Search This Blog

Wednesday, 25 April 2018





திருமணம் முக்கிய இணைவுகள்.


        நம்பத் தகுந்த மற்றும் தரமான பண்டைய நூல்களில் இருந்து 7 ஆம் வீட்டில்

 ஏற்படும் முக்கியமான இணைவுகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

        இலக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ பாக்கியாதிபதி,

இராசியதிபதி, இலக்னாதிபதி, சுப கிரகம் ஆகியவை 7 இல் இருக்கவோ அல்லது 

பாரக்கவோ செய்தால் சந்தோஷமான திருமணமாக அமைந்து, அதிர்ஷ்டமுள்ள, அன்பு 

மிக்க, அழகு மிக்க பெண் மனைவியாக அமைவாள்.

        2, 7, 11 ஆம் அதிபதிகள் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து, குருவால்

 பார்க்கப்பட, நிச்சியமாக சந்தோஷமான திருமணம், குழந்தைப் பிறப்புக்குத் தகுதியான 

பெண்ணுடன் நடக்கும். 2, 7, 11 ஆம் வீடுகளில் சுபர்கள் அமரவும் கணவனும் 

மனைவியும் அனைத்து சுக போகங்களோடும், ஆரோக்கியம் மிக்க, அதிர்ஷ்டமுள்ள 

மழலைச் செல்வங்களோடும் இனிதான வாழ்க்கையை நிம்மதியாகத் தொடரமுடியும்.

       7 ஆம் வீடு மகரமாகி   அதில் சனி, செவ்வாய் இணைவு ஏற்பட, காமம் மிக்க 

அழகும், அதிர்ஷ்டமும் நிறைந்த பெண் மனைவியாக அமைவாள்.

       7 ஆம் அதிபதியும், சுக்கிரனும் இரட்டைப்படை இராசியில் அமர, 7 ஆம் வீடும் 

இரட்டைப்படை இராசியாகி, 5 மற்றும் 7 ஆம் அதிபதிகள் அஸ்தமனமாகியோ

பலமிழந்தோ காணப்பட்டால் நல்ல மனைவியும், குழந்தைகளும் அமைந்து இல்லறம் 

இனிக்கும்.

      7 இல் குரு அமர, ஜாதகர் தன் மனைவியிடம் அன்பு மிக்கவராக இருப்பார்

சுக்கிரன் உச்சம் பெற்றோ, ஆட்சியாகவோ, கோபுராம்சம் அல்லது வைசேஷிகாம்சம் ஆக

மனைவி அல்லது கணவன் நல்லவளாகவும், அழகு மிக்கவளாகவும் இருப்பாள்.

      சுக்கிரன் 7 ஆம் அதிபதியாகி சுபரால் பார்க்கப்பட்டாலும், 7 ஆம் வீடு சுப 

வீடாகவும்,  ஆகி, சுபரால் பார்க்கப்பட்டால் கணவன் அல்லது மனைவி  அர்ப்பணிப்பு 

உணர்வு உள்ளவராகவும், அழகுள்ளவராகவும் அமைவர்.


      சுக்கிரனுக்கு 4 , 8, 12 ஆம் வீடுகளில் அசுபர் இடம் பெற்றோ, சுக்கிரன் பாபகர்தாரி 

யோகத்தில் அமைந்தாலும், திருமணம் நடந்த உடனேயே மனைவி இறக்க நேரலாம்


சுக்கிரனில் இருந்து 7 ஆம் வீட்டில் அசுப கிரகம் இருக்க சந்தோஷமற்ற மணவாழ்க்கை 

அமையும். ரிஷபம் இலக்கினமாகி 7 இல் சுக்கிரன் இருக்க  மனைவிக்கு மரணத்தை 

அளிக்கிறது.    

       களத்திர பாவாதிபதி புத்திர பாவத்திலோ அல்லது மாறியோ இருக்க ஜாதகர் 

திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். அப்படித் திருமணம் செய்து 

கொண்டாலும் 

புத்திர பாக்கியம் இருக்காது. ஆண் ஜாதகத்தைப் பொறுத்தவரை 2 மற்றும் 7 ஆம் 

இடமும், பெண் ஜாதகத்தைப் பொறுத்தவரை 7 மற்றும் 8 ஆம் வீடுகளும் அசுபர் தொடர்பு 

பெற (பார்வை, இருப்பு)    மனைவியோ அல்லது கணவரோ   மறிப்பர். 5 ஆம் அதிபதி 

அல்லது 8 ஆம் அதிபதி களத்திர பாவத்தில் அமர  கணவன் அல்லது மனைவியின் 


மரணம் நிகழ்கிறது. இலக்னம், களத்திர பாவம் மற்றும் விரய பாவம் ஆகியவற்றில் 

அசுபர் இடம்பெற்று, சந்திரனும் பலம் இழந்து புத்திர பாவத்தில் அமர திருமணமோ 

அல்லது குழந்தைப் பிறப்போ மறுக்கப்படுகிறது. சந்திரனும், சுக்கிரனுக்கும் எதிராக சனி

செவ்வாய் இருப்பினும் திருமணம் மறுக்கப்படுகிறது.             

       பெண் ஜாதகத்தில் களத்திர பாவத்தில் சந்திரன், சனி இருக்க மறுதிருமணத்தைக் 

காட்டுகிறது. ஆணின் களத்திர பாவத்தில் இருக்க திருமணம் அல்லது புத்திர பாக்கியம் 

மறுக்கப்படுகிறது. இலக்னத்தில் இருந்து தன, களத்திர மற்றும் ஆயுள் பாவங்களில் 

அசுபக் கிரகங்கள் அமர களத்திர இழப்பு ஏற்படுகிறது. களத்திர பாவத்தில் சூரியன்

இராகு 

அமர்வு, பெண்களால் சொத்துக்களை இழக்கக் காரணமாகிறது.

       களத்திர பாவம் ரிஷபமாகி புதன் இருந்தாலும், மகரமாகி குரு இருந்தாலும்

மீனமாகி சனி + செவ்வாய் இருந்தாலும் வாழ்க்கைத் துணையின் உயிருக்கு 

ஆபத்தாகும்


இலக்னத்தில் புதன் கேது இடம்பெற நோயுள்ள மனைவி அமைவாள். களத்திர பாவம் 

ஓர் அசுப வீடாகவோ அல்லது அசுப நவாம்சம் ஆகவோ இருந்து அதில் சந்திரன் அமர

ஒரு கொடூரமான, கீழான, வீட்டு வேலை செய்கிறவள் மனைவியாக அமைவாள்.  

அதுவே பலம் மிக்க சந்திரனாகில் நல்ல மனைவி அமைவாள். கேது 7 இல் இருக்க 

துஷ்ட மனைவியும், இராகு இருக்க வேற்று ஜாதி, மத மனைவியாகவும் அமைவாள்.

       6, 8, 9 ஆம் வீடுகள் அசுபரோடு தொடர்புற, பார்க்கப்பட பிறன்மனை நாடும் 

மனைவியாக அமைவாள். 7 இல் சனி இருக்க அல்லது நவாம்சத்தில் 7 ஆம் அதிபதி 

அசுபராக அல்லது 7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரன் அசுப இராசியில் இருக்க கொடிய 

மனைவி அமைவாள்.

       பலம் குறைந்த, பாதிப்படைந்த சுக்கிரன் 7 ஆம் வீட்டில் இருக்க, மனைவி 

மலட்டுத் தன்மை உடையவளாகவோ அல்லது கணவன் ஆண்மையற்றவனாகவோ 

இருப்பர். அசுபக் கிரக இணைவோடு, செவ்வாய் 7 இல் அமர, ஜாதகர் சிறுநீரக 

பிரச்சனை 

காரணமாக மலட்டுத் தன்மை அடைவார். சனி, சுக்கிரன் இணைவு 10 அல்லது 8 ஆம் 

பாவத்தில், சுபர் பார்வை பெறாது, ஏற்படுவதும் ஜாதகர் ஆண்மையற்றவராக இருக்கக் 

காரணமாகிறது. நீர் இராசியில் சனி அமர, அந்த இராசி 6 அல்லது 12 ஆம் பாவமாக 

இருக்கும் பட்சத்தில் ஜாதகர் திருநங்கை ஆவார்.

கீழ்கண்ட கிரக நிலைகள் ஆண்மையற்ற தன்மைக்குக் காரணமாகின்றன.
1.   
சனி 6 அல்லது 12 ஆம் இடத்தில் தாழ்வு நிலையில் இருக்கவும்.
2.   
சுக்கிரனில் இருந்து, சனி 6 அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கவும்.

3.   ஒற்றைப்படை இராசியில் புதனும், இரட்டைப்படை இராசியில் சந்திரனும் இருந்து

இருவரும் செவ்வாயால் பார்க்கப்பட்டாலும்.

4.   ஒற்றைப்படை நவாம்சத்தில் இலக்னம், சுக்கிரன், சந்திரன் இடம் பெறவும்.

5.   செவ்வாய் இரட்டைப்படையிலும், இலக்னம் ஒற்றைப்படையிலும் விழவும்.

6.   சனிசந்திரன், செவ்வாய்சூரியன், சனிபுதன் ஆகிய இணைகள், ஒன்று 
ஒற்றைப்படையிலும், மற்றொன்று இரட்டைப்படையிலும் அமர்ந்து, பரஸ்பர பார்வை புரிந்து 
கொண்டாலும்.

7.   சுக்கிரனும், 7 ஆம் அதிபதியும் 6 ஆம் வீட்டில் இருந்தாலும்.

       களத்திர காரகன் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இராகு அல்லது 

கேதுவுடன் இணைய, அசுபரால் பார்க்கப்பட கணவனோ, மனைவியோ பிறன் 

மனை நாடுபவர்களாக இருப்பர். களத்திரகாரகன், செவ்வாய் அல்லது சனி 

நவாம்சத்தில் இருக்க மற்றும் செவ்வாய் அல்லது சனியால் பார்க்கப்பட ஜாதகரின் 

குணம் கேள்விக்குரியதாகும். களத்திர ஸ்தானத்தில் உள்ள களத்திர காரகனை 

செவ்வாய் அல்லது சனி பார்க்க, ஜாதகர் கள்ளத் தொடர்புகள் உள்ள 

கண்ணியமற்றவராக இருப்பார். 7 இல் சனி, சந்திரன், செவ்வாய் இணைந்து 

இருக்க ஜாதகரும் அவரின் மனைவியும் குணம் கெட்டவர்களாக, ஒழுக்கம் 

அற்றவர்களாக  இருப்பர். தன, களத்திர, கர்ம ஸ்தானாதிபதிகள் களத்திர 

பாவத்தில் அமர்ந்தால் ஜாதகர் நெறி தவறிய, சீர்கேடுடைய, ஒழுக்கமற்றவராக 

இருப்பார்.


       நீச்சத்தை நோக்கி நகரும், வலுவிழந்த சந்திரன் அல்லது சுக்கிரன்

கேந்திரத்தில் இருந்து, குரூர சஷ்டியாம்சத்தில்.  அசுபரோடு இணைந்தோ, பார்வை 

பெற்றோ இருக்க தாயுடன் தொடர்பு வைத்திருப்பார். ஓளிக் கிரகங்களுடன் அசுபர் 

இணைந்து கேந்திரத்தில் இருக்கவும், பார்க்கப்படவும் இதே நிலை நீடிக்கும். 4 ஆம் 

வீடு பாதிக்கப்பட்டிருந்தால் இதே நிலை ஏற்படுகிறது.

       பாதிப்பு அடைந்த சனி சுக பாவத்தில் இருக்க, முறையற்ற அல்லது கூடா 

உறவு வைத்திருப்பார். பாக்கிய பாவத்தில் பாதிக்கப்பட்ட சந்திரனோ அல்லது 

சுக்கிரனோ இருக்க குருவுடன் புணர்வார். பாக்கியாதிபதி. சந்திரன், சுக்கிரன் 

ஆகியோர் பாதிக்கப்பட்டாலும் இதே முடிவைக் கூறலாம். களத்திர பாவத்தில் 

அசுபருடன் கூடிய குளிகன் அல்லது சூரியன் 7 இல் இருந்து,  செவ்வாய் 4 இல் 

இருக்கவும் ,அல்லது செவ்வாய் சுகபாவத்திலும், இராகு களத்திர பாவத்தில் 

இடம்பெற்று இருக்கவும் அல்லது செவ்வாயின் வீட்டில் அமர்ந்த களத்திர 

பாவாதிபதியை சுக்கிரன் பார்த்தாலோ அல்லது 3 கேந்திர பாவங்களில் அசுபர் 

இடம் பெற்று இருந்தாலோ ஜாதகரின் காமம், முரட்டுத்தனமானதாக, 

கொடூரமானதாக, மிருகத்தனமானதாகவும் இருக்கும்.

       குடும்பாதிபதியும், களத்திராதிபதியும் நீச பாவத்தில் அமர்ந்து, சுபகிரகங்கள் 

கேந்திர, திரிகோணங்களில் இடம் பெற்றால் ஒரேயொரு திருமணம் நடக்கும். 

சூரியன் மற்றும் செவ்வாயின் நவாம்சத்தில், குரு மற்றும் சுக்கிரன் இடம் பெறவும் 

அல்லது களத்திர பாவம் அமர்ந்த புதன், குருவின் நவாம்சத்தில் அமர்ந்தாலும் 

ஜாதகர் ஒரு முறை மட்டுமே மணம் முடிப்பார்.


       களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகன் உபய இராசிகளில் 

அல்லது நவாம்சத்தில் அமர ஜாதகர் இரு முறையேனும் திருமணம் செய்து 

கொள்வார். புதன் அல்லது சனி களத்திர பாவத்தில் அமர்ந்து, இலாப பாவத்தில் 

இரு கிரகங்கள் அமர்ந்திருந்தால் இரு மனைவிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

களத்திர ஸ்தானாதிபதி சனியாகி அவருடன் ஓர் அசுபர் இணைய, ஜாதகருக்குப் 

பல மனைவிகள் இருப்பர். களத்திர பாவத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட 

அசுபர்கள் இருக்க அல்லது களத்திர காரகன் சுக்கிரன் நீசமாக, கிரகணமாக 

அல்லது அசுபருடன் கூடி பகை வீட்டில் இருந்தாலும் அல்லது 8 ஆம் அதிபதி 

இலக்னத்தில் இருந்தாலும் அல்லது 7 ஆம் அதிபதியோ, இலக்னாதிபதியோ ருண 

பாவத்தில் இருந்தாலோ அல்லது 7 இல் அசுபர் இருந்து அதன் அதிபதி சுபரோடு 

இணைந்து, நீச வீட்டிலோ அல்லது பகை வீட்டிலோ அமரவும் அல்லது 

குடும்பாதிபதி 6 இல் இருந்து, அசுபர் களத்திர பாவத்தில் இருக்கவும் ஆகிய மேற் 

சொன்ன நிலைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட களத்திரத்திற்கு வகை 

செய்கிறது.


       குடும்பாதிபதி, இலக்னாதிபதி மற்றும் ருணாதிபதி ஆகியோர் அசுபரோடு 


கூடி களத்திர பாவத்தில் அமர்ந்தாலோ அல்லது பலம் மிக்க களத்திர 

ஸ்தானதிபதி 


கேந்திர, கோணங்களில் அமர்ந்து, கர்மாதிபதியால் பார்க்கப்பட்டாலும், அல்லது 

பலம்மிக்க 7 ஆம் மற்றும் 11 ஆம் அதிபதிகள் இணைந்தோ, பரஸ்பர பார்வை 

புரிந்தோ அல்லது கோணத்தில் நின்றாலோ, ஜாதகருக்குப் பல மனைவிகள் 

அமைவர்.


       இலக்னாதிபதியோ அல்லது 7 ஆம் அதிபதியோ நீசம் அல்லது பகை 

வீட்டில் இடம்பெற்றோ அல்லது நவாம்சத்தில் கிரகணம் அடைந்தோ இருக்க 

ஜாதகருக்கு முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே மற்றுமொரு மனைவி 

இருப்பாள்.  வலுவிழந்த 7 ஆம் அதிபதி ஆகி, 7 ஆம் வீட்டில் அசுபர் இருக்க / 

பார்க்க அல்லது அசுப கிரகங்கள் 7 மற்றும் 8 ஆம் வீட்டில் இருக்க மற்றும் 

செவ்வாய் விரய பாவத்தில் இருக்கவும் அல்லது வலுவிழந்த குடும்பாதிபதி ஆகி, 

குடும்ப பாவத்தில் அசுபர் இருக்க அல்லது அந்த பாவத்தைப் பார்க்கவோ மேலே 

குறிப்பிட்ட நிலையே ஏற்படும்.




No comments:

Post a Comment