உ
குழந்தை பாக்கியம் குன்றாத நிலைகள்
திருமணம் ஆனதும் தம்பதிகளும், அவர்களின் குடும்பமும் ஆவலுடன் எதிர்பார்ப்பது புத்திர பாக்கியம் எனும் குழந்தைப் பேறே. பேரக் குழந்தைகளைக் கொஞ்சத் துடிக்கும் பெற்றோர்களின் ஆசை சொல்லி மாளாது. தற்கால தம்பதிகளில் குழந்தைப் பேற்றை செயற்கையாகத் தள்ளிப் போடும் தம்பதிகளும், சீக்கிரமே குழந்தைப் பேற்றை எதிர்பார்த்தாலும், கிரக நிலைகள் காரணமாக இயற்கையாகவே தாமதப்படும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன என்றால் அது கர்ம வினைதானே ?
ஒரு ஜாதகருக்குப் புத்திர பாக்கியம் உண்டா ? இல்லை தாமதப்படுமா அல்லது குழந்தைப் பேறு மறுக்கப்படுகிறதா ? – போன்றவற்றை பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி பல வழிகளிலும் ஜோதிடர் சுலபமாக்க் கூறிவிட முடியும். ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்து / சந்திரனில் இருந்து 5 ஆம் இடம், பஞ்சமாதிபதி, அவரின் பலம், காரகர் குருவின் நிலை, ஆணுக்கு பீஜ ஸ்புடமும், பெண்ணுக்கு க்ஷேத்திர ஸ்புடமும் மற்றும் பார்வை நிலைகளும் ஆராயப்பட வேண்டும். குழந்தைப் பேறுக்கான காலத்தை தசா/புத்தி, கோசார நிலைகளை ஆராய்ந்து அறிவித்தல் வேண்டும்.
புத்திர பாக்கியத்துக்கான காரணிகள் –
1. 5 ஆம் வீடு, பஞ்சமாதிபதி மற்றும் குரு, சுபரின் பார்வை.
2. பலம் மிக்க இலக்னதிபதி 5 இல் அமரவும்.
3. பலம் மிக்க காரகர் குரு, பஞ்சமாதிபதி ஆகியோர் பலம்மிக்க இலக்னாதிபதியால் பார்க்கப்படவும்.
4. குரு மற்றும் பஞ்சமாதிபதி பத்து வர்க்கக் கட்டங்களில் இருக்கும் வைஷேஷிகாம்ச நிலையும்.
5. இலக்னாதிபதி மற்றும் பஞ்சமாதிபதிகளின் இணைவு, பரஸ்பர பார்வை, பரிவர்த்தனை நிலைகள்.
6. இலக்னாதிபதி மற்றும் பஞ்சமாதிபதி கேந்திரங்களில் இருக்கவும், 5 ஆம் அதிபதி பலம் கொண்டவராய் இருக்கவும்.
7. பஞ்சமாதிபதியின் நவாம்சாதிபதி நல்ல நிலையில் இருக்க, நல்ல பார்வை பெற.
8. இலக்னாதிபதியும, பாக்கியாதிபதியும், களத்திர பாவத்தில் இருக்கவும், குடும்பாதிபதி இலக்னத்தில் இருக்கவும்.
9. களத்திர பாவாதிபதியின், நவாம்சாதிபதி ஆனவர், இலக்னாதிபதி, பாக்கியாதிபதி அல்லது குடும்பாதிபதியால் பார்க்கபடுதலும் ஆகியவை குழந்தைப் பிறப்புக்கான நல்ல நிலைகள் ஆகும்.
பலதீபிகாவில் பீஜ ஸ்புடம் மற்றும் க்ஷேத்திர ஸ்புடங்களைக் கணக்கிடும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்ணைப் பொறுத்தவரை, அவர்கள் ஜாதகத்திலுள்ள சந்திரனின், செவ்வாயின், குருவின் ஸ்புடங்களைக் கூட்டி 360 ஆல் வகுத்துக்குக் கிடைக்கும் மீதி இரட்டைப்படை இராசி, இரட்டைப்படை நவாம்சத்தில் அமைந்தால் பெண்ணுக்கான புத்திர பாக்கிய / உற்பத்தி தகுதி உறுதி செய்யப்படுகிறது. ஆனால், இவை இராசியில் ஆண் இராசியாகவும், நவாம்சத்தில் பெண் இராசியாகவும் மாறி அமைந்தால், மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே அவள் புத்திர பாக்கியத்தை அடைவாள்.
பீஜ ஸ்புடம் காண – (ஆண்கள்) ஆணின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், குரு ஆகியவர்களின் ஸ்புடங்களைக் கூட்டி 360 ஆல் வகுத்துக்குக் கிடைக்கும் மீதி ஒற்றைப்படை இராசி, ஒற்றைப்படை நவாம்சத்தில் அமைந்தால் ஆணுக்கான புத்திர பாக்கிய / உற்பத்தி தகுதி உறுதி செய்யப்படுகிறது. ஏதாவது ஒன்று மாறி அமைந்தால் மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே அவன் புத்திர பாக்கியத்தை அடைவான்.
ஆணுக்கான பீஜ மும், பெண்ணுக்கான க்ஷேத்திரமும் பலம் குறைந்து காணப்பட்டால் தாமதப்படும். அதற்கான மருத்துவ உதவி, பரிகாரச் செயல்பாடுகள் அவசியப்படலாம்.
பீஜ ஸ்புடமும், க்ஷேத்திர ஸ்புடமும் கணக்கிடும் போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைகள் – எந்த இராசியில் இந்த ஸ்புடங்கள் விழுகிறதோ, அதற்கு இணையான இராசிகளை நவாம்சத்திலும், சப்தாம்சத்திலும் பார்ப்பது இதற்கான சாதக நிலைகளை அதிகரிக்கும் எனக் கொள்ளலாம். இந்த ஸ்புட நிலைகள் 6, 8, 12 அல்லது நீச, அஸ்தமன, பாப கர்தாரி நிலைகள், அல்லது அசுபரால் பாதிக்கப்பட்ட நிலைகள் இருப்பின் அது குழந்தைப் பேற்றுக்கு நல்லதல்ல. இந்த ஸ்புடங்கள் விழுந்துள்ள இடங்களின் அதிபதிகள், இந்த இராசிகளைப் பார்க்கின், அது நல்ல நிலையாகக் கருதலாம்.
உதாரண ஜாதகம் – 1 –
பீஜ ஸ்புட கணிதம். ஜாதகரின் திருமண நாள் – ஜூலை 2008 – புத்திரன் பிறந்த்து – ஜூன் – 2016. சூரியன் + சுக்கிரன் + குரு பாகைள் = 323º . 50’ + 296º . 58’ + 125º . 23’ = 746º . 11’ – இதை 360 ஆல் வகுக்க மீதி 26º.11’ = மேஷம் – பரணி – 4 ஆம் பாதம்.
சப்தாம்சத்திலும், நவாம்சத்திலும் பீஜ ஸ்புடமானது முறையே துலாத்திலும், விருச்சிகத்திலும் விழுகின்றன.
இராசிக் கட்டத்தில் பீஜ ஸ்புடம் ஒற்றைபடை இராசியான மேஷத்தில் இருப்பது நல்லது. நவாம்சத்தில் இரட்டைப் படை இராசியான விருச்சிகத்தில் அமைவது நல்லதல்ல. சப்தாம்சத்தில் (துலாம்) ஒற்றைப்படை இராசியில் இருப்பது நல்லதே.
சனி,செவ்
ராகு
|
சந்
|
இராகு
|
சந்
| |||||
சூரி
323º.50’
|
கணவன்.7மாரச்1968
11-43 இரவு.பால்காட்
இராசி
|
செவ்
|
சப்தாம்சம்
|
லக்//
சூரி
| ||||
சுக்-296º.59’
புத
|
குரு
125º.23’
|
புத,சுக்
சனி
| ||||||
லக்//
|
கேது
|
குரு
கேது
|
இராகு
|
குரு,சூரி
| ||
செவ்
|
நவாம்சம்
| ||
சனி
|
லக்//,சந்
புத,கேது,சுக்.
|
மனைவி ஜாதகம் – க்ஷேத்திர ஸ்புட கணிதம் –
சந்திரன்+ செவ்வாய் + குரு பாகைகள் கூட்ட 110º.18’ + 02º.25’ + 282º.29 = 395º.12’. இதை 360 ஆல் வகுக்க மீதி 35º.12’. இது ரிஷப இராசியில் (இரட்டைப்படை) விழுகிறது. கார்த்திகை – 3 ஆம் பாதம். சப்தாம்சம் மற்றும் நவாம்சத்தில் முறையே தனுசுவிலும், கும்பத்திலும் விழுகிறது.
லக்//
செவ்
|
சனி
கேது
|
சுக்,செவ்
|
சந்,சூரி
| |||||
இராசி
மனைவி-16-11-1973
05-12 மாலை
கும்பகோணம்
|
சந்
|
புத
|
சப்தாம்சம்
|
கேது
| ||||
குரு
|
ராகு
|
சனி
| ||||||
சுக்
ராகு
|
சூரி
|
புத
|
லக்//
குரு
|
இராசிக் கட்டத்தில் க்ஷேத்திர ஸ்புடம் இரட்டைப்படை இராசியான ரிஷபத்தில் விழுவது நல்லது. நவாம்சத்தில் ஒற்றைப்படை இராசியான கும்பம் – நல்லதல்ல. சப்தாம்சத்தில் ஒற்றைப்படை இராசியான தனுசு – நல்லதல்ல
இராசிக் கட்டத்தில் பஞ்சமாதிபதி 8 இல் உள்ளார். குரு நீசமாகி உள்ளார். நவாம்சத்தில் க்ஷேத்திர ஸ்புட அதிபதி சனி தனது சுய வீடான 4 ஆம் வீட்டில் உள்ளார்.
புத
|
செவ்,குரு
|
ராகு
| |
நவாம்சம்
|
சூரி
| ||
சனி
சந்
| |||
கேது
|
லக்//
|
சுக்
|
சப்தாம்சத்தில் க்ஷேத்திர ஸ்புட அதிபதி குரு இலக்னத்தில் பலம் பெற்று அமர்ந்துள்ளார்.
எனவே, மனைவியின் ஜாதகத்தில் இலக்னாதிபதி, இலக்னத்திலேயே பலமுடன் உள்ளதாலும், நவாம்சத்தில் அவர் குருவுடன் இணைந்து வர்க்கோத்தமத்தில் உள்ளதாலும் குழந்தை பாக்கியம் நிச்சியம் உண்டென்றாலும், புத்திர பாக்கிய நிலையில் தாமதத்தையே காட்டுகிறது. எனவே, 8 ஆண்டுகள் வைத்தியத்திற்குப் பிறகே குழந்தை வரம் கிடைத்தது. இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment