சுக்கிரனுடன் மற்ற கிரக இணைவுகள் தரும் பலன்கள் –
சூரியன் இணைய – உடலுறவில்
தேர்ந்தவர். அரச குல மங்கை போன்ற உருவ அமைப்பு கொண்ட,
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மனைவி அமைவாள்.
சந்திரன் இணைய – உயர் சமூகத்தில்
உதித்த மனைவி, முரண்பாடுகள் உள்ளவள்.
செவ்வாய் இணைய – ஜாதகர் காமம் மிக்கவர். மனைவி இளமையான, வாளிப்பான, வசீகர தோற்றம் உடையவர்.
புதன் இணைய – அறிவுள்ள,
புத்திசாலித்தனம் மிக்க, இளமை மிக்க, பெருந்தன்மை
மிக்க மனைவி அமைவாள். எப்போதும் காமத்தைப் பற்றியே
பேசுபவளும், ஒழுக்கக் கேடான இலக்கியங்கள்
மீது ஆர்வம் உடையவாளாகவும் இருப்பாள்.
குரு இணைய – அழகிய, பரிசுத்தமான,
ஒழுக்கம் மிக்க மனைவி அமைவாள்.
நல்ல குழந்தைகளைப்
பெற்றெடுப்பாள். திருமண பந்தத்தில்
இருந்து விலகி தவறான வழிகளில் செல்லமாட்டார்கள்.
சனி இணைய – சாந்தமான தன்னடக்கம்
மிக்க மனைவி அமைந்து, மணவாழ்வில் மகிழ்ச்சி
பொங்க வாழ்வார். பாதிப்படைய மோசமான மனைவி அமைவாள்.
இராகு இணைய – இரகசிய காதல் விவகாரங்களில்
வெற்றி.
கேது இணைய – மிகவும்
உணர்ச்சிகரமான காம விவகாரங்களை உடையவர்.
பன்னிரு பாவங்களில் சுக்கிரன் தரும் பலன்கள் –
இலக்ன பாவம் – பெண்களால் மிகவும்
கவரப்படுவார். சிருங்கார ரசமுள்ளவர். மனைவியை
மிகவும் நேசிப்பவர்.
2 ஆம் பாவம் – மனைவிக்கு அடங்கி நடப்பவர். மணவாழ்வில் முழு திருப்தி அடையமாட்டார். எதிலும் திருப்தி அடையாத மனைவியை
உடையவர்.
3 ஆம் பாவம் – கடமை உணர்வுள்ள மனைவி
அமைந்து, நல்ல குடும்பமும் அமையும். பல
பெண்களோடு மகிழ்வோடு உறவாடுவார்.
4 ஆம் பாவம் – சரசம் செய்வதில்
சமர்த்தர். மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை அமையும்.
5 ஆம் பாவம் – காதல் விவகாரம்
உடையவர். சிருங்கார ரசனை உள்ளவர்.
6 ஆம் பாவம் – ஒழுக்கம் அற்றவர்.
வீரியக் குறைவு உள்ளவர். எதிர்பாலரால் வெறுக்கப்படக் கூடியவர். நோயுள்ள மனைவி
உடையவர்.
7 ஆம் பாவம் – காம விருப்பம் அதிகம்
உடையவர். அழகு மிக்க துணையை உடையவர். காம
ரசம் ததும்பும் குணம் உடையவர்.
8 ஆம் பாவம் – தவறான உறவுகள் இருக்கும். காதல் விவகாரங்களில் கஷ்டங்கள் ஏற்படும். ஆரோக்கியக் குறைவுள்ள மனைவி
உடையவர்.
9 ஆம் பாவம் – பக்தி உள்ள மனைவி. மகிழ்ச்சியான
மணவாழ்க்கை உடையவர்.
10 ஆம் பாவம் –
சிறப்பான திருமணம் நடக்கும். மனைவியால் இலாபங்களும், உடலுறவில் உன்னத மகிழ்ச்சியும் இருக்கும்.
11 ஆம் பாவம் – மனைவி மூலம் செல்வம் சேரும். காதல் உணர்வு மிக்கவர்.
12 ஆம் பாவம் – காம சுகம் அடைவதில் அதிக நாட்டம் உடையவர். கொள்கைகள் அற்றவர். நோயுள்ள மனைவி அமைவாள்.
மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கைக்கு உரிய கிரக இணைவுகள் –
1.
வலுவான, அனுகூலமான 7 ஆம் அதிபதி இருக்க
2.
6, 8, 12 க்கு அதிபதியாக இல்லாத கிரகம் 7 இல் இருக்க.
3.
7 ஆம் வீட்டைத் தன் சுய வீடாகக் கொண்ட அசுபரும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தருவார்.
4.
கேந்திரம் அல்லது கோணத்தில் அமர்ந்த 2, 7 மற்றும் 12 ஆம் அதிபதிகள்
குருவால் பார்க்கப்பட.
5.
7 ஆம் வீட்டில் அமர்ந்த கிரகத்திற்கு 2, 7, 11 இல் சுபர் இடம் பெற.
6.
5 மற்றும் 7 ஆம் பாவ அதிபதிகள் வலுவுடன் இருக்க.
7.
7 ஆம் இடத்தையும், 7 ஆம் அதிபதியையும் சுபர் பார்க்க.
8.
குருவும், களத்திர பாவாதிபதியும் வலுவுடன் இருக்க.
9.
5 அல்லது 9 ஆம் பாவாதிபதிகள் சுக்கிரன் மீது பார்வை செய்ய.
10.
இலக்னம், 3, 7, 11 ஆகிய பாவாதிபதிகளின் பார்வை சுக்கிரன் மீது
விழவும்.
11.
வலு மிக்க கோள்களுடன் குடும்ப, களத்திர பாவாதிபதிகள் இணைய.
12.
சுப இராசியில் இலக்னாதிபதியும், களத்திர பாவாதிபதியும் இணைந்து
இருக்க.
13.
இலக்னாதிபதி, 7 ஆம் பாவாதிபதிக்கு மிகவும் அருகில் இருக்க.
14.
7 ஆம் அதிபதி சுக்கிரனாகி, குருவின் இணைவு அல்லது பார்வை பெற.
15.
2 மற்றும் 7 ஆம் அதிபதிகள் பலம் பொருந்தியவர்களாக இருக்க அல்லது
அவர்கள் தங்கள் ஆட்சி வீட்டில் இருக்க.
16.
2 மற்றும் 11 ஆம் இடத்திற்குக் குறிகாட்டியான சூரியன் அல்லது
சந்திரனைப் பார்க்க.
17.
நவாம்ச சக்கரத்தில் இலக்னாதிபதியும், 7 ஆம் அதிபதியும் 6 / 8
அல்லது 2 / 12 ஆகவோ இல்லாது இருக்க.
சீக்கிரமே திருமணம் ஆவதற்கு உரிய கிரக இணைவுகள்.
1.
சுக்கிரன் தனது ஆட்சி வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்து 7 ஆம்
அதிபதி சுபர் இராசியில் இருக்க.
2.
சூரியன் 7 இல், சுக்கிரன் 7 ஆம் அதிபதியுடன் இணைய.
3.
சுக்கிரன் 2 இல் இருக்க, 7 ஆம் அதிபதி 12 இல் இருக்கவும்.
4.
கேந்திர கோணங்களில் குருவும், குடும்பாதிபதியும் இணைந்து இருக்க.
5.
இலக்னாதிபதியும், 7 ஆம் அதிபதியும் இலக்னத்தில் இருக்க.
6.
7 ஆம் அதிபதியோ அல்லது சுக்கிரனோ சுப கர்த்தாரியில் இருக்க அல்லது
கேந்திரத்தில் இருக்கவும்.
7.
7 ஆம் அதிபதி சுபராகி இலக்னாதிபதியுடன் இணைய
8.
இலக்னாதிபதி, குடும்பாதிபதி மற்றும் களத்திர பாவாதிபதி முறையே
இலக்னம், 2, 7 ஆகிய பாவங்களில் இருக்கவும்.
9.
இலக்னாதிபதியுடன் இணைவு பெற்ற
பலம் மிக்க சுக்கிரன்.
10.
இலக்னாதிபதி 7 ஆம் இடத்திலும் 7 ஆம் அதிபதி கேந்திரத்தில் இருக்க.
11.
குடும்பாதிபதி மற்றும் இலாபாதிபதி பரிவர்த்தனை பெறவும்.
12.
சுக்கிரன் கேந்திரத்தில் இருந்து, சுக்கிரனுக்குக் கேந்திரத்தில்
இலக்னாதிபதியும் சனியும் இருக்கவும்.
13.
7 ஆம் அதிபதி பாதிப்பு அடையாமல், வலுவுடன் இருந்து சனி 7 ஆம்
இடத்திலோ அல்லது 5 ஆம் இடத்திலோ இடம் பெறும் போதும்.
14.
7 ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சமாகி இருக்க.
15.
சுப இராசியில், வலுமிக்க 7 ஆம் அதிபதி இருக்க.
16.
7 ஆம் அதிபதி இலக்னத்திலோ அல்லது 2 ஆம் இடத்திலோ இருந்து சுபரின்
இணைவோ, பார்வையோ பெறவும்.
தாமத திருமணம் / திருமண மறுப்பு நிலைக்கான கிரக நிலைகள் -
1.
புதன் அல்லது சனி தொடர்புடைய சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருக்க.
2.
7 ஆம் வீடு, 7 ஆம் அதிபதி, களத்திர காரகன் மீதான அசுப கிரக
தாக்கம்.
3.
சுபரின் தாக்கம் இல்லாத சனி 7 ஆம் இடத்திலோ அல்லது 5 ஆம் இடத்திலோ
இருக்க.
4.
தனுசு இலக்னமாகி அதில் புதன் இருக்க.
5.
7 ஆம் அதிபதி அல்லது நவாம்ச இலக்னாதிபதி அல்லது நவாம்சத்தில்
சந்திரன் நின்ற இராசியதிபதி அஸ்தங்கம் அடையவும்.
6.
அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் நீசம் அடைந்து அசுப கிரகங்களுக்கு
இடையே இருக்கவும்.
7.
செவ்வாய் மற்றும் சனியால் பாதிப்பு அடைந்த சந்திரன் மற்றும்
சுக்கிரன்.
8.
சனி மற்றும் செவ்வாய், சந்திரன் மற்றும் சுக்கிரனுக்கு 7 இல்
இருக்க.
9.
7 ஆம் இடத்தில் அசுப கிரகம் இருந்து, அலி கிரகங்களான புதன் அல்லது
சனியின் பார்வை பெறவும்.
10.
சுபரின் தொடர்பு இல்லாமல் அல்லது அசுபரின் பார்வை பெற்ற இராகு
களத்திர பாவத்தில் அமர.
11.
இலக்னாதிபதி, 7 ஆம் அதிபதி
மற்றும் இலக்னம், 7 ஆம் இடம் ஸ்திர இராசியில் இருக்க, சந்திரன் சர
இராசியில் இருக்கவும்.
12.
இலக்னம், 7 ஆம் வீடு, 2 ஆம் வீடு ஆகியவை சனியின் இராசியில் இடம்
பெறவும்.
13.
சூரிய, சந்திரர்கள் மற்றும் சுக்கிரன் ஆகியோர் சனியின் தாக்கம்
பெற, அதாவது சனியின் சாரம், இராசி, நவாம்சத்தில் இருக்க
14.
வக்கிர கிரகங்கள் குடும்பத்திலோ அல்லது களத்திர பாவத்திலோ இருந்து,
அதன் அதிபதிகள் ஆட்சி பெற்றோ, பார்வை புரிந்தோ இருக்கவும்.
15.
பாதிப்பு அடைந்த 2 ஆம் வீடு அல்லது 7 ஆம் வீடு, அந்த வீட்டின்
கிரகங்கள் ஸ்திர இராசியில் இருக்க.
16.
7 ஆம் இடத்து தொடர்போடு, கீழ் கண்ட கிரகங்களின் இணைவு அல்லது
பரஸ்பர பார்வை பெறவும்.
சனி-செவ்வாய்,
சுக்கிரன் – சந்திரன், சுக்கிரன் – சூரியன், சூரியன் – சனி.
17.
சூரியன் – சுக்கிரன் இடையே உள்ள தூரம் 43° க்கு மேல் இருக்க,
சுக்கிரன் நீசமாக மற்றும் சனியால் பார்க்கப்படவும்.
18.
இராகு / கேது 2/8 அல்லது 5 / 11 ஆக இருக்க தாமத / தடைபட்ட திருமணம்
ஆகும். வலு மிக்க 2 ஆம் அதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி அல்லது அவர்களின் சுய
வீடுகளில் நிற்கவும்.
எப்படி இருக்கும்
திருமண வாழ்க்கை ?
1.
சுக்கிரன் வர்கோத்தமம் பெற பண்புள்ள மனைவி அமைவாள்.
2.
நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் பெற – கௌரவம் மிக்க மனைவி அமைவாள்.
3.
இலக்னாதிபதியும், 7 ஆம் அதிபதியும் 6 / 8 ஆக அமைய, சதாசர்வ காலமும்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனைவி அமைவாள்.
4.
குடும்பம் மற்றும் களத்திர பாவமும், அவற்றின் அதிபதிகள் பாதிப்பு
அடைந்து இருந்தால் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்குத் தொல்லை தரும் மனைவி
அமைவாள்
5.
இலக்னாதிபதியும் 7 ஆம் அதிபதியும் 2 / 12 ஆக அமைய கணவனை வெறுக்கும்
மனைவி அமைவாள்.
6.
களத்திர பாவத்தில் தேவகுரு இருக்க தம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பர
அன்பு மழை பொழிவார்கள்.
7.
இலக்னாதிபதி 7 இல் இடம் பெற்றாலும் ஒருவருக்கொருவர் அன்புடையவராக
இருப்பர்.
8.
சுப இராசியில் 7 ஆம் அதிபதி இருந்து, 7 இல் சுபர் இடம்பெற
ரூபவதியான மனைவி அமைவாள்.
9.
களத்திர பாவத்தில் சுப
பார்வை பெற்ற சூரியன் அல்லது சுக்கிரன் இடம் பெற, ஜாதகருக்கு மிகவும் விசுவாசமுள்ள
மனைவி அமைவாள்.
10.
களத்திர பாவத்தை தேவகுரு பார்க்க கற்புள்ள மனைவி அமைவாள்.
11.
கன்னி இராசியில் 7 ஆம் அதிபதி இருக்க தைரியமான, எதையும் எதிர்
கொள்கிற மனைவி அமைவாள்.
12.
குருவின் இணைவு அல்லது பார்வை பெற்ற 7 ஆம் அதிபதி ஜாதகருக்கு, அவரை
நன்றாகப் புரிந்து கொள்ளக் கூடிய, பண்பு மிக்க மனைவியைத் தருவார்.
13.
மீன இராசி 7 ஆம் இடமாகி குருவின் பார்வை பெற சந்தோஷமற்ற இல்லற
வாழ்க்கையை அளிக்கிறது.
14.
செவ்வாயின் இராசிகளிலோ அல்லது சனியின் இராசிகளிலோ அல்லது 12 ஆம்
இடத்திலோ சுக்கிரன் இடம் பெற ஜாதகர் உணர்ச்சி மிக்கவர் ஆகிறார்.
15.
பலம் மிக்க களத்திர காரகனும், பாக்கிய பாவத்தில் இடம் பெற்ற பலம்
மிக்க 7 ஆம் அதிபதியும் மனைவி மூலமான அதிர்ஷ்டத்தைக் குறிகாட்டுகிறார்.
16.
7 ஆம் இடம், 7 ஆம் அதிபதி மீதான சனி மற்றும் செவ்வாயின் தாக்கம்
எதற்கும் எரிச்சல் அடையக் கூடிய மனைவியைத் தருகிறது.
17.
கடக, சிம்ம இராசிகளை இலக்னமாகக் கொண்ட தம்பதிகள் இடையே பிரிவு ஏற்படும் அல்லது மனைவி
விதவையாவாள்.
18.
சுக்கிரன் சனி இணைவு மண வாழ்க்கையில் துன்பங்களையும் வழக்கு விவகாரங்களையும்
தருகிறது.
19.
செவ்வாய் அல்லது சனி வர்க்கங்களில் சுக்கிரன் இருக்க அல்லது
இவர்களில் ஒருவரின் பார்வை பெற, ஜாதகருக்கு மாற்றான் மனைவியோடு நெருக்கத்தை
உண்டாக்கிவிடுகிறது.
20.
பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் ஆணின் சூரியன்
இருக்க மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கை அமையும்.
21.
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு திரிகோணத்தில் சூரியன் இருந்தாலோ
அல்லது சூரிய சந்திரர்கள் பரிவர்த்தனை அடைந்தாலும் இணக்கமான சந்தோஷமிக்க மண வாழ்வை
மலரச் செய்கிறது.
22.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இராசியில் மற்றவரின்
ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டதும் காதல் கொள்வர்.
23.
5 ஆம் வீட்டில் அசுப கிரகம் இருக்க, ஜாதகர் அழகில்லாத,
அருவருப்பான, வெறுக்கப்பட வேண்டிய பெண் மேல் காதல் கொள்வார்.
24.
7 ஆம் அதிபதிக்கு, இலக்னாதிபதி இயற்கை அல்லது தற்காலிக நண்பர்
ஆனாலும் உண்மை அன்பு செலுத்தும் மனைவி அமைவாள்.
25.
7 ஆம் அதிபதி, 7 ஆம் வீடு சுப சம்பந்தம் பெற வருகிற மனைவி அடக்கம்
உள்ளவளாகவும், விசுவாசம் மிக்கவளாகவும் அமைவாள்.
26.
இலக்னாதிபதி மற்றும் சுபருடன் கூடிய சுக்கிரன் 2, 3, 6, 7, 11 இல்
இருந்தால் திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கையில் அதிர்ஷ்ட ஒளி வீசும்.
27.
சுக்கிரன் 2 அல்லது 10 ஆம் வீட்டில் இருந்து, 7 ஆம் அதிபதி
திரிகோணத்தில் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் நல்ல
முன்னேற்றங்கள் பல ஏற்படும்.
28.
7 ஆம் அதிபதி அசுப கிரகத்துடன் இணைந்து, தன, பாக்கிய, அல்லது கர்ம
பாவத்தில் இருந்தாலும் மேற் சொன்ன பலன்களே ஏற்படும்.
29.
இலக்னாதிபதியை விட 7 ஆம் அதிபதி வலு மிக்கவராக இருப்பின் வரும் மனையாள் உயர் குடும்பத்தில் இருந்து
வருவாள்.
30.
7 இல் குரு இருக்க, ஜாதகர்
மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்த செல்வம் மிக்க, கற்புள்ள மனைவியோடு
மகிழ்ச்சியோடு வாழ்வார்.
No comments:
Post a Comment