Search This Blog

Friday, 2 March 2018

ஜோதிடமும் ஞானிகளும்


ஜோதிடமும் ஞானிகளும்



        ஜோதிடத்தில் சனி கர்மகாரகன், தொழில் காரகன் என்ற புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. இந்த உலகமே கர்மாவை சுற்றியே அல்லது கடமையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் சில முக்கிய கர்மாக்களை அல்லது கடமைகளைச் செய்யவே படைக்கப்பட்டுள்ளான்.  ஆணோ பெண்ணோ அவரவர்க்கு விதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் கடமைகளைச் செய்வதில் இருந்து எவரும் தப்பிக்க இயலாது. கர்மாதிபதியான சனியின் தலைமைக்கு உட்பட்ட, அவனால் தீர்மானிக்கப்பட்ட மேற்சொன்ன கடமைகளை மற்ற கிரக இணைவுகள் தரும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள், அது நல்லதோ, கெட்டதோ அனைத்துமே ஜாதகரின் ஜாதகத்தில் இடம்பெற்றுள்ள கிரக அமைப்புகளைப் பொறுத்தே அமையும்.

         துறவிகள், புனித மகான்கள் மற்றும் சுவாமிகள் ஆகியோர் இந்த இகலோகத்தில் இருந்து முற்றும் துறந்து மோட்சத்தை அடையும் விருப்பம் அவர்கள் உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் இருக்கும் வரை அவர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், தியானம், நோன்புகள், பிராயச்சித்தங்கள் இன்னபிற கர்மாக்களை அல்லது கடமைகளை கண்டிப்பாக, ஒழுங்கு முறையுடன் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். இந்த கைங்கர்யங்களை செய்ய நீருக்கு உரிய சந்திரன், வாயு அல்லது காற்றுக்கு காரகன் சனி ஆகியோரின் அனுகூலம் அவர்களுக்கு வேண்டும். மனதை ஒருநிலையில் வைக்க உதவும் மனோகாரகன் சந்திரனின் ஒத்துழைப்பு அவர்களுக்கு வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்கும் நோன்புகளை நிகழ்த்த தூய, புனிதமான, சிறந்த இடங்கள் வேண்டும். அதற்கு பூமிக்கு உரிய இறைவியான பூதேவியின் அருள், கருணை, ஆசிகள் அவர்களுக்கு வேண்டும். சூரியனின் வெப்பம், வருணனின் மழை, வாயுவின் காற்று ஆகியவற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல வசிப்பிடமும் அவர்களுக்கு அவசியமாகிறது. தன் தினசரி பூஜைகளை, நோன்புகளை தடையின்றி நிறைவேற்ற குறைந்த பட்சம் ஒரு குகையேனும் வேண்டும். எங்ஙனம் பணியாற்ற வேண்டும்? எப்படி பூஜா கைங்கரியங்களை செய்யவேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன ? - இவை அனைத்துமே இந்து மத நூல்களில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளாக, கர்மாக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மேன்மையான, முக்கியத்துவம் மிக்க தத்துவங்களை புனிதர் பரம பூஜ்ய ஶ்ரீமதானந்த தீர்த்த ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மத்வாச்சாரிய சுவாமிகள் தனது துவைத கிரந்தங்களில் விளக்கி அருளியுள்ளார்.

         இதன் காரணமாகவே பெரிய ஞானிகள் சன்யாசிகள், மத குருமார்கள் ஆகியோர், தங்களுக்கு உலக பந்தங்களைவிட்டு மோட்சம் கிடைக்க விதிக்கப்பட்டிருக்கிறாதா? – என்ற கேள்வியை சிறந்த ஜோதிடர்களிடம் கேட்கத் தவறுவதில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், மெய்விளக்க கோட்பாடான, தெய்வீக ஜோதிடமானது முனிவர்களையும், ஞானிகளையும், புனிதர்களையும் தன் ஆதிக்க வரம்புக்குள் கொண்டுவந்துள்ளது.

No comments:

Post a Comment