Search This Blog

Friday, 5 May 2017

வேதத்தின் கண் ஜோதிடம்



                            வேதத்தின் கண் ஜோதிடம்

ஆழிசூழ் உலகில் மனிதர்கள் அனைவரும் தத்தம் விதிவிலக்குகளை உணர்ந்து உய்யும் பொருட்டுத் திருவாய் மலர்ந்து அருளி உள்ளது வேதம். இவ் வேதத்தில் அங்கங்கள் ஆறு, இந்த அங்கங்கள் ஆறில் முக்கியமானது கண் போன்ற ஜோதிடம் ஆகும். நம் உடலில் உள்ள உறுப்புகளில் கண் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் வேதங்களுள் ஜோதிடம் முக்கியமானது என்பது சான்றோர் வாக்கு.

       பூமியில் மேடுபள்ளம், சமமான இடம், இவைகளை அறிந்து நடப்பதற்கும், நடக்கும் காரியங்கள் அனைத்தும் பார்க்கக் கண் எங்ஙனம் பயன்படுகிறதோ அதுபோல் இவ்வுலகில் மனிதராய் பிறந்தவர்களுக்கு வேத்த்தில் சொல்லியிருக்கும் கிரியைகளைத் தாம் நன்கு உணர்ந்து செய்வதற்கு ஜோதிடமே முதன்மை பெற்று விளங்குகிறது. கால அளவை நிர்ணயிக்கும் கருவியாகிய சூரியன் முதலிய கிரகங்கள் பூமியின் இன்ன பாகத்தில் இன்ன இன்ன பலனைத் தரும் என்று பலன் சொல்லுவதும் ஜோதிடமே.

       மனிதப் பிறவிக்கு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், என முக்காலங்களில் இன்ன கிரகம் இன்ன பலன் தரும் எனபதையும், வரும் நன்மை தீமைக்கு வேண்டிய சாந்தியையும் தெரிவித்து, பரிதாபகரமான வழியை நீக்கி, நல்வழியைத் தேடி அதன் பலனை அடையச் செய்வதும் ஜோதிடமே என்பதை நாம் உணர்தல் வேண்டும். 


No comments:

Post a Comment