Search This Blog

Friday, 25 August 2017

ஜனன ஜாதகத்தில் அங்காரகன் – சனியின் சமசப்தம நிலையின் தாக்கங்கள்


ஜனன ஜாதகத்தில் அங்காரகன் – சனியின் சமசப்தம நிலையின் தாக்கங்கள்.


            ஜனன ஜாதகத்தில் சனி – செவ்வாயின் சமசப்தம நிலையில் உள்ள ஜாதகர்களின் நிலை எங்ஙனம் இருக்கும் என்பதை முதலில் பார்ப்போம். இவர்கள் கடினமான உழைப்பாளிகளாக இருப்பர். மிகவும் பொறுமையாக இருந்து இவர்களின் இலட்சியத்தை, இலக்கை அடையும் முன் ஏற்படுகிற கஷ்டங்களையும், தடைகளையும் தகர்த்து எரிந்து, மற்றவர்கள் இவர்களை அதைரியப் படுத்தினாலும், எப்பாடு பட்டேனும் உச்சத்தை அடைந்து, நினைத்ததைச் சாதிக்கக் கூடியவர்கள். சரியாகத் திட்டமிட்டு, மனதை ஒரு நிலைப்படுத்தி தன் இலக்கை அடைவதில் வல்லவர்கள். அவர்கள் அதற்காகப் படும் கஷ்டங்கள் அதிகம் என உணர்ந்து இருந்தாலும், எவருடைய உதவியும் இன்றி தனியாக முன்னேறவே முயற்சிப்பார்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். சுயமறுப்பு உடையவர்களாகவும், கடினமான குணமுடைய குருவாகவும், ஆசிரியராகவும் விளங்குவர். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னும் பல தடைகளை சந்திப்பவர்களாக இருப்பார்கள். மக்கள் விரும்பும் மகத்தான தலைவர்களாக மங்காப் புகழுடன் வாழ்வர். அத்துடன் அறிஞர்கள் கூட்டமும் அவரை மிகவும் விரும்புவர். வாழ்நாளில் ஒரு முறையேனும், மேல் உள்ளவர்களை,  உயர் அதிகாரிகளை எதிர்க்கவும் தயங்கமாட்டார்கள். எதிலும் வெற்றி மேல் வெற்றி அடையக் கூடியவர்களாக இருப்பர். சில நேரங்களில் தங்கள் உறுதியான நிலையில் இருந்து மாறிவிடுவார்கள். ஆயுள் பலம் மிக்கவர்கள். 

இனி இதற்கான, சில உதாரண ஜாதகங்களைக் காணலாம்.
ஜாதகம் – 1 
       பிடெல் கேஸ்ட்ரோ – பிறந்த தேதி – 13 ஆகஸ்டு  1926 – நேரம்      அதிகாலை 02 – 00,  20வ20, 76மே40. ஹஸ்த நட்சத்திரம், சந்திர தசா இருப்பு – 3 வருடம், 9 மாதம், 20 நாள்.



செவ்

லக்//
ராகு


பிடெல் கேஸ்ட்ரோ
13 ஆகஸ்டு  1926
அதிகாலை,02-00,
20வ20, 76மே40
இராசி
சூரி,புத
சுக்
குரு

கேது

சனி
சந்

           இவரின் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி வீட்டில் பலம் மிக்கவராக அமர்ந்துள்ளார். செவ்வாய் இலாபாதிபதியாகி, இலாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது மேலும் பலமே. நல்ல ஸ்தான பலத்துடன் திகழ்கிறார். அதன் காரணமாக ஜாதகர் தைரியம் மிக்கவராகி, கொரில்லா போர் தந்திரங்களை அறிந்தவராகவும், சிறந்த போராளியாகவும், புரட்சிகரமானவராகவும் ஆக்கினார் அங்காரகன். செவ்வாய் உண்மையாகவே ஒழுக்கம், சட்டம் மற்றும் கீழ்படிதல் ஆகியவற்றை அளிக்கிறார். ஆனால் அப்படி ஒழுக்கமானவராக, சட்டத்துக்கு உட்பட்டு, கீழ்படிதலுடன் நடக்க வேண்டியவரை பலம் மிக்க உச்ச சனியானவர் தன் பார்வையால்  ஒரு புரட்சி வீரராக மாற்றி, மக்களுக்காக புரட்சி போர் நடத்த வைத்தது. துலா ஒரு தர்மத்தை நிலை நாட்டும் இராசி. எனவே, அது சட்டக் கல்வியைக் குறிகாட்டுவதால், சனியின் உச்ச பலத்தோடு இணைவு பெற்றதால் ஜாதகர் சட்டக் கல்வியை பயின்றார். செவ்வாய் சனியின் 6 / 8 நிலை  தனது தேவைக்கு ஏற்பவும், வசதியைப் பொறுத்தும்,  கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளும்  நிலையைத் தந்தது.

ஜாதகம் - 2          
       பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர். – பிறந்த தேதி – 17 ஜனவரி 1917. நேரம் – இரவு 23 – 45 மணி – இடம் – 07வ18 – 80கி40 – சுவாதி நட்சத்திரம்.


குரு

கேது

எம். ஜி. ஆர். –
17 ஜனவரி 1917
இரவு 23–45 மணி
07வ18 – 80கி40
இராசி
சனி
சூரி,செவ்
புத

சுக்
இராகு

சந்
லக்//
                      
       உச்ச செவ்வாய், பரம எதிரி புதனுடன் இணைந்து, சனியால் பார்க்கப்படுகிறார். இலக்னாதிபதி புதன் 5 இல் சூரியன் மற்றும் செவ்வாயுடன் இணைந்து 11 இல் உள்ள சனியால் பார்க்கப்படுகிறார். அவர்கள் பரஸ்பர பார்வையும் சனியின் மீது விழுகிறது. இராகு, கலைத்துவம் மிக்கவரான சுக்கிரனுடன் இணைந்து உள்ளார். சந்திரன் குரு பரஸ்பர பார்வை புரிகின்றனர். இராகுவும், சூரியனும் உத்திராட சாரத்தில் உள்ளனர். இத்தகைய நல்ல கிரக அமைப்புகள் அவரை வெற்றிகரமான நடிகராகவும், அரசியல் வாழ்க்க்கையில் மக்கள் நாயகனாகவும், சிறந்த முதலமைச்சராகவும் ஆக்கியது. எம். ஜி. ஆர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தாலும், பின்னர், சி. என். அண்ணாத்துரை அவர்களால் மிகவும் கவரப்பட்டு தி. மு. க உறுப்பினர் ஆனார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து பொருளாளர் ஆனார். 1972 இல் அஇஅதிமுக வை துவக்கினார். 1977 இல் நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். தி. மு. க. தோல்வியைத் தழுவியது.
       ஜாதகம் – 3
      சரத் பவார் – சரத் கோவிந்தராவ் பவார் – பிறந்த தேதி – 12 டிசம்பர் 1940 – காலை 7 மணி. 20வ40 – 79கி56. சுக்கிர தசை இருப்பு – 1 வருடம் 10 மாதம் 12 நாட்கள்.
                  
கேது
குரு,சனி
சந்



சரத் பவார்
12 டிசம்பர் 1940 –
காலை-7-மணி. 20வ40 – 79கி56
       இராசி



லக்//
சூரி,புத
சுக்,செவ்
இராகு
        
          இவர் மாராட்டிய மாநில தேசிய காங்கிரஸ் பார்ட்டியின் தலைவர் ஆவார். தாய்க் கட்சியை எதிர்க்கும் நிலை இந்த ஜாதகத்தில் காணப்படுகிறது. சனி, செவ்வாய் இருவருமே எதிர் எதிர் பாவங்களில் இருப்பதால் பலம் இழந்து காணப்படுகிறார்கள்.  1978 இல் ஜனதா பார்ட்டியுடன் கூட்டணி ஆட்சி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதுக் கட்சி தொடங்கி முதல் முறையாக மஹாராஷ்டிரா முதல் அமைச்சர் ஆனார். இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்த போது, இவரது ஆட்சி 1980 இல் கலைக்கப்பட்டது. 1999 தேசியவாத காங்கிரஸைத் துவக்கினார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் ஆட்சிக்காக பிரிந்து வந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டு வைக்கும்படி ஆயிற்று. ஆயினும் இவரின் கட்சி அந்த தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது.  

ஜாதகம் – 4.   
       முன்னாள் மத்திய மந்திரி ஏ. இராஜா. பிறந்த தேதி - 10 மே 2017,  நேரம் இரவு 23 ம- 50நி  --  இடம் 13வ04 , 80கி17. புதன் தசா இருப்பு -   14 வருடம் 7 மாதம் 20 நாட்கள்.                                                    
            
சுக்,குரு
சூரி
புதன்(வ)


ஏ. இராஜா
10 மே 1963 –
அரவு 23 மணி 50 நி. 13வ04 – 80கி17
       இராசி
செவ்,
ராகு
லக்//,சனி
கேது


சந்


      
       நீசமான செவ்வாய் ஆட்சி வீட்டில் உள்ள சனியை எதிர் நின்று பார்க்கிறது. சூரியனும், சுக்கிரனும் உச்ச இராசியில் இருந்து இராஜ யோகத்தை அளித்தனர்.      3 ஆம் அதிபதி குரு, 5 ஆம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து வெற்றிகளைக் குறிகாட்டுகிறார். ஆனால் 4 மற்றும் 11 ஆம் அதிபதியான செவ்வாய், இராகுவுடன் இணைந்து பிரச்சனையில் தள்ளியதால், 2ஜி ஒளிக் கற்றை அலைவரிசை ஊழலில் முதன்மைக் குற்றவாளியானார். அதன் காரணமாக பதவி இறங்கும் நிலையும் ஏற்பட்டது. தனாதிபதி சனியும், இலாபாதிபதி செவ்வாயும் அசுபராகி பரஸ்பர பார்வை புரிந்ததின் காரணமாக ஊழல் குற்றத்துக்கு ஆளாகி, பதவி இறங்கவும் நேர்ந்தது. 
       எனவே, நண்பர்களே ! ஜாதகங்களில் சனி – செவ்வாயின் பரஸ்பர பார்வையால் ஏற்படும்  சாதக – பாதக நிலைகளைப்பற்றி அறிந்தது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதி வணக்கத்துடன் முடிக்கிறேன். வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment