற மணவாழ்க்கை அமையும்.

39.               If Mars is in 7, 8, or 12 and the dispositor thereof is in the invisible half of the horizon, the native will have 2nd marriage.

7, 8 அல்லது 12 ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க அவனுக்கு இடம் கொடுத்தவன் இராசி மண்டலத்தின் கண்ணுக்குத் தெரியாத பகுதியில் இருந்தால் ஜாதகருக்கு இரு தாரம் அமையும்.

40.  If anyone of the 4 planets viz. lords  2nd, 6th, 7th or Venus be in the asc. In conjunction of a malefic, the native will be evincing interest in women other than his wife. 

2, 6, 7 ஆம் அதிபதிகள் அல்லது சுக்கிரன் ஆகியவர்களில் ஒருவர் இலக்னத்தில் இருக்க, ஜாதகர் மனைவியைத் தவிர பிற பெண்களிடமும் காமுற்று அலைவார்.

41.  If lords of 7th, 6th  and 4th conjointly saty in the 9th , the father of the native will have morally a lose or bad character.

7, 6 அல்லது 4 ஆம் அதிபதிகள் இணைந்து 9 ஆம் வீட்டில் இருக்க ஜாதகரின் தந்தை குணம் கெட்டவராக அல்லது தீய குணம் கொண்டவராக இருப்பார்.

42.  If Mercury gets lordship of 7th and is in conjunction of malefic(s) and at the same time is in debilitation or in papa varga or in 8th or 12th or hemmed in between malefic or has malefic aspects, the native’s wife will cause destruction of the family or kill her husband. 

மிதுனம், கன்னி 7 ஆம் இடமாகி, அசுபருடன் இணைய அத்துடன் நீசம் அல்லது பாபவர்க்கம் ஏற, அல்லது 8 அல்லது 12 ஆம் இடத்தில் இருக்க அல்லது பாப கர்தாரியில் இருக்க, அல்லது அசுப பார்வை பெற ஜாதகரின் மனைவி குடும்ப அழிவுக்குக் காரணமாவாள் அல்லது கணவனைக் கொல்லவும் தயங்காள்.



No comments:

Post a Comment