Search This Blog
Monday, 31 December 2018
Friday, 21 December 2018
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - 2021
இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்.
2019 -2021
நிழல் கிரகங்களான இராகு – கேது உருவான கதை.
புராண காலத்தில் பாற்கடலைக் கடைந்து இறவாவரம் தரும் இன்னமுதை அருந்த தேவரும், அசுரரும் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு கடைய முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை அருந்திய சிவபெருமான் நீலகண்டரானார். இறுதியாக அமிர்தமும் வந்தது. அமிர்தத்தைப் பெற தேவரும், அசுரருக்கும் இடையே சமாதானப்படுத்த மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இரு வரிசையாக நின்றவர்களிடையே அமுதத்தை பகிர்ந்து அளித்த போது தேவர்கள் வரிசையில், தேவர் போல் உருமாறிய காசிப முனிவரின் பேரனும், விப்ரசித்து, கிம்ஹிகை தம்பதியரின் மகனுமான ஸ்வர்பானு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஓர் அகப்பை அமுது அளித்த மோகினியிடம் சூரிய, சந்திரர்கள் அவனைக் காட்டிகொடுத்தனர்.
கோபமுற்ற கோபாலன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையைத் தாக்கி துண்டித்தார். தலை வேறு, உடல் வேறான சுவர்பானு அமிர்தத்தை உண்டதால் உயிர் பிரியவில்லை. பிரம்மனிடம் வேண்டிய சுவர்பானுவின் வெட்டப்பட்ட தலையுடன் பாம்பின் உடலையும், பாம்பின் தலையுடன் உடலை இணைத்து முறையே இராகு – கேது எனப் பெயர் கொடுத்து ஒருவருக்கொருவர் இணை பிரியாது, எதிர், எதிராக நின்று நவகிரக அந்தஸ்தையும் கொடுத்து அருள்பாலித்தார். நிழல் கிரகங்களான இருவருக்கும் நிரந்தர இராசியின்றி, அவர்கள் நிற்கும் இராசியின் பலத்தையே அடைய அவர்களுக்கு வழிகாட்டினார். இராகு மகர இராசியில் அமர்ந்து அதர்வண வேதத்தைக் கற்றுணர்ந்து ஞானகாரகன் என்றும், கடகத்தில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேத்த்தைக் கற்றுணர்ந்து மோட்ச காரகன் என்றும் அழைக்கப்பட்டனர். பாவ புண்ணியத்துக்குத் தக்கவாறு பலன்களை அளிக்கவல்ல இவர்கள் அம்மாவாசை, பௌர்ணமி காலங்களில் முறையே சூரிய சந்திரர்களைப் பீடித்து கிரகணமாக்கி பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இதுவே இராகு கேது உருவான கதையாகும். இராசி மண்டலத்தின்
வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும்
வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு "டிராகன்ஸ் ஹெட்"
என்றும், கேது "டிராகன்ஸ் டெயில்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.
ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும்,
இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என
அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன்
ஆவர். இவர்கள் எந்த பாவத்தில்
அமர்கிறார்களோ அந்த பாவத்தை பாதிப்பு அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும்
கிரகங்களின் காரகத்துவங்களிலும் பாதிப்பு ஏற்படும்.
மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு
கருமை நிறத்தவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை
உருவாக்கிக் காட்டக் கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார். திருநாகேஸ்வரத்தில் இராகு தனது இரு தேவியர்களான நாகவல்லி,
நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து
வருகிறார். இத் திருத்தலமே இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும்
கருதப்படுகிறது.
நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு –
கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த
வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர்.
இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை
வலம் வரக் கூடியவர்கள்.
மத, தெய்வ வழிபாடுகள் அனைத்தும்
நம்பிக்கையின் பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகள்தான்
மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவுவன ஆகும். மனிதனின்
துன்பத்தையும், துயரங்களையும், கஷ்டங்களையும் இந்த நன்நம்பிக்கைகள்தான் களைகின்றன
என்றால் மிகையாகாது. மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் விளைவிக்கின்ற
வழிபாட்டு முறைகள் புதுப் புது வகைகளில்
தோன்றக் காரணம் ஆகின்றன. அந்த எதிர்பார்ப்பின் விளைவே இராகுகால பூஜை ஆகும்.
செவ்வாய்க் கிழமை அன்று துர்க்கைக்குச் செய்யப்படும் இராகு கால பூஜை உடனடி பலன்
கிடைப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இராகு காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும்
தமிழ் நாட்டில் எவரும் செய்வதில்லை. ஆனால், பிற மாநில மக்கள் இதைப் பெரிதாக
எடுத்துக் கொள்வதில்லை. இராகு காலத்தில் திருமணம் கூட செய்கிறார்கள்.
சந், புத
|
செவ்
|
|
|
|
குரு
|
|
சூரி, சுக்
|
|
சூரி
|
மாசி-25/09-03-2019
சனி-08-09 இரவு – இராகு-மிது, கே-தனுசு.
|
இராகு
|
|
நவாம்சம்
|
இராகு
|
|||
சுக். கேது
|
|
|
கேது
|
புத
|
||||
சனி
|
குரு
|
|
|
சந்
|
சனி
|
செவ்
|
|
இந்த ஆண்டு திருக்கணிதப்
பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019 மாசி மாதம் 25 ஆம்
தேதி சனிக்கிழமை இரவு சுமார் 08 – 09 மணி
அளவில்– சாய
கிரகமான
இராகு
கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும்,
கேது
மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள்.
இராகு காயத்ரி – "ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹூ ப்ரச்சோதயாத்"
கேது காயத்ரி – "ஓம்
அச்வத்ஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது; பிரச்சோதயாத்
இராகுவின் நிலை மற்றும் பார்வை விவரம்.
வ. எண்
|
இராசி
|
இராகுவின்
நிலை
|
இராகு
பார்க்கும்
இடங்கள்
|
1.
|
மேஷம்
|
3 ஆம் இடம்
|
5, 9, 1
|
2.
|
ரிஷபம்
|
2 ஆம் இடம்
|
4, 8, 12
|
3.
|
மிதுனம்
|
1 ஆம் இடம்
|
3, 7, 11
|
4.
|
கடகம்
|
12 ஆம் இடம்
|
2, 6, 10
|
5.
|
சிம்மம்
|
11 ஆம் இடம்
|
1, 5, 9
|
6.
|
கன்னி
|
10 ஆம் இடம்
|
12, 4, 8
|
7.
|
துலாம்
|
9 ஆம் இடம்
|
11, 3, 7
|
8.
|
விருச்சிகம்
|
8 ஆம் இடம்
|
10, 2, 6
|
9.
|
தனுசு
|
7 ஆம் இடம்
|
9, 1, 5
|
10.
|
மகரம்
|
6 ஆம் இடம்
|
8, 12, 4
|
11.
|
கும்பம்
|
5 ஆம் இடம்
|
7, 11, 3
|
12.
|
மீனம்
|
4 ஆம் இடம்
|
6, 10, 2
|
கேதுவின் நிலை மற்றும் பார்வை விவரம்.
வ. எண்
|
இராசி
|
கேதுவின்
நிலை
|
கேது
பார்க்கும்
இடங்கள்
|
1.
|
மேஷம்
|
9 ஆம் இடம்
|
11, 3, 7
|
2.
|
ரிஷபம்
|
8 ஆம் இடம்
|
10, 2, 6
|
3.
|
மிதுனம்
|
7 ஆம் இடம்
|
9, 1, 5
|
4.
|
கடகம்
|
6 ஆம் இடம்
|
8, 12, 4
|
5.
|
சிம்மம்
|
5 ஆம் இடம்
|
7, 11, 3
|
6.
|
கன்னி
|
4 ஆம் இடம்
|
6, 10, 2
|
7.
|
துலாம்
|
3 ஆம் இடம்
|
5, 9, 1
|
8.
|
விருச்சிகம்
|
2 ஆம் இடம்
|
4, 8, 12
|
9.
|
தனுசு
|
1 ஆம் இடம்
|
3, 7, 11
|
10.
|
மகரம்
|
12 ஆம் இடம்
|
2, 6, 10
|
11.
|
கும்பம்
|
11 ஆம் இடம்
|
1, 5, 9
|
12.
|
மீனம்
|
10 ஆம் இடம்
|
12, 4, 8
|
இராகுவால் சுப பலன்கள்
அடையும் இராசிகள் – மேஷம், மகரம், சிம்மம்.
எல்லா இராசிகளுக்குமான
இராகுவுக்கான பொதுவான பரிகாரங்கள். –
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு
ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில்
ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை
விளக்கேற்றி, பால், முட்டை வைத்தல் நல்லது. இராகு காயத்ரி பாராயணம் செய்க. மேற்கூறிய
பரிகாரங்களை இராகுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.
கேதுவால் சுப பலன்கள் அடையும் இராசிகள்
– துலாம். கடகம், கும்பம்,
எல்லா இராசிகளுக்குமான
கேதுவுக்கான பொதுவான பரிகாரங்கள்.-
ஞாயிறு தோறும் அருகம் புல் மாலை சாத்தி
கணபதி வழிபாடு. சனி தோறும் பெருமாள் கோவிலில் துளசி மாலை சாத்தி பிரார்த்தனை
செய்தல். அதே நாள் – ஹனுமனுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல் ஒருமுறையேனும்
கீழப்பெரும்பள்ளம் சென்று வருதல் ஆகிய பரிகாரங்கள் கேதுவுக்குச் செய்வது நலம்
பயக்கும்.
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019 மாசி மாதம் 25 ஆம்
தேதி சனிக்கிழமை இரவு சுமார் 08 – 09 மணி
அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
கடந்த ஒன்றரை
வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு சுக ஸ்தானத்திலும் கேது – கர்ம ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சம
பலன்களை அள்ளி வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி முதல் மிதுன
இராசியான 3 ஆம் இடத்துக்கு இராகுவும், தனுசு இராசியான 9 ஆம் இடத்துக்குக் கேதுவும்
அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.
இவை சாதகாமான
அமைப்பு ஆகும். இதன் காரணமாக தைரிய பாவ இராகுவால் செல்வந்தர்களின் நட்பு ஏற்படும்.
கீர்த்தி பெருகும். புத்தி சாதுர்யமும், அறிவுத் திறனும் கூடும். அரசாங்க
உத்தியோகம் ஏற்படும. சந்ததி உருவாகும். பொன்னும் பொருளும் சேரும். கௌரவமும்,
அந்தஸ்தும் உயரும். பேரும், புகழும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத்
திருமணம் கைகூடும். என எல்லா வகையிலும் நல்ல பலன்களே உண்டாகும். பல
முகாந்திரங்களில் தனவரவும் இலாபமும் குறைவின்றிக் கிடைக்கும். மனோதைரியம் ஓங்கும்.
ஆண்மை சக்தி அதிகரிக்கும். வேற்றுப் பெண் உறவு ஏற்படலாம். நல்ல ருசியான உணவு
வகைகளை உண்டு மகிழ்வீர்கள். சங்கடங்கள் நேரும் காலத்தில் சகோதரர்களின் உதவிகள்
தடங்கல் ஏதுமின்றி கிடைக்கும். மனைவி மக்கள் உடல் நலம்பெற்று செழித்து விளங்குவர்.
அரசுப் பணியாளர்களுக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருமானப் பெருக்கமும்
ஏற்படும். பாகு, தேன், பாற்சோறு ஆகியவை கிட்டும். எதிரிகளின் பணமும் வந்து சேரும்.
கடன் தீரும். நேர்த்திக் கடன் செலுத்த புனித யாத்திரை செல்வர். வெளிவட்டாரப்
பழக்கம் நன்மை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கேதுவின்
பாக்ய பாவ அமர்வால் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது
நல்லது. எல்லா வழிகளிலும் இவருக்குப் பிறரால்
அவமானங்கள் உண்டாகும். பிறர் கபட நாடகம்
ஆடி இவரை ஏமாற்ற முற்படுவர். சிலர் ஊரை ஏமாற்றும் கபட சன்யாசியாக உருவெடுக்க
நேரலாம். பலவகை வழக்குகள் ஏற்பட்டாலும், அவற்றிலெல்லாம் வெற்றி பெற்று விடுவர்.
பெற்றொரின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் ஞெலவுகள் ஏற்படும். இவரின் முன்
கோபத்தால் பல காரியங்களும் கெடும். ஆயினும் ஞானத்திலும், தவத்திலும் நாட்டமும்,
நல்ல குரு வாழ்க்கப் பெற்று அதனால் ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும்
ஏற்படும். சொன்ன சொல் தவறமாட்டார்கள். வேலை
இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால்
நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக,
ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும்
கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
குடும்பம்
மற்றும் பொருளாதாரம் - சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உயர்ரக
வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். வெற்றிகள்
குவியும். உற்றார் உறவினரின் உதவிகள் கிடைக்கும். சிலர் புதுவீடு கட்டுவர்.
தொழில் மற்றும் வியாபாரம் – பழைய தொழிலை விரிவாக்கம் செய்யத் தேவையான கடன்
உதவிகள் வங்கி மூலமாகச் சுலபமாகக் கிடைக்கும். செய்தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக
இருக்கும். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சகோதரர்கள்,
கூட்டாளிகளுடன் செய்யும் தொழில்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால்
எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்குக் கடன் தீரும். அதிக லாபங்களும்
ஏற்படும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலபுலன், வாகனம், கால்நடைகள்
செழிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு – தாங்கள் எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வும்,
அதற்குரிய சம்பள உயர்வுகளும் கண்டிப்பாகக் கிடைக்கும். நீங்கள் விரும்பிய
இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்தைக்
கண்டு பொறாமை கொள்வர். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மை தரும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும்.
பெண்களுக்கு – பணிபுரியும்
பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம். சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு
உடையதாய் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு இருந்தாலும், உடன் பிறப்புக்களிடையே
ஒற்றுமையின்மை தலை தூக்கும். பெண் உறவுகளின் உறவு சீரடையும். தெய்வ வழிபாடுகள்,
தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற ஆன்மீக காரியங்கள் சிறப்புற நடக்கும்.
அரசியல்வாதிகளுக்கு – வரவுகள் குறைந்தாலும், பேரும் புகழும் கூடும். சுய
ஆதாயத்துக்காக, அனைவரிடமும் எளிமையாகப் பழகும் எண்ணம் தலைதூக்கும். அதேபோல்
உங்களிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து எப்போதும் ஒரு கூட்டம் உங்களையே சுற்றிச்சுற்றி
வரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொண்டு உதவுவர்.
மாணவர்களுக்கு – பள்ளிக் கல்வி
முடித்தவர்களுக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்து உயர் கல்வியைத் தொடர்வர்.
வேலைக்கான நேர்காணலில் வெற்றி கிட்டும். நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில்
பல திருப்பங்கள் ஏற்படலாம்.
கல்வியில்
உயர்வும், போட்டிகளில்
வெற்றிகளும் குவியும். கல்வி ஸ்தாபனத்துக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்பர்.
கலைஞர்களுக்கு – தேடி வரும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக்
கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது உங்கள் கையில்தான் உள்ளது.
குடுப்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.
பரிகாரங்கள் – திருப்பதி அருகிலுள்ள
காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை
சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து
வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசித்து ஒன்பது நபர்களுக்கு உளுந்து
தானம் செய்யலாம்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019 மாசி மாதம் 25 ஆம்
தேதி சனிக்கிழமை இரவு சுமார் 08 – 09 மணி
அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
கடந்த ஒன்றரை
வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு தைரிய ஸ்தானத்திலும் கேது – பாக்கிய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து
சமபலன்களை அள்ளி வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி
முதல் மிதுன இராசியான 2 ஆம் இடத்துக்கு இராகுவும், தனுசு
இராசியான 7 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க
உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது அத்தனை நலம் தருவதல்ல.
இதன் காரணமாக
தனபாவத்தில் அமர்ந்த இராகு பிள்ளைகளால் அதிக செலவினங்களைத் தருவார். திடீர்
விபத்துக்கள் ஏற்படலாம். மிகுந்த கவனம் தேவை. உணவில் ஏற்படும் நச்சுத்தன்மையால்
பலவகையான, சீரணக் கோளாறுகளும் ஏற்படும். வயிற்று உபாதைகளும் ஏற்படலாம். எனவே,
எச்சரிக்கையுடன் உணவருந்துவது அவசியம். சிலர் சேமித்து வைத்த பணம் அழியும்.
குடும்பத்தில் குழப்பம், தீயசூழ்ச்சிகள், ஒரு விதவைப் பெண்ணால் கலகம், ஏவல் செய்வினை
போன்ற தொல்லைகள் நேரும். மனைவி குழந்தைகளுக்கு அரிஷ்டம் நேரலாம். நோய்கள்
ஏற்படலாம். சிலருக்கு நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் வனவாசமாய்
இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார்.
இன்னல்களை
நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும்
ஏற்படும். பெயரும் புகழும்
ஓங்கும். வேலை இல்லாது
இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு. பதவி,
அந்தஸ்து உயரும்.
ஜென்மத்திற்கு எட்டில் கேது நின்றால் எதெற்கெடுத்தாலும, பயமும், தீராத
சங்கடங்களும் ஏற்படும். உடலில் ஏதாவது பிணி வாட்டிக் கொண்டே இருக்கும். பொன்
பொருட்கள் நஷ்டமாகும். கண்ணில் நோய்
காணும். ஆசாரக் குறைவாக நடப்பார். சிந்தை தெளிவின்றி குழம்பிய நிலையில் இருப்பார்.
பாம்பு தீண்டும் பயமும் உண்டு. இதுசமயம் அனுகூலமாக நடந்து கொள்வாள். பொதுவாக,
ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும்
கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள்
நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
குடும்பம் மற்றும் பொருளாதாரம் -
சகோதர நன்மை, வெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும். சிலருக்குப் பிரிவும், வீண் செலவுகளும் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. சாமர்த்திய சாலியாக விளங்குவார். தனவிருத்தியில் தடைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் அதிகத் தொல்லைகள் எழலாம் கொடுத்த வாக்கும், நாணயம் தவறுதலும் ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரம் – எதிர்கால
தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும். முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்
சுலபமாகக் கிடைக்கும். ஆயினும் அதிகமாக்க் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. அரசின்
உதவிகள் கைகொடுக்கும். எதைச்
செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து
ஆதாயம் பெருகும்.
வியாபாரத்துக்குத்
தேவையான பொருட்களை மட்டும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. சிலருக்குக்
கடன் கொடுத்தவர்களால் பிரச்சனைகள் எழலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாற்றுபவர்களுக்கு வேலையில் உயர்
அதிகாரிகளால் பிரச்சனைகள் எழலாம். சில நேரம் அவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர்.
நண்பர்களிடம் அடிக்கடி கைமாத்து, கடன் வாங்குவீர்கள். அதுபோல் தேவையற்ற வகையில்
அடிக்கடி விடுமுறை எடுப்பீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்காது.
ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பெண்களுக்கு ; யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
மாணவர்களுக்கு ; மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும். கிரிக்கெட்
ஆட்டங்களைக் கண்டால், கல்வியும் ஆட்டங்காணும். அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும், விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் குறையும்.
ஒரு சிலர் படிப்பை ஏதாவது
காரணத்தால் விட்டுவிட நேரும்.
அரசியல்வாதிகளுக்கு -
அரசியலில் செல்வாக்குக் குறையும். சிறிது காலம் பொறுமையுடன்
காத்திருந்து செல்வாக்கை உயர்த்த வேண்டிய வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தொண்டர்களின்
மனம் அறிந்து அவர்களுக்கு ஆதரவு அளித்தால் உங்கள் புகழ் ஓங்கும். தேவையற்ற
விவகாரங்களில் பணத்தைச் செலவிடாது இருந்தால் பண இழப்பைத் தவிர்க்கலாம்.
கலைஞர்களுக்கு – உங்களுக்குப் பின்னர்
வந்த, உங்களைவிட அனுபவத்தில் குறைந்தவர்களெல்லாம் அதிகம் சம்பாதிப்பார்கள். அதைக்
கண்டு மனம் வருந்த நேரும். அதனால் கடனகளும் வாங்க நேரும். சிலருக்கு அவர்கள்
பேரில் வலம் வரும் கிசுகிசுக்களால் அவமானப்பட நேரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்
போது மனதில் மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரங்கள் –
செவ்வாய் கிழமை தோறும் இராகு காலத்தில் துர்கையை வழிபடுதல் சிறப்பு. திருப்பதி
அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு
ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம்,
வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசித்து ஒன்பது நபர்களுக்கு
உளுந்து தானம் செய்யலாம்.
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
கல்விக்
காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு திருக்கணிதப்
பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019 மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக
இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
கடந்த
ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்திலும் கேது – அட்டம ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து
சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி
முதல் மிதுன இராசியான ஜென்மத்துக்கு இராகுவும், தனுசு
இராசியான 7 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க
உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது அத்தனை அனுகூலமான
பலன் தருவன அல்ல.
இதன்
காரணமாக ஜென்மத்தில் அமர்ந்த இராகுவால்
கஷ்டங்களும், நஷ்டங்களும் சகஜமாகிவிடும். சோம்பலும், சலிப்பும் ஏற்படும். தாய்
தந்தையருக்கு ஏற்படும் நோய்களை அலட்சியப்படுத்தாமால், மிகவும் கண்ணும் கருத்துமாய்
பார்க்க வேண்டும். சிலருக்கு வரும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத
அளவுக்கு புதுவிதமான நோய்கள் ஏற்படலாம். டாக்டர்களுக்கும் சவாலாக அமையலாம். ஏவல்,
பில்லி சூனியத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். ஆயினும், பேச்சில் தெளிவு
ஏற்படும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், இடம், பொருள் ஏவல் அறிந்து
தன்மையாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவுகளிடம் இதுவரை இருந்து
வந்த மனக்கசப்புகள் தீர்ந்து, மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடிவந்து அன்பு
பாராட்டுவார்கள். சிலருக்குக் கூடா நட்பு கேடாய் முடியும். தொழிலில் பெரிய அளவில்
இலாபம் இராது என்பதால், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைக்காமல், கையில்
உள்ளதை வைத்துக்கொண்டு முன்னேற முயல்வது அறவுடமையாகும். மற்றவர்களுக்காக மறந்தும்
கூட ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். வேலையாட்கள் மூலம் சிறுசிறு பிரச்சனைகள்
எழலாம். அரசு வகையில் அனுகூலம் கிடைப்பது கடினமே. எனவே, விடாமுயற்சியைக்
கடைப்பிடிப்பது நல்லது.
களத்திர
பாவத்தில் அமர்ந்த கேதுவால் பல ஊர்களுக்கும் போய்வரும் தேவையற்ற அலைச்சல்கள்
ஏற்படும். மனையாளுக்கு கரு தங்காமல்
போவதின் காரணமாக சிறிதளவு துன்பமும் சோகமும் ஏற்படலாம். அதன் காரணமாக இல்லாளோடு
காலத்தை இனிமையாக்க் களிக்கமுடியாத நிலை உருவாகலாம். குணம் கெட்ட பெண்களின்
தொடர்பு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படத்தலாம். சிலருக்கு முறைமீறிய காதல்
ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் கொண்டு விடலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டிய காலகட்டமாகும். சோம்பேறித்தனம் அதிகமாகி, எந்த செயலிலும் மனம்
ஈடுபடாத நிலை ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் விரிசல் வராமல் தடுக்க, கருத்து
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம் ஆகும். மனைவியுடன் விட்டுக்
கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பணி காரணமாகவும்
சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். தொழில் மந்தம், தொழிலாளர்களின்
ஒத்துழைப்புக் குறைவு, உத்யோகத்தில் சருக்கல்கள், சக ஊழியர்களின் ஆதரவு இன்மை
ஆகியவை பிரச்சனைகளைத் தரலாம். நண்பர்களே பகைவர்கள் ஆவர். உங்களால் பயன்
அடைந்தவர்களே தக்க சமயத்தில் உங்கள் காலைவாரிவிடுவர். முகம் தெரியாத நபர்களிடம்,
உங்கள் இரகசியங்களைக் கூறாமல் இருப்பது நல்லது, பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா -
புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே
வேண்டாம்.
குடும்பம் மற்றும் பொருளாதாரம் ; கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி
சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில்
சுபச்செலவுகள் ஏற்படும். புதிய வீடு, வாகனம் வந்து சேரும். குடும்பத்தில் நிலவிவந்த
சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக
அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம் ; வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள்
அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும். மதிப்புமிக்க
மனிதர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. வங்கிக் கடன்
முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழிலாளர்களை
தட்டிக் கொடுத்து வேலைவாங்கினால் முன்னேற்றம் இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணி
பரிபவர்களுக்கு அவ்வப்போது அவர்களின் பணிகளில் தடைகள், தாமதங்கள் ஏற்படும். பணி
நிமித்தமான வெளியூர் அலைச்சல்கள் ஏற்படும். வேலையின்றி பல நாட்களாய்
தவித்தவர்களுக்கு நல்ல அரசுப் பணிக்கான உத்தரவு வரும். உடன் பணிபுரிபவர்களின்
போட்டி, பொறாமைகளில் சிக்கித் தவிக்க நேரலாம். உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்ல
நேரலாம். புதிய இடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பணிபுரிபவர்கள் ஒதுங்கி
நிற்காமல், மனம் உவந்து உதவிக்கு வருவர்.
பெண்களுக்கு; உங்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மணமாலையும்
மஞ்சளும் கூடி, மங்கையர் மண
மேடையில் உலாவருவர். கணவன் உங்கள் மீது அன்பைப் பொழிவார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களைப் பற்றி புறம்
பேசுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில்
புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணிபுரியம்
பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.
மாணவர்களுக்கு - அறிவுத் திறன் பெருகும். சிலருக்கு, கல்வியில் கவனம்
செலுத்த முடியாத நிலை ஏற்படும். கிரிக்கெட், முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். உயர்கல்வி யோகம் உண்டாகும். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயர்
வாங்கிக் கொடுப்பீர்கள். தீய நண்பர்களின் சவகாசத்தை ஒதுக்கி கல்வியில் அக்கறை
கொள்ளவேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு – உங்கள் காண்டில் இனி
மழைதான். நீங்கள் நினைதத்தெல்லாம் நடக்கப்போகின்றது. பேரும் புகழும் கிடைக்கும்.
உயர்பதவிகள் தங்களைத் தேடிவரும். அடிக்கடி பயணங்களும், வெளியூரில் தங்கவேண்டிய
சூழ்நிலையும் ஏற்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் தவறாது கிடைக்கும்.
தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை
செய்து கொடுத்து ஆதரிப்பது சிறப்பு ஆகும்.
கலைஞர்களுக்கு – கலைத்துறையில்
உள்ளவர்களுக்கு இதிகமான வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும். புது ஒப்பந்தங்கள்
கையெழுத்து ஆகும். அதில் வரும் நல்ல
வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள். பணமும் புகழும் உங்கள் கண்ணை மறைக்கும். அதனால்
தவறான உறவுகள், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல் போன்றவற்றால் உங்கள் மதிப்பை
நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரங்கள் –
திங்கட்கிழமை தோறும் சண்டிகேஸ்வர்ரையும், தினமும் விக்கேஸ்வர்ரையும் வழிபடுவது
நல்லது. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி,
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று
வழிபடுவது நல்லது. சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து
வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.
Subscribe to:
Posts (Atom)