Search This Blog

Wednesday, 30 August 2017

“முண்டேன் அஸ்ட்ராலஜி” –யும் நாட்டின் எதிர்கால பலனும்

“முண்டேன் அஸ்ட்ராலஜி” –யும் நாட்டின் எதிர்கால பலனும்



       “முண்டேன் அஸ்ட்ராலஜி” –  என்பது மாகாணம் அல்லது தேசீயம் பற்றிய ஜோதிடமே என “பீ. வி இராமன்” அவர்கள் குறிப்பிடுகிறார். உலகில், நாட்டில் எழுகின்ற பொதுவான  கிளர்ச்சிகள், போராட்டங்கள், போர், நாட்டை நேரடியாக பாதிப்படையச் செய்யக்கூடிய நிகழ்வுகளையும், கொள்ளை நோய்கள், ஆள்பவர்களுக்கு ஏற்படப் போகிற ஆபத்துக்கள், இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு வரக்கூடிய இன்னல்கள் ஆகியவற்றை கணிக்க பயன்படுகிறது. இதை உலகம் சார்ந்த ஜோதிடவியல் எனக் கொள்ளலாம். பல நேரங்களில் ஜோதிட மேதைகளின் இடைவிடாத எச்சரிக்கைக்குப் பிறகும் செவிமடுக்காத அரசால் அழிவுகளே அதிகமாகின்றன.

       ஒரு நாடு தன் எதிரி நாடு எப்போது போர் தொடுக்கும் - என அறிவதன் மூலமாகத் தனது சக்தியை அதிகரித்துக் கொண்டு பலத்த எதிர்ப்பைக் காட்டலாம் அல்லது சமாதானத்தை விரும்பினால் அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். அதுபோல் ஃப்ளேக், பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படப் போகும் பாதிப்புக்களை எடுத்துரைத்து மக்களை முன்னரே  எச்சரிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.

       அரசியல் ஜோதிடம் என்பது இதன் ஒரு பகுதியாகக் கொள்ளலாம். பேரரசுகள் வீழ்வதும், தற்காலத்தில் உலகின் பெரும் தலைவர்கள், சர்வாதிகாரிகள், நாட்டின் தலைவர்கள், மந்திரிகள், மிக முக்கிய நபர்களாகக் கருதப்படுபவர்களுக்கு ஏற்படும் மரணங்கள், திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு, பதவி பறிபோகுதல், பன்னாட்டு உறவுகள், நாடுகளுக்கு இடையேயான போர்கள், எதிரி நாட்டின் சதித்திட்டங்கள், இராணுவ ஆட்சி, மக்கள் புரட்சி, உள்நாட்டு, வெளிநாட்டுக் குழப்பங்கள், தீவிரவாத நடவடிக்கைகள், விண்வெளி ஆராய்ச்சிகள், அணு ஆயுத தயாரிப்புகள், விஞ்ஞான மேம்பாடுகள், தேர்தல், முடிவுகள், பொருளாதார நிலைகள், அதன் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள் என பலவற்றுக்கான பலன்களை முண்டேன் ஜோதிடத்தால் விளக்கமுடியும்.

“உலக பலன்கள் 1939 – 40 மற்றும் 1941 -1945 ஆகிய எனது வெளியீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்கள் இகலோக ஜோதிடம் பற்றிய ஜோதிட மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்” – என “பீ. வீ. இராமன்” அவர்கள் குறிப்பிடுகிறார்.

இராசிகள் ஒவ்வொன்றும் குறிக்கின்ற நாடுகளைப் பற்றிய விவரங்களை வராஹிமிகிரர் தனது “பிரஹத் சம்கிதா” வில் குறிப்பிட்டுள்ளதை தற்கால                                                                                                                                    நிலைகளுக்கு ஒத்துப் போகும்படி மாற்றி அமைத்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

மேஷம் – பிரான்ஸ், சுவிட்சர்லாண்ட், டென்மார்க், ஜெர்மனி, லெஸ்ஸர் போலண்ட், சிரியா, பர்குண்டி, டமாஸ்கஸ், நேப்பிள்ஸ், வெரோனோ, கபுவா, மார்ஸ்லிஸ், பிர்மிங்ஹாம், ஃப்ளோரன்ஸ் ஆகிய நாடுகளையும், மேலும் லித்துவேனியா, கலட்யா, பாலஸ்தீனம், லெபனான், பிரிட்டன், கிராக்கோ, விசிட்டர், மதராஸ், சரகோயா.ஆகியவையும் ஆகும்.

ரிஷபம் -  கிரேட் போலண்ட், பெர்ஸியா, அயர்லாண்டு, ஏஷியா மைனர், ஜியார்ஜியா, உரஷ்யாவின் ஒரு பகுதி, ஹாலண்டு, கிரேக்கம், ஆர்ச்சிபெலகோ – மான்டுவா, லெப்சிக், டூப்லின், செயிண்ட் லூயிஸ், ரோடேஸ். ஆகிய நாடுகளையும், மேலும், பாரசீகம், கோடியா, அபேஜான், காகணஸ், சைப்ரஸ், ஆசியாமைனர் ஆகியவையும் ஆகும். நகரங்கள் – ரோட்ஸ், மாண்டுவா, டப்ளீன், பர்மா, லால்ப்ஜின்,பாலர்மோ, பாத்ரா, கோஷா, யமுனை, மத்பல்யா, கரம்சவா, பாஞ்சாலம், அயோத்தியா,கபித்தலம், ஹஸ்தினாபூர் ஆகியவற்றையும் குறிக்கும்.

மிதுனம் – இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதி, அமெரிக்கா, ஃப்ளாண்டர்ஸ், எகிப்த்தின் தாழ்வான பகுதி, பெல்ஜியம், சர்தினியா, வேல்ஸ், ட்ரிபோலி, இலண்டன், வெர்ஸைலியஸ், மெல்போர்ன், ப்ளைமவுத், பார்பாண்ட், சான் ஃப்ரான்சிஸ்கோ  -

கடகம் – ஹாலண்டு, ஸ்காட்லாண்டு, நியூஸீலண்டு, பராகுவே, இத்தாலி, சிசிலி, பிரான்ஸின் ஒரு பகுதி., நியூயார்க், கான்ஸ்டாண்டி நோபிள், ட்ரிபோலி, அல்ஜியர்ஸ், டன்னிஸ், வென்னீஸ், மான்செஸ்டர், ஜெனிவா மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகும்.   நகரங்கள்- மான்செஸ்டர், நாக்டேல்.

சிம்மம்- இத்தாலி, சிசிலி, பிரான்ஸின் ஒரு பகுதி, சால்தியா, பொகிமியா, டமாஸ்கஸ், பிரிஸ்டல், பாத், கேன்டன் மற்றும் பிலடால்பியா, சிகாகோ மற்றும் பாம்பே. லங்கா, கலிபோர்னியா, வடக்கு ருமேனியா, ரோம், சிகாகோ, நர்மதை, ஒரிஸா, வங்காளம், அஸாமில் காமரூபம், புகிந்தா மலை, தக்மாணத்தின் கீழ்பகுதி, யமனையின் கீழ்க்கரை, கலிங்கம்.

கன்னி – மெசபடோமியா, ஆசியாடிக் மற்றும் ஐரோப்பா, டர்கி, ப்ரேசில், கிரிட், ஆஸ்ரியா, வெஸ்ட் இண்டீஸ், கிரீஸ், பாரீஸ், லியான்ஸ், ஜெரூசலம், லாஸ் ஏஞ்சல்ஸ், இந்தியா.   வர்ஜினியா.                                                                                                                                                                                                  

துலாம் – இந்தியாவின் சில பகுதிகள், போர்ச்சுகல், லிவோனியா, ஆஸ்ட்ரியா, அலாஸ்கா, ஜப்பான், திபேத், ஷெஃப் பீல்டு, லிஸ்பான், ஃப்ரான்க் பர்ட்., ஆன்ட்வெர்ப், சார்லஸ்டோன், வியன்னா, ஜோகன்ஸ்பர்க். ஆகியவை ஆகும்.

விருச்சிகம் – பவேரியா, ஜுடேயா, கடலோனியா, நார்வே, மொரோகோ, வாஷிங்டன், டோவர், லிவர்போல், பால்டிமோர். ஸ்வீடன், அல்ஜிரியா, ஜூட்லாண்டு, க்வீன்ஸ லாண்டு. பிரேசில் ஆகியவை ஆகும். டெல்லி, பிராங் ஃப்ரட். வாலண்டியா, போர்ட் லாண்ட் ஆகும்.

தனுசு – ஸ்பெயின், அரேபியா, ஹங்கேரி, மடகாஸ்கர், கொலோஜின், ராட்டன்பர்க், டொலேடோ, ஷெஃப் பீல்டு. ஆஸ்திரேலியா, பெலிக்ஸ், டஸ்கினி, டல்மாஷியா ஆகியவை ஆகும்.

மகரம் - இந்தியாவின் ஒரு பகுதி, மஸிடோனியா, ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ, கிரீஸ், சாக்ஸானி, த்ரேஸ். ப்ராண்டன் பர்க், ஆக்ஸ்போர்டு, ப்ரூசெல்ஸ். பல்கேரியா, டோரண்டோ

கும்பம் – சுவீடன், அரேபியாவின் சில பகுதிகள், ரஷ்யா, டென்மார்க், லோயர் சுடான், அபிஸ்ஸினியா, ப்ரைடன், ஹம்பர்க் மற்றும் ப்ரேமன். தெற்கு ஆசியா, லிதுவேனியா, ஆகும்.

மீனம் -  நார்மண்டி, போர்சுகல், காலிசியா, எகிப்து, நுபியா, சஹாரா, அலெக்ஸாண்ட்ரியா, லான்காஸ்டர், ராட்டிஸ்பான், சிலோன், சிகாகோ ஆகியவை ஆகும்.

12 வீடுகளுக்கான காரகங்கள் –

        ஒரு நாட்டின் இலக்னம் என்பது அதை ஆளும் ஒரு குறிப்பிட்ட இராசியாகும். உதாரணமாக இங்கிலாந்தின் இலக்னம் மேஷமாகும். இந்தியாவின் இலக்னம் கன்னியாகும். ஆயினும், இது துல்லியமான இலக்னம் எழும் பாகையாக எடுத்துக் கொள்வதற்கில்லை. சுமாரான பாகையாகும். பாவங்களுக்கான முண்டேன் அஸ்ட்ராலஜி - காரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதலாம் பாவம் எனும் இலக்னம் – மாகாணத்தின் பொது விவகாரங்கள், பொது சுகாதாரம், மந்திரி சபையின் நிலை. மக்கள், அவர்களின் வாழ்வு, தேசப்பற்று, சமுதாய எண்ணங்கள், சுதந்திர உணர்வு வெளிப்படுத்துதல், உறுதியான செயல்பாடுகள் மற்றும் உலக வாழ்வுபற்றிய கருத்துக்கள். நாட்டு விவகாரங்கள் (உள்,வெளநாடு) தேசத்தின் புதிய திட்டங்கள், மக்களின் ஏற்றுக் கொள்ளும் மனம், எதிர்ப்புநிலை, பொது சுகாதாரம், நோய் பாதிப்பு, அமைச்சக, அமைச்சர்கள் நிலை, அவர்களிடையேயான ஒற்றுமை, வேற்றுமை, பூசல்கள், வழக்குகள், தண்டனைகள், தீர்ப்புகள், ஆட்சியாளர்களின் ஆரோக்கியம், துணிவான செயல்பாடுகள், தனிமனித பண்புகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

இரண்டாம் பாவம் – மாகாண வருவாய் துறை, அரசியல் பிரபுத்துவம், மக்களின் பொருளாதார நிலை, மாநில இறக்குமதிகள், வணிகப் பரிமாற்றங்கள். வருவாய் துறை வருமானம். நாட்டின் வரவு செலவு, வாங்கும் திறன், பணம், பணப் புழக்கம், இலாப நஷ்டம், பணம் கொடுக்கல் வாங்கல், வங்கிகள், கருவூலம், பணம், பத்திரம் புழங்கும் இடங்கள், வங்கியாளர்கள், வங்கி ஆவணங்கள், முதலீடுகள், போர் தளவாடம், வாணிபம், ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, மக்களின் வளர்ச்சி விகிதம், வரிவிதிப்பு, வரிவிதிக்கும் அதிகாரம், சட்டம், அதை இயற்றும் அதிகாரம், முதலீடு, முதலீட்டாளர்கள், விலைவாசி, அசையும் சொத்துக்கள், நகைகள், கடன் பத்திரம், பங்குகள், பொதுச் சொத்துக்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன.

மூன்றாம் பாவம் – தொலைபேசி, தந்தி, வானொலி தொலைக்காட்சி,  வதந்திகள், விளம்பரம், இரயில்வே துறை, கப்பல், விமானப் போக்குவரத்து, பத்திரிக்கைகள், செய்தித் தாள்கள், அதன் பணியாளர்கள், செயற்க்கைக்கோள் தொடர்புகள், அண்டை நாட்டுத் திட்டங்கள். பயணங்கள், வாகனங்கள், போக்குவரத்து விதிகள், செய்திகள், விமர்சகர்கள், நிருபர்கள், தகவல்கள் தரும் நிறுவனங்கள், புத்தகங்கள், இலக்கியம், இரவுக் காவலர்கள், படைப் பிரிவுகள், அண்டை நாடுகள், அவற்றின் திருப்திகரமான, திருப்தியற்ற நிலைப்பாடுகள், ஒப்பந்தங்கள், மக்களின் மனநிலைகள், பொதுக் கருத்துக்கள், போர், விபத்து, பூமியை இழத்தல், புயல், சீதோஷ்ண மாறுபாடுகள், அமைதியற்ற சூழல்கள், ஆகியவற்றைக் குறிக்கின்றன.

நான்காம் பாவம் – சொந்த நாடு, தேசப்பற்று, எதிர் கட்சிகள், ஜனநாயகம், நகராட்சி அரசியல், நிலம், பயிர்கள், விவசாயம், அதற்கான துறைகள், சுரங்கங்கள், பொதுக் கட்டிடங்கள், வீடுகள், கட்டுமானத் தொழில், போரினால் ஏற்படும் பேரழிவு, இயற்கை சீற்றங்கள், அபனால் ஏற்படும் சேதங்கள், அழிவுகள், இழப்புகள், பள்ளிக் கூடம், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி சாலைகள், மாணவர்கள், பூமி, எஸ்டேட்டுகள், பொதுவான சந்தோஷங்கள், வணிகம் மற்றும் விவசாயம்.

ஐந்தாம் பாவம் – ஆட்சியாளர்களின் மனப்பாங்கு, மாநிலத்தில் உள்ள குழந்தைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், குற்ற நடவடிக்கைகள் மற்றும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தக் கூடிய பொழுது போக்கு இடங்கள். கேளிக்கை விடுதிகள், மால்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், திரையரங்குகள், நடிகர், நடிகைகள், கலைஞர்கள், காதல் செயல்பாடுகள், சுகமான வாழ்க்கை மற்றும் சிந்தனைகள், மதுபானக் கடைகள், சூதாட்டங்கள், பந்தயங்கள், லாட்டரி, பங்குச் சந்தை, கல்வி வசதிகள், நீதி, நியாயங்கள், ஒழுக்கக்கேடு, ஊழல்கள், சமுதாய விழாக்கள், மேல்தட்டு மக்கள், மேல்சபை, முதலீடுகள், சேமிப்புகள், அயல் நாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், அரசவை, மாளிகைகள், கட்சிகளின் பொதுச் சொத்துக்கள், நிதிகள், சுரங்கத் தொழில் மூலமான ஆதாயம், அரசு விழாக்கள், கல்விச் சாலைகளில் நடக்கும் விழாக்கள் கொண்டாட்டங்கள், அரசர், பிரதம மந்திரி, ஆட்சியாளர்கள், ஜனாதிபதி ஆகியோரின் மனநிலை ஆகியவற்றைக் குறிக்கின்றன.


ஆறாம் பாவம் – மாநில பற்று, வரவுகள், கடன்கள், ஆட்சியாளர்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் நோய்கள், எல்லைப்புறத் தாக்குதல்கள், கப்பல் மற்றும் இதர போர்ப் படைகள். போர் விமானங்கள், கப்பல்கள், இராணுவத் தொடர்புடைய மனிதர்கள்( அதிகாரிகள், வீரர்கள், செவிலியர்கள், தொழிற்சாலைகள், உழைப்பாளிகள், தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தங்கள், கடன்கள், வங்கிக் கடன்கள், வேலைவாய்ப்புக்கள், உயிர் காக்கும் சேவைகள், மருத்துவம், செவிலியர், காப்பீடு, இழப்பீடுகள், சேமிப்புக் கிடங்குகள், பானவகைகள், உணவுக் கையிருப்பு, ஆவணக் காப்பகம், ஆவணக் காப்பாளர்கள், கணனிகள், நூலகர், பழைய நூல்கள், ஓலைச் சுவடிகள், விலங்குகள் பாதுகாப்பு, மிருகக் காட்சிசாலை, கோழிப் பண்ணைகள், மனித நேய அமைப்புகள், பஞ்சாலைத் தொழிலாளர்கள், தேசத்தை பாதிக்கும் நோய்கள், பொது மருத்துவர்கள்.  ஆகியவற்றைக் குறிக்கின்றன.


ஏழாம் பாவம் – பெண்களின் ஆரோக்கியம், நாட்டில் ஏற்படும் ஒழுக்கமற்ற நிலைகள், குழந்தைச் சாவின் அளவு, போர், வெளியுறவுக் கொள்கைகள். பொது எதிரி, ஊடுருவல்கள், தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் செய்வோர், சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்பவர்கள், நீதிக்கு பயந்து ஓடி ஒளிபவர்கள், திருடர்கள், கொள்ளையர், சர்வதேச நடவடிக்கைகள், பூசல்கள், பிறநாட்டுடனான உறவுகள், அயல் நாட்டு விவகாரங்கள், சார்பு/ எதிர்பு நாடுகள், மறைமுக / ரகசிய எதிரிகள், கூட்டு ஒப்பந்தங்கள், நடுவர் தீர்ப்புகள், விவாதங்கள், கூட்டாளிகள், தடைகள், போட்டிகள், முரண்பாடுகள், ஒற்றுமை, நாகரீக வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கும் சூழல்கள், க்டுப்பாடுகள், வெளிநாட்டு வணிகம், திருமணம், மணமுறிவு, ஒழுக்க சீர்கேடுகள், திருமண, மணமறிவு விகிதாசாரங்கள், மக்கள் கருத்து, பொதுக் கூட்டங்கள், பொதுக் கருத்து, பொதுவிதிகள், கலைக் கூடங்கள், கூட்டமைப்பு, நடுவர்மன்றம், சட்ட மேலவை, அனுமதிக்கப்படும், நிராகரிக்கப்படும் உரிமைகள், இராணுவ செயல்பாடுகளின் வெற்றி, தோல்விகள், பெண்களின் ஆரோக்கியம், குழந்தைகளின் இறப்பு விகிதம், சமூக விரோத அமைப்புகள், ஒற்றுமைக்கான அமைப்புகள்  ஆகியவற்றைக் குறிக்கின்றன.

எட்டாம் பாவம் – இறப்பு விகிதம், மாநிலக் கருவூலம். அதிகார வர்க்கங்கள், அவர்களின் மரணம், அதற்குப் பிறகு ஏற்படும் இறுதி மரியாதைகள், ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள். ஆட்சியாளர்களின் அதிகார இழப்பு, மக்கள் சக்தியால் மாற்றங்கள் ஏற்படுதல், கொடுங்கோன்மை ஆதிக்கம் பெறுதல், மந்திரி சபை, ஆலோசகர்கள், ( இந்து - முதல் வீடு- மத்திய மந்திர சபை, மேல்நாடு- 4 ஆம் வீடு ஆகும்), போர், இயற்கைப் பேரழிவு, பஞ்சம், கொள்ளை நோய், ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள், துன்பங்கள், இறப்பு, பிறப்பு மற்றும் இரண்டுக்குமான சதவிகிதங்கள், ஆயுத பலம், மதத்தின் நிதி, மாநிலக் கருவூலம், முடக்கப்பட்ட சொத்துக்கள், முதலீட்டின் இலாபத்தால் கிடைக்கும் வரிகள், யூக வணிகம், தேசத்தின் பொருளீட்டும் திறன், மக்களின் வருமானம், மரண தண்டனை, அதை நிறைவேற்றுபவர், மக்களின் செலவுகள், வரி, தண்டத் தொகை, மறைக்கப்பட்ட பொருட்கள், மருத்துவக் கண்டுபிடிப்புக்கள், காப்பீட்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், ஓய்வூதியர்கள், மரணத்தை ஒட்டிய கடமைகள்  ஆகியவற்றைக் குறிக்கின்றன.

ஒன்பதாம் பாவம் – கோவில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள், மதமாச்சர்யங்கள், மத போதகர்கள், ஆன்மீக நிலை, சமயப் பற்று, மதக் கல்விகள், நீதி மன்றங்கள், சட்டம், வழக்குத் தொடர்தல், நீதி நேர்மை. சர்வதேசக் கூட்டமைப்புகள், மாநாடுகள், கூட்டங்கள், அயல் நாட்டு விவகாரத்துறை, அயல் நாடுகளுடனான ஒத்துழைப்பு, இராஜதந்திரம், வெளியாட்டு அரசியல், வெளிநாட்டவர், உலகளாவிய தொடர்புகள், உடன்படிக்கைகள், தேசப்பற்று, அயல் நாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, அயல் நாட்டுக்குக் கப்பல் விடுதல், கப்பற்படை, அது சார்புடையவை, அரசியல் விளம்பரம், கருத்துக்களை வெளியிடுதல், பரப்புதல், தணிக்கை அமைப்பு, சுற்றுலாத்துறை, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, அறிவியல், உயர் கல்வி நிறுவனங்கள், எழுத்து துறைக்கான கல்வி, ஆநிரியத் தொழில், ஆலோசனை மையம், பாடப் புத்தகங்கள், தத்துவ நூல்கள், கல்லூரிகள், கல்லூரி மாணவர்கள், கல்லூரிக் கட்டிடுங்கள், வெளியீடுகள், பல்களைக் கழகங்கள், உயர்ந்த எண்ணங்கள், வெளிநாடுகளில் குடியேறுதல், தொலைதூரப் பயணங்கள், கடல் பிரயாணங்கள், மாணவர், கலை, அறிவியல் பரிமாற்றங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள், வெளிநாட்டு அகதிகள், தகவல் தொடர்பு, இராணுவ அணிவகுப்பு, விமானப் பணிப் பெண்கள், கூட்டாளிகள், உறவினர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன.

பத்தாம் பாவம் – ஆட்சியாளர்கள், பாராளுமன்றம், அயல்நாட்டு வணிகம், ஏற்றுமதிகள், சுய நலவாதிகள், சுரண்டல்காரர்கள், சட்டம் ஓழுங்குக் குறைபாடுகள் மற்றும் புரட்சிகள். கட்சிகள், மேலதிகாரிகள், சாதாரண மக்கள், புகழ் வாய்ந்த மனிதர்கள், உலக அரங்கில் தேசத்தின் மதிப்பு உயரும் நிலை, கலாசாரம் மற்றும் சாதனைகள், அதன் மூலம் உயரும் நாட்டின் பெருமை, அயல் நாட்டு வணிகம், ஏற்றுமதி, சுரண்டல், புரட்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, (மேற்கத்திய ஜோதிடம் – 11 ஆம் வீடு). தலைமை அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், தேச அளவில் பிரபலமானவர்கள், அமைப்பின் தலைவர்கள், தேச ஒற்றுமை, மதத்தின் பெயர் கொண்டு சேர்க்கப்படும் பணங்கள், ஓய்வுபெறுதல், தேசத்தின் கொள்கைகள், முக்கியஸ்தர்கள், அதிகாரிகள், குற்றம் செய்து அனைவராலும் அறியப் பட்டார்கள், அரசுவேலை. ஆகியவற்றைக் குறிக்கின்றன.

பதினோறாம் பாவம் – மற்ற நாடுகளின் மூலமான இலாபங்கள், வணிக இலாபங்கள், உலக நாடுகளுடனான உறவுகள். பாராளுமன்றம், சட்டம், பொதுமன்றம், சட்ட மேலவை, மாநிலம், நகரம், தேசம், அரசாங்கம், பிற நாடுகளுடன் ஏற்படும் உடன் படிக்கைகள், ஒப்பந்தங்கள், தூதுவர்கள், உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள், ஆலோசனைக் குழுக்கள், திட்டங்கள், காலமுறைத் (5 ஆண்டு) திட்டங்கள், விலைவாசிக் கட்டுப்பாடு, பொருள் வினியோகம், தொழில் வளர்ச்சி, இலாபங்கள், மாசுக் கட்டுப்பாடு, நேசநாடுகள், பிறநாட்டு இலாபங்கள்,  ஆசைகள் நிறைவேறுதல், குழுக்கள், நாடகம், நாடகவிழா, சினிமா அரங்குகள், சூதாட்ட இல்லம், கூட்டுறவு சங்கங்கள், ஆட்சிக் குழுக்கள், பங்குச் சந்தை, வாரிசு உரிமை, சீர்திருத்த வாதிகள், பொதுவிழாக்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன.

பன்னிரெண்டாம் பாவம் – ரகசிய குற்றங்கள், சதித் திட்டங்கள், மருத்துவ மனைகள் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள், போர் மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகள்.  போர்க் கைதிகள் பாதுகாக்கும் இடம், அகதிகள், இராணுவ மருத்துவ மனைகள், தீவைத்தல், கொள்ளையடித்தல், கற்பழித்தல், படுகொலை, இராஜதுரோகி, கலகக்காரர்கள், உளவாளிகள், நிழலுலக நடவடிக்கைகள், இரகசியத் திட்டங்கள், இரகசிய ஒப்பந்தங்கள், குற்றங்கள், தண்டனைகள், கன்னியாஸ்திரிகள், துறவிகள் மடங்கள், அனைத்துப் புகலிடங்கள், நசவேலைகள் செய்பவர், கொத்தடிமை, ஊனம், மறைவிடங்கள், தற்கொலை, இறுதிச் சடங்குகள், விஷம் வைத்தல், ஏழ்மை, ஊழல், வழக்கு நடத்துதல், தாழ்வு மனப்பான்மை, தொற்று நோய்கள், முதியோர் இல்லம், ஆள்மாறாட்டம், சிறைக்காவலர், நஷ்டம், தடைகள், உபயோகமற்றுப் போதல், தியாகம் செய்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றன.








நாட்டின் எதிர்கால பலன் அறிய கீழ்க்கண்ட காரணிகள் மனதில் கொள்ளப்பட வேண்டும்.

1.   மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இராசிகளில் சூரியன் நுழையும் காலத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். பின், கிரக நிலைகளை ஆராயந்து பலன் காண வேண்டும். இது குறிப்பிட்ட வருடத்தில் உலகிற்கான பொதுவான பலன்களைத் தரும்.

2.   குறிப்பிட்ட ஒரு நாட்டின் அல்லது நாடுகளின் நிலையில் இருந்து ஒவ்வொரு மாதத்திற்கான ஒளி கிரகங்கள் மற்றும் மற்ற கிரக நிலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒளிகிரகங்கள் மேஷத்தில் இருக்க, அதனுடன், சனி, செவ்வாய் போன்ற அசுப கிரகங்களின் தாக்கமும் இருக்க, மேஷ இராசியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் பொதுவாக அதிகமான நோய் பரவுதலும், மக்கள் மன்றங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு, அந்த மாதத்தில் அங்கு பொதுவான நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்காது எனலாம். அதே மாதத்தில் 10 ஆம் இடத்தில் ஒளி கிரகங்கள் இடம்பெற அந்த இராசிக்கு உரிய நாட்டில் அரச பரம்பரைக்கு உயிரிழப்பு, அயல்நாட்டு வாணிபத்தில் இலாபம் குறைதல்,  சட்டம் ஒழுங்கு பாதிப்பு அடைதல் மற்றும் ஒரு புதிய புரட்சிக்கான அறிகுறி தென்படுதல் போன்ற விரும்பத்தகாத நிலைகள் ஏற்படும். இன்னொரு நாட்டில் இதே இணைவு, 2 ஆம் இடத்தில் ஏற்பட பொருளாதார இடர்பாடுகள் மாநிலத்தில் ஏற்படுவதோடு, வருமானக்குறைவு மற்றும் பொருள்கள் இறக்குமதி நிலைகளும் பாதிப்பு அடையும். இவ்வாறாக, இராசிகளில் ஏற்படும் அசுபக்கிரகங்களின் தாக்கம் அந்தப் பகுதியில் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்களைத் தரும் என்பதை நாம் அறியவேண்டும்.

   

       முண்டேன் அஸ்ட்ராலஜியில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது ஒவ்வொரு ஆண்டும் கிரக சாம்ராஜ்யத்தில் மாறிக் கொண்டு இருக்கிற கிரகங்களின் பொறுப்புகளை, பதவிகளை ஆகும். இதைப் பொருத்தே பலன்கள் மாறுபடுகின்றன. கிரக மந்திரி சபை என்பது – 7 கிரகங்களும் பெறக் கூடிய இலாகாக்கள் – அரசர், மந்திரி, தளபதி, தாதுக்கான அதிபதி, மூல, ஜீவன்களுக்கான அதிபதிகள், தான்யாதிபதி, கால்நடை அதிபதி என ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் பதவிகள், இலாகாக்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த வருடம் அரசனாகவுள்ள கிரகம் அடுத்த ஆண்டு மந்திரியாக மாறும். இதை அந்தந்த வருட பஞ்சாங்கங்களின் மூலமாக அறியலாம்.

3.   இராஜ கிரகங்களான சூரியன் – சந்திரன் ஆகியவை எந்த வருடத்தில் இராஜா ஆகவில்லையோ அந்த வருடங்களில் ராஜசுகம் பெருமளவு மாறுபடும். அதேபோல் – தன்னிகரில்லாத் தளபதி செவ்வாய்க்கு – எந்த வருடத்தில் அந்தப் பதவி பிராப்தம் கிடைக்கவில்லையோ – அந்த வருடம் படைப்பிரிவுகளில் பிரச்சனைகள் எழலாம். இதுபோல் அனைத்துக் கருத்துக்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

4.   அடுத்து, கிரகண காலங்கள் முண்டேன் அஸ்ட்ராலஜியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கிரகணத்தின் தாக்கமானது, கிரகண காலத்துக்கு முன், பின் 6 மாதங்கள் இருக்கின்றன. கிரகணம் ஏற்படும் நாட்டின் மீது பாதிப்பு, புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சூரிய – சந்திர கிரகணங்கள் 14 நாட்கள் இடைவெளிகளுக்குள் ஏற்பட்டால் நாட்டில் போர், தலைவர்கள் கொலை செய்யப்படுதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம்.

5.   உதாரணமாக 1914 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14 நாட்கள் இடைவெளியில் க்குள் ஏற்பட்ட கிரகணம் காரணமாக ஆகஸ்டு மாதத்தில் ஐரோப்பாவில், அந்த நாட்டின் இளவரசன் கொல்லப்படுவதைக் காரணமாகக் கொண்டு மிகப் பெரிய போர்  மூளும் என்று பேராசிரியர் பீ சூரிய நாராயணராவ் பலன் உரைத்தார். 1932 செப்டம்பர் அஸ்ட்ராலாஜிகல் மேகஸின் இதழில், கிரகணத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவில் அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரூஸ்வோல்ட் ஜனாதிபதி ஆவார் என்றும் உரைத்தார். அத்துடன், அதேசமயம் இலண்டனில் பாராளுமன்றத்தில் குழப்பங்களும், கலகங்களும் ஏற்படும் என்றும், அமெரிக்காவில் பொருளாதார சிக்கல்கள் உருவாகும் என்றும், இங்கிலாந்தில் கொள்ளை நோய் காரணமாக பல குழந்தைகள் மரணிக்கும் என்றும் கூறினர் இவை அனைத்தும் நடந்தன. அதேபோல், 1940 செப்டம்பர் அஸ்ட்ராலாஜிகல் மேகஸின் இதழில் ரூஸ்வோல்ட் மூன்றாவது முறையாக தேர்தலில் வென்று ஜனாதிபதி ஆவார் என எழுதப்பட்டதும் உண்மையானது. எனவே, கிரகணங்கள் முண்டேன் அஸ்ட்ராலஜி பலன் காண முக்கிய பங்கு வகிக்கிறது.

6.   அடுத்து வால் நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் அதன் திசை கருத்தில் கொள்ளப்படவேண்டும். வால் நட்சத்திரம் தோன்றும்  நாட்டில் உள்ள மக்களுக்கு கஷ்டங்களும், ஆரோக்கியக் குறைவும், பஞ்சமும் ஏற்படும்.

7.   அடுத்து பார்க்க வேண்டியது நாட்டின் தலைமை பீடத்தை அலங்கரிக்கும் முக்கிய நபரின் ஜாதகம் அலசப்பட வேண்டும். அவரின் ஜாதகம் நல்ல விதத்தில் இருந்தால் அது நாட்டிற்கு நல்லதை செய்யும். தலைமையின் ஜாதகத்தின் கிரக நிலைகளின் தாக்கம்  நாட்டின் மீது இருக்கும்.

8.   பூகம்பங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முண்டேன் அஸ்ட்ராலஜி ஜோதிடத்தின் மிக உபயோககரமான, சிரமமான பிரிவுகளில் ஒன்று ஆகும். இதில் பலன் கூறும் போது ஜோதிடர்கள் கவனமாக பலன் உரைக்க வேண்டும். வராஹிமிகிரர் தனது பிருஹத் சம்ஹிதாவில் சிறப்பாக விளக்கியுள்ளார். அதை தங்கள் மேலதிக ஆராய்ச்சிக்கு, ஜோதிட ஆர்வலர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்

Friday, 25 August 2017

ஜனன ஜாதகத்தில் அங்காரகன் – சனியின் சமசப்தம நிலையின் தாக்கங்கள்


ஜனன ஜாதகத்தில் அங்காரகன் – சனியின் சமசப்தம நிலையின் தாக்கங்கள்.


            ஜனன ஜாதகத்தில் சனி – செவ்வாயின் சமசப்தம நிலையில் உள்ள ஜாதகர்களின் நிலை எங்ஙனம் இருக்கும் என்பதை முதலில் பார்ப்போம். இவர்கள் கடினமான உழைப்பாளிகளாக இருப்பர். மிகவும் பொறுமையாக இருந்து இவர்களின் இலட்சியத்தை, இலக்கை அடையும் முன் ஏற்படுகிற கஷ்டங்களையும், தடைகளையும் தகர்த்து எரிந்து, மற்றவர்கள் இவர்களை அதைரியப் படுத்தினாலும், எப்பாடு பட்டேனும் உச்சத்தை அடைந்து, நினைத்ததைச் சாதிக்கக் கூடியவர்கள். சரியாகத் திட்டமிட்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி தன் இலக்கை அடைவதில் வல்லவர்கள். அவர்கள் அதற்காகப் படும் கஷ்டங்கள் அதிகம் என உணர்ந்து இருந்தாலும், எவருடைய உதவியும் இன்றி தனியாக முன்னேறவே முயற்சிப்பார்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். சுயமறுப்பு உடையவர்களாகவும், கடினமான குணமுடைய குருவாகவும், ஆசிரியராகவும் விளங்குவர். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னும் பல தடைகளை சந்திப்பவர்களாக இருப்பார்கள். மக்கள் விரும்பும் மகத்தான தலைவர்களாக மங்காப் புகழுடன் வாழ்வர். அத்துடன் அறிஞர்கள் கூட்டமும் அவரை மிகவும் விரும்புவர். வாழ்நாளில் ஒரு முறையேனும், மேல் உள்ளவர்களை,  உயர் அதிகாரிகளை எதிர்க்கவும் தயங்கமாட்டார்கள். எதிலும் வெற்றி மேல் வெற்றி அடையக் கூடியவர்களாக இருப்பர். சில நேரங்களில் தங்கள் உறுதியான நிலையில் இருந்து மாறிவிடுவார்கள். ஆயுள் பலம் மிக்கவர்கள். 

இனி இதற்கான, சில உதாரண ஜாதகங்களைக் காணலாம்.
ஜாதகம் – 1 
       பிடெல் கேஸ்ட்ரோ – பிறந்த தேதி – 13 ஆகஸ்டு  1926 – நேரம்      அதிகாலை 02 – 00,  20வ20, 76மே40. ஹஸ்த நட்சத்திரம், சந்திர தசா இருப்பு – 3 வருடம், 9 மாதம், 20 நாள்.



செவ்

லக்//
ராகு


பிடெல் கேஸ்ட்ரோ
13 ஆகஸ்டு  1926
அதிகாலை,02-00,
20வ20, 76மே40
இராசி
சூரி,புத
சுக்
குரு

கேது

சனி
சந்

           இவரின் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி வீட்டில் பலம் மிக்கவராக அமர்ந்துள்ளார். செவ்வாய் இலாபாதிபதியாகி, இலாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது மேலும் பலமே. நல்ல ஸ்தான பலத்துடன் திகழ்கிறார். அதன் காரணமாக ஜாதகர் தைரியம் மிக்கவராகி, கொரில்லா போர் தந்திரங்களை அறிந்தவராகவும், சிறந்த போராளியாகவும், புரட்சிகரமானவராகவும் ஆக்கினார் அங்காரகன். செவ்வாய் உண்மையாகவே ஒழுக்கம், சட்டம் மற்றும் கீழ்படிதல் ஆகியவற்றை அளிக்கிறார். ஆனால் அப்படி ஒழுக்கமானவராக, சட்டத்துக்கு உட்பட்டு, கீழ்படிதலுடன் நடக்க வேண்டியவரை பலம் மிக்க உச்ச சனியானவர் தன் பார்வையால்  ஒரு புரட்சி வீரராக மாற்றி, மக்களுக்காக புரட்சி போர் நடத்த வைத்தது. துலா ஒரு தர்மத்தை நிலை நாட்டும் இராசி. எனவே, அது சட்டக் கல்வியைக் குறிகாட்டுவதால், சனியின் உச்ச பலத்தோடு இணைவு பெற்றதால் ஜாதகர் சட்டக் கல்வியை பயின்றார். செவ்வாய் சனியின் 6 / 8 நிலை  தனது தேவைக்கு ஏற்பவும், வசதியைப் பொறுத்தும்,  கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளும்  நிலையைத் தந்தது.

ஜாதகம் - 2          
       பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர். – பிறந்த தேதி – 17 ஜனவரி 1917. நேரம் – இரவு 23 – 45 மணி – இடம் – 07வ18 – 80கி40 – சுவாதி நட்சத்திரம்.


குரு

கேது

எம். ஜி. ஆர். –
17 ஜனவரி 1917
இரவு 23–45 மணி
07வ18 – 80கி40
இராசி
சனி
சூரி,செவ்
புத

சுக்
இராகு

சந்
லக்//
                      
       உச்ச செவ்வாய், பரம எதிரி புதனுடன் இணைந்து, சனியால் பார்க்கப்படுகிறார். இலக்னாதிபதி புதன் 5 இல் சூரியன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து 11 இல் உள்ள சனியால் பார்க்கப்படுகிறார். அவர்கள் பரஸ்பர பார்வையும் சனியின் மீது விழுகிறது. இராகு, கலைத்துவம் மிக்கவரான சுக்கிரனுடன் இணைந்து உள்ளார். சந்திரன் குரு பரஸ்பர பார்வை புரிகின்றனர். இராகுவும், சூரியனும் உத்திராட சாரத்தில் உள்ளனர். இத்தகைய நல்ல கிரக அமைப்புகள் அவரை வெற்றிகரமான நடிகராகவும், அரசியல் வாழ்க்க்கையில் மக்கள் நாயகனாகவும், சிறந்த முதலமைச்சராகவும் ஆக்கியது. எம். ஜி. ஆர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தாலும், பின்னர், சி. என். அண்ணாத்துரை அவர்களால் மிகவும் கவரப்பட்டு தி. மு. க உறுப்பினர் ஆனார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து பொருளாளர் ஆனார். 1972 இல் அஇஅதிமுக வை துவக்கினார். 1977 இல் நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். தி. மு. க. தோல்வியைத் தழுவியது.
       ஜாதகம் – 3
      சரத் பவார் – சரத் கோவிந்தராவ் பவார் – பிறந்த தேதி – 12 டிசம்பர் 1940 – காலை 7 மணி. 20வ40 – 79கி56. சுக்கிர தசை இருப்பு – 1 வருடம் 10 மாதம் 12 நாட்கள்.
                  
கேது
குரு,சனி
சந்



சரத் பவார்
12 டிசம்பர் 1940 –
காலை-7-மணி. 20வ40 – 79கி56
       இராசி



லக்//
சூரி,புத
சுக்,செவ்
இராகு
        
          இவர் மாராட்டிய மாநில தேசிய காங்கிரஸ் பார்ட்டியின் தலைவர் ஆவார். தாய்க் கட்சியை எதிர்க்கும் நிலை இந்த ஜாதகத்தில் காணப்படுகிறது. சனி, செவ்வாய் இருவருமே எதிர் எதிர் பாவங்களில் இருப்பதால் பலம் இழந்து காணப்படுகிறார்கள்.  1978 இல் ஜனதா பார்ட்டியுடன் கூட்டணி ஆட்சி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதுக் கட்சி தொடங்கி முதல் முறையாக மஹாராஷ்டிரா முதல் அமைச்சர் ஆனார். இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்த போது, இவரது ஆட்சி 1980 இல் கலைக்கப்பட்டது. 1999 தேசியவாத காங்கிரஸைத் துவக்கினார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் ஆட்சிக்காக பிரிந்து வந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டு வைக்கும்படி ஆயிற்று. ஆயினும் இவரின் கட்சி அந்த தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது.  

ஜாதகம் – 4.   
       முன்னாள் மத்திய மந்திரி ஏ. இராஜா. பிறந்த தேதி - 10 மே 2017,  நேரம் இரவு 23 ம- 50நி  --  இடம் 13வ04 , 80கி17. புதன் தசா இருப்பு -   14 வருடம் 7 மாதம் 20 நாட்கள்.                                                    
            
சுக்,குரு
சூரி
புதன்(வ)


ஏ. இராஜா
10 மே 1963 –
அரவு 23 மணி 50 நி. 13வ04 – 80கி17
       இராசி
செவ்,
ராகு
லக்//,சனி
கேது


சந்


      
       நீசமான செவ்வாய் ஆட்சி வீட்டில் உள்ள சனியை எதிர் நின்று பார்க்கிறது. சூரியனும், சுக்கிரனும் உச்ச இராசியில் இருந்து இராஜ யோகத்தை அளித்தனர்.      3 ஆம் அதிபதி குரு, 5 ஆம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து வெற்றிகளைக் குறிகாட்டுகிறார். ஆனால் 4 மற்றும் 11 ஆம் அதிபதியான செவ்வாய், இராகுவுடன் இணைந்து பிரச்சனையில் தள்ளியதால், 2ஜி ஒளிக் கற்றை அலைவரிசை ஊழலில் முதன்மைக் குற்றவாளியானார். அதன் காரணமாக பதவி இறங்கும் நிலையும் ஏற்பட்டது. தனாதிபதி சனியும், இலாபாதிபதி செவ்வாயும் அசுபராகி பரஸ்பர பார்வை புரிந்ததின் காரணமாக ஊழல் குற்றத்துக்கு ஆளாகி, பதவி இறங்கவும் நேர்ந்தது. 
       எனவே, நண்பர்களே ! ஜாதகங்களில் சனி – செவ்வாயின் பரஸ்பர பார்வையால் ஏற்படும்  சாதக – பாதக நிலைகளைப்பற்றி அறிந்தது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதி வணக்கத்துடன் முடிக்கிறேன். வாழ்க வளமுடன்

உ குழந்தை பாக்கியம் குன்றாத நிலைகள்


குழந்தை பாக்கியம் குன்றாத நிலைகள்


        திருமணம் ஆனதும் தம்பதிகளும், அவர்களின் குடும்பமும் ஆவலுடன் எதிர்பார்ப்பது புத்திர பாக்கியம் எனும் குழந்தைப் பேறே. பேரக் குழந்தைகளைக் கொஞ்சத் துடிக்கும் பெற்றோர்களின் ஆசை சொல்லி மாளாது. தற்கால தம்பதிகளில் குழந்தைப் பேற்றை செயற்கையாகத் தள்ளிப் போடும் தம்பதிகளும், சீக்கிரமே குழந்தைப் பேற்றை எதிர்பார்த்தாலும், கிரக நிலைகள் காரணமாக இயற்கையாகவே தாமதப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன என்றால் அது கர்ம வினைதானே ?
        ஒரு ஜாதகருக்குப் புத்திர பாக்கியம் உண்டா ? இல்லை தாமதப்படுமா அல்லது குழந்தைப் பேறு மறுக்கப்படுகிறதா ? – போன்றவற்றை பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி பல வழிகளிலும் ஜோதிடர் சுலபமாக்க் கூறிவிட முடியும். ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்து / சந்திரனில் இருந்து 5 ஆம் இடம், பஞ்சமாதிபதி, அவரின் பலம், காரகர் குருவின் நிலை, ஆணுக்கு பீஜ ஸ்புடமும், பெண்ணுக்கு க்ஷேத்திர ஸ்புடமும் மற்றும் பார்வை நிலைகளும் ஆராயப்பட வேண்டும். குழந்தைப் பேறுக்கான காலத்தை தசா/புத்தி, கோசார நிலைகளை ஆராய்ந்து அறிவித்தல் வேண்டும்.
புத்திர பாக்கியத்துக்கான காரணிகள் –
1.       5 ஆம் வீடு, பஞ்சமாதிபதி மற்றும் குரு, சுபரின் பார்வை.
2.       பலம் மிக்க இலக்னதிபதி 5 இல் அமரவும்.
3.       பலம் மிக்க காரகர் குரு, பஞ்சமாதிபதி ஆகியோர் பலம்மிக்க இலக்னாதிபதியால் பார்க்கப்படவும்.
4.       குரு மற்றும் பஞ்சமாதிபதி பத்து வர்க்கக் கட்டங்களில் இருக்கும் வைஷேஷிகாம்ச நிலையும்.
5.       இலக்னாதிபதி மற்றும் பஞ்சமாதிபதிகளின் இணைவு, பரஸ்பர பார்வை, பரிவர்த்தனை நிலைகள்.
6.       இலக்னாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி  கேந்திரங்களில் இருக்கவும், 5 ஆம் அதிபதி பலம் கொண்டவராய் இருக்கவும்.
7.       பஞ்சமாதிபதியின் நவாம்சாதிபதி நல்ல நிலையில் இருக்க, நல்ல பார்வை பெற.
8.       இலக்னாதிபதியும, பாக்கியாதிபதியும், களத்திர பாவத்தில் இருக்கவும், குடும்பாதிபதி இலக்னத்தில் இருக்கவும்.
9.       களத்திர பாவாதிபதியின், நவாம்சாதிபதி ஆனவர், இலக்னாதிபதி, பாக்கியாதிபதி அல்லது குடும்பாதிபதியால் பார்க்கபடுதலும் ஆகியவை குழந்தைப் பிறப்புக்கான நல்ல நிலைகள் ஆகும்.
        பலதீபிகாவில் பீஜ ஸ்புடம் மற்றும் க்ஷேத்திர ஸ்புடங்களைக் கணக்கிடும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்ணைப் பொறுத்தவரை, அவர்கள் ஜாதகத்திலுள்ள சந்திரனின், செவ்வாயின், குருவின் ஸ்புடங்களைக் கூட்டி 360 ஆல் வகுத்துக்குக் கிடைக்கும் மீதி இரட்டைப்படை இராசி, இரட்டைப்படை நவாம்சத்தில் அமைந்தால் பெண்ணுக்கான புத்திர பாக்கிய / உற்பத்தி தகுதி உறுதி செய்யப்படுகிறது. ஆனால், இவை இராசியில் ஆண் இராசியாகவும், நவாம்சத்தில் பெண் இராசியாகவும் மாறி அமைந்தால், மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே அவள் புத்திர பாக்கியத்தை அடைவாள்.
        பீஜ ஸ்புடம் காண – (ஆண்கள்) ஆணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், குரு ஆகியவர்களின் ஸ்புடங்களைக் கூட்டி 360 ஆல் வகுத்துக்குக் கிடைக்கும் மீதி ஒற்றைப்படை இராசி, ஒற்றைப்படை நவாம்சத்தில் அமைந்தால் ஆணுக்கான புத்திர பாக்கிய / உற்பத்தி தகுதி உறுதி செய்யப்படுகிறது. ஏதாவது ஒன்று மாறி அமைந்தால் மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே அவன் புத்திர பாக்கியத்தை அடைவான்.
        ஆணுக்கான பீஜ மும், பெண்ணுக்கான க்ஷேத்திரமும் பலம் குறைந்து காணப்பட்டால் தாமதப்படும். அதற்கான மருத்துவ உதவி, பரிகாரச் செயல்பாடுகள் அவசியப்படலாம்.
        பீஜ ஸ்புடமும், க்ஷேத்திர ஸ்புடமும் கணக்கிடும் போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய  நிலைகள் – எந்த இராசியில் இந்த ஸ்புடங்கள் விழுகிறதோ, அதற்கு இணையான இராசிகளை நவாம்சத்திலும், சப்தாம்சத்திலும் பார்ப்பது இதற்கான சாதக நிலைகளை அதிகரிக்கும் எனக் கொள்ளலாம். இந்த ஸ்புட நிலைகள் 6, 8, 12 அல்லது நீச, அஸ்தமன, பாப கர்தாரி நிலைகள், அல்லது அசுபரால் பாதிக்கப்பட்ட நிலைகள் இருப்பின் அது குழந்தைப் பேற்றுக்கு நல்லதல்ல. இந்த ஸ்புடங்கள் விழுந்துள்ள இடங்களின் அதிபதிகள், இந்த இராசிகளைப் பார்க்கின், அது நல்ல நிலையாகக் கருதலாம்.
        உதாரண ஜாதகம் – 1 
        பீஜ ஸ்புட கணிதம். ஜாதகரின் திருமண நாள் – ஜூலை 2008 – புத்திரன் பிறந்த்து – ஜூன் – 2016. சூரியன் + சுக்கிரன் + குரு பாகைள் = 323º . 50 + 296º . 58 + 125º . 23 = 746º . 11 – இதை 360 ஆல் வகுக்க மீதி 26º.11 = மேஷம் – பரணி – 4 ஆம் பாதம்.
        சப்தாம்சத்திலும், நவாம்சத்திலும் பீஜ ஸ்புடமானது முறையே துலாத்திலும், விருச்சிகத்திலும் விழுகின்றன.
        இராசிக் கட்டத்தில் பீஜ ஸ்புடம் ஒற்றைபடை இராசியான மேஷத்தில் இருப்பது நல்லது. நவாம்சத்தில் இரட்டைப் படை இராசியான விருச்சிகத்தில் அமைவது நல்லதல்ல.   சப்தாம்சத்தில் (துலாம்) ஒற்றைப்படை இராசியில் இருப்பது நல்லதே.

சனி,செவ்
ராகு

சந்


இராகு

சந்

சூரி
323º.50’
கணவன்.7மாரச்1968
11-43 இரவு.பால்காட்
இராசி

செவ்
   

சப்தாம்சம்
லக்//
சூரி
சுக்-296º.59
புத
குரு
125º.23
புத,சுக்
சனி


லக்//

கேது



குரு
கேது


இராகு

குரு,சூரி

செவ்

நவாம்சம்




சனி


லக்//,சந்
புத,கேது,சுக்.



        இராசிக் கட்டத்தில் இலக்னாதிபதி செவ்வாய் 5 ஆம் வீட்டிலும், பாக்கியாதிபதி சந்திரன் உச்ச நிலையிலும் உள்ளனர். நவாம்சத்தில், களத்திர பாவாதிபதி சுக்கிரனுக்கு இடம் கொடுத்தவன் புதன் ஆவார். 9 ஆம் அதிபதி சந்திரனால் இலக்னம் பார்க்கப்படுகிறது. நவாம்சத்தில் இலக்னாதிபதி புதன் சுபரோடு இருக்கிறார். சப்தாம்சத்தில் இலக்னாதிபதி சந்திரன் உச்சம். பீஜ ஸ்புடம் இராசிக் கட்டத்திலும், சப்தாம்சத்திலும் ஒற்றைப்படை இராசியில் இடம்பெற்றுள்ளது. எனவே, இது தாமதமான குழந்தைப் பிறப்புக்குக் காரணமாகிறது. பரிகாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே குழந்தை பிறந்தது. சனி மகா திசா, சுக்கிர புக்தியில் – கோசார குரு, ஜாதக குருவைக் கடந்த போது புத்திரன் பிறந்தான்.
மனைவி ஜாதகம் – க்ஷேத்திர ஸ்புட கணிதம் –
        சந்திரன்+ செவ்வாய் + குரு பாகைகள் கூட்ட 110º.18’ +  02º.25’ + 282º.29 = 395º.12’. இதை 360 ஆல் வகுக்க மீதி 35º.12. இது ரிஷப இராசியில் (இரட்டைப்படை) விழுகிறது. கார்த்திகை – 3 ஆம் பாதம். சப்தாம்சம் மற்றும் நவாம்சத்தில் முறையே தனுசுவிலும், கும்பத்திலும் விழுகிறது.

லக்//
செவ்

சனி
கேது


சுக்,செவ்
சந்,சூரி


      இராசி
மனைவி-16-11-1973
05-12 மாலை
கும்பகோணம்
சந்
புத


சப்தாம்சம்
கேது
குரு

ராகு
சனி
சுக்
ராகு
சூரி
புத




லக்//
குரு

        இராசிக் கட்டத்தில் க்ஷேத்திர ஸ்புடம் இரட்டைப்படை இராசியான ரிஷபத்தில் விழுவது நல்லது. நவாம்சத்தில் ஒற்றைப்படை இராசியான கும்பம் – நல்லதல்ல. சப்தாம்சத்தில் ஒற்றைப்படை இராசியான தனுசு – நல்லதல்ல
        இராசிக் கட்டத்தில் பஞ்சமாதிபதி 8 இல் உள்ளார். குரு நீசமாகி உள்ளார். நவாம்சத்தில் க்ஷேத்திர ஸ்புட அதிபதி சனி தனது சுய வீடான 4 ஆம் வீட்டில் உள்ளார்.



புத
செவ்,குரு

ராகு


நவாம்சம்
சூரி
சனி
சந்

கேது

லக்//
சுக்

சப்தாம்சத்தில் க்ஷேத்திர ஸ்புட அதிபதி குரு இலக்னத்தில் பலம் பெற்று அமர்ந்துள்ளார்.
        எனவே, மனைவியின் ஜாதகத்தில் இலக்னாதிபதி, இலக்னத்திலேயே பலமுடன் உள்ளதாலும், நவாம்சத்தில் அவர் குருவுடன் இணைந்து வர்க்கோத்தமத்தில் உள்ளதாலும் குழந்தை பாக்கியம் நிச்சியம் உண்டென்றாலும், புத்திர பாக்கிய நிலையில் தாமதத்தையே காட்டுகிறது. எனவே, 8 ஆண்டுகள் வைத்தியத்திற்குப் பிறகே குழந்தை வரம் கிடைத்தது. இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணி முடிக்கிறேன்.   வாழ்க வளமுடன்