Search This Blog

Monday, 29 January 2018

பலன் காணும் விதிகள்

வாழ்க வளமுடன் !



  பராசரரின் எளிதான பலன் காணும்  விதிகள்

         பலன் காணும் வழி முறைகளுக்காக நமது முனிவர்கள் தங்கள் நூல்களில் பல  ஸ்லோகங்களை எழுதிள்ளனர். பராசரர் தனது நூலில் ஸ்லோகம் 39 – 43 இல்  இரு முக்கியமான சிறப்பு பலன்காணும் விதிகளைக் குறிப்பிடுகிறார்.  தந்தையைப் பற்றிய நல்ல அல்லது தீய பலன்களை அறிய முற்படும் போது, இலக்னத்தில் இருந்து 9 ஆம் இடமான பாக்கிய பாவத்தையும் அல்லது சூரியனில் இருந்து 9 ஆம் இடத்தையும் ஆராய்ந்து தெளிய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
         பித்ருகாரகன் சூரியனுக்கு, தந்தையைப் பற்றி அறிய அவனிடத்தில் இருந்து காரகம் பெறும் 9 ஆம் பாவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இலக்னத்தில் இருந்து 9 ஆம் பாவத்தை ஆராய்வது வழக்கமான முறையானாலும் காரகன் இருக்கும் பாவத்தை இலக்னமாகக் கருதி பார்ப்பதும் சிறந்த வழி எனக் குறிப்பிடுகிறார். இதை இரவி காரக இலக்னம் எனக் குறிப்பிடலாம்.
          ஜாதகம் – 1 இல் முதலில் வழக்கமான இலக்னத்தில் இருந்து 9 ஆம் பாவமான பித்ரு ஸ்தானத்தை வைத்து பலன் காண்போம். இதில் கும்ப இலக்னம், பித்ரு ஸ்தானமான 9 ஆம் பாவம் துலாம் ஆகும். தனது நீச ஸ்தானமான துலாத்தில் பித்ரு காரகனான சூரியன் அமர்ந்திருந்த போதும் கீழ்க்கண்ட வழிகளில் அவர் நீசபங்கம் அடைகிறார்.
1.       சூரியனுக்கு இடம் கொடுத்த சுக்கிரன் தசம கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
2.       இராசியிலிருந்தும் சந்திரா லக்ன கேந்திரத்தில் சுக்கிரன் உள்ளார்.
3.       சூரியனின் நீச மற்றும் உச்ச ஸ்தானாதிபதிகள் சுக்கிரனும், செவ்வாயும் தங்களுக்குள் பரஸ்பர கேந்திரங்களில் (விருச்சிகம், சிம்மம்) அமர்ந்துள்ளனர்.
4.       சூரியன் உச்சமாகும் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் இலக்னத்துக்கு சப்தம கேந்திரத்தில் உள்ளார்.
5.       சூரியன் உச்சமாகும் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் இராசிக்கு தசம கேந்திரத்தில் உள்ளார்.

         பலம்மிக்க இந்த நீசபங்கமான சூரியன் ஜாதகரின் தந்தையை சாதாரண நிலையில் இருந்து மிகப் பெரிய மேதையாகவும், புகழ் பெற்றவராகவும் ஆக்கியது. பாக்கியாதிபதி சுக்கிரன் கர்ம பாவமான பலம்மிக்க தசம கேந்திரத்தில் 6 ஆம் அதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளார். சந்திரனும் பல வழிகளில் நீசபங்கம் அடைந்துள்ளார். பாக்கியாதிபதி சுக்கிரன் அவருக்கு இடம் கொடுத்த செவ்வாயால் பார்க்கப்படுவது, ஜாதகரின் தந்தை மிகுந்த மரியாதைக்குரிய பதவி வகிப்பவரானார்.

இராகு







லக்//
செவ்
லக்///
     இராசி

ராகு,
சுக்
நவாம்சம்
புத
குரு
சனி,செவ்
குரு
கேது

சுக்,சந்
சூரி
புத,கேது
சூரி
சனி,சந்



        இனி காரக இலக்னத்தில் இருந்து காணும் பராசரி விதிப்படி மேற்கண்ட ஜாதகத்தை அலசுவோம். தந்தைக்குக் காரகன் சூரியன். அவன் துலாத்தில் உள்ளான். துலாமே இரவி காரக இலக்னமாகும். அதிலிருந்து 9 ஆம் இடம் மிதுனம் ஜாதகரின் தந்தைக்கான பாவகம் ஆகிறது. 9 ஆம் அதிபதி புதன் 9 க்கு 4 ஆம் வீடான தனது ஆட்சி, உச்ச, மூலதிரிகோண வீட்டில் உள்ளார். அவர் வர்கோத்தம குருவால் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக ஜாதகரின் தந்தை மிகுந்த அறிவாளியாகவும், அதன் மூலம் பேரும் புகழும் பெற்றார் எனலாம். எனவே, இரு வழிமுறைகளிலும் தந்தையின் நிலை ஒரே மாதிரியாக வருவதைக் காண்கிறோம் அல்லவா ? இதைப் போலவே மற்ற காரகங்களுக்கும் இதே முறையையே கையாளலாம்.
         இலக்னத்தில் இருந்து கர்ம, இலாப பாவங்களின் மூலமாக நாம் அறியக் கூடிய விஷயங்களை, சூரியனில் இருந்து 10, 11 ஆம் பாவாங்களின் மூலமாகவும் அறியலாம்.
ஜாதகம் – 2
         தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதகம் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்காக பலமுறை வழக்கமான வழியில் அலசப்பட்டுள்ளது. துலா இலக்னத்தில் இருந்து 10 ஆம் இடமான கடகராசியில் எந்த கிரகமும் இல்லை, ஒரு கிரகமும் பார்க்கவும் இல்லை. ஆனால், அதன் அதிபதி சந்திரன் தனபாவத்தில், செவ்வாயின் ஆட்சி வீட்டில் அமர்ந்து நீசபங்க இராஜயோகத்தையும், ருசக யோகத்தையும் ஏற்படுத்தி, அவரை உலகின் மிகப் பெரிய சுதந்திர நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பிரதம மந்திரி ஆக்கியது. நீசபங்கமான சந்திரனால் ஆரம்ப காலங்களில் அவருக்குப் பல எதிரிகளும், இன்னல்களும் ஏற்பட்டன.
         நரேந்திரமோடி – பிறந்த நாள் – செப்டம்பர், 17 – 1950. நேரம் 9 – 53 காலை. 23 வ 48, 72 கி 40. சனி திசை இருப்பு – 10 வ 1 மா 3 நாள்.

ராகு




லக்//



குரு(வ)
இராசி

கேது
நவாம்சம்
செவ்



புத(வ),
சூரி,சனி
ராகு


செவ்,சந்
லக்//
சனி,சூரி,
புத(வ),கேது
குரு(வ)


சுக், சந்



         இதையே பராசரி முறையில் பார்க்கும் போது நமது கண் சூரியன் இருக்கும் இராசிக்குச் செல்ல வேண்டும். ஆம். அதுவே இரவி காரக இலக்னம். அதில் இருந்து 10 ஆம் இடத்தைப் பார்க்கவேண்டும். சூரியன் இருக்கும்  கன்னியே காரக இலக்னம், மிதுனம் 10 ஆம் இடம், அதன் அதிபதி புதன்  ஆட்சி, உச்ச, மூலதிரிகோண வீட்டில் உள்ளது. அது மிதுனத்துக்குக் கேந்திரமும் ஆகும். அதில் புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. 10 ஆம் வீட்டை குரு, செவ்வாய், சனி ஆகியோர் பார்வை செய்கின்றனர். எல்லாமே நல்ல நிலையில் அமைந்து அதிகாரத்தையும், சக்தியையும் அவருக்குத் தந்தது. செவ்வாயின் பார்வை அவருக்கு எதிரிகளை உருவாக்கி, இன்னல்களை அதிகரித்து, சோதனைகளையே சாதனைகள் ஆக்கும் நிலைக்கு உயர்த்தியது.

பெண் ஜாதகம்



பெண் ஜாதகத்தின் தனித் தன்மைகள்.
       பெண்கள் எப்போதுமே தனித் தன்மைகளை உடையவர்கள். பாரதத் திருநாட்டில் அவர்களுக்கு என்று ஒரு தனி மதிப்பு உண்டு. பண்டைய நூல்களில் ஸ்திரீ ஜாதகங்களைப்பற்றிய விசேஷமான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகளில் சில வியக்கத்தக்கவை, ஆனால் உண்மையானவை. வராகிமிகிரர்" தனது பிருகத் ஜாதகத்" - தில் எழுதியுள்ள கருத்துக்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வது தற்கால வளரும் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
         பெண்கள் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் எந்த கிரகமும் இல்லாதிருக்கவும், மேலும் அந்த 7 ஆம் இடம் சுயபலமோ, நற்கோள்களின் பார்வை பலமோ இல்லாமலிருந்தால், அவளுக்கு வாய்க்கும் கணவன் கீழ்த்தரமான குணங்களை உடையவனாகவும், விகாரமான புத்தி உடையவனாகவும் இருப்பான். ஆனால், அதே 7 ஆம் இடத்தில் திருநங்கை கிரகங்களான புதனோ, சனியோ இருக்க அவன் ஆண்மையற்றவனாகவோ அல்லது தீய பழக்க வழக்கங்களால் ஆண்மை இழந்தவனாகவோ இருப்பான். ஆயினும் சுபக்கிரகங்களின் பார்வை களத்திர பாவத்தின் மீது விழுமானால், இந்த நிலைகள் ஏற்படாது.
         களத்திர பாவம் சரராசியாகி, அதை சுபகிரகங்கள் பார்க்காவிட்டால் மற்றும் அதில் சனியும் புதனும் இணைந்து இருக்குமானால் அந்தப் பெண்ணின் கணவன் திருமணத்திற்குப் பிறகு அவளைத் தள்ளிவைத்துவிடுவான். அதுவே பெண் இராசியானால் அவள் கூடவே வசிப்பான். உபய இராசியானால் மனைவியைப் பிரிந்து, பொருள் தேடுவதற்காக அடிக்கடி வெளிநாட்டிற்கோ, தூர தேசத்திற்கோ போகின்றவனாகவும் இருப்பான்.
         சூரியன் ஆட்சி உச்சம் பெறும் சிம்மம், மேஷம் தவிர மற்ற இராசிகள் 7 ஆம் இடமாகி, அதில் சுபர் பார்வை பெறாமல், சூரியன் இருக்க  அந்த ஜாதகி திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கட்டிய கணவனால் கைவிடப்படுவாள்.
         செவ்வாய் பலம் பெறும் மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய இராசிகளைத் தவிர வேறு இராசிகள் களத்திரபாவமாகி, சுப கிரக பார்வையின்றியும், சனி, புதன் பார்வை பெற்றும் அங்காரகன் அமர, அந்த ஜாதகி திருமணம் நடந்த சில காலத்திலேயே விதவை ஆகிவிடுவாள்.
         களத்திர பாவம் மகர, கும்ப, துலாம் இவற்றில் ஒன்றில்லாமால் வேறு இராசியாய் இருக்க அதில் சனி, புதனுடன் கூடியோ. அஸ்தமனத்திலோ, கிரக யுத்தத்திலோ, சுபக் கிரகங்களின் பார்வையின்றி இருக்க அந்த ஜாதகியின் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் நல்ல தசா, புத்தி காலங்களில், வயது முதிர்ந்த பின் அவளுக்குக் கணவன் போன்ற துணைவன் அமைந்து, அவனால் அவளுக்கு எவ்வித சந்தோஷமோ, சுகமோ இருக்காது.

ஜாதகம் -1
     

கேது



ராகு


சூரி

இராசி
13/11/1957.
காலை 7-17 மதுரை.
சந்

நவாம்சம்
லக்//


சனி
சுக்,சந்
சுக்
லக்// சனி,புத
ராகு,செவ்,
சூரி
குரு
செவ்


குரு,புத
கேது
 சனி தசா இருப்பு – 18 வ – 10 மா – 27 நாள்.
         இந்த ஜாதகி பிறந்தது விருச்சிக இலக்னம். இவள் ஜாதகத்தில் இலக்னத்திலே அமர்ந்துள்ள சனியும் புதனும் களத்திர பாவத்தை பார்வை செய்கின்றன. அந்த வீட்டை குருவும், செவ்வாயும் வேறு பார்க்கின்றனர். இவளுக்கு திருமணத்தில் ஆர்வம் இருந்த்தில்லை. புதனும், சனியும் திருநங்கை கிரகங்கள். அவர்கள் யாரும பார்க்கவில்லை. 7 ஆம் இடமும், இலக்னமும் அபுத்ர இராசிகள். பொதுவாகவே விரய பாவத்தில் மூன்று ஆக்னேய கிரகங்கள் (சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகியவை ஆக்னேய கிரகங்கள். இதில் இராகுவை ஆக்னேய கிரகமாகக் கணக்கிடுவதில்லை.) இருக்குமானால் அந்த ஜாதகி, பிரசவ வேதனையை அறியமாட்டாள் என்பது சாஸ்திரம். இந்த ஜாதகத்தில் புதன் வீட்டில் குருவும், குருவீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் புதனும் இருக்கின்றன. நவாம்சத்தில் 7 ஆம் இடத்தில் சனி இருக்கிறது. 5 ஆம் இடம் ஓர் அபுத்திர இராசியாகும். 2 ஆம் இடத்தில் சந்திரனும் சுக்கிரனும் இணைந்து உள்ளன.  இந்தப் பெண்ணின் திருமணமே ஒரு கேள்விக்குறியானது.
         7 ஆம் இடத்தில் பலமுள்ள பாவக் கிரகம் இருந்து, சுபர் இணைவு இன்றி பாவக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் ஜாதகி இளமையிலேயே விதவை ஆகிவிடுவாள். ஆனால் 7 ஆம் இடத்தில் சுப, பாவ கிரகங்கள் நின்று, பலமான பாவக் கிரகம் பார்க்குமானால் அந்த ஜாதகிக்கு மறுதிருமணம் உண்டு. சுபர் பார்வையோடு, பலமற்ற பாவக்கிரகம் 7 இல் நிற்க அந்த ஜாதகியை அவளது கணவன் தள்ளி வைத்துவிடுவான். 7 ஆம் வீட்டில் மூன்று ஆக்னேய கிரகங்கள் இருக்குமானால் வைதவ்ய தோஷம் ஏற்படும்.
         செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் நவாம்சத்தில் இருக்க, சுக்கிரனுடன் சந்திரன் இருந்தாலும் அல்லது சுக்கிரனையோ, சந்திரனையோ, இருவரையுமோ சனி பார்த்தாலும் ஜாதகி தனது கணவனிடம் உண்மையாக இருக்கமாட்டாள். பர புருஷ சகவாசம் இருக்கும்.
         பலமற்ற சுக்கிரனும் செவ்வாயும் களத்திர பாவத்தில் இருக்க, சனி பார்க்க மற்றும் சுக்கிரனோ செவ்வாயோ சனியின் திரயாம்சத்தில் இருந்தால் அப் பெண் நன்நடத்தை இல்லாதவளாக இருப்பாள். அவர்களுடன் சந்திரன் நிற்குமானால் அவளது கணவனும் அவளுக்கு உடந்தையாக இருப்பான். 
         மகர, கும்ப, மேஷ, விருச்சிக இராசிகளில் ஒன்று இலக்னமாகி அங்கு சந்திரனும், சுக்கிரனும் நின்று, அசுபர் பார்வை ஏற்படுமானால், ஜாதகி தீய நடத்தை உடையவளாகவும், தன் குடும்ப கௌரவத்தைப்பற்றியோ, கண்ணியத்தைப்பற்றியோ எள்ளளவும் நினைக்கமாட்டாள். அவளது தாயும் இவளின் தீய நடத்தைக்குத் துணைபோவாள்.
         நவாம்ச 7 ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க, இலக்னத்தில் இருக்கும் சனி பார்க்க ஜாதகிக்கு யோனி வியாதி இருக்கும். ஆனால், 7 ஆம் இடத்தில்  சுபர் இருந்து, சுப அம்சங்களோடு இருந்தால் அப் பெண் அழகிய இடையும், தொடையும், கொண்டு பிறரை வசீகரிக்கும் அவள் தன் கணவனின் இயற்கையான குறைபாடுகளை அறிந்து தமது உல்லாச வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கோள்வாள்.
         ஒரு பெண் ஜாகத்தில் சனியும் சுக்கிரனும் சமசப்தமத்தில் பரஸ்பர பார்வை பார்த்துக் கொண்டு, சுக்கிரனின் வீடான ரிஷபம், துலாம் இலக்னமாகி, நவாம்ச இலக்னம் கும்பமாக அந்த ஜாதகி காம விகாரம் உள்ளவளும், திருமணம் தடைப்பட்டுக் கொண்டே போனவளும், ஆண் தன்மை கொண்ட பெண்களைக் கொண்டு தன் காம இச்சைகளை தீர்த்துக் கொள்பவளாகவும்  விளங்குவாள்.
         இன்னும் சில நூல் ஆசிரியர்கள் இதை இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார்கள்.
1.       சனியும், சுக்கிரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, தத்தம் நவாம்ச வீடுகளை மாற்றிக் கொண்டாலும் கூட மேலே குறிப்பிட்ட யோகம் ஏற்படும்.
துலாம், ரிஷபம் இலக்னமாகி நவாம்ச இலக்கினம் கும்பமாகி, சுக்கிரனும், சனியும் தத்தமது நவாம்ச வீடுகளை மாற்றிக் கொண்டாலும் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும். பிருகத் பிராஜாபத்யம் " என்ற நூலில் இப்படிப்பட்ட கிரக நிலை ஆணின் ஜாதகத்தில் ஏற்படுமானால் அப்படிப்பட்ட ஆண், பிற ஆண்களைக் கொண்டு தமது காமவிகாரத்தைத் தீர்த்துக் கொள்வான்