Search This Blog

Sunday, 29 April 2018

பெண்ணின் மறுமணம்





பெண்ணின் மறுமணம்
 :-


            இம் மறுமணம் எப்போது நியாயப்படுத்தப்படுகிறது ?

      # 12 வருடங்களுக்கும் மேலாக, கணவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாமல்                இருக்க.
      # கணவன் சன்யாசம்பெற.
      # திருமணச் சடங்குகள் நிறைவுறும் முன் கணவன் இறந்துவிட.
      # ஆண்மையற்ற மற்றும் தீய குணமுள்ள கணவனாக.

  பெண்ணின் மறு மணத்திற்கான இணைவுகள் :-

      # 7 ஆம் வீட்டில் சந்திரன், சனி இணைய அல்லது செவ்வாய், சனி இணைய.
      # சுப, அசுபர் இணைந்து 7 ஆம் விட்டில் இருக்க.
      # 8 ஆம் அதிபதி இலக்னத்தில் இருக்க.
      # நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற.
      # இலக்னத்தில், சூரியனும் இராகுவும் இணைந்திருக்க மற்றும் 7 ஆம்                      இடத்தை குரு பாரக்க.
      # ரிஷபம் இலக்னமாகி, 4 இல் செவ்வாயும், 2 இல் சுக்கிரனும் இருக்க.
      # சுய வீடே இலக்னமாகி, செவ்வாய் இருக்க, 7 ஆம் வீட்டில் புதன் இருக்க                 மற்றும் 7 ஆம் அதிபதி ( சுக்கிரன் ) 8 இல் இருக்க.
      # சுக்கிரனின் இராசியிலும், சனியின் திரிம்சாம்சத்திலும் இலக்னம் அல்லது                 இராசி அமைய.
      # 2 ஆம் இடம் உபய இராசியாகி அதில் 7 ஆம் அதிபதி அல்லது                          சுக்கிரன் இருக்க.

XI.  பெண்ணின் குணங்கள் :-
          1.        திரிம்சாம்ச பகுப்பாய்வு :-

கீழ்க்கண்ட அட்டவணையை உபயோகித்து பெண்களுக்கு பலனுரைக்கும் போது
சரி செய்யமுடியாத அளவுக்கு, அவர்களின் உணர்வுகள் புண்படாதவாறு மிகவும்
முன் ஜாக்கிரதையுடன் சொல்ல வேண்டும். ஜாதகரின் பிறந்த நேரம் சரியானதுதான் என உறுதிப்படுத்திய பின்னரே இந்த அட்டவணையை உபயோகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், சில நிமிட வித்தியாசமும் தவறான முடிவை அளிக்கலாம்.

இராசி இலக்னம்/
சந்திர இராசி

    திரிம்சாம்ச இலக்னம்

 செவ்வாயின்

 சனியின்

 குருவின்

  புதனின்

          

சுக்கிரனின்
     5
ஆண்மையுள்ள
கள்ளஉறவு
வைத்தல்
 இராணி
ஆண்தன்மை
முறையற்ற
உறவு
     4   
அவள் நினைத்ததை
சாதிப்பவள்
கணவன்
மரணம்.

நற்குணங்கள்

கலைகளில்
வல்லவர்

ஒழுக்கமற்ற
   1 ,8
பூப்பெய்துவதற்கு
முன்னே ஒழுக்கக்
கேடு

நாட்டியக்காரி

கற்புள்ள

இரட்டை
குணம்

பாவப்பட்ட
 பிறவி
   3,6

சூதுநிறைந்த

மலடி

கற்புள்ள

நற்குண
முள்ள

கள்ளஉறவு
வைத்தல்
   9,12

நல்லவள்

குறைவான
காம இச்சை

கற்புள்ள

திறமை
மிக்க

கள்ள உறவு
கொள்பவள்
   2,7

பாவப்பட்ட
பிறவி

இரண்டாவது
கணவனை
மணந்து
கொள்பவள்



கற்புள்ள



திறமை
மிக்க


மரியாதைக்
 குரியவள்
  10,11

வேலைக்காரி

கீழ்த்தரமான
மனிதர்களை
விரும்புபவள்


கற்புள்ள

பாவப்பட்ட
  பிறவி

புத்திர
பாக்கிய
மற்ற



XII. பிரிவினை மற்றும் விவாகரத்து :-


      # 7 ஆம் அதிபதி 12 ஆம் அதிபதியோடு பரிவர்த்தனை மற்றும் 7 ஆம் வீட்டில்             சனி, இராகு, அல்லது செவ்வாய் இருக்க.
      # 7 ஆம் அதிபதி மற்றும் 12 ஆம் அதிபதி திருக் ஸ்தானத்தில் மற்றும்  7 ஆம்       பாவத்தில்    அசுபர்.
      # 7 ஆம் அதிபதி 12 ஆம் வீட்டில் மற்றும் 6 ஆம் அதிபதியால் பார்க்கப்பட்ட               அசுபர் 7 ஆம் வீட்டில் இருக்க.
      # சூரியன் 7 இல், 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரன் நீசமாக / பகையாக /                   அஸ்தமனமாக
      # ( பெண்களுக்கு ) 7 ஆம் வீட்டிலுள்ள சூரியனை, இராகு அல்லது சனி பார்க்க.
      # 2 ஆம் அதிபதி, 7 ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனையாக, இராகு அல்லது                 கேதுவால் பாதிக்கப்பட.
      # இலக்னம்  / இலக்னாதிபதி / 7 ஆம் வீடு / 7 ஆம் அதிபதி / 2 ஆம் அதிபதி ---             - குருவால்   பார்க்கப்பட அல்லது இணைய.,அதிகமான பிரச்சனைகள்                  இருந்தாலும் தொடர்ந்து  வாழ்க்கை நடத்துவர்.
      # 7 ஆம் வீட்டில், சந்திரன், சனி இணைவு ஏற்பட, கணவன் உயிரோடு                     இருக்கும் போதே மனைவி வேறு ஒருவனை மணம் முடிப்பாள்.
      # சனி மற்றும் இராகு இலக்னத்தில் இருக்க மற்றும் 7 இல் ஒர் அசுபர்                     இருக்க  பொதுவாழ்வில் மனைவியால் அவமானம் ஏற்படும் என்கிற                பயத்தால், மனைவியை கைவிட்டுவிடுவான்.
      #  7 ஆம் வீட்டில் சூரியன், இராகு மற்றும் செவ்வாய் இருக்க. ( பெண்ணின்                ஜாதகத்தில்).

2.  தற்கொலை :-

      # அசுபர், சுக்கிரனுக்கு 4 அல்லது 8 ஆம் இடத்தில் ( ஆணின் ஜாதகத்தில் )                 இருக்க அவனின் மனைவி தற்கொலை புரிந்து கொள்வாள் என்பதைக்                குறிகாட்டுகிறது.
      # அசுபர் இலக்னத்தில் இருக்க, 7 ஆம் அதிபதி மற்றும் இலக்னாதிபதி                      இருவரும் 8 இல் இருக்க, அந்த ஜாதகர் தற்கொலை செய்து கொள்வார்              என்பதைக் குறிகாட்டுகிறது.

3.  துணையைக் கொலை செய்தல் :-

      # மனைவியைக் கொலை செய்தல்:
            # சுக்கிரன் 7 இல் மற்றும் சந்திரன் 12 இல் இருக்க.
            # சுக்கிரன் 7 இல் / திருக் கில் இருக்க, 7 ஆம் வீட்டிலுள்ள 8 ஆம் அதிபதி                  மற்றும் சந்திரனை இராகு மற்றும் செவ்வாய் பார்க்க                                                            வரதட்சிணைக்காகக் கொலை செய்வார்.
      # கணவனைக் கொலை செய்தல் :
            # புதன்  பாதிக்கப்பட்டு 7 ஆம் அதிபதியாக மற்றும் நீசமாக அல்லது 6 / 8                  இல்  இருக்க அல்லது பாபகர்தாரியில் இருக்க.
             # 7 இல் மூன்று அசுபர் இருக்க.
            # ஒரு ஆணின் ஜாதகத்தில், 7 ஆம் வீட்டில், செவ்வாய் மற்றும் சனி இருக்க.
             மற்றும் திருக் ஸ்தானத்தில் 7 ஆம் அதிபதில் இருக்க.
             # 7 இல் சூரியன் மற்றும் திருக் கில் 7 ஆம் அதிபதி இருக்க.

4.  துணை துறவு பூணுதல் :-

            # சனியின் திரிகோணத்தில், சந்திரராசி அல்லது சனி / செவ்வாய் / சந்திரன்
             நவாம்சத்தை சனி பார்க்க.
      # பலமற்ற சனி மற்றும் இலக்னாதிபதி.
      # 6 ஆம் அதிபதி அல்லது 8 ஆம் அதிபதியோடு, 9 ஆம் அதிபதியும், 10 ஆம்               அதிபதியும் இணைய.
      # லக்னத்தில் அல்லது 10 ஆம் வீட்டில் அல்லது 12 ஆம் வீட்டில், பலமற்ற                 சூரியன் + சந்திரன் + குரு இருந்து, சனியால் பாரக்கப்பட.
      # ஒரு ராசியில் 4 அல்லது 5 கிரகங்கள் இருக்க.
      # இலக்கினமும்,10 ஆம் இடமும் சூரியன், சனி மற்றும் இராகுவால்                        பாதிப்படைய.

   பெண் சன்யாசியாதல் :-

      # 7 ஆம் வீட்டில் அசுபரும், 9 ஆம் வீட்டில் சுபரும் இருக்க.
      # இரட்டைப்படை இராசியில் லக்னம் அமைந்து, செவ்வாய், புதன், குரு                    மற்றும் சுக்கிரன் ஆகியோர் மிகவும் பலம் பெற்றிருக்க, மிகவும்                      புகழ் பெற்ற  சன்யாசி ஆவார்

XIII. பொருத்தம்  தொகுப்பு :-

      # 7 ஆம் வீடு  துணை, மணவாழ்க்கை , இசைந்த இனிய வாழ்க்கை / காம
             வாழ்க்கை.
             # இலக்னத்தில் இருந்து அல்லது இராசியில் இருந்து 7 ஆம் வீட்டில் சுபர்                  இருக்க அல்லது  பார்க்க அல்லது அவர்களின் அதிபதிகள் இருக்க                    அல்லது பார்க்க, அந்த பாவகாரகம் முன்னேற்றம் அடைகிறது,                         இல்லையெனில் இல்லை எனலாம். ( 5 ஆம்
             வீட்டுக்கும் இதுவே ) 7 ஆம் வீட்டில் அசுபர் ( உசசம் / சுயவீடாகாத )               இருக்க
   அதன் பலன் :-
                  # சனி எனில் :- வறண்ட மணவாழ்க்கை.
                  # செவ்வா எனில் :- துணைக்கு குறைவான ஆயுள்.
                  # இராகு எனில்:- ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது
                      ஜாதிவிட்டு தொடர்பு.
                  # சூரிய எனில் :- கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள்.

# 7 ஆம் அதிபதி:-
             # இலக்னத்தில் இருந்து, அல்லது 7 ஆம் வீட்டில் இருந்து, 7 ஆம் அதிபதி 6 /              8 / 12 ல் இடம் பெற மணவாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகி விடுகிறது.
             # சந்தோஷமற்ற திருமண வாழ்க்கையை, வக்கிரம் பெற்ற 7 ஆம் அதிபதி                 தருகிறார்.
             # உபய இலக்னங்களுக்கு, 7 ஆம் அதிபதி பாதகாதிபதி. எனவே ,சிறிதளவு,                  7 ஆம் அதிபதி மீதான அசுப பாதிப்பு, மணவாழ்க்கையில் குழப்பங்களை                ஏற்படுத்துகிறது.

# சுக்கிரன் :-
             # சுக்கிரன், செவ்வாய் இணைவு, அதிக காம வீரியத்தை அளிக்கிறது.
             # சுக்கிரன், சூரியன் இணைவு அல்லது சுக்கிரன், சனி இணைவு வீரிய                     சக்தியைக் குறைக்கிறது.
             # ஒன்றுக்கு மேற்பட்ட மணவாழ்க்கையை சுக்கிரன், இராகு இணைவும்                    அல்லது சுக்கிரன், கேது இணைவும் அளிக்கின்றன.
# 2 ஆம் வீடு :-
            # 7 ஆம் வீட்டுக்கு, 8 ஆம் வீடு, 2 ஆம் வீடாவதால், துணைக்கு மாரக                     ஸ்தானமாகிறது.
            # அசுபர் 2 ஆம் வீட்டில் இருக்க, மணவாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
 # 8 ஆம் வீடு :-
            # துணைக்கு மாரக பாவம் மற்றும் பெண்ணுக்கு சௌபாக்கிய ஸ்தானம்             ஆகும்.
             # 8 ஆம் வீட்டில்  சூரியன். செவ்வாய், சனி, அல்லது இராகு இருக்க,                      கணவனின் ஆயுளுக்கு பங்கமாகிறது.
   # 4 ஆம் வீடு :-
             # குடும்ப சந்தோஷம் :- அசுப தொடர்பு, குடும்ப வாழ்க்கை பாதிப்படைகிறது.
       # 5 ஆம் வீடு : புத்திரபாக்கியம் :
             # குழந்தையின்மை, வறண்ட மணவாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
            # 12 ஆம் வீடு : படுக்கை சுகம் / காம உணர்வில் திருப்தி.:
            # 7 ஆம் வீட்டில் இருந்து 6 ஆம் வீடு, 12 ஆம் வீடாவதால், 7 ஆம் வீட்டுக்கு              எதிரி வீடாகிறது. அதாவது, ( 7 ஆம் வீடு ) துணைக்கு மூன்றாவது                  நபருடனான தொடர்பைக் குறிகாட்டுகிறது.
             # ஒன்றுக்கு மேற்பட்ட மண உறவை, சூரியன், சனி அல்லது கேது இணைவு               குறிகாட்டுகிறது.
             # 12 ஆம் வீட்டில் , சுக்கிரன் இருக்க பாதிக்கப்பட்ட மணவாழ்க்கையைக்                         குறிகாட்டுகிறது.
       # விவாக சகம் :( சுக்கிரன்  சனி + இலக்கினம் ) : பாதிப்படைய இல்லற              வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் .
#  உறவுகள் :-
       # இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி இருவரும் எப்போதும் நணபர்களல்ல,              எனினும்  லக்னாதிபதி / 7 ஆம் அதிபதி நிலைமாற்ற ஆய்வு கருத்தில்              கொள்ளப்படலாம்.
       # இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி பரிவர்த்தனை, பரஸ்பர காதலைக்                 கொடுக்கிறது.
       # இலக்னாதிபதி மற்றம் 7 ஆம் அதிபதி பரஸ்பர பார்வையும் பரஸ்பர காதலை             நிலைநிறுத்துகிறது.
       # இருவரின் இணைவு நல்ல பொருத்தத்தை அளிக்கிறது.
       # இலக்னாதிபதி 7 ஆம் வீட்டில் இருக்க துணையின் மீதான அன்பை                      அதிகரித்து அவர்களின் சொல்படி நடக்கச் செய்கிறது.
            # இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி இலக்னத்தில் இருந்து அல்லது 7 ஆம்       வீட்டில் இருந்து 6 /  8, 2 / 12 அல்லது 6 / 8 / 12. ஆம் வீடுகளில்                     இருக்க, எதிர்மறையான விழைவுகளை உறவுகளில்,                                    ஏற்படுத்திவிடுகிறது. இலக்னாதிபதிமட்டும் எனில் ஜாதகர் எதிர்மறை
              ஆனவராகவும், 7 ஆம் அதிபதிமட்டும் எனில், துணைவர்                            எதிர்மறையானவராகவும்  அமைந்துவிடுகிறது.
       # இராசி மற்றும் இராசியதிபதி மற்றும் 7 ஆம் வீடு / 7 ஆம் அதிபதி உறவுகள் :
    # நல்ல மணவாழ்க்கை : -
        # இராசியதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி ஒருவராகி அல்லது நட்பாகி அல்லது               1 / 7  ஆகவும் ஆக .நல்ல மணவாழ்க்கை ஏற்படுகிறது.
            # இராசியதிபதி, இலக்னாதிபதி பரிவர்த்தனையாக.
         # இருவரும் 6 / 8 ஆக அல்லது 2 /12 ஆக இருக்க , மணவாழ்வில்                       கஷ்டங்கள் அதிகரிக்கும்.
திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை.
1.   2 ஆம் வீடு – குடும்பம் – அதன் வளர்ச்சி மற்றும் விருத்தியையும்
2.   4 ஆம் வீடு – இல்லற சுகம், வசதி வாய்ப்புகளையும்
3.   5 ஆம் வீடு – புத்திர பாக்கியம், காதல் விவகாரங்களையும்
4.   7 ஆம் வீடு – மனைவி மற்றும் கணவன், திருமணம், திருமண வாழ்க்கையையும்
5.   8 ஆம் வீடு – பெண்ணின் ஜாதகத்தில் திருமாங்கல்யத்தையும்
6.   12 ஆம் வீடு – படுக்கை சுகங்களையும்
7.   சுக்கிரன் – களத்திரகாரகன், திருமணம், காமம், காம விருப்பம்
8.   குரு – கணவன், குழந்தை.
9.   செவ்வாய் – காமம், கணவன், மண முடிச்சு ஆகியவற்றைக் குறிகாட்டுகின்றன.

திருமண வாழ்க்கையில் சுக்கிரனின் தாக்கம்.

(இராசிகளில் சுக்கிரன் தரும் பலன்கள்)
மேஷம் – பாசமுள்ள தீவிரமான காதலன், பல பெண்களுடன் தொடர்பு இருக்கும்.
ரிஷபம் – அழகிய, கடமை உணர்வுள்ள மனைவி, சந்தோஷமான திருமணம்,   மணவாழ்க்கையில் பேரின்பம் உறுதி, அசைக்க முடியாத காதல் இருக்கும்.
மிதுனம் – அதிக காமம், படித்த மனைவி, பாதிக்கப்பட்ட சுக்கிரன் எனில் இரண்டாவது திருமணம்.
கடகம் – கூடுதல் காமம், காமத்தில் அதிக ஈடுபாடு, சுக்கிரன் பாதிப்படைய - இரு      தாரம், உணர்ச்சி மிக்க மனைவி.
சிம்மம் – மிக உயர்ந்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து மனைவி வருவாள்.   உண்மையான, ஆழமான அன்பு இருக்கும். வீரியம் குறைந்து இருக்கும்.
கன்னி – காமத்தை விட காதலால் அதிக திருப்தி இருக்கும். கீழான பெண்ணின்       மேல் விருப்பம் இருக்கும். இழிவான அற்ப குணமுடைய மனைவி   அமைவாள்.
துலாம் – காதலில் வெற்றி அடைந்து, வெற்றிகரமான திருமண வாழ்வும்,      முன்னேற்றமும் இருக்கும். இரக்க குணமுள்ள, அதிர்ஷ்டக்கார, அழகிய      மனைவி அமைவாள்.
விருச்சிகம் – பல மணவாழ்வு விவகாரங்கள், சுயகாட்டுப்பாடு இல்லாத காரணத்தால், முன் பின் ஆலோசிக்காமல் அவசரப்பட்டு கூடுதல் (இணைதல்) சண்டைக்    கோழி மனைவி அமைவாள்.
தனுசு – மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, வெற்றிகரமான திருமணம் ஏற்படும்.
மகரம் – தாமதத் திருமணம், பாராட்டத் தக்க மனைவி, நிலையற்ற காதல்     விவகாரங்கள் ஏற்படும். காதலுக்கு மரியாதை தரமாட்டார்.
கும்பம் – மோக தாகம் உடையவர். காதலில் ஏமாற்றமும், தாமதத் திருமணமும்      ஏற்படும். நகைச்சுவை உணர்வுள்ள, மனிதாபிமானம் மிக்க மனைவி அமைவாள்.
மீனம் – பல தொடர்புகள் இருந்தாலும் முடிவில் ஒரு சந்தோஷமான திருமணம்      ஏற்படும். நாகரீகமான, அடக்கமான மனைவி அடைவாள்.

No comments:

Post a Comment