Search This Blog

Thursday, 14 September 2017

ஜோதிடத்தில் தொழில் பாவ சூட்சுமங்கள்





ஜோதிடத்தில் தொழில் பாவ சூட்சுமங்கள்


      நான் வியாபாரத்துக்குத் தகுதியானவனா ? வியாபாரம் செய்து என்னால் இலாபம் சம்பாதிக்க முடியுமா  அல்லது நஷ்டப்படுவேனா ? என்பதே ஜோதிடரிடம் இன்றைய இளைஞர்கள் கேட்கும் முதல் கேள்வியாக உள்ளது. இதற்கான முறையான வழிமுறைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆராய்ச்சிக்கான காரணிகள், கூடுதலாக இருக்க வேண்டிய யோகங்கள், தன யோகங்கள், தொழில் தொடங்க சரியான கால நேரங்கள், ஒவ்வொரு கிரகங்களுக்கும் உரிய தொழில் காரகங்கள் ஆகியவற்றை உதாரண ஜாதகத்துடன் இக் கட்டுரையின் மூலம் விரிவாகக் காண்போம்.
      பொதுவாக, ஒரு ஜாதகத்தில் கீழ்கண்ட விஷயங்களையே ஒரு ஜோதிடர் ஒவ்வொன்றாக ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வார்.
1.       தொழில் பாவத்துக்குக் காரகக் கிரகங்களான சனி, புதன், குரு மற்றும் சூரியன் ஆகியவற்றின் நிலை.
2.       10 ஆம் இடம் மற்றும் 10 ஆம் அதிபதி.
3.       10 ஆம் அதிபதியின் நிலை / பார்வை / இணைவு ( ஆங்கிலத்தில் – பொஸிஷன், அஸ்பெக்ட், கன்ஜங்ஷன் சுருக்கமாக பிஏசி என அழைக்கிறோம் )
4.       டீ9 – எனும் நவாம்சக் கட்டம்.
5.       டீ10 – எனும் தசாம்சக் கட்டம். (தொழில் முன்னேற்றத்துக்கு தன, பாக்கிய, இலாப வீடுகள் ஆராயப்பட வேண்டும்.
2 ஆம் பாவம் –  தொழில் மூலமான தனவரவு,

9 ஆம் வீடு – பாக்கியம் அல்லது அதிர்ஷ்டம், அதன் மூலமாக வரும் பெயர், புகழ், வெற்றி மற்றும் ஆதாயம்.

11 ஆம் பாவம் – இலாபங்கள் – சிறப்பாக ஜாதகர் எந்த தொழில்/வணிகம் செய்தால் முன்னேறலாம் என்பதை அறிய.
      இவற்றுடன் கூடுதலாக ஜாதகத்திற்கு பொதுவாக பலம் கூட்டக் கூடிய வகையில் உள்ள  சில இராஜயோகங்கள், தன யோகங்கள் மற்றும் பஞ்ச மஹா புருஷ யோகங்கள், அவற்றால் ஜாதகர் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்வார் என்பதையும் ஆராய வேண்டும்.
      ஒரு முக்கிய பலம் மிக்க இராஜயோகமானது – சந்திரனுக்கு கேந்திரங்களில் 11 ஆம், 9 ஆம், 2 ஆம் அதிபதிகளில் ஒருவர் இடம் பெற ஜாதகர் சக்ரவர்த்தி ஆவார். ( இந்த அமைப்பை மிகப் பெரிய தொழிலதிபர் திருபாய் அப்பானியின் ஜாதகத்தில் காணலாம். சந்திரன் மற்றும் பாக்கியாதிபதி சூரியன் இலக்ன கேந்திரத்தில் அமர்ந்து உள்ளனர் )
       மேலும் கீழ்கண்ட விவரங்களையும் மறக்காமல் கணக்கில் கொள்ள வேண்டும்  --
       கேந்திராதிபதி கோணத்திலோ அல்லது கோணாதிபதி கேந்திரத்திலோ இருப்பதுவும் இராஜயோகம் எனக் கருதப்படுகிறது. 2 ஆம் 11 ஆம் அதிபதிகள் 5 ஆம் , 9 ஆம் அதிபதிகளுடன் பரிவர்த்தனை பெற, பார்க்க, சாரம் பெற - தன யோகம் ஏற்படுகிறது.
       தன யோகங்கள் கீழ்கண்டவாறு அமைகின்றன –
1.       இலக்னாதிபதி, தனாதிபதி இணைவு 5, 9, அல்லது 11 ஆம் அதிபதிகளுடன் இணையும் போதும்
2.       தனாதிபதி, பூர்வ புண்யாதிபதியுடனோ, பாக்கியதிபதியுடனோ, இலாபாதிபதியுடனோ இணையும் போதும்.
3.       5 ஆம் அதிபதி, பாக்கியாதிபதியுடனோ அல்லது இலாபாதிபதியுடனோ இணையும் போதும்.
4.       பாக்கியாதிபதி இலாபதியுடன் இணையும் போதும் ஏற்படுகிறது.
6  ஆறாம் வீடு சேவையைக் குறிகாட்டுகிறது. 6 ஆம் வீடோ அல்லது 6 ஆம்   அதிபதியோ இலக்னம் அல்லது இலக்னாதிபதியை விட பலமாக இருந்தால் ஜாதகர் சேவைப் பணி செய்வார் அல்லது சேவை தொடர்பான பணியில்     பிறருக்கு கீழே பணிபுரிவார், இலக்னம் அல்லது இலக்னாதிபதி, 6 ஆம் வீடு       அல்லது 6 ஆம் அதிபதியை விட பலமாக இருந்தால் ஜாதகர் சுயவேலை      வாய்ப்பு பெறுவார்.
       உதாரணமாக தொழிலதிபர் திருபாய் அம்பானியின் ஜாதகத்தில் இலக்னாதிபதி குரு, சந்திரா இலக்னத்துக்கு, தசம கேந்திரமான கன்னியில் அமர்ந்து கஜகேசரி யோகத்தை ஏற்படுத்துகிறார்.      6 ஆம் அதிபதி சுக்கிரன், புதனுடன் இணைந்து     12 இல் அமர்ந்துள்ளார். எனவே, இலக்னாதிபதி குரு பலம் பொருந்தி உள்ளதால் அவர் மிகப் பெரிய தொழில் அதிபரானார். மேலும், அவரின் ஜாதகத்தில் இந்து இலக்னம் விருச்சிகத்தில் அமைகிறது. 6, 11 க்கு உரிய சுக்கிரனும், 7, 10 க்கு உரிய புதனும் இணைந்து இந்து இலக்னத்தில் உள்ளனர். அவர்கள் இந்து இலக்னாதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையால் பார்க்கப்படுகின்றனர். இந்த யோக இணைவுகள் காரணமாக ஜாதகர் கோடீஸ்வரர் ஆனார்.
       இந்த யோகங்கள் 6, 8 அல்லது 12 ஆம் பாவங்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது. ககல யோகமோ அல்லது ஹேமதுரும யோகமோ தொழிலதிபர்கள், வியாபாரிகளின் ஜாதகத்தில் அமைந்துவிடக் கூடாது.
       மேலும், வெற்றிகரமான வியாபாரியாக இருக்க, ஜாதகத்தில் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று அல்லது இரண்டு யோகங்களாவது அமையவேண்டும்.
       தொழில், வியாபாரத்தில் வெற்றி அடைய, 1, 2, 5, 9, 11 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் அமைந்திட வேண்டும். அவர்களுக்கு அசுபர்களின் தாக்கம் இருக்க்க் கூடாது.
தொழிலதிபர் திருபாய் அம்பானியின் ஜாதகம்






இராகு
இலக்//
சனி


இராகு

டீ. அம்பானி.
28 – 12- 1932
06 – 37 காலை
வெரவால். குஜராத்.
இராசி





நவாம்சம்
டீ-9
சூரி
சனி
செவ்,
கேது
குரு
புத

இலக்//
சூரி, சந்
சுக், புத

குரு

சுக், செவ்
சந்
கேது
      


சூரி, செவ்
குரு

புத,
கேது


தசாம்சம்
டீ 10
சந்

இராகு
லக்//, சுக், சனி




          மேற்கண்ட ஜாதகத்தில் இராசிக் கட்டத்தில், தனாதிபதி சனி தனது சுய வீட்டில் பலமாக உள்ளார். தனகாரகன் குருவால் பார்க்கப்படுகிறார். இவை ஜாதகருக்கு நன்மை செய்யக் கூடிய இணைவுகள் ஆகும். இலக்னாதிபதி குரு இராஜ்ஜிய ஸ்தானத்தில் இருந்து இராஜயோகம் தருகிறார். இதன் காரணமாக செல்வ நிலையும், முன்னேற்றங்களும் அடைந்தார். 5 ஆம் அதிபதி 9 இல், பாக்கியாதிபதி சூரியன், நட்பு வீடான குருவின் இலக்ன வீட்டில் இருக்கிறார். இதுவும் ஒரு கூடுதல் நன்னிலை. இலக்னாதிபதி குரு தனகாரகனும், இயற்கை சுபரும் ஆவார். சுபர் 10 இல் இருந்து உயர்ந்த யோகமான அமலா யோகத்திற்குக் காரணமாகிறார். சந்திரனுக்குக் கேந்திரத்தில் அமர்ந்து கஜகேசரி யோகமும் ஏற்படுகிறது. அதன் காரணமாக ஜாதகருக்கு அபரிமிதமான செலவம், சொத்துக்கள், புகழ், மதிப்பு, மரியாதை ஆகியவையும் ஏற்படுகின்றன. நவாம்சக் கட்டத்தில் புதனுடன் இணைந்து, தொழில் மற்றும் வணிகத்திற்குக் குறிகாட்டுகிறார். ஜாதகருக்கு சுகமான குடும்ப வாழ்க்கையும் அமைந்தது.
       கோணங்களான 1 – 5 – 9 ஆகிய பாவங்கள் இணைவு பெற்றுள்ளன. 5 ஆம் அதிபதி செவ்வாய், 9 ஆம் இடத்திலும், இடம் கொடுத்த சூரியன் இலக்னத்தில் அமர்ந்து இந்த நல்ல இணைவு ஏற்படுகிறது. இதுவும் அவருக்கு மிக்க அனுகூலமான பலன்களைத் தந்தது.
      மற்றும் ஒரு நல்ல நிலை என்னவெனில் மூன்று கட்டங்களிலும் செவ்வாய்  சிறந்த நிலையில் அமர்ந்து வணிகத்தில் தனித் திறமையைத் தந்தது. செவ்வாய் மகா திசையில்தான், இவர் நல்ல உச்ச நிலைக்குச் சென்றார். வணிகத்தில் வெற்றி மேல் வெற்றி, சொத்து சேர்க்கை, முன்னேற்றங்கள், தொழில் மூலமான புகழ் என கொடிகட்டிப் பறந்தார். 3 இல் இராகு நல்ல நிலை என்றாலும், பல தடைகளுக்குப் பிறகே அவரால் உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது.
       இலக்னாதிபதி குரு, 9 ஆம் அதிபதி சூரியன் சாரம் பெற்று 10 இல் இடம் பெற்றது குரு திசையையும் சிறப்பாக்கியது. சிறப்பாக வாழ்ந்தார். சனி திசையில் மேலும் இவர் நிலை உச்சத்தை அடைந்தது. தன ஸ்தானாதிபதி, ஆட்சி வீடு, இலக்னாதிபதி, தனகாரகன் குருவின் நற்பார்வை என அனைத்துமே உயர்வைத் தந்தது. நவாம்சத்தில் இயற்கை அசுபரான சனி நீசமானாதால் அதன் அசுபத் தன்மை குறைந்தது. அதுவும் நன்மைதானே ? எனினும், மாரக ஸ்தானாதிபதியும் ஆனதால், இந்த திசை அவருக்கு மரணத்தையும் தந்தது.
       நவாம்சத்தில், 10 ஆம் அதிபதி சனி, இலக்னத்தில் அமர்ந்து, பாக்கியாதிபதி குரு கர்ம பாவத்தில் அமர்ந்து, சனியால் பார்க்கப்படுகிறார். இதுவும் ஒரு நல்ல யோகமே. மூன்று கட்டங்களிலும் சூரியன் சிறப்பாக இருப்பதும் நல்லதே. சுக்கிரனும் வர்கோத்தமம் ஆகியுள்ளார்.

புதிய தொழில் தொடங்கும் போது பார்க்க வேண்டிய ஜோதிட நிலைகள். –
       தொழில் வியாபாரம் ஆரம்பிக்க சனிக் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்கள் அனுகூலமானது. கீழ்க் கண்டவை தொழில், வியாபாரம் ஆரம்பிக்க சிறந்த காலங்களாகும்.
      கோசார சூரியன் மேஷத்தில் இருக்கும் ஏப்ரல் 14 முதல் மே 14 ஆம் நாள் வரையும் மற்றும் சிம்ம சூரியன் ஆகஸ்டு 17 முதல் 28 ஆகஸ்டு முடிய உள்ள நாட்களும் அனுகூலமான நாட்களாகும். துலாம் மற்றும் மகர மாதங்கள் சிறப்பானதல்ல.
       தொழில், வணிகத்துக்கு காரகரான புதன் மிக்க பலமாக இருக்க வேண்டும். கோசார புதன் கன்னி மற்றும் மிதுனத்தில் இருக்கும் காலம் சிறந்ததாகும்.
       திரிகோண ஸ்தானங்களில் குரு இருந்து, இலக்னாதிபதியைப் பார்க்கும் காலமும் மிகச் சிறந்தது.
       கர்ம காரகன் சனி பலம் பெற வேண்டும். சனி உச்சமாக இருக்கும் காலம் மிகச் சிறப்பானதாகும்.
       பௌர்ணமி நாளும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
       தசை, புக்தி, அந்தரம் மற்றும சூட்சும காலங்களும் சிறப்பானதாக, அனுகூலமானதாக இருக்க வேண்டும்.
       ஒரு ஜாதகருக்குத் தகுதியான, சிறப்பான தொழிலை தேர்ந்து எடுக்க ஆராய வேண்டிய காரணிகள் –
       10 மற்றும் 7 ஆம் பாவங்கள், அவற்றின் பாவாதிபதிகள், அவர்களுக்கு இடம் கொடுத்தவர்கள் மற்றும் இந்த இரு பாவங்களில் இடம்பெற்றுள்ள கிரகங்கள் ஆகியவை சரியான தொழில் தேர்வுக்கு வழிகாட்டும்.
       கர்மாதிபதியாகும் ( 10 ஆம் அதிபதி ) கோளகள் குறிகாட்டிடும் தொழில்கள் -  
சூரியன் – அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆள்பவர்கள், அதிமுக்கியமானவர், அரசாங்கம், தங்க - பத்தர், நகைவியாபாரி, வட்டிக் கடைக்காரர், குழந்தைகள் தொடர்புள்ள பணிகள், சர்க்கஸ் பயிற்சியாளர்கள், திரையரங்கு உரிமையாளர் மற்றும் மேனேஜர் ஆகியோரைக் குறிக்கும்.

சந்திரன் – பயணங்கள், பயணவிதிகள், மாலுமிகள், நர்ஸ், மது வியாபாரிகள், துணி துவைப்பவர்கள் (லாண்டரி) தோட்டக்காரர், பேக்கரி உரிமையாளர், ஹவுஸ் கீப்பிங், டையரி உரிமையாளர், குழந்தை மருத்துவர், ஹீலர், ப்ளாஸ்டிக், கேட்டரிங், உணவகங்கள் மற்றும் வெயிட்டர்கள் ஆகியோரைக் குறிக்கும்.
செவ்வாய்/கேது – தீயணைப்புத் துறையினர், மெடலர்ஜிஸ்ட், துப்பாக்கித் தொழிற்சாலை, மெஷின் டூல்ஸ், இராணுவ வீரர்கள், போலீஸ், சர்ஜன், பல் மருத்துவர், பார்பர், சமையல்காரர், ஹார்ட் வேர் சாமன்கள், கொல்லர், பாக்ஸர், கசாப்புக் கடைக்காரர், கெமிஸட், மருந்தாளுனர் ஆகியோரைக் குறிக்கும்.
புதன் – பதிவுத்துறை, (டாக்குமென்டேஷன்), ரிகார்டிங், அது தொடர்பான பணிகள், கற்பித்தல், எழுதுதல், அலுவலர், எழுத்தர், கணக்காளர், புக்-கீப்பர், தபால்காரர், பஸ் டிரைவர், ரயில் பணியாளர்கள், ஆர்ச்சிடெக்ட்ஸ், கரஸ்பாண்டண்ட், ஸ்டெனோகிராபஃர், ரிப்போர்டர், ரேடியோ, டி.வி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், ஸ்டேஷனரி, பிரிண்டிங், தொலைபேசி மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
குரு – கவுன்சலர்ஸ், வக்கீல், விரிவுரையாளர், பப்ளிஷர்ஸ், எழுத்தாளர்கள், ஜோதிடர்கள், டிராவல் ஏஜன்ஸி, மதபோதகர், கோவில் தர்மகர்த்தா, கேஷியர், தத்துவவாதி, இலக்கியவாதி, மளிகைக் கடைக்காரர், சிகரெட் விற்பனையாளர் ஆகியோரைக் குறிக்கும்.

சுக்கிரன் – கவிஞர்கள், கலைஞர்கள், சினிமாக் கலைஞர்கள், நடனமணிகள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், தொப்பி மற்றும் ஆடை நிபுணர்கள், பேன்ஸி ஷாப், நவநாகரிக ஆடைகள், விலை உயர்ந்த துணிவகைகள், சுகந்த பரிமள வஸ்துக்கள், அழகுக்கலை நிபுணர்கள், எல்லாவகை என்டர்டெய்னர்ஸ், பர்னிச்சர் தயாரிப்பாளர்கள், பெண்களுக்கான பேன்ஸி பொருட்கள், காபி – டீ எஸ்டேட் முதலாளிகள், பூ வியாபாரிகள், எம்ராய்டரி கலைஞர்கள், சோஷியல் செகரட்ரீஸ், போட்டோ கிராபஃர்ஸ், கார்டூனிஸ்ட், என்கிரேவர்ஸ் ஆகியோரைக் குறிக்கும்.
சனி / இராகு – சுரங்கத் தொழிலாளர்கள், நிலக்கரி மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற அனைத்துவகை கச்சா எண்ணைகள், ரியல் எஸ்டேட், கைத்தொழில் வல்லுனர், ப்ளம்பர், ஆர்ச்சிடெக்ட், மயானம், கட்டிடக் காண்ட்ராக்டர், தச்சர், தோல் பொருட்கள், ஐஸ் தயாரிப்பாளர், மேஜைக் கடிகாரம், சவப் பெட்டி தயாரிப்பாளர், கல்லறைக் கற்கள் தயாரிப்பாளர், பண்ணை, தொழிற்சாலை, தொழிலாளிகள், காவலாளி, மதபோதகர், வெட்டியான், மதக் கூட்டத்தார் (மாங்க்ஸ), கன்னிமார்கள் (கிருத்துவ) தத்துவவாதிகளையும் குறிக்கும்.
கூட்டாளியின் நிலை நீடிக்குமா ?
       7 ஆம் அதிபதி, ( கூட்டாளி ) புதன் ( வியாபாரம் ) சனி ( கர்மகாரகன் ) ஆகியோர் 6, 12 ஆம் அதிபதிகளுடன் தொடர்பு கொண்டால் கூட்டு முறியும். அவ்வாறில்லாமல் 5 , 11 ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால் கூட்டாளியுடனான உறவு பலப்பட்டு இலாபம் அதிகரிக்கும்.

       எனவே, நண்பர்களே ! தொழில் சார்ந்த அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்தது பயனுள்ளதாகவும், ஜோதிட ஆராய்ச்சிக்கு உபயோககரமாகவும் அமைந்திருக்கும் என முடிக்கிறேன். வாழ்க வளமுடன்.

நினைவலைகள் - புகைப்படங்கள்.