சனியன் தாக்கம் குறையும்
2017 டிசம்பர் 19 அன்று வாக்கியப்படி தனுசுக்கு மாறும் கோசார சனியின் தாக்கம்
குறைவதற்கான – 12 இராசிகளுக்கான பரிகாரங்கள். சனி ஒரு நல்ல ஆசிரியர் மற்றும்
நற்செயல்களைச் செய்யும் குருவும் ஆவார். பிறருக்குக் கெடுதல் செய்பவர்களையும்,
குற்றம் செய்பவர்களையும் தண்டிக்கத் தயங்காதவர். விசாரங்கள், சோகங்கள், விரோதம்,
வேற்றுமை, அகற்றுதல், வெளியேற்றுதல், துண்டித்தல், பிரிதல், வழக்குகள் குறைதல்,
தாமதம், ஏமாற்றம், விபத்து ஆகியவற்றையும் மறைவான எதிரிகள், துரோகம் ஆகிய
காரகங்களுக்குக் காரணமாகிறார் சனி.
தனுசு, கன்னி, மிதுனம் மற்றும் ரிஷப இராசிக்காரர்களுக்கு பாதிப்பு இருக்கும்.
தனுசு இராசிக்காரர்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ள நேரும. ஆயினும் ஜாதகரின்
தசா / புத்தி நிலைகளும் ஆராயப்பட வேண்டும். இவர்கள் மிருத்யஞ்ஜய மந்திரத்தை முடிந்த
அளவு பாராயணம் செய்வது நல்லது. சிரமங்களைக் குறைக்கும். ஜன்ம நட்சத்திரத்தன்று
மிருத்யஞ்ஜய ஹோமம் செய்வது மிகவும் உத்தமம். சிறப்பு ஆகும். புவனேஸ்வரி அல்லது
திரிபுர காயத்திரியை சொல்வதும் நல்லது. மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம்
மற்றும் மீன இராசிக்காரர்கள் சனிக்கு சமித், மற்றும் எருமை நெய் கொண்டு ஹோமம்
செய்தல் சிறந்த பரிகாரமாகும்.
ருத்ராபிஷேகம், மதுசூதன மந்திரம் ஓதுதல், துளசி மாலை அல்லது சாலிக்கிராமம்
ஆகியவற்றை வேத பண்டிதர்களுக்கு தானமாகக் கொடுப்பதால் சனி தரும் பாதிப்புகள்
குறையும். துலாம், கடகம் மற்றும் கும்பம் ஆகிய இராசிக்காரர்களுக்கு அனுகூலமான
காலமாகும். இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம்
இருக்கும்.
No comments:
Post a Comment