உ
நாடியில் தனபாவம்
செல்வ நிலை
1. இலக்னாதிபதி
பாக்கிய பாவத்தில் அமர்ந்து, புதன் கர்ம பாவத்திலும், கர்ம பாவாதிபதி தனபாவத்திலும்
அமர ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தராகவும், பரந்த கல்வி நிலையையும் அடைவார். இந்த பலன்கள்
அவருக்கு புதன் திசை, தனபாவாதிபதி திசை அல்லது இலக்னாதிபதி திசையில் ஏற்படும்.
கர்ம பாவத்திலுள்ள கிரகத்தின் காரகத்துவங்கள்
கனிந்து பழமாகி பலன் அளிக்கும். புதனின் கர்ம பாவ அமர்வு ஜாதகருக்கு அதீத கற்கும் திறனைத்
தந்து மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆக்கி விடுகிறது. ( சனியின் கர்ம பாவ அமர்வு
பூர்ண ஆயுளை அளித்தாலும், கஷ்டங்களையும் அதிகரிக்கிறது. ஆயினும், சனி அனுகூல நிலையில்
இருந்தால் கவலைகளையும், கஷ்டங்களையும் சமாளித்துவிடக்கூடிய தன்மை நிலவும்).
இலக்னாதிபதியின் பாக்கிய பாவ அமர்வு ஜாதகருக்கு
அதிரஷ்டங்களை அள்ளித்தரும். பாக்கிய பாவம் பூர்வ புண்ணிய பலன்களைக் குறிகாட்டுகிறது. கர்ம பாவாதிபதி, தனபாவத்தில் அமர்வது செல்வ நிலைக்கும்,
கல்வித் திறனுக்கும் சிறப்புச் சேர்க்கும் என்றாலும் ஜாதகரின் தந்தையின் ஆயுளில் கை
வைக்கும் என்பதை நாம் அறிதல் வேண்டும். குருவைப் பொருத்தவரை இந்த நிலை, அதாவது குரு
10 ஆம் அதிபதியாக, 2 இல் அமர்ந்தால் கொல்லார். அவர் தந்தையின் ஆயுளை அதிகரிப்பார்.
2. பஞ்சமாதிபதி சக்தி
மிக்கவராக இருந்தாலோ அல்லது குருவுக்கு 2 இல் இருந்தாலோ செல்வ நிலையும், உயர் கல்வி
நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனனால் இந்த நிலைகளில் அசுபத் தொடர்பு ஏற்பட்டால்
செல்வ நிலையும், கல்வி நிலையும் சுமாரானதாகவே இருக்கும்.
இவ் இணைவு ஜாதகருக்கு மிகந்நிறந்த செல்வ நிலையைத்
தருவதோடல்லாமல் மழலைச் செல்வங்களையும் அளிக்கிறது. இலக்னத்திற்குப் 12 இல் குரு இருந்தால்,
ஜாதகரின் பொருளாதார நிலையை உயர்த்துவதோடு அல்லாமல், அவருக்கு அளிவற்ற செல்வத்தையும்
அளிக்கவல்லது. 5 ஆம் அதிபதிக்கு 12 இல் குரு இருக்க ஜாதகரின் குழந்தைகளுக்கு அளவற்ற
செல்வ நிலையைத் தருகிறது. சந்திரனுக்கோ அல்லது 4 ஆம் அதிபதிக்குப் 12 ஆம் இடத்திலோ
குரு இருக்க ஜாதகருக்கு தாய் மூலமாக அளவற்ற செல்வ நிலை ஏற்படுகிறது. சுக்கிரனுக்கு
விரய பாவத்திலோ அல்லது களத்திர பாவாதிபதிக்கு விரய பாவத்திலோ குரு இருக்க ஜாதகருக்கு
திருமணத்திற்குப் பிறகு அளவற்ற செல்வமோ அல்லது அதிர்ஷ்டமோ வந்து சேரும். சூரியனுக்கோ,
பக்கியாதிபதிக்கோ 12 இல் குரு இடம் பெற தந்தையின் மூலமாக அளவற்ற செல்வம் கிடைக்கும்.
இதுவே ஒவ்வொரு பாவத்துக்கும் 12 இல் குரு அமரும் போது அந்த பாவ தொடர்புடைய உறவுகளின்
மூலமாக குரு செல்வ நிலையை உயர்த்துவார். உதாரணமாக 7 க்கு 12 ஆம் பாவமான 6 இல் குரு
இருக்க திருமணத்திற்குப் பிறகு செல்வ நிலை அதிகரிக்கும். அதுவே பலம் குறைந்த குருவானால்
அந்த உறவு மூலமாக பொருளாதார இழப்புகள் ஏற்படும் அல்லது அந்த உறவுகளுக்கு பொருளாதார
சரிவுகள் ஏற்படும் எனலாம்.
3. சந்திரன் 7 இல்
புதனுடன் இணைந்து, குருவும் சுக்கிரனும் 8 இல் இருக்க ஜாதகர் அசையா சொந்துக்கள், உயர்தர
நவீன வாகனங்ளுடன் அரச வாழ்வு வாழ்வார்.
சந்திரன், புதன் மட்டுமே 7 இல் இணைந்திருக்க
அசையாச் சொத்துக்களும், அருமையான வாகனங்களும் அமையும். இதற்கு மேருகூட்டும் வகையில்
குருவும், சுக்கிரனும் இலக்னத்துக்கு 8 இல் இருக்க மேலும் மேன்மையான நிலை அமையும்.
4. கர்மாதிபதி மிதுனத்தையோ
அல்லது கன்னியையோ அலங்கரித்தால் ஜாதகருக்கு
அநேக சொத்துக்கள் அமைவதோடு, தொழில் வெற்றிகளும் கிடைக்கும்.
தனுசு
இலக்னத்துக்கு கர்மாதிபதி புதன் கன்னியில், கன்னி இலக்னத்துக்குக் கர்மாதிபதி புதன்
மிதுனத்தில் இருப்பது தொழில் நிலைக்கு மிகவும் உதவிகரராக இருக்கும். எந்த இலக்னமானாலும்
10 ஆம் அதிபதி மிதுனம், கன்னியில் இடம் பெற ஜாதகரின் தொழில் நிலை வெற்றிகரமானதாக அமையும்
என நூல்கள் அறிவிக்கின்றன. சுக்கிரன் கர்மாதிபதியாகி மிதுன, கன்னி இராசியில் இருக்க
தொழில் வெற்றி உறுதியாகிறது. ஆனால், கர்மாதிபதி சுக்கிரன் கன்னியில் இருப்பது தொழில்
வெற்றியில் நிச்சியமற்ற தன்மையோ அல்லது வெற்றி நிரந்தரமற்றதாகவோ அமைந்துவிடுகிறது.
அது பல தடைகளையும் ஏற்படுத்தும்.
கீழ்கண்ட 16 மே, 1959 அன்று 11 நா. 29 விநா
யில் அட்சாம்சம் 26 வ 29 ரேகாம்சம் 80 கி
21 இல் பிறந்த பெண் ஜாதகம் மேற் சொன்ன விதிக்கு உதாரணமாகும்.
கேது
|
புத
|
சூரி
|
செவ்
சுக்
|
இராசி
|
லக்//
|
||
சந்
|
|||
சனி
|
குரு
|
இராகு
|
கேது தசா இருப்பு – 4 வ – 1 மா
– 10 நாள்.
இந்த ஜாதகி செல்வ வளம் மிக்கவர். அமெரிக்காவில்
சுயதொழிலில் ஈடுபட்டு நல்ல நிலையில் உள்ளார். இவரது பொருளாதார முன்னேற்றம், உயர்வு
சுக்கிர திசை, புதன் புத்தி காலத்தில் ஏற்பட்டது. 10 ஆம் அதிபதி செவ்வாய் மிதுனத்தில்,
அவருக்கு இடம் கொடுத்த புதன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். மேலும், குரு இலக்னத்தையும்,
சூரியனையும் பார்வை செய்கிறார். சந்திரனும், குருவும் பரஸ்பர கேந்திரங்களில் உள்ளனர்.
சனியும் 6 இல் உள்ளார்.
5. கர்ம அல்லது இலாபாதிபதிகளில்
ஒருவர் இலாப பாவத்தில் அமர்ந்து, இலக்னாதிபதியை பார்வை செய்தால் ஜாதகர் நிறைந்த செல்வத்தையும்,
மிகுந்த
6. ஆதாயங்களையும், அசையா சொத்துக்களையும் அனுபவித்து மகிழ்வார்.
10 அம் அதிபதி, 4 ஆம் அதிபதி, 11 ஆம் அதிபதி
ஆகிய மூவரில் ஒரு கிரகம் 11 இல் இருந்து இலக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். சிறப்புப்
பார்வையுடைய கிரங்களைத் தவிர மற்ற கிரகங்கள் 5 இல் இருந்தால் மட்டுமே இலக்னாதிபதி
11 ஆம் இடத்தைப் பார்க்க இயலும். இவ்வாறாக மேற்சொன்ன 3 அதிபதிகளில் ஒருவரை இலக்னாதிபதி
பார்க்க மேற்சொன்ன பலன்கள் சாத்தியமாகும். 5 இல் உள்ள இலக்னாதிபதி அசுப கிரகமானலும்
புத்திர பாக்கியத்திற்குப் பிரச்சனை இருக்காது, ஏனெனில் 11 ஆம் இடத்தில் இருக்கும்
கிரகம் பரஸ்பர பார்வை புரிவதே ஆகும்.
7. சுக்கிரனும், புதனும்
4 இல் இருக்க, தனபாவத்தில் குரு இருப்பின் ஜாதகர் அதிகப்படியான செல்வத்துடன் அளவற்ற
மகிழ்ச்சியுடன் வாழ்வார். செவ்வாயும், சந்திரனும் 7 இல் இணைந்து இருந்தாலும் இதே பலனே
ஏற்படும்.
சுக்கிரனும், புதனும் சுகபாவத்தில் இல்லாது
குரு 2 இல் இருந்தால் பொருளாதார சந்தோஷம் ஜாதகருக்கு இருக்காது. 4 இல் மேற்சொன்ன கிரகங்கள்
இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சிறப்பான பொருளாதார உயர்வு மகிழ்ச்சி தரும். ரிஷப இலக்ன
ஜாதகருக்கு 7 ஆம் இடமான விருச்சிகத்தில் உள்ள ஆட்சி பெற்ற செவ்வாயும், நீசம் பெற்ற
சந்திரனும் இந்த யோகத்தைக் கெடுத்து விடுவதில்லை. (செவ்வாய் ஆட்சி வீட்டில்)
8. கடக இலக்ன ஜாதகருக்கு
உச்ச சுக்கிரனை சந்திரன் பார்க்க அவர் உலகம் முழுமையிலும் முக்கியத்துவம் பெற்று உச்ச
நிலையில் இருப்பார்.
இந்த அமைப்பில் சுக்கிரன், கன்னி நவாம்சம்
பெற ஜாதகர் நிலை சிறிது குறையும். ஆனால், சந்திரனின் சுக்கிரன் மீதான பார்வை பொதுவாக
அதிகாரமுள்ள உயர் நிலையைத்தரும்.
9. இலக்னாதிபதிக்கு
இடம் கொடுத்தவன் இலக்னத்துக்கு கர்ம பாவத்தில் நின்று அவருக்கு இடம் கொடுத்தவனால் பார்க்கப்பட,
ஜாதகர் வாழ்க்கை முழுவதும் நிறைந்த செல்வம் உடையவராகத் திகழ்வார்.
10. குரு இலக்னத்தில்
இருக்க, இலக்னாதிபதி தனபாவத்திலோ அல்லது விரய பாவத்திலோ இருக்க ஜாதகர் வாழ்க்கை முழுவதும்
நிறைந்த செல்வம் உடையவராகத் திகழ்வார். ஆனால், இவ்விரு கிரகங்களும் தங்களது நீச இராசியில்
இருக்கக் கூடாது.
இலக்னாதிபதி விரய பாவம் ஏறுவது ஜாதகத்திற்கு
பலத்தை அளிக்காது என்றாலும், இலக்னத்திலுள்ள
குரு ஜாதகத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தி வாழ்க்கை முழுவதும் நிறைந்த செல்வத்தைக்
கொடுத்துவிடுகிறது. ஆனால் இந்த நிலை மகர இலக்னத்திற்கு
முழுவதுமாக சரிப்பட்டுவராது. சனியின் மூலதிரிகோண இராசியான கும்பத்தில் சனி 2 ஆம் இடத்தில்
இருப்பது, 12 ஆம் இடமாக குருவுடன் பரிவர்த்தனை பெற்று கும்பத்தில் அமைவதைவிட சிறப்பானது.
11. ஜனன ஜாதகத்தில் கீழ்கண்ட கிரக நிலைகள் காணப்பட்டால் ஜாதகர் நிகரற்ற
செல்வ நிலை அடைவார்.
அ. சூரியன் நல்ல பாவத்தில் உச்சம் பெற்று குரு பார்க்க.
அ.1 இலக்னாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து, தன அல்லது இலாப
பாவத்தில் நிற்கவும்.
ஆ. இலாபாதிபதியும், குருவும் இலக்னத்தில் இருந்து களத்திர பாவத்தில்
சந்திரன் இருக்கவும்.
ஆ.1. சுக்கிரன் முழு சக்தியுடன் களத்திர பாவாதிபதியைப் பார்க்கவும்.
இ. பூர்வ புண்யாதிபதியும்,
பாக்கியாதிபதியும் இணைந்து சுக பாவத்தில் இருந்து,
பாதிக்கப்படாத சூரியன் பார்க்கவும்.
இ. 1. பாதிப்பு அடையாத களத்திர பாவாதிபதியும், பாக்கியாதிபதியும்
இணைந்து 7 இல் இருந்து 11 ஆம் பாவாதிபதி பார்க்கவும்.
ஈ. பாக்கியாதிபதியும்,
சுக ஸ்தானாதிபதியும், சந்திரனோடு இணைந்து பாக்கிய
பாவத்தில் இருந்து குருவின் பார்வை பெறவும்.
ஈ. 1. சூரியனும், புதனும் இணைந்து பாக்யத்தில் இருந்து குருவின்
பார்வை பெறவும்.
உ. குரு
9 ஆம் இடத்திலும், 4 ஆம் அதிபதி இலக்னத்திலும், 10 மற்றும் 11 ஆம் பாவாதிபதிகள்
இணைந்து இருக்கவும்.
ஊ.
செவ்வாயும் குருவும் 4 இல் இருக்கவும், இடம் கொடுத்தவன் தனபாவத்தில் இருக்கவும்.
எ.
குரு, சுக்கிரனுடன் இலக்னாதிபதியும் இணைந்திருக்கவும்.
ஏ.
இலக்னாதிபதி, 4 ஆம் அதிபதி, சந்திரன் ஆகியோரின் இணைவும்.
ஐ.
தர்மாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருக்கவும்.
ஒ.
சுகாதிபதியும், சுக்கிரனும் இணைந்து தனபாவத்தில் இருக்கவும்.
ஓ.
சுகாதிபதியும், தனகாரகனும் இணைந்து இருக்கவும்.
ஔ. செவ்வாய்,
சுக்கிரன், சந்திரன் ஆகியோர் இணைந்து சுக பாவததில் இருக்கவும்.
ஔ. 1. இலக்னத்தில் குருவும், சந்திரனும், புதனும்
களத்திர பாவத்தில் இருக்கவும். .
11. மகர இலக்ன ஜாதகருக்கு, ஒளிக்கிரகங்களான சூரிய, சந்திரர்கள்
சுக்கிரனுடன் இணைந்து சிம்மத்தில் இருக்க இளமையில் அதிக சொத்துக்கள் இருந்து, அவரது
காமவெறியால் பல பெண்களைத் தொடர்புற்று அதன் காரணமாக அனைத்து செல்வங்களையும் இழப்பார்.
8 ஆம் இடத்தில் சந்திரன், சுக்கிரனின் இணைவு
ஜாதகருக்கு காம இன்பங்களைப் பெறும் உணர்வுகளைத் தூண்டும். அதன் காரணமாகத் தன் மனைவி
இல்லாத பிற பெண்களிடம் ரகசியமான உறவுகளை வைத்திருப்பார். சூரியனும் இணைந்தால் மேலும்
ஜாதகரின் கேடு கெட்ட குணங்களை அதிகரிக்கும். இம் மூன்று கிரகங்களும் சேர்ந்து, தனபாவமும்,
இரகசியங்களுக்கு உரிய இராசியுமான கும்ப இராசியைப் பார்க்கும் போது, ஜாதருக்கு அவரின்
இரகசிய உறவுகளால் செல்வ இழப்பைத் தருகிறது.
12 கர்ம காரகன், கர்மாதிபதியுடன் இணைந்து பூர்வ புண்யத்தில்
அல்லது தர்ம பாவத்தில் இருக்க ஜாதகர் பெரிய இல்லங்களை உடையவராய் இருப்பார். இலக்னதிபதி
4 இல் இருந்து சுக்கிரன் அல்லது குரு நல்ல நிலையில் இருந்தால் இதே பலனே ஏற்படும்.
13. பாக்கியாதிபதி, கர்மாதிபதி, தனாதிபதி ஆகியோர்
இணைந்து சுக பாவத்தில் இருந்து, சுகாதிபதியும் பலம் மிக்கவராக இருந்து 12 ஆம் இடமும்
காலியாக இருக்க ஜாதகர் செல்வப் பிரபுவாக விளங்குவார்.
14. குரு 3 ஆம் பாவத்திலும், சுக்கிரனும், 4 ஆம்
அதிபதியும் பரஸ்பர பார்வை புரிந்து கொள்ளும் நிலை ஜாதகருக்கு செல்வ நிலையை உயர்த்தும். ஆனால் அவர் பழைய வீட்டில்
வசிப்பார்.
2
ஆம் அதிபதி குரு 3 இல் இருந்து, 4 ஆம் அதிபதி சனி புராதன/ பழமையான வீட்டைக் குறிகாட்டுவதால்
இந்த நிலை விருச்சிக இலக்னத்துக்கு சரியாக வரும்.
15. குருவும்,
சந்திரனும் இணைந்து தனபாவத்தில் இருக்க 9 ஆம் அதிபதி பார்க்க ஜாதகருக்கு அரசு மரியாதைகள் கிடைத்து, செல்வமும்
சேரும்.
16. இராகு, குரு, சுக்கிரன் மற்றும் சந்திரனுக்கு
இடம் கொடுத்த கிரகங்கள் இலக்னம் அல்லது சந்திர கேந்திரங்களில் இருந்து 7 ஆம் அதிபதியும்,
11 ஆம் அதிபதியும் இணைந்து திரிகோணத்தில் இருக்க ஜாதகர் உயர்கல்வி கற்றவராகவும், செல்வந்தராகவும்,
நிறைய வேலைக்காரர்கள் உடையவராகவும், இவரைப் பின்பற்றி நடக்கும் கூட்டத்தையும் கொண்டவராகத்
திகழ்வார். இந்த நான்கு கிரகங்களுக்கு இட
ம் கொடுத்த கிரகங்களின் நிலையைப்
பொருத்து யோக பலன்கள் மாறுபடும்.
17. 1. குரு மற்றும் இலக்னாதிபதி இலக்னத்தில்
இருக்க அல்லது
2. புதனுக்கு 11 இல் குருவும், சுக்கிரனும்
இருக்க, அல்லது
3. சூரியன் தனபாவத்திலும், 12 ஆம் அதிபதி
5 ஆம் இடத்திலும் இருக்கவும் ஜாதகர் அவரின் தந்தையை விடவும் உயர்கல்வி கற்ற மேதையாகவும்,
பெரிய பணக்காரராகவும் விளங்குவார்.
18. 1. 5 ஆம் அதிபதி ஒரு கேந்திராதிபதியுடன்
இணைந்து தனபாவத்தில் இருக்கவும். அல்லது
2. குரு 9 ஆம் வீட்டில் இருந்து இராகு
ஒரு கேந்திரத்தில் இருக்கவும் அல்லது
3. ஒளிக் கிரகங்கள் பாக்கிய பாவத்தில்
இருக்கவும் ஜாதகர் வசதி மிக்கவராக இருப்பார்.
19. தர்ம
கர்மாதிபதிகளுடன் சுக்கிரன் இணைந்து 10 இல் இருக்க அல்லது 11 ஆம் அதிபதி இலக்னாதிபதியுடன் இணைந்து தனபாவத்தில்
இருக்கவும் ஜாதகருக்கு செல்வங்கள் வந்து குவிவதோடு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து
வசதிகளையும் பெறுவார்.
20. சந்திர கேந்திரத்தில் தனபாவாதிபதி, பாக்கியாதிபதி,
இலாபாதிபதி இணைந்து இருக்க குரு பார்க்க ஜாதகர் அளவற்ற சொத்துக்களை அடைவார். இந்த மூன்று
கிரகங்களில் ஒன்று சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகர் பெரிய சொத்துக்களை உடையவராவார்.
இலக்னத்துக்கு
தனபாவாதிபதி, பாக்கியாதிபதி, இலாபாதிபதி இணைந்து சந்திர கேந்திரத்தில் இருந்து குருவும்
பார்க்க ஜாதகர் அளவிட முடியாத சொத்துக்களை உடையவராய் இருப்பார். உதாரணமாக – துலா லக்னம்
2 ஆம் அதிபதி செவ்வாய், பாக்கியாதிபதி புதன், இலாபாதிபதி சூரியன் ஆகியோர் சந்திரனுக்குக்
கேந்திரத்தில் இருத்து குருவின் பார்வை பெற்றால் இந்த பலன்கள் அமையும்.
21. 2 இல் குரு இருந்து அவருக்கு இடம் கொடுத்தவர்
9 இல் இருக்க ஜாதகர் அளவிட முடியாத சொத்துக்களை உடையவராய் இருப்பார். உச்சம், ஆட்சி
அடையாத தனித்த குரு மட்டும் இரண்டில் இருந்தால் சொத்து சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.
22. தனபாவாதிபதியும், சந்திரனும் இணைந்து பஞ்சம பாவத்தில்
இருந்தால் மேற் சொன்ன பலன்களே நிகழும்.
23. கீழ்கண்ட இணைவுகள் ஜாதகர் அதிக சொத்துக்களுடன்
திகழ்ந்தாலும், விசன முள்ளவராகவும், உற்சாகம் அற்றவராகவும் ஆக்கிவிடும்.
அ). பஞ்சமாதிபதி ஆட்சி வீட்டில் இருந்து இலாபாதிபதி பாக்கிய பாவத்தில்
இருந்தாலும் அல்லது
ஆ) தனாதிபதியும், சுகாதிபதியும் பாக்கியத்தில் இருக்க, கர்மாதிபதி
தன பாவத்தில் இருக்கவும் அல்லது
இ) இலக்னாதிபதி கர்ம பாவத்திலும்,
தனாதிபதி உச்சம் பெற்றோ, அல்லது
பாக்கியத்தில் இருந்தாலோ – அல்லது
ஈ). பஞ்சமாதிபதியும், ரோகாதிபதியும்
பாக்கியத்தில் இருந்து, பாக்கியாதிபதி தனபாவத்தில் இருக்கவும் இந்த நிலை
ஏற்படும்.
24. இலக்னாதிபதியும்,
செவ்வாயும் தனாதிபதி மற்றும் கர்மாதிபதியுடன் இணைந்து தர்ம பாவத்தில் இருக்க ஜாதகருக்கு
அளவிட முடியாத சொத்துக்கள் சேரும்.
25. ரிஷப இலக்ன ஜாதகருக்கு மகரத்தில் சனி இருந்து
புதன் உச்சம் அடைய மேற்சொன்ன பலனை ஏற்படும்.
9 இல் சனி, புதன் 5 இல் இருந்தால் மேற்
சொன்ன பலனுடன், 5, 9 ஆம் பாவங்கள் புத்திர பாக்கியத்திற்கு தொடர்புள்ள பாவங்கள் ஆதலால்
ஜாதகருக்கு இரட்டைக் குழந்தைகளைத் தரும். அதுபோல் புதனும், சனியும் இரட்டைப் பிறவிகளைக்
குறிக்கும்.
26. குரு 4 ஆம் இடத்திலும், சுக்கிரன் 5 ஆம் இடத்திலும்
செவ்வாய் 7 ஆம் இடத்திலும் இருக்க அல்லது இலக்னத்தை சந்திரன் பார்க்க ஜாதகருக்கு மதிப்பு
மரியாதை, கௌரவம் உயர்வதோடு சொத்துக்களும் சேரும்.
கல்வி, வாகனங்கள்.
27. பாக்கியாதிபதி பூர்வ புண்ணிய
ஸ்தானத்தில் இருந்து குருவால் பார்க்கப்பட்டால் ஜாதகருக்கு பல நவீனமான, ஆடம்பரமான வாகனங்கள்
அமையும்.
28. இலாபாதிபதியுடன் இணைந்த வளர்பிறை சந்திரன் தனபாவத்தில்
அமர ஜாதகருக்கு பல நவீனமான, ஆடம்பரமான வாகனங்கள் அமையும்.
29. இலக்னாதிபதி திரிகோணம் ஏறி, தைரிய, சுக பாவாதிபதிகள்
கர்ம பாவத்தில் இணைந்து இருக்க ஜாதகருக்கு சொத்துக்கள் சேரும். தொழில் வெற்றியும் ஏற்படும்.
30. பாக்கியாதிபதி இலாபத்திலும், இலாபாதிபதி தனபாவத்திலும்
இருந்து இவர்களில் எவரேனும் ஒருவர் இலக்னத்தைப் பார்க்க ஜாதகருக்கு மேற் சொன்ன பலன்களே
ஏற்படும்.
31. குருவும், சந்திரனும் இணைந்து 7 ஆம் இடத்திலும்,
செவ்வாய் விரய பாவத்திலும் இருந்து சூரியனால் பார்க்கப்பட ஜாதகர் அளவற்ற சொத்துக்களுடன்,
அதிகம் கற்றவராகவும் விளங்குவார்.
32. 5 இல் குருவும், 7 இல் புதனும், 11 இல் சந்திரனும்
அமர ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
33. சனி துலாத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருந்து, சுக்கிரனால்
பார்க்கப்பட ஜாதகர் பெரிய செல்வந்தராகவும், உயர் பதவிகளை அடைபவராகவும் திகழ்வார்.
34. குருவும், புதனும் இலக்னத்தில் இருந்து, அவர்களில்
ஒருவர் உச்சம் பெற்று, பஞ்சமாதிபதி 5 ஆம் இடத்திலோ அல்லது 9 ஆம் இடத்திலோ இருக்க மேற்
சொன்ன பலன்களே ஏற்படும்.
35. பாக்கியாதிபதி தைரிய பாவம்
ஏறி குருவால் பார்க்கப்பட அல்லது பாக்கியாதிபதியுடன் சுக்கிரன் இணைந்து இலாபத்தில்
இருக்கவும், ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும் விளங்குவார்.
36. குரு இலக்னத்திலும், புதனும், தனபாவதிபதியும் இணைந்து
கேந்திர பாவத்தில் இருக்கவும் ஜாதகர் அதிக சொத்துக்களுடன், அளவற்ற கல்வியை கற்றவராகவும்
விளங்குவார்.
37. ஒருவர் தன்னிகரில்லாத தனத்துடன் விளங்குவது எப்போது
? –
அ). இலக்னாதிபதி, 3 ஆம் அதிபதி, குரு ஆகிய
மூவரும் உச்சம் பெற அல்லது
ஆ). இலக்னாதிபதியும், கர்மாதிபதியும் இணைந்து
திரிகோணத்தில் இருந்து சனியால் பார்க்கப்பட
அல்லது
இ). இலக்னாதிபதி உச்சம் பெற்று, அவருக்கு இடம்
கொடுத்தவர் திரிகோணம் ஏறவும் அளவற்ற செல்வந்தராக இருப்பார்.
38. 2, 3, 11 ஆம் அதிபதிகள் இணைந்து 9 இல் இருந்து
5 ஆம் அதிபதியால் பார்க்கப்பட இந்த யோகம் ஜாதகருக்கு அவரின் தந்தையைவிட இணையற்ற செல்வத்தையும்,
சந்தோஷத்தையும், வாகனங்களையும், புகழையும் வாரி வழங்கும்.
39. 2, 9 ஆம் அதிபதிகள் இணைந்து
கேத்திரத்தில் இருந்து இலக்னாதிபதியால் பார்க்கப்பட ஜாதகருக்கு ஆரம்ப காலத்தில் சொத்துக்கள்
இல்லை என்றாலும் பிற்காலத்தில் செல்வம் சேரும்.
40. இலக்னம், தன, இலாப பாவதிபதிகள் எவ்விதத்திலேனும்
கேந்திர / திரிகோணங்களில் இடம் பெற ஜாதகர் செல்வ நிலைகளை சந்தோஷமாக அனுபவிப்பார்.
41. இலாபாதிபதி தனபாவத்திலும், தனபாவாதிபதி, பாக்கிய
பாவாதிபதியுடன் இணைந்து பாக்கியத்திலும் இருக்க ஜாதகருக்கு தந்தைவழி சொத்துகள் சேர்வதோடு,
சுயமுயற்சியாலும், அதிர்ஷ்டத்தாலும் கிடைக்கக் கூடிய சொத்துக்களும் சேரும்.
42. செவ்வாய் 9 இல் இருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால்
ஜாதகருக்கு சொத்து விவகாரங்களில் வழக்கு ஏற்பட்டு இறுதியில் வெற்றியைத் தழுவுவார்.
43. 2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து 9 இல் இருந்து
குருவால் பார்க்கப்பட அளவற்ற செல்வம் பெருகும். குருவின் பார்வை இல்லாமல் 6 ஆம் அதிபதியின்
பார்வை பெற தந்தைவழி சொத்துக்களை அடைய உடன் பிறப்புக்களுக்குள் வழக்கு விவகாரங்களை
சந்திக்க நேரும்.
44. 2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் இலக்ன பாவத்தில் இருந்து,
4 ஆம் அதிபதி பாக்கிய பாவத்தில் இருந்தால் ஜாதகர் மண்ணில் உதித்த நாள் முதல் செல்வச்
செழிப்போடு வாழ்வார்.
45. 2 மற்றும் 4 ஆம் அதிபதிகள் திரிக்கோண பாவத்தில்
இணைந்து இருக்க ஜாதகர் ஒழுக்கமான வழிகளில் சம்பாதித்து செல்வம் சேர்ப்பார்.
ஏழ்மை நிலை
46. 2 மற்றும் 6 ஆம் அதிபதிகள் தங்கள் நீச பாவத்தில்
அமர்ந்து, அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ அசுபரால் பார்க்கப்பட ஜாதகருக்கு மகிழ்ச்சியற்ற
மணவாழ்க்கை அமைவதோடு, திருப்தியற்ற குடும்ப முன்னேற்றமும், ஏழ்மையால் மிகுந்த இன்னல்களையும்
அனுபவிப்பார்.
மேஷ இலக்னத்திற்கு சுக்கிரனும், புதனும்
2 மற்றும் 6 ஆம் வீட்டுக்கு உரியவர்கள் ஆகிறார்கள், அவர்கள் இருவரும் ஒருசேர நீசம்
ஆக முடியாது எனவே, இந்த இரு இலக்னங்களுக்கு இந்த யோகம் சாத்தியம் இல்லை.
47. ஒளிக் கிரகங்கள் 2 இல் இருந்து அவர்களுக்கு
இடம் கொடுத்தவன் 6 ஆம் வீட்டிலும், குரு 12 ஆம் வீட்டிலும் இடம் பெற்றால் ஜாதகர் அனைத்தையும்
இழந்து, மீழமுடியாத துயரத்தில் ஆள நேரிடும்.
48. 6 ஆம் அதிபதி உச்சம் பெற்று, 2 ஆம் அதிபதி
பலம் இழந்த நிலையில் விரய பாவத்தில் அமர்ந்து அசுப தாக்கமும் பெற ஜாதகர் தொழில், வேலைகளில்
மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்படுவார்.
பொதுவாக 6 ஆம் பாவம் ஜாதகர் ஒருவருக்கு கீழ்
வேலை செய்வதை குறிகாட்டுகிறது. 2 ஆம் அதிபதி 12 இல் இருந்தால் 6 ஆம் வீட்டைப் பார்ப்பார்.
6 ஆம் அதிபதி உச்சம் பெறும் இந்த யோகத்தில் பாதக நிலையே ஏற்படும். இந்த யோகத்தில் அவர்
சுதந்திரமாக உச்சமானால் சாதக நிலை ஏற்படும்.
பலம் இழந்த 6 ஆம் அதிபதியின் மீதான 2 ஆம் அதிபதியின் தாக்கம் கஷ்டங்களைக் குறைக்கும்.
மேஷ இலக்னத்திற்கு இந்த யோகம் வராது.
49. இலக்னாதிபதி
மற்றும் விரயாதிபதி, இராகுவுடன் இணைந்து விரய பாவத்தில் சுபர் தொடர்பு இன்றி இருந்தால்
ஜாதகருக்கு சொத்துக்கள் சேராது. இந்த யோகம் பிறப்பு முதலே பல தனயோகங்களை பலம் இழக்கச்
செய்துவிடுகிறது.
50. 2 ஆம் அதிபதியும்
சந்திரனும் இணைந்து செவ்வாய் திரிகோணத்தில் அமர்ந்து, இலக்னாதிபதி பலமிழந்து 8 ஆம்
அதிபதியுடன் இணைய ஜாதகருக்கு தன உடலை மறைத்து உடுக்க ஒரு பிட் துணியும் இருக்காது.
51. இலக்னத்தில் இருந்து 2 ஆம் அதிபதியும், சந்திரா இலக்னத்தில்
இருந்து 2, 6, 12 ஆம் அதிபதிகள் ஆகிய 4 கிரகங்கள் இலக்னத்துக்கு 6 ஆம் இடத்தில் இடம்பெற ஜாதகருக்கு முற்றுப் பெறாத கஷ்டங்களும், கவலைகளும்
இருப்பதோடு, அவரை இழிவான ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிடும்.
52. மறைவு ஸ்தானங்களான
6, 8, 12 இல் அனைத்து சுப கிரகங்களும் இருக்கவும் அசுப கிரகங்கள் கேந்திர / கோணங்கள்
மற்றும் தன பாவத்தில் இடம் பெற ஜாதகரின் ஏழ்மை நிலைக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது.
எனினும் யோக காரர்களான அசுபர்கள் 3, 10. 11 இல் இடம்பெற இந்த ஏழ்மை நிலையின் தாக்கம்
குறைந்து ஓரளவு சொத்துக்கள் சேரும்.
போஜன சுகம்
53. இலக்னாதிபதியும்,
சுக்கிரனும் தனபாவத்தில் இருந்து, 2 ஆம் அதிபதி
கேந்திர / கோணத்தில், குரு மற்றும் சந்திரனோடு இருக்க ஜாதகர் வாய்க்கு ருசியான வக்கணையான
இராஜ போஜனத்தை உண்டு மகிழ்வார்.
பலம் மிக்க தன பாவாதிபதி அல்லது ஒரு உச்ச கிரகம்
2 இல் இடம் பெற அல்லது சுபரோடு கூடிய 2 ஆம் வீடு அமைய ஜாதகருக்கு இதே நற்பலன்கள் ஏற்படும்
எனலாம். அதே, பலம் மிக்க அசுப கிரகங்கள் 2 ஆம் வீட்டோடு தொடர்புற ஜாதகர் எவ்வளவு பெரிய
செல்வந்தராய் இருந்தாலும் நேரத்துக்கு சுவையான ஏன் சுமாரான உணவும் கிடைக்காது.
54. சந்திரன், சுக்கிரன்,
குரு ஆகியோர் 2 ஆம் பாவத்தில் இருக்க ஜாதகருக்கு எப்போதும் இராஜ உணவு கிடைக்கும்.
55. இலக்னத்தில்,
இலக்னாதிபதி, தனாதிபதி மற்றும் விரயாதிபதி ஆகியோர் இணைந்திருக்கவும் சந்திரன் 9 ஆம்
இடத்திலும், குரு 2 ஆம் இடத்தைப் பார்க்கவும்
ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக் கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
56. கன்னி இலக்னமாகி சுக்கிரன் 4 ஆம் இடத்திலும், புதன்
5 ஆம் இடத்திலும், குரு இலாப பாவத்திலுமாக அமர்ந்திருக்க ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக்
கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
57. சந்திரனும்,
புதனும் கேந்திரத்தில் அமர்ந்து, 2 ஆம் அதிபதி இலக்னத்தில் இருக்க மேற்சொன்ன பலன்களே
ஏற்படும்.
58. சுக்கிரன்
10 ஆம் இடத்திலும், 11 ஆம் இடத்தில் குருவும் அமர ஜாதகர் பால், குளிர் பானம் போன்ற
உயர்தர பானங்களைக் அருந்தும் பாக்கியம் உடையவராக இருப்பர்.
பேச்சில்
தடங்கல், ஊமை.
59. 2 ஆம் அதிபதி
6, 8, 12 இல் சுக்கிரன் அல்லது புதன் இருக்க தடைப்படும் பேச்சுக்கான பலனை உறுதிப்படுத்துங்கள்.
(காலபுருஷ தத்துவத்தில் 2 ஆம் இராசிக்கு அதிபதி
சுக்கிரன் ஆவார்).
60. 6 ஆம் அதிபதி,
சுக்கிரன் மற்றும் தூமன் இணைந்து 6 ஆம் இடத்தில் அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கவும்,
8 ஆம் அதிபதியும், 2 ஆம் அதிபதியும் பலம் இழந்து காணப்பட ஜாதகர் ஊமையாக இருப்பார்.
61. பலம் இழந்த குரு
2 இல் இருக்க ஜாதகர் திக்கி திக்கி பேசும் திக்குவாய் காரராக இருப்பார். வளர் சந்திரன்
2 இல் இருந்தால் திக்குவாய் சரியாகும். தேய்பிறை சந்திரன் 2 இல் புதனுடன் இருக்க இந்த
திக்குவாய் பிரச்சனை தீராது. இராகுவுடன் இணைந்து தேய்பிறைச் சந்திரன் இருக்கும் ஜாதகர் ஊமையாக இருப்பார்.
62. 2 ஆம் அதிபதி
12 இல் இருக்க, அவருடன் குளிகன் இணைந்து இலக்னத்தில் யமகண்டன் நிற்கவும், தூமன் 2 ஆம்
இடத்தைப் பார்க்கவும் ஜாதகருக்கு தீர்க்க முடியாத பேச்சுப் பிரச்சனை இருக்கும் அல்லது
நிரந்தர ஊமையாய் இருப்பார்.
63. 2 ஆம் அதிபதி,
தூமன் அல்லது எமகண்டனுடன் இணைந்து குருவால் பார்க்கப்பட பேச்சு குறைபாடு இருக்கும்.
64. இலக்னத்தில்
இருந்து முதல் நான்கு வீடுகளின் அதிபதிகள் பலம் இழந்து காணப்பட்டால் ஜாதகர் உண்மையே
பேசமாட்டார். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவார். பிறரை ஏமாற்றிப் பிழைப்பதிலேயே குறியாய்
இருப்பார்.
65. 4, 5 மற்றும்
8 ஆம் அதிபதிகள் இணைந்து 12 இல் இருக்க அல்லது பலம் இழந்து காணப்பட மேற்சொன்ன பலன்களே
நடக்கும்.
66. 2 மற்றும் 4
ஆம் அதிபதிகள் வீழ்ச்சி அடைய இவர்களில் ஒருவரை 8 ஆம் அதிபதி பார்க்க மேற்சொன்ன பலன்களே
நடக்கும்.
67. சனி இரண்டிலும்
இராகு 5 அல்லது 11 இல் இருக்க ஜாதகரின் பேச்சு அர்த்தமற்றதாகவும், சீரற்றதாகவும் இருக்கும்.
கொன்னிக் கொன்னி பேசுவார். பொய்யே பேசுவார்.
கண் பாதிப்பு,
இணைவுகள்
68. 8 ஆம் அதிபதி 2 இல், 4 இல் அசுபக்கிரகங்கள் குருவின்
பார்வை பெறாத நிலையில் இருக்க ஜாதகர் பிறவிக் குருடர் ஆவார்.
குருவின் தாக்கம்
கண்ணில்லாதவருக்கு மாற்று மருந்து எனினும், சுக்கிரன் அல்லது சந்திரன் அல்லது சூரியன்
ஆகியோர் பலம் பொருந்தியவர்களாக இருக்க கண் பார்வை இன்மை இருக்காது.
69. 12 ஆம் அதிபதி
2 இல் இருந்து, இராகு 4 இல் இருக்க கண்களில் இரணம் காரணமாக கண்கள் பாதிப்பு ஏற்படும்.
இராகு திசையிலோ அல்லது 4, 2, 12 ஆம் அதிபதிகளின் திசைகளிலோ கண்ணில் ரணம் ஏற்படக் கூடிய
பயம் ஏற்படும்.
70. 2 ஆம் வீட்டை
சூரியன் பார்க்கவும், 3 ஆம் அதிபதி 6 இல் இருக்கவும் ஜாதகருக்கு இரு கண்களிலும் பிரச்சனை
எழலாம்.
71. 8 ஆம் அதிபதி
6 இல் இருந்து சனி பார்க்க அல்லது 2 ஆம் அதிபதி பலம் இழந்து இலக்னாதிபதிக்கும், விரயாதிபதிக்கும்
நடுவில் உள்ளதால் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.
72. 2 ஆம் அதிபதி,
சூரியனோடு இணைந்து ருண பாவத்தில் இருக்க இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
73. 2 ஆம் வீடு
மற்றும் சுக்கிரன் இருவரும் சனியால் கெட இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
74. கடக இலக்ன ஜாதகருக்கு
சனி, செவ்வாய், சூரியன் ஆகியோர் 2 ஆம் பாவமான சிம்மத்தில் இருக்க கண் பார்வைக் கோளாறுகளை
ஏற்படுத்தும்.
75. சுக்கிரனும்,
குருவும் 6 இல் இருக்க அவர்களுடன் 6 மற்றும் 10 ஆம் அதிபதியும் இணைந்திருந்தால் விபத்தில்
கண்களை இழப்பார்.
76. 2 இல் குளிகன்,
செவ்வாய் மற்றும் 2 ஆம் அதிபதி ஆகியோர் இருந்து, குருவின் பார்வை இல்லையெனில் ஜாதகர்
இளமையிலேயே கண் பார்வை அற்றவர் ஆவார். பலம் மிக்க 2 ஆம் அதிபதி மற்றும் குருவின் பார்வை
இருக்க இந்த பாதிப்பு இருக்காது.
77. தங்கள் பகை வீடுகளில்
2 ஆம் அதிபதி, சுக்கிரன், சந்திரன் இருக்க மாலைக்கண் நோய் ஏற்படும். சந்திரனுக்கு பகைவர்
இல்லை ஆதாலால் அவளுக்கு பாதகமான வீடுகளை எடுத்துக் கொள்ளலாம்.
78. இலக்னாதிபதி,
2 ஆம், 7 ஆம் அதிபதிகள், சந்திரன் ஆகியோர் 6 அல்லது 8 ஆம் பாவத்தில் இருக்க கண்பார்வையைத் திரும்பப் பெற இயலாது.
79. 2 ஆம் இடத்தில்
பலம் இழந்த சுக்கிரனும், சூரியனும் இணைந்து குருவின் பார்வையின்றி இருக்க ஜாதகரை மின்னல்
தாக்கி கண்ணை இழக்க நேரிடும்.
80. இலக்னாதிபதி,
சனி, சுக்கிரன் ஆகியோர் 2 ஆம் வீட்டில் இருக்க கண்ணில் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
81. 2 ஆம் வீடு,
3, 12, 6 ஆம் வீடுகளில் முறையே சனி, சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் நிற்க
எல்லா விதமான பார்வைக் கோளாறுகளும், பாதிப்புகளும் ஜாதகருக்கு ஏற்படும்.
82. 2 ஆம் அதிபதி
6 இல் சுக்கிரனுடன் இணைந்து இருக்கவும், 2 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லாவிடில் ஜாதகருக்கு
சிறிதளவு பார்வை பாதிப்புகள் இருக்கும்.
83. இலக்னாதிபதி
இலக்னத்திலோ அல்லது 2 ஆம் இடத்திலோ சூரியன் மற்றும் 6 ஆம் அதிபதியோடு இணைந்து இருக்க
ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
84. 2 ஆம் அதிபதி 8 இல் நிற்க, சந்திரனும் சனியும் இணைந்திருக்க,
2 இல் சூரியன் இருக்கவும் ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
85. 2 ஆம் அதிபதி
12 இல் இருந்து, 2 ஆம் வீடு சனியால் பார்க்கப்பட்டால் கண் பாதிப்புகள் இருக்கும்.
86. சுக்கிரனுக்கு
திரிகோணத்தில் சந்திரன் இருக்க அனைத்துக் கண் பாதிப்புகளும் சரியாகிவிடும்.
தொண்டை, குரல்வளை, பல் பிரச்சனைகள்
87. இராகு 6 அல்லது
8 ஆம் இடத்தில் 2 ஆம் அதிபதியோடு இருந்து 8 ஆம் அதிபதி மற்றும் செவ்வாயால் பாதிக்கப்பட
தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
88. இலக்னத்துக்கு
இரண்டாம் இடத்தில் சந்திரனில் இருந்து 2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க தொண்டை
அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
89. 4 ஆம் பாவத்தில்
இராகு ஒரு சுபரோடு இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற அளவுக்கு நீண்ட பற்கள்
இருக்கும்.
90. இதே நிலை
ஏற்பட, 2 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டிலும், சூரியன் 8 இல் இருக்க வேண்டும்.
91. 2 ஆம் வீட்டில்
அசுபர், 2, 8 மற்றும் 9 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற
அளவுக்கு நீண்ட பற்கள் இருக்கும்.
92. 4 ஆம் வீட்டில்
இராகு இருந்து, 4 ஆம் அதிபதி சந்திரனோடு இணைந்து 6 அல்லது 8 அல்லது 12 ஆம் வீட்டில்
இருக்க பற்கள் சொத்தை ஆகும்.
93. மிதுன இலக்னத்தில்
ஜனித்தவர்களுக்கு சுக்கிரன் நீசமாகி, 6 ஆம் வீட்டில் சந்திரன், செவ்வாய், கேது இருக்க
பற்களில் பாதிப்புகள் இருக்கும்.
94. 6 ஆம் வீட்டில்
குருவும், 2 இல் இராகுவும், சுக்கிரன் 2 ஆம் அதிபதியோடு இணைந்து 8 ஆம் வீட்டிலும் இருந்தால்
ஜாதகருக்கு உடைந்த பற்கள் இருக்கும்.
95. 2 ஆம் அதிபதி
, பலம் இழந்த சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகியோர் 8 ஆம் வீட்டில் இடம் பெற ஜாதகருக்கு
சீக்கிரமே பற்கள் விழுந்துவிடும்.
தூர தேச வாழ்க்கை, பிறந்த ஊர் வாழ்க்கை
96. 2 ஆம் வீட்டில்
குருவும், இலக்னாதிபதி 9 ஆம் வீட்டிலும், 2 ஆம் அதிபதி 11 ஆம் வீட்டிலும் இருக்க ஜாதகர்
தூர தேசத்தில் வாழ்வார்.
97. பாக்கியாதிபதி
மற்றும் சுகாதிபதி இணைந்து இலக்னத்திலும், இலக்னாதிபதி 2 ஆம் அதிபதி அல்லது புதன் அல்லது
குரு உபய இராசியிலும் இருக்க ஜாதகர் பிறந்த ஊரிலேயே வாழ்வார். இதுவே, இலக்னாதிபதி கேந்திரத்தில்
இருந்து ஸ்திர இராசியில் ஏற்பட்டாலும் இதே நிலை ஏற்படும். ( இந்த நிலைகள், ரிஷபம்,
சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய இலக்னங்களுக்கே நிகழும். ஏனெனில், இவைகளே பரஸ்பர
கேந்திரங்களில் நிற்கும்.)
98. ஸ்திர இலக்னத்தில் அந்த இராசிக்கு அதிபதி இடம் பெறவும்
இதே நிலை ஏற்படும்.
மேற்சொன்ன நான்கு
ஸ்திர இலக்னாதிபதிகள் எந்த ஸ்திர இராசிகளில் இருந்தாலும் ஜாதகர் பிறந்த ஊரிலேயே வாழ்வார்
என்பது உறுதி ஆகிறது அல்லவா ?
99. சர இலக்னாதிபதி
சர இலக்னத்தில் இருந்து மற்றொர் சர வீட்டு அதிபதியை பார்த்தாலும் ஜாதகர் பிறந்த ஊரிலேயே
வாழ்வார். இந்த விதி சர இலக்னங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
100. ஸ்திர இலக்னாதிபதி
உபய இராசியில் புதன் அல்லது குருவுடன் இணைந்து நின்றாலும் இதே பலன் ஏற்படும்.
101. இலக்னம் சர இராசியாகி,
இலக்னாதிபதி, குடும்ப பாவாதிபதியுடன் இணைந்து உபயத்தில் இருக்க ஜாதகர் மனைவியோடு வாழ்வதோடு,
அபிமான களத்திரங்களுடனும் (வைப்பாட்டிகள்) வாழ்வார்.
102. இலக்னத்தில் இராகு
இருந்து, இலாபத்தில் செவ்வாய் இருக்க ஜாதகர் வாழ்க்கைக்கான வழியை வெளிநாட்டிலே அமைத்துக்
கொள்வார். இது முக்கியமாக ஸ்திர இலக்னத்துக்கு சரிவரும். (விருச்சிகத்தை தவிர).
103. உபய இலக்னத்துக்கு 4 இல் செவ்வாய் இருந்து, இலக்னாதிபதி விரயாதிபதியுடன் இணைந்து உபய இராசியில் இருக்க ஜாதகர்
தனது சொத்து பத்துக்களை விற்றுவிட்டு, பிறந்த இடத்தை விட்டுவிட்டு, வெளிநாட்டில் வழக்கு
விவகாரமாக உள்ள சொத்துக்களையும், வறண்ட பூமிகளையும் வாங்குவார்.
104. இலக்னாதிபதி 6, 8, 12 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம்
அதிபதி 8 ஆம் இடத்திலும், 9 ஆம் அதிபதி 6 ஆம் இடத்திலும் இருக்க ஜாதகர் வாழ்க்கையில் சம்பாதிப்பது பழிச்சொற்களையும்,
அவதூறுகளையும் மட்டுமே ஆகும்.
105. 9 ஆம் அதிபதி
பலமற்ற 3 ஆம் அதிபதியுடன் இணைந்து 8 இல் இருக்கவும், இலக்னாதிபதியும், 2 ஆம் அதிபதியும்
தீய இராசியில் இருக்க ஜாதகர் வாழ்க்கையில் வழக்கு விவகாரங்கள் போன்ற பிரச்சனைகளை மட்டுமே
சந்திப்பார்.
106. பலம் மிக்க
சனி இலக்னாதிபதியாகி, அவருடன் 9 ஆம் அதிபதி இணைந்து 3 இல் சுபர் பார்வையின்றி இருந்து,
6 ஆம் அதிபதி கேந்திரத்தில் இருக்கவும் ஜாதகர் தனது வாழ்க்கையை ஓட்ட பிறரிடம் கெஞ்சிக்
கொண்டு இருப்பார்.
107. நீச சந்திரன்
சனி, இராகுவின் சக்தி மிக்க பார்வையைப் பெற ஜாதகர் கையில் காசில்லாமல் ஏழ்மையின் விழிம்பில்
இருப்பார்.
108. ஜாதகர் துரதிர்ஷ்டசாலியாகவும், பாவம் செய்தவராகவும் எப்போது
இருப்பார் ?
அ). தங்கள் ஆட்சி
வீட்டில் இருந்து தீய பாவகங்களில் 2, 4 மற்றும் 10 ஆம் அதிபதிகள் இருக்கவும்.
அல்லது
ஆ). சனி, செவ்வாய்
மற்றும் 2 ஆம் அதிபதி ஆகியோர் 12 ஆம் வீட்டில் இணைந்து இருக்க பாக்கியாதிபதியும், சுகாதிபதியும்
இணைந்து தனபாவத்தில் இருக்கவும் அல்லது.
இ). குருவும், 6 ஆம் அதிபதியும் இருக்கும் இராசிக்கு
எதிர் இராசியில் 8 மற்றும் 9 ஆம் அதிபதிகள் இருந்து பரஸ்பர பார்வை
புரிந்து கொள்ளவும் அல்லது
ஈ). 4 ஆம் அதிபதியும், செவ்வாயும் இணைந்து தனபாவத்தில்
இருக்கவும் அல்லது
109. பாக்கியாதிபதி,
ரோகாதிபதி, இலக்னாதிபதி ஆகியோர் முறையே 6 ஆம் வீட்டிலும், 2 ஆம் வீட்டிலும், 12 ஆம்
வீட்டிலும் அமர ஜாதகர் அதிக கடன் வாங்கி, வேலை ஏதும் இன்றி, குறிக்கோளற்ற அலைச்சல்களை
மேற்கொண்டு, ஏழ்மையில் திரிவார்.
110 சூரியன் 3 ஆம்
இடத்திலும், சந்திரன் 2 ஆம் இடத்திலும், 10 ஆம் அதிபதி 6 ஆம் இட்திலும் இருக்க மேற்
சொன்ன தீய பலன்களே ஏற்படும்.
111. சுகாதிபதியும்
இலாபாதிபதியும் பாக்கிய பாவத்தில் இருக்க செவ்வாயின் அனுகூலமான பார்வை கிடைக்க ஜாதகருக்கு
புதையல் கிடைக்கும்.
112. செவ்வாய், சந்திரன்,
2 ஆம் அதிபதி, 4 ஆம் அதிபதி ஆகியோர் 2 இல் இருக்க ஜாதகருக்கு மேற்சொன்ன பலன்களே நிகழும்.
113. பலம் மிக்க குரு
இலக்னத்திலும், 4, 6, 11 ஆம் வீடுகளின் அதிபதிகள் 2 ஆம் இடத்தில் இருக்க ஜாதகருக்கு மேற்சொன்ன பலன்களே நிகழும்.
114. சந்திரனில்
இருந்து 9 ஆம் அதிபதி, செவ்வாயில் இருந்து 9 ஆம் அதிபதி இலக்னத்தில் இருந்து 11 ஆம்
அதிபதி, குரு ஆகியவை இலக்னத்துக்கு திரிகோணத்தில் இருக்க 3 மற்றும் 4 ஆம் அதிபதிகள்
பார்க்க மேற்சொன்ன பலன்கள் ஏற்படும்.
115. சந்திரன்,
பஞ்சமாதிபதி, ரோகாதிபதி ஆகியோர் 2 இல் இருக்க 2 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் இணைந்து
6 ஆம் வீட்டில் இருக்க ஜாதகர் பொய்களைச் சொல்லியே தன் வாழ்க்கையை ஓட்டுவார்.
No comments:
Post a Comment