Search This Blog

Friday, 22 December 2017




                         சனியன் தாக்கம் குறையும்

2017 டிசம்பர் 19 அன்று வாக்கியப்படி தனுசுக்கு மாறும் கோசார சனியின் தாக்கம் குறைவதற்கான – 12 இராசிகளுக்கான பரிகாரங்கள். சனி ஒரு நல்ல ஆசிரியர் மற்றும் நற்செயல்களைச் செய்யும் குருவும் ஆவார். பிறருக்குக் கெடுதல் செய்பவர்களையும், குற்றம் செய்பவர்களையும் தண்டிக்கத் தயங்காதவர். விசாரங்கள், சோகங்கள், விரோதம், வேற்றுமை, அகற்றுதல், வெளியேற்றுதல், துண்டித்தல், பிரிதல், வழக்குகள் குறைதல், தாமதம், ஏமாற்றம், விபத்து ஆகியவற்றையும் மறைவான எதிரிகள், துரோகம் ஆகிய காரகங்களுக்குக் காரணமாகிறார் சனி.
தனுசு, கன்னி, மிதுனம் மற்றும் ரிஷப இராசிக்காரர்களுக்கு பாதிப்பு இருக்கும். தனுசு இராசிக்காரர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ள நேரும. ஆயினும் ஜாதகரின் தசா / புத்தி நிலைகளும் ஆராயப்பட வேண்டும். இவர்கள் மிருத்யஞ்ஜய மந்திரத்தை முடிந்த அளவு பாராயணம் செய்வது நல்லது. சிரமங்களைக் குறைக்கும். ஜன்ம நட்சத்திரத்தன்று மிருத்யஞ்ஜய ஹோமம் செய்வது மிகவும் உத்தமம். சிறப்பு ஆகும். புவனேஸ்வரி அல்லது திரிபுர காயத்திரியை சொல்வதும் நல்லது. மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் மற்றும் மீன இராசிக்காரர்கள் சனிக்கு சமித், மற்றும் எருமை நெய் கொண்டு ஹோமம் செய்தல் சிறந்த பரிகாரமாகும்.

ருத்ராபிஷேகம், மதுசூதன மந்திரம் ஓதுதல், துளசி மாலை அல்லது சாலிக்கிராமம் ஆகியவற்றை வேத பண்டிதர்களுக்கு தானமாகக் கொடுப்பதால் சனி தரும் பாதிப்புகள் குறையும். துலாம், கடகம் மற்றும் கும்பம் ஆகிய இராசிக்காரர்களுக்கு அனுகூலமான காலமாகும். இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 கும்பம் - மீனம்.


சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020
கும்பம் - மீனம்.




கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
       ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்டு, நேர்மை, ஒழுக்கம், உயர் கல்வி, நற்குணம், அறிவுத் திறன், வாக்கு வன்மை, சேவை மனப்பான்மை, நீதிபதி, தத்துவம், ஞானம், ஆன்மிக நாட்டம் ஆகியவற்றை உடைய கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்.  அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. கும்ப இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

      காலபுருஷ தத்துவத்தின் 11 ஆம் இராசியான கும்பம், சனியின் மற்றுமொரு ஆட்சி வீடாகும். விரய பாவத்துக்கும், இராசிக்கும் அதிபதியான சனி பகவான் இதுவரை தங்கள் கர்ம பாவத்தில் சஞ்சரித்தார். இனி அவர் இலாப பாவத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. பல வழிகளிலும் பணம் வந்து குவியும். தேஜஸ் கூடும். தேகத்தில் புதுப் பொலிவு ஏற்பட்டு, உற்சாகம் கூடும். பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் அதிகரிக்கும். பெண் குழந்தை பிறந்து வீட்டில் மங்களம் பெருகும். கட்டளையிடும் கௌரவமான பதவிகள் ஏற்பட்டு மதிப்பும், மரியாதையும் கூடும். சமூகத்தில் பெரிய மனிதர் என பெயர் எடுப்பீர்கள். காம இச்சை கூடும். உடல் ஆரோக்கியம் சீராகி முழுமையான சுக, சௌக்கியம் ஏற்படும். தவறான உறவுகளிலும் மனம் செல்லலாம். உங்கள் செயல்பாடுகளில் அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் காணப்படும். மாற்றனின் பணமும் கைக்கு வந்து சேரும். பல புதிய நண்பர்கள் கிடைப்பர். தக்க சமயத்தில் அவர்களின் உதவிகளும் கிடைக்கும். எல்லாக் காரியங்களையும் உங்கள் மூத்த சகோதரர் முன்னின்று நடத்துவார். அவரின் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எல்லாவித்த்திலும் இந்த 2 வருடங்கள் உங்களுக்கு இராஜயோகம் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் மூலமாக இலாபங்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் குவியும். மக்களின் ஏகோபித்த ஆதரவும் இருக்கும். படித்து முடித்து இதுநாள் வரை வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைக்கும். புதிய படிப்பு அல்லது புதிய பயிற்சிகள் மேற்கொள்ளும் காலமாக அமையும். அதன் மூலமாக முயற்சி செய்து உழைத்தால் அபரிமிதமான முன்னேற்றங்களை அடையலாம். காதல் விஷயங்கள் களிப்பைத் தருவதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து பல புனித யாத்திரைகள் மேற்கொண்டு தெய்வ கடாட்சம் பெற்று மகிழ்வீர்கள். ஆன்மிக தரிசனங்களால் அகமும், முகமும் மலரும். கும்ப இராசிக்கு  சுவர்ண மூர்த்தி + சுபம் தரும் பாவமாவதால் அவர் அதிக நன்மை அளிக்கிறார். (11) 95%. பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி முறையே சுவர்ண மூர்த்தியாக இருந்தாலும் சுபம் தரும் இராசிகளில் இருப்பதால் சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.     

       குடும்பம் மற்றும் பொருளாதாரம்  ;- வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். . கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்
      தொழில் மற்றும் வியாபாரம் ;- சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை  ஏற்படும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
      உத்தியோகஸ்தர்களுக்கு – வெகுநாட்களாக முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும். பணி நிமித்தமாகப் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். குடும்ப ஒற்றுமையால் குதூகலம் பிறக்கும். உதவி என்று போனால் உறவுகளும், உடன் பணிபுரிபவர்களும் ஓடோடி வந்து உதவி புரிவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும்புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, அலுவலகக் கடன் உடனடியாகக் கிடைக்கும்.                                                                                                                                                                                                      
       பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்களின் கரம் ஓங்கும். மற்றவர்கள் எதற்கும் இவர்களிடமே ஆலோசனைகளைக் கேட்பர். கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பொன்னகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்கள்  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
        மாணவர்களுக்கு ;- உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் புதிய முன்னேற்றங்கள் இருக்கும்.  விளையாட்டுக்கள், போட்டி பந்தயங்கள் எல்வற்றிலும் வெற்றிகள் குவியும். அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் கூடும். படித்த படிப்புக்கு ஏற்ற நல்ல பணி கிடைக்கும். மிகுந்த அக்கறையுடன் உங்கள் முழுமையான திறமைகளை வெளிக்காட்டி புகழ் பெறுவீர்கள். பாடங்களை கவனமாகப்  படித்து தேர்வுகளில் முதல் தரமான மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வீர்கள்.
       அரசியல்வாதிகளுக்கு – அரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாது. இன்றைய தோழன், நாளைய பகைவன் ஆவான். கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து பல உயர் பதவிகளை பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்கள் கூட உங்களுக்கு ஆதரவாக மேலிடத்தில் பேசுவார்கள். தலைவர்களுக்குத் தொண்டர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கை கொடுக்கும். சிலருக்கு பதவியைக் கைகொள்ள பணத்தையும், உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் சின்ன மீனைப் போட்டு, பெரிய மீன்களைப் பிடித்துவிடுவார்கள்..
       கலைஞர்களுக்கு – புதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பல மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து முதல் இடத்தையோ அல்லது இருக்கும் இடத்தையோ தக்க வைத்துக் கொள்வீர்கள்.  முக்கியமான பணிகளை நீங்களே செய்வது சிறப்பாக இருக்கும். ரசிகர்களிடையே ஆதரவு கூடும். வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தோடு பயணம் மேற்கொண்டு புதிய இடங்களைப் பார்த்த திருப்தியில் மனம் மகிழ்வீர்கள்.  பயணங்கள் இனிதாகும். அரசு கௌரவங்கள், பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும். உடன் பணிபுரிபவர்களுடன் உங்களை அனுசரித்துச் செல்வது, முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக இராசியையும், 7 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 10 ஆம் பார்வையாக ஆயுள் பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக இராசியைப் பார்ப்பதால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தாலும், உங்கள் தன்னம்பிக்கை குலையும் வண்ணம் தேவையற்ற விஷயங்கள் நடந்தேறும். எப்போதுமே உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களின் மும்மரமான முயற்சிகளின்றி எந்த வேலையும் முற்றுப் பெறாது. உங்களைப் பற்றிய தேவையற்ற கிசு கிசுக்களால் கௌரவம் குறையும். வெளிவட்டாரப் பழக்கங்கள் இனிமை தரும். பலவழிகளிலும் பணவசதி பெருகும். நிம்மதியான நித்திரை இருக்காது. பலரும் தங்களை ஓரங்கட்டி ஒதுக்குவது போன்ற உணர்வு மனதில் எழும்.
          7 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தைப் பார்வை செய்வதால் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் எழும். மனக் குழப்பங்களால் நிம்மதியற்ற நிலை உருவாகும். சிலர் பணி இழக்க நேரும். பெற்றோரின் பேச்சை கேட்காத பிள்ளைகளால் பிரச்சனை எழும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் இதுவரை இருந்து வந்த சிரமங்கள், சிக்கல்கள் அனைத்தும் ரவி கண்ட பனிபோல் விலகும். காதல் கனிந்து மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதமானாலும் சிறப்பாக நடந்தேறும். கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
          10 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்வதால்  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. செலவு அதிகமானாலும் அதிக வட்டிக்குக் கடன்களை வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். அதுபோல் பிறருக்குக் கடன் கொடுத்தும் மாட்டிக் கொள்ளாதீர்கள். வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கை தேவை. எடுத்த காரியங்களில் தோல்வி கண்டு துவளாதீர்கள். குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும்.  தந்தை வழியில் செலவுகள் அதிகரிக்கும. அரசு வரிகளை உடனடியாகக் கட்டாவிட்டால் தேவையற்ற வகையில் தண்டம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.     

       பரிகாரங்கள் –  சங்கட ஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. ஆஞ்சனேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து வேண்ட சனியின் தாக்கங்கள் குறைய வழி ஏற்படும். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வேண்டி வர சனியின் அனுக்கிரகம் பெற்று வர நிவர்த்தி கிடைக்கும்.  
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்டு, அழகிய பெண்களுடன் பழகும், மற்றவர்க்கு நல்லவர், காரிய வெற்றி உடைய, ஞானி, பெரியோர் பால் பக்தி கொண்ட, அழகிய, வீரம் மிக்க, செல்வச் சீமானுமான மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு வாக்கிய கணிதப்படி 19 - 12 2017 – செவ்வாய் கிழமை காலை மணி 9 – 59 க்கு விருச்சிக இராசியில் இருந்து  தனுசு இராசியில் பிரவேசிக்கிறார். அவரின் பிரவேசம் 26 – 12 – 2020 வரை அங்கு நீடிக்கிறது. மீன இராசிக்கு சனிப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.

       இராசி மண்டலத்தின் 12 வது இராசி. குருவினை ஆட்சியாளராகக் கொண்ட மோட்ச வீடான மீனத்துக்கு 11, 12 க்குரிய சனி 10 வீட்டில் வந்து அமர்கிறார். இதன் காரணமாக வலிமையும் வளமும் கூடும். ஓரளவு தன வருமானம் இருக்கும். மேலதிகாரிகளின் தேவையற்ற இடையூறுகளால் மனதில் நிம்மதி குறையும். அதிகாரிகளின் கெடுபிடி அல்லல் தரும். தொழிலில் கூட்டாளிகளின் வஞ்சனையால் ஏமாற்றி, தொழில் முடக்கம் ஏற்படும். எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிகக் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண் விரயங்கள் எதிர்கொள்ள நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் சீராக இருக்காது. சிலருக்கு புத்திரர்களால் தொல்லை ஏற்படும். அவர்கள் நீங்கள் சொன்ன பேச்சை காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம்.   எல்லாக் காரியங்களையும், முறையாகச் செய்யாமல், தலைகீழாகச் செய்வார்கள்தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. ஒழுக்கம் கெட்ட பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லதுபங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும் என்று நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். சில அரசியல் பிரமுகர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து எதிர்ப்பு வலுக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். மீன இராசிக்கு -  தாமிர மூர்த்தியாக இருப்பதால் முக்கால் சுப பலன் ஏற்படும் (10) 80%. இந்த இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
         குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட சிரமப்பட நேரும்.  புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காண்பது அரிதாவதால் பழைய முறைகளையே பின்பற்றவும். ஆரோக்கியம் கெடும். அதிக உழைப்பின் பேரில் முயற்சிகளில் ழுழு வெற்றி கிடைக்கும். இறை பக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவ பெரும் குழப்பங்கள் குறைய வேண்டும்.  மனைவியால சாமர்த்திய சாலியாகவும், சுயகாரியப் புலியாகவும் இருந்த நீங்கள் பெட்டிப் பாம்பாக மாறும் நிலை ஏற்பட்டுவிடும். உறவுகள் கை கொடுப்பர் என்பது கனவாகவே இருக்கும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களில் இழப்பு ஏற்படலாம்மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பும் பகையாகும்.  பழைய கடன்களைத் தீர்க்கப் புதிய கடன்கள் வாங்க நேரும்.  புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும் என்றோ தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு  உதவிகள் கிடைக்கும் என்றோ சொல்வதற்கில்லை. தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் தாமதமாகவே கிடைக்கும். விவசாயப் பணிகள் சிறப்புற நடந்தாலும் ஆதாயம் குறையும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் பல இடைஞ்சல்களுக்குப் பிறகே கிடைக்கும்
        உத்தியோகஸ்தர்களுக்குவிருப்பம் இல்லாத ஊருக்கு வரும் திடீர் இடமாற்ற உத்திரவுகளால் நிதி நிலைமை தள்ளாட்டம் காணலாம். குடும்பம், பிள்ளை குட்டிகளை விட்டு பிரியும் சூழ்நிலை எழலாம். மேலதிகாரிகள் நல்ல முறையில் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், அவர்கள் உதாசீனப்படுத்துவது போல் ஓர் உணர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை, அவர்கள் சொல்வது போல் அதிகாரிகளிடம் கூறி பாராட்டைப் பெறுவார்கள். எனவே, நண்பரகளாய் இருந்தாலும் ஓரளவுக்கு விலக்கியே வைத்திருப்பது நல்லது.
       பெண்களுக்கு ;-  வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ நினைத்தால் கடன்பட நேரும். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டாலும் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவது கடினம். கணவன் மனைவிக்குள்,  கருத்து வேறுபாடுகள் எழுந்து,  உறவே கேள்விக் குறியாகும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம். வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செல்வதில் தடங்கள்கள் ஏற்படும்.
        மாணவர்களுக்கு -- படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படாலும், தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.
       அரசியல்வாதிகளுக்கு மக்கள் சேவைகளை திறம்படச் செய்யும் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். கௌரவம் மிக்க பதவிகள் தேடி வரும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் தடைகள், தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பொருளாதர நிலை சிறப்பாக இருக்குமாதலால் தொண்டர்களின் தேவைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தால் அவர்களின் ஆதரவு நிலைத்து நிற்கும். முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் திரும்பப் பெரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். அரசியலில் நிலைத்து நிற்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது.
       கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்புகள் தாமதமாகவே கதவைத் தட்டும். அதன் காரணமாக நல்ல வாயப்புகள் தேடி வரக்கூடிய யோகமும் கை நழுவும். தங்கள் சிறப்பான நடிப்புக்கான அரசாங்க, தனியார் விருதுகள் கிடைப்து அரிது.  உங்கள் புகழ் குறையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களின் போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படலாம். புதிய விலை உயர்ந்த அதி நவீன மகிழ் ஊர்திகளை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயினும், வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுதல் அவசியம்.
பார்வை பலன்கள்
         3 ஆம் பார்வையாக விரய பாவத்தையும், 7 ஆம் பார்வையாக சுக பாவத்தையும் 10 ஆம் பார்வையாக களத்திர பாவத்தையும் நோக்குகிறார் சனி பகவான்.
         3 ஆம் பார்வையாக 12 ஆம் பாவத்தைப் பார்வை செய்வதால் கெட்ட கனவுகள் தொன்றி, சரியான தூக்கம் இருக்காது. பணவிரயம் ஏற்படுவதைத் தவிர்க்க புதிய முதலீடுகளில் பணத்தைப் போட்டால் இழப்புகளைத் தவிர்க்கலாம். வெளியூர் வெளிநாடு செல்ல ஏற்பட்ட தடைகள் நீங்கி சுலபமாகச் செல்லும் பாக்கியம் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அரசால் தண்டச் செலவுகள் ஏற்படும். பொதுஜன விரோதம் ஏற்பட்டு வெளிநாட்டுவாசம் ஏற்படும். பரம்பரைச் சொத்தில் பிரச்சனைகள் எழலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். காதல் விஷயங்களில் சறுக்கல்கள் இருக்கும். அரசு ஒப்பந்தங்களில் கூடுதலான இலாபம் இருக்கும்.
         7 ஆம் பார்வையாக 4 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தாயாரால் அனுகூலம் இராது. அவரது உடல்நிலையில் அக்கறை தேவை. பணிகளில் பரவசம் இன்றி, திருப்தியற்ற நிலை நிலவும். படிப்பில் ஏற்றபட்ட பல தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். சிரத்தையுடன் படித்தால் வெற்றி கிட்டும். உடன் பிறப்புகளுக்கு சுபகாரிய நிகழ்வுகள் ஏற்பாடாகும்.  சிலருக்கு வாகனச் செலவுகள் ஏற்படலாம். பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரும். தொழிலில் நல்ல இலாபம் கிட்ட வாய்ப்பு உண்டு. கூட்டாளிகளால் முதலில் தொல்லைகள் ஏற்பட்டு கடைசி நேரத்தில் நன்மையாகவே முடியும். சிலர் வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரும்.
         10 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத விதமாக கணிசமான இலாபம் கிட்டும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்கும். தள்ளிப் போன திருமண வைபவங்கள் சிறப்பாக நடந்தேறும். கமிஷன் ஏஜன்ஸீஸ், தகவல் தொடர்பு, போக்குவரத்து, ஓட்டல், ஆடை ஆகிய தொழில்கள் சற்று இலாபகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பிரிய நேரலாம். காதலில் தோல்வி உண்டாகும். இறக்குமதி, ஏற்றுமதி துறையில் சாதகமான நிலை நிலவும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். மாறுதலான புதிய திட்டங்கள் ஆறுதலாக அமையும்.   
       பரிகாரங்கள் – சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. வழுவூரில் உள்ள சனிபகவான் கையில் வில்லோடு தனி சந்நிதியில் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள் தந்து காத்து வருகிறார். அவரை வணங்கி அருள் பெற்று வருவது சிறப்பு. இத்தலத்திற்கு, மயிலாடுதுறை - மங்கநல்லூர் நெடுஞ்சாலையில் எலத்தங்குடி அருகில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.