உ
ஏற்றம் தரும் எண் கணிதம்
எண் கணிதத்தின் சரித்திரமானது, நிச்சியமாக எங்கே துவங்கியது ? – என்ற கேள்ளிவிக்கு சரியான பதில் என்பது அடர்த்தியான மேகக் கூட்டத்தினிடையே நிலவைத் தேடுவதற்கு ஒப்பானது.. ஆயினும் பல எண்கணித மேதைகள், எகிப்திலும், பாபிலோனியாவிலுமே எண்கணிதம் எனும் சூரியன் முதன்முதலில் உதித்ததாக்கக் கருதுகின்றனர். இங்குதான் சால்தியர்கள், ‘ஹெப்ரூ’ முறையின் தாக்கத்தோடு, எண்கணித முறையை உலகுக்கு அளித்ததாகவும் கருத்து நிலவுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனா, ரோம், ஜப்பான் மற்றும் கிரீஸ் ஆகிய நாட்டவர்கள் எண்கணிதத்தை உபயோகப்படுத்தியதற்கான சரித்திரச் சான்றுகள் உள்ளன. ஆயினும், நவீன யுகத்தின் எண் கணிதத்தின் தந்தை என பிரபல கிரேக்க தத்துவவாதி “ பித்தாகோரஸ் ” கருதப்படுகிறார். அவர் எண்கணித முறையை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அவருடைய கணித முறைகள் பலவழிகளிலும் உதவிகரமாக இருந்தபடியால் அவரே முன்னோடியாக அறிஞர்களால் கருதப்பட்டார். பெயர் மற்றும் எண்களின் மூலமான விஞ்ஞானத்திற்கு, நியூமராலஜி எனப் பெயரிட்டு, அதன் உலகம் முழுவதுமான அறிதலுக்கும், பயன்பாட்டுக்கும் பாடுபட்டவராக, “ டாக்டர். ஜூலியா ஸ்டென்டன் ”அறியப்படுகிறார்.
ஜோதிஷம், கைரேகை சாஸ்திரம்,எண்கணிதம் அல்லது எண்குறி சாஸ்திரம் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பிணைத்துக் கொண்டிருக்கும் சாத்திரங்கள் ஆகும். கிருத்துவுக்கு முந்திய காலத்தில் இருந்து இம் மூன்று சாத்திரங்களும் பாரத நாட்டிலும், கிரீஸ் நாட்டிலும் ஒரே நேரத்தில் வளர்ச்சியும், புகழும் அடைந்தன. ஆனால், இந்த நாட்களில் இம்மூன்று சாத்திரங்களும் நம் நாட்டைக் காட்டிலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ச்சி பெற்று வருகின்றன என்றே கூறலாம். முதல் இரு சாத்திரங்களை விட எண்குறி சாத்திரத்தில் ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது. முதல் இரண்டும் பலன்களை மட்டுமே தருவன. எண்கணிதம் மட்டுமே எண்களை மாற்றி அமைப்பதின் மூலமாக வாழ்க்கை மாற்றத்திற்கான வழிமுறைகளை அறிவிக்கின்றது.
மனித நடவடிக்கைகளை அறியும் சாவியாக எண்களை, எண்கணித முறை பயன்படுத்துகிறது. மனித மனத்தின் ஆழத்தை அறிந்து கற்றுக்கொள்ள நமக்குப் பயிற்சி அளிக்கும் சுலபமான முறையே எண்கணித முறையாகும்.
மற்றவர்களின் மனம் மற்றும் குணத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள, எண்கணித வல்லுனர்கள் மெய் மறந்து அந்த நபரின் குணதிசயங்களைப் பரிசோதிக்க முயல வேண்டும். எண்கணிதக் கலையை அறியுமுன் அமைதியாகவும், வெற்று மனதுடனும், அலைபாயத மனதுடனும் தங்கள் உள்ளுணர்வை ஸ்திரமாக வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கலையில் பயிற்சி பெறுபவர்களுக்கு அப்போதே அவர்களை அறியாமலேயே, சகிப்புத் தன்மையும், பொறுமையும் வந்துவிடுகிறது. எண் கணிதப் புத்தகங்களைப் படிப்பதைவிட அனுபவமே ஒருவருக்கு அதிகம் கற்றுக் கொடுக்கிறது என்பதை உணரவேண்டும். புத்தகங்களிலுள்ள விஷயங்கள் மனச் சன்னல் கதவுகளை மட்டுமே திறந்து வைக்கும். மனம் ஒன்றிய கடின உழைப்பே அந்த விஷயங்களை சுயமாக அறிந்து கொள்ள உதவும். இவ் விஷயங்களோடு அனுபவ அறிவையும் இணைக்கும் போதே அந்த அறிவு பயனுள்ளதாகிறது. எண் கணிதக் கலை, நுண்கலைகளைப் போன்று கற்க எளிதானது மற்றும் எப்போதும் நேரத்தை வீணாக்காமல் நம்மை சுறுசுறுப்பாகவும் வைக்கக் கூடியது. மற்றவர்கள் பால் ஒரு கரிசனத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதும் ஆகும்.
ஒருவரின் உடல், விதி மற்றும் பெயர் எண்களுடன் மற்றும் பலரது எண்களுக்கு உள்ள தொடர்புகளைப் புரிந்து கொண்டு, புரிந்து கொண்டதை, சுயமாக, உங்கள் சொந்த வார்த்தைகளிலேயே விளக்க முயலவேண்டும். எண்களில் எப்போதும், நல்ல எண், கெட்ட எண் என்பதில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். எந்த ஓர் எண்ணும் மற்றதற்குக் குறைந்ததில்லை என்பதை அறிய வேண்டும். எண்கள் எப்போதும் வெவ்வேறு மனித உடல்களில், வெவ்வேறு விதமான தாக்கங்களை அதன் சுய குணத்தோடும், சுற்றுச் சூழலுக்கு தக்கபடியும் உள்ளீடு செய்கின்றன. அந்த சக்தியை நாம் புரிந்து கொள்ளும் அதிகாரம் மட்டுமே நமக்கு உண்டே ஒழிய அதை நியாயப்படுத்தவோ, வகைப்படுத்தவோ நமக்கு அதிகாரமில்லை. நீண்ட அனுபவத்திற்குப் பிறகே எண்கணித வல்லுனர்கள், ஒரு மனிதன் மீதான கிரகங்களின் தாக்கத்தால் அவனுள் ஏற்படும் குண மாற்றங்களை, பேதங்களை உணரத் தொடங்குகிறான். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுமே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டதேயாகும்.
எண்களே உலகம்.
12 இராசிகளுக்கும், ஒவ்வொரு இராசிக்கும் 2¼ நட்சத்திரங்களாக 27 நட்சத்திரங்கள் உள்ளன. 2¼ நட்சத்திரங்கள் 9 பாதங்கள், 12 இராசிகளுக்கு மொத்தம் 108 பாதங்கள் ஆகும். 27 – 2+7 = 9, 108 – 1+0+8 = 9. பாகை அளவில் 12 இராசிக்கு 360 பாகையைக் கூட்ட 3+6+0 = 9, கலைகளாக மாற்றினால் 3060×60 = 21600 இதைக் கூட்டினாலும் 9 என இறுதியான எண் 9 ஆகும். இதன் மூலம் ஜோதிடத்திற்கும், எண்களுக்கும் உள்ள தொடர்பை அறிகிறோம்.
9 கிரகங்களுக்கும், 9 எண்களுக்கும் தொடர்பு உள்ளதென்று கண்டுபிடித்து ஒவ்வொரு கிரகத்திற்கும் உரியதான எண்களை அறிஞர்கள் முடிவு செய்தார்கள். இவ்வாறு முடிவு செய்தவர்களில் சால்தியர்களும், கிரேக்க அறிஞர்களும் முக்கியப் பங்கு வகித்தனர் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம். பின்னர், பல மேலைநாட்டு அறிஞர்கள் – குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த “ சீரோ ”’ போன்ற அறிஞர்கள் தக்க முறையில் பயன்படுத்தி வந்தார்கள். சமஸ்கிருத மொழியில் ஆரம்ப காலத்தில் இருந்தே எண்கணித முறை காணப்படுகிறது. இதை “ கடபயாதி ஸம்க்ஞை ” – என்பர். இம் முறையையே நம் நாட்டு அறிஞர்களிடம் “ சீரோ ” கற்றறிந்து எண்களுக்கான கிரகங்களை அமைத்தார்.
அம்முறையே நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக எண்கணித வித்தகராகக் கருதப்படும் “ பண்டிட் சேதுராமன் ” இதையே பின்பற்றி எண்கணித நூலை எழுதியுள்ளார். சீரோ பயன்படுத்திய யுரேனஸ் , நெஃப்டியூனுக்கு பதிலாக இராகு, கேதுக்களை கணக்கில் எடுத்துக்கொண்டார். திரு. தமிழ்வாணன், தமிழ் மொழியில் உள்ள “வச்சனத்தி மாலை” - என்ற நூலின் படி, ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஓர் எண் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். பண்டிட் சேதுராமன் முறைப்படி ஆங்கில எழுத்துக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் – கிரகங்கள்.
ஆங்கில எழுத்து
|
எண்கள்
|
கிரகம்
|
A, I, J, Q, Y
|
1
|
சூரியன்
|
B, K, R
|
2
|
சந்திரன்
|
C, G, L, S
|
3
|
குரு
|
D, M, T
|
4
|
இராகு
|
E, H, N, X
|
5
|
புதன்
|
U, V, W
|
6
|
சுக்கிரன்
|
O, Z
|
7
|
கேது
|
F,P
|
8
|
சனி
|
|
9
|
செவ்வாய்
|
இம் முறைப்படி எண் 9 க்கு எந்த எழுத்தும் இல்லை. ஒருவருடைய பிறந்த தேதியை, அவருடைய பிறந்த எண்ணாகவும், கூட்டுத் தொகையை விதி எண்ணாகவும் குறிப்பிடுகிறார். இதற்குத் தகுந்தாற்போல், பெயர் எண் வைத்துக் கொண்டால், வாழ்வில் முன்னேற்றம் வரும் என்பது இவரின் கருத்து. “ சீரோ ” தமது நூலில் பிறந்த எண்ணைத்தான் முக்கியமாகக் கொள்கிறார். பூஜ்யத்திற்கு தனியாக மதிப்புக் கிடையாது. மக்களின் வருங்கால பலனைச் சொல்வதற்குப் பிறந்த தேதி மட்டுமே போதுமென்று எண் குறி சாஸ்திர வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
|
|
|
No comments:
Post a Comment