உ
இராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
கும்பம் மற்றும் மீனம்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4
பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே!
தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு
சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
கடந்த ஒன்றரை வருட காலமாக
இராகு பகவான் உங்கள் களத்திர பாவத்திலும் கேது – ஜென்ம இராசியிலுமாக சஞ்சாரம்
செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ருண, ரோக, சத்ரு பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான விரயபாவமான 12 ஆம்
இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப்
பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.
சத்ரு பாவத்துக்கு மாறும் இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள்,
உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும்
குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும்.
அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச்
செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல்
அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம்
விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல்,
அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள்
விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத உதவிகள்
மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துக்கள்
வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி
பிறக்கும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள்.
குலதெய்வம் ஆசி கிட்டும். சுற்றுலாவின் மூலம் பல
புண்ணியத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அரசியலில் அனுகூலம்
ஏற்படும்.
விரய பாவம்
வரும் கேதுவால் ஆன்மீக விஷயங்களிலும்,
தியானம் ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு,
தன்னம்பிக்கை இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின்
மனத்தில் கிளர்த்து எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து,
தனது அனுபவத்தையே பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக்
கொள்ளும் காலம் ஆகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப்
பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள
நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம்.
பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள்
உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது
நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின்
ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால்
நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
குடும்பம்
மற்றும் பொருளாதாரம் ;- வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். ஆனல், தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.
. கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்
தொழில் மற்றும் வியாபாரம் ;- சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை ஏற்படும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு.
விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு – வெகுநாட்களாக
முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும். பணி நிமித்தமாகப்
பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தைப்
பிரிய வேண்டிய சூழலும் உருவாகும். உதவி என்று போனால் உடன் பணிபுரிபவர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும். புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை
வாங்க, அலுவலக்க் கடன் உடனடியாக்க் கிடைக்கும்.
பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது. கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. சிலருக்கு வீண்பழி, பகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
மாணவர்களுக்கு ;- உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுது போக்குகளைத் தவிர்க்கவும். அப்போதுதான் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.
அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். தேர்வுகள் முடியும் வரை கிரிக்கெட் பார்ப்பதை ஒத்திப் போடுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு – அரசியலில் நிரந்தர நட்போ
பகையோ கிடையாது. இன்றைய தோழன், நாளைய பகைவன் ஆவான்.
கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய
சூழ்நிலை எழும். உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்களால்,
உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும். தொண்டர்களின்
ஆதரவு சமயத்தில் கை கொடுக்கும். பதவியைக் கைகொள்ள பணத்தையும்,
உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும்.
கலைஞர்களுக்கு – புதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி
ஏற்பட்டாலும், பொருளாதார நிலை சீராக இருக்காது. கூட இருப்பவர்களே
குழி பறிப்பர். முக்கியமான பணிகளை பிறரை நம்பி கொடுக்காமல் நீங்களே
செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப்
படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படும்.
பயணங்கள் இனிதாகும். அரசு கௌரவங்கள், பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும். உனட் பணிபுரிபவர்களை
அனுசரித்துச் செல்வது, முன்னேற்த்துக்கு வழி வகுக்கும்.
பரிகாரங்கள் –
பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கேற்றி வழிபடுவது
சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது
சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய
ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம்
சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து
வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி-
1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே!
தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு
சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.
கடந்த ஒன்றரை வருட காலமாக
இராகு பகவான் உங்கள் ருண, ரோக, சத்ரு பாவத்திலும்
கேது – விரய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான புத்திர பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 11 ஆம்
இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப்
பெயர்ச்சியின் காரணமாக இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
புத்திர பாவத்துக்கு மாறும் இராகுவால் காதல், குழந்தைகள்
மூலமான சந்தோஷம் மற்றும் இலாபம் குறிகாட்டப்படுகிறது. சாதகமான,
சந்தோஷமான காதல் நிலைகள் உருவாகும். பங்குச் சந்தை
விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும். கற்ற கல்வி மூலமாக ஏற்பட்ட
திறனால் உருவாக்கப்பட்ட புதிய பொருள்களை விற்பனை செய்வதின் மூலமாக சம்பாதித்து செல்வம்
சேர்ப்பர். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய
சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் சீராக இருக்காது. சிலர் அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட நேரும்.
சிலருக்கு புத்திர தோஷம் அதாவது புத்திரர்களால் தொல்லை ஏற்படும்.
அவர்கள் நீங்கள் சொன்ன பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம். எல்லாக் காரியங்களையும், முறையாகச் செய்யா மல்
, தலைகீழகாச் செய்வார்கள். தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். சிலருக்கு விபத்து ஏற்பட்டு அங்ககீனம் ஆகலாம்.
எனவே வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை.
ஒழுக்கம் கெட்ட பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. இலாப பாவத்துக்கு மாறும் கேதுவால் எல்லாவழிகளிலும் இலாபம் உண்டாகும்.
பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும். சொன்ன சொல் தவறாதவராக
விளங்குவார். எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
வீட்டில் குடும்பத்தார் அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும்
நிரம்பி வழியும். சுகபோக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும்
இருப்பதால் ஜாதகர் எப்போதும் மகாராஜன் போல் வாழ்ந்து, மகாராஜன்
என்று பெயர் எடுப்பார். பல வகையான தொழில்களில் முதலீடு செய்து
வருமானத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வீர்கள். சிலர் வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெறுக்குவீர்கள். நீதிபதி,
வக்கீல் என நீதித்துறை பணிகளில் ஈடுபடும் யோகம் ஏற்படும். உத்தியோகம் உயரும். அரசாங்கத்தால் வரும் வருமானம் பெருகும். உறவுகளிடைய பகைமை நிலவும்.
ஆனால் அவர்களை உங்கள் சமயோஜித புத்தியால் வெற்றி கொள்வீர்கள்.
அவர்களை உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள்.
மூத்த சகோதரத்திற்கு அரிஷ்டம் உண்டாகலாம். ஆனாலும்
எல்லாவகையிலும் நன்மையே அடைவீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்.
பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும்.
தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொதுவாக,
ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும்
கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.
ஆரோக்கியம் மேம்படும். அதிக உழைப்பின் பேரில் முயற்சிகளில் ழுழு வெற்றி கிடைக்கும். இறை பக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
சாமர்த்திய சாலியாகவும், சுயகாரியப் புலியாகவும் திகழ்வர்.
உறவுகள் கை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.
தொழில் மற்றும் வியாபாரம்
; வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்க்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்.
அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு – விருப்பம் இல்லாத ஊருக்கு வரும் திடீர் இடமாற்ற உத்திரவுகளால் நிதி நிலைமை தள்ளாட்டம் காணலாம்.
குடும்பம், பிள்ளை குட்டிகளை விட்டு பிரியும் சூழ்நிலை எழலாம்.
மேலதிகாரிகள் நல்ல முறையில் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், அவர்கள் உதாசீனப்படுத்துவது போல் ஓர் உணர்வு ஏற்படும்.
உடன் பணிபுரிபவர்கள் தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை,
அவர்கள் சொல்வது போல் அதிகாரிகளிடம் கூறி பாராட்டைப் பெறுவார்கள். எனவே,
நண்பரகளாய் இருந்தாலும் ஓரளவுக்கு விலக்கியே வைத்திருப்பது நல்லது.
பெண்களுக்கு ;- வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர்.
பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
கணவன் மனைவிக்குள்,
கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.
வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம்.
உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவர். குழந்தைகளின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மனம் மகிழ்வீர்கள்.
மாணவர்களுக்கு -- படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.
அரசியல்வாதிகளுக்கு – மக்கள் சேவைகளை திறம்படச் செய்யும் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும்.
கௌரவம் மிக்க பதவிகள் தேடி வரும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் தடைகள்,
தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பொருளாதர நிலை சிறப்பாக இருக்குமாதலால்
தொண்டர்களின் தேவைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தால் அவர்களின் ஆதரவு நிலைத்து
நிற்கும். முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் திரும்பப் பெரும் நடவடிக்கைகளை
எடுக்கலாம். அரசியலில் நிலைத்து நிற்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது
நல்லது.
கலைஞர்களுக்கு – உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய
வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதன் காரணமாக நல்ல நல்ல வாயப்புகள் தேடி வரக்கூடிய
யோகம் உண்டாகும். தங்கள் சிறப்பான நடிப்புக்கான அரசாங்க, தனியார விருதுகள்
கிடைத்து உங்கள் புகழ் எட்டுத் திக்கும் பரவும். வெளியூர், வெளிநாட்டுப்
பயணங்களின் போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படலாம். புதிய விலை உயர்ந்த அதி நவீன
மகிழ் ஊர்திகளை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயினும், வாகனப் பயணங்களின் போது
எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுதல் அவசியம்.
பரிகாரங்கள் – தேய்பிறை அஷ்டமி தோறும்
காலபைரவரை வணங்கி, வழிபாடு செய்வது நல்லது. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு
விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி,
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று
வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள்.
சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார்
கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.