வாழ்க வளமுடன் !
உ
பராசரரின் எளிதான பலன் காணும் விதிகள்
பலன்
காணும் வழி முறைகளுக்காக நமது முனிவர்கள் தங்கள் நூல்களில் பல ஸ்லோகங்களை எழுதிள்ளனர். பராசரர் தனது நூலில்
ஸ்லோகம் 39 – 43 இல் இரு முக்கியமான
சிறப்பு பலன்காணும் விதிகளைக் குறிப்பிடுகிறார்.
தந்தையைப் பற்றிய நல்ல அல்லது தீய பலன்களை அறிய முற்படும் போது,
இலக்னத்தில் இருந்து 9 ஆம் இடமான பாக்கிய பாவத்தையும் அல்லது சூரியனில் இருந்து 9
ஆம் இடத்தையும் ஆராய்ந்து தெளிய வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
பித்ருகாரகன்
சூரியனுக்கு, தந்தையைப் பற்றி அறிய அவனிடத்தில் இருந்து காரகம் பெறும் 9 ஆம்
பாவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இலக்னத்தில் இருந்து 9 ஆம் பாவத்தை
ஆராய்வது வழக்கமான முறையானாலும் காரகன் இருக்கும் பாவத்தை இலக்னமாகக் கருதி
பார்ப்பதும் சிறந்த வழி எனக் குறிப்பிடுகிறார். இதை இரவி காரக இலக்னம் எனக்
குறிப்பிடலாம்.
ஜாதகம் – 1 இல் முதலில் வழக்கமான இலக்னத்தில் இருந்து 9 ஆம் பாவமான
பித்ரு ஸ்தானத்தை வைத்து பலன் காண்போம். இதில் கும்ப இலக்னம், பித்ரு ஸ்தானமான 9
ஆம் பாவம் துலாம் ஆகும். தனது நீச ஸ்தானமான துலாத்தில் பித்ரு காரகனான சூரியன் அமர்ந்திருந்த
போதும் கீழ்க்கண்ட வழிகளில் அவர் நீசபங்கம் அடைகிறார்.
1.
சூரியனுக்கு
இடம் கொடுத்த சுக்கிரன் தசம கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
2.
இராசியிலிருந்தும்
சந்திரா லக்ன கேந்திரத்தில் சுக்கிரன் உள்ளார்.
3.
சூரியனின்
நீச மற்றும் உச்ச ஸ்தானாதிபதிகள் சுக்கிரனும், செவ்வாயும் தங்களுக்குள் பரஸ்பர
கேந்திரங்களில் (விருச்சிகம், சிம்மம்) அமர்ந்துள்ளனர்.
4.
சூரியன்
உச்சமாகும் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் இலக்னத்துக்கு சப்தம கேந்திரத்தில்
உள்ளார்.
5.
சூரியன்
உச்சமாகும் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் இராசிக்கு தசம கேந்திரத்தில் உள்ளார்.
பலம்மிக்க
இந்த நீசபங்கமான சூரியன் ஜாதகரின் தந்தையை சாதாரண நிலையில் இருந்து மிகப் பெரிய
மேதையாகவும், புகழ் பெற்றவராகவும் ஆக்கியது. பாக்கியாதிபதி சுக்கிரன் கர்ம பாவமான
பலம்மிக்க தசம கேந்திரத்தில் 6 ஆம் அதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளார். சந்திரனும்
பல வழிகளில் நீசபங்கம் அடைந்துள்ளார். பாக்கியாதிபதி சுக்கிரன் அவருக்கு இடம்
கொடுத்த செவ்வாயால் பார்க்கப்படுவது, ஜாதகரின் தந்தை மிகுந்த மரியாதைக்குரிய பதவி
வகிப்பவரானார்.
இராகு
|
|
|
|
|
|
|
|
லக்//
செவ்
|
லக்///
|
இராசி
|
|
ராகு,
சுக்
|
நவாம்சம்
|
புத
|
|||
குரு
|
சனி,செவ்
|
குரு
|
கேது
|
|||||
|
சுக்,சந்
|
சூரி
|
புத,கேது
|
சூரி
|
சனி,சந்
|
|
|
இனி காரக
இலக்னத்தில் இருந்து காணும் பராசரி விதிப்படி மேற்கண்ட ஜாதகத்தை அலசுவோம்.
தந்தைக்குக் காரகன் சூரியன். அவன் துலாத்தில் உள்ளான். துலாமே இரவி காரக
இலக்னமாகும். அதிலிருந்து 9 ஆம் இடம் மிதுனம் ஜாதகரின் தந்தைக்கான பாவகம் ஆகிறது.
9 ஆம் அதிபதி புதன் 9 க்கு 4 ஆம் வீடான தனது ஆட்சி, உச்ச, மூலதிரிகோண வீட்டில்
உள்ளார். அவர் வர்கோத்தம குருவால் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக ஜாதகரின்
தந்தை மிகுந்த அறிவாளியாகவும், அதன் மூலம் பேரும் புகழும் பெற்றார் எனலாம். எனவே,
இரு வழிமுறைகளிலும் தந்தையின் நிலை ஒரே மாதிரியாக வருவதைக் காண்கிறோம் அல்லவா ?
இதைப் போலவே மற்ற காரகங்களுக்கும் இதே முறையையே கையாளலாம்.
இலக்னத்தில் இருந்து கர்ம, இலாப பாவங்களின் மூலமாக நாம் அறியக் கூடிய
விஷயங்களை, சூரியனில் இருந்து 10, 11 ஆம் பாவாங்களின் மூலமாகவும் அறியலாம்.
ஜாதகம்
– 2
தற்போதைய
பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதகம் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்காக பலமுறை வழக்கமான
வழியில் அலசப்பட்டுள்ளது. துலா இலக்னத்தில் இருந்து 10 ஆம் இடமான கடகராசியில் எந்த
கிரகமும் இல்லை, ஒரு கிரகமும் பார்க்கவும் இல்லை. ஆனால், அதன் அதிபதி சந்திரன்
தனபாவத்தில், செவ்வாயின் ஆட்சி வீட்டில் அமர்ந்து நீசபங்க இராஜயோகத்தையும், ருசக
யோகத்தையும் ஏற்படுத்தி, அவரை உலகின் மிகப் பெரிய சுதந்திர நாடுகளில் ஒன்றான
இந்தியாவின் பிரதம மந்திரி ஆக்கியது. நீசபங்கமான சந்திரனால் ஆரம்ப காலங்களில்
அவருக்குப் பல எதிரிகளும், இன்னல்களும் ஏற்பட்டன.
நரேந்திரமோடி – பிறந்த நாள் – செப்டம்பர், 17 – 1950. நேரம் 9 – 53 காலை.
23 வ 48, 72 கி 40. சனி திசை இருப்பு – 10 வ 1 மா 3 நாள்.
ராகு
|
|
|
|
|
லக்//
|
|
|
|
|
குரு(வ)
|
இராசி
|
|
கேது
|
நவாம்சம்
|
செவ்
|
||||
|
|
புத(வ),
சூரி,சனி
|
ராகு
|
||||||
|
செவ்,சந்
|
லக்//
|
சனி,சூரி,
புத(வ),கேது
|
குரு(வ)
|
|
|
சுக்,
சந்
|
இதையே
பராசரி முறையில் பார்க்கும் போது நமது கண் சூரியன் இருக்கும் இராசிக்குச் செல்ல
வேண்டும். ஆம். அதுவே இரவி காரக இலக்னம். அதில் இருந்து 10 ஆம் இடத்தைப்
பார்க்கவேண்டும். சூரியன் இருக்கும்
கன்னியே காரக இலக்னம், மிதுனம் 10 ஆம் இடம், அதன் அதிபதி புதன் ஆட்சி, உச்ச, மூலதிரிகோண வீட்டில் உள்ளது. அது
மிதுனத்துக்குக் கேந்திரமும் ஆகும். அதில் புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. 10 ஆம்
வீட்டை குரு, செவ்வாய், சனி ஆகியோர் பார்வை செய்கின்றனர். எல்லாமே நல்ல நிலையில்
அமைந்து அதிகாரத்தையும், சக்தியையும் அவருக்குத் தந்தது. செவ்வாயின் பார்வை
அவருக்கு எதிரிகளை உருவாக்கி, இன்னல்களை அதிகரித்து, சோதனைகளையே சாதனைகள் ஆக்கும்
நிலைக்கு உயர்த்தியது.
No comments:
Post a Comment