தாமதத் திருமணம் – தயை செய்யுமா கிரகங்கள் ?
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுகிறது என்பது போய், ரொக்கத்தில் நிச்சியிக்கப்படுகிறது என்பதும் மாறி இப்போது வாலிபர்களுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காமல் தாமதமாகிறது. இது ஏன் ? – என்று ஒரு 50 வயது ஆணின் ஜாதகத்தின் மூலமாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
திருமணத்தை ப் பொருத்தவரை ஆராய வேண்டிய பாவங்கள் 2, 7, 11 ஆகும். 2 ஆம் வீடு குடும்பத்தில் புதுவரவையும், குடும்பத்தையும் குறிக்கும். 7 ஆம் வீடு களத்திரத்தையும், திருமணத்தையும் குறிக்கும். 11 ஆம் வீடு ஆசை, விருப்பம் நிறைவேறுவதைக் குறிக்கும்.
2 ஆம் வீடு –
2 ஆம் அதிபதி சனி 3 ஆம் வீட்டில். 3, 12 க்கு உரிய குருவின் நட்சத்திராதிபதி புதன் 6 இல் உள்ளார். இதன் காரணமாக 2 ஆம் பலம் இழந்து காணப்படுகிறது.
சனி
|
ராகு
|
சூரி
புத
|
புத
| |||||||
இராசி
18 ஜூன் 1967
21.00 இரவு
ஹைதராபாத்
|
குரு
சுக்
|
லக்//
சந்
|
நவாம்சம்
|
ராகு
| ||||||
லக்//
|
கேது
|
செவ்
| ||||||||
கேது
சந்
|
செவ்
|
சனி
சுக்
|
குரு
சூரி
| |||||||
7 ஆம் வீடு - 7 ஆம் வீட்டில் குருவும், சுக்கிரனும் அமர்வு. குரு 3, 12 க்கு உரியவராகி 7 ல் அமர்ந்தது 7 ஆம் பாவத்தை பலம் இழக்கச் செய்கிறது. மகர இலக்னத்துக்கு குரு அசுபர் ஆவார். அவர் உச்சமாகி உள்ளார். இந்த நிலையும் திருமண மறுப்புக்கு மற்றுமொரு காரணம் ஆகிறது. ஒருபுறம் அது கேந்திர தோஷத்தையும், மற்றொருபுறம் அதுவே திருமணம் மற்றும் மண வாழ்க்கைக்கான பாவமான 7 இல் அசுபத்தன்மையுடன் விளங்குகிறது. சுக்கிரன் பகை வீட்டில், பகை கிரகமான குருவுடன் இணைந்துள்ளார். எனவே களத்திர காரகனும் பலமிழந்துள்ளார். 7 ஆம் அதிபதியான சந்திரன், இராகுவின் நட்சத்திரம் பெற்று, கேதுவுடன் இணைந்துள்ளார். இதன் காரணமாக 7ஆம் அதிபதியான சந்திரனும் பாதிப்பு அடைந்துள்ளார். 7 ஆம் அதிபதியும், 7 இல் உள்ள கிரகங்களும் பலம் இழந்த நிலையில் உள்ளன.
11 ஆம் வீடு –
சர இராசிக்கு பாதகஸ்தானம் 11 ஆம் இடம். அதன் கரணமாக பலமிழந்த நிலையில், ஜாதகரின் ஆசை, அபிலாஷைகள் நிறைவேறத நிலையைக் குறிகாட்டுகிறது. எனவே, 2, 7, 11 ஆம் இடங்கள் மேற்ச்சொன்ன வகையில் மிகவும் பாதிப்பு அடைந்தள்ளதைக் காணமுடிகிறது. இந்த நிலைகள் ஜாதகரின் தாமத திருமணத்திற்குக் காரணமாகின்றன.
காரகர் –
ஜோதிட நூல்களில் ஒரு பாவத்தின் காரகன், தன பாவத்தில் இருக்க அந்த பாவம் பாதிப்பு அடைகிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது. 2 ஆம் பாவத்துக்குக் காரகன் குரு ஆவார். அவர் 2 இல் இருக்க ஜாதகருக்கு சத்துக்கள் குவிகின்றன. 5 ஆம் இடத்துக்கு காரகரும் அவரே. அவர் 5 இல் இருக்கும் போது அவருக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. இதிலிருந்து காரகர் பாவத்தை பாதிக்கவில்லை என்பதை அறிகிறோம்.
சுக்கிரன் 7 ஆம் வீட்டில் இருக்க அந்த வாவம் பாதிப்பு அடைகிறதா ? – என்பதே இப்போது கேள்வி. இந்த இடத்தில் சுக்கிரன் காரகன் என்பதை விட அவன் எவ்வளவு பலம் மிக்கவனாக இருந்து பாவத்துக்கு தன் பங்கை அளிக்கிறான் என்பதே, பார்க்கப்படவேண்டும். பாவாதிபதியே களத்திரம் அமைய முக்கிய பங்கு வகிக்கிறான். களத்திரகாரகன் பாவத்துக்கு உள்ளேயோ, வெளியேயோ இருக்கலாம், ஆனால் அவன் நல்ல நிலையில் இருந்தால், ஜாதகனுக்கு அந்த பாவத்தின் பலனை அனுபவிக்க அருள் புரிகிறான். உதாரணமாக, இங்கு இந்த வாகனத்தின் ஓட்டுனருக்கு கார் சொந்தமில்லை என்ற போதிலும், உரிமையாளரின் காரை ஓட்டும் விதமாக காரின் சுகத்தை அனுபவிக்கிறான் அல்லவா ? இங்கு பாவாதிபதி பலம் இன்றி இருந்தாலும், பாவகாரகன் பலத்துடன் உள்ளான்.
3 ஆம் வீடு –
ஜாதகரின் தைரியம் மற்றும் சக்தியைக் குறிகாட்டுவது 3 ஆம் பாவமாகும். இது பலம் இழந்தால் ஜாதகர் பலமற்றவராக இருப்பார். 3 இல் சனி அமர்ந்து பாவத்தை பலமிழக்கச் செய்துவிட்டார்.
செவ்வாய் தோஷம் –
செவ்வாய்க்குப் பகை கிரகங்கள் 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் இருக்க அது செவ்வாய் தோஷமாகும். இந்த ஜாதகத்தில் இராகு செவ்வாய்க்கு 8 இல் உள்ளது. எனவே, ஏதாவது குறையுள்ள பெண்ணை இந்த ஜாதகர் தேர்ந்து எடுக்க வேண்டும்.
சூரியன் மற்றும் சுக்கிரன் –
சூரியனுக்கு 41 பாகைகள் முன்னால் சுக்கிரன் இருப்பின், திருமணம் தாமதப்படும். இந்த ஜாதகத்தில் அந்த நிலை இல்லை. சுக பாவத்தில் உள்ள இராகு மற்றும் செவ்வாயின் விரய பாவத்தின் மீதான பார்வை, மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்குக் கெடுதல் செய்தது.
சந்திரா இலக்னத்தில் இருந்து பார்க்கும் போது 7 ஆம் வீடு இராகுவால் பாதிக்கப்பட்டுள்ளது. அயனசயன பாவமான 12 ஆம் வீட்டில் 7 ஆம் அதிபதி செவ்வாய் இருந்து பாதிப்பைத் தருகிறார். அவர் பலம் குறைந்த இலக்னாதிபதி சனியால் பார்க்கப்படுவது மேலும் பாதிப்பைத் தருகிறது. ஆயினும் தற்போதைய பாக்கியாதிபதியின் திசையில் திருமணத்திற்கான சிறிது நம்பிக்கை வைக்கலாம். மேலும் 7 ஆம் அதிபதி சந்திரனுடனான கேது இணைவு பலம் மிக்க பித்ரு தோஷத்தைத் தருவதால் அதற்கு பரிகாரம் செய்தால்
முடிவு –
2, 7, 11, 3 ஆகிய பாவங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த ஜாதகரின் மறுக்கப்பட்ட மற்றும் தாமத திருமணத்திற்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது. பாவம், பாவாதிபதி மற்றும் காரகரின் பலத்தை ஆராயும் போதுதான் நாம் ஒரு நல்ல முடிவுக்கு வர முடியும்.
No comments:
Post a Comment