திருமணம்
II. இசைந்த இல்வாழ்க்கைக்கான பகுப்பாய்வு :-
1. இசைந்த இல்வாழ்க்கைக்கான பலன் அறிய,
சம்பந்தப்பட்ட வீடுகளுடனான சுப, அசுப கிரக இணைவுகள் மற்றும் பலதரப்பட்ட
கிரகங்களின் இடமாற்றங்கள் அலசப்பட வேண்டும்.
2. இசைந்த இல்வாழ்க்கைக்கான மனோதத்துவ
அணுகுமுறையிலான பகுப்பாய்வு :- ஒருவரின் மனநிலையே மணவாழ்வின்
மகிழ்ச்சி நிலையை உறுதி செய்கிறது. மண வாழ்க்கைக்கான முக்கிய குறிகாட்டிகள்:-
== சூரியன் – கௌரவம், மதிப்பு, மரியாதை மற்றும்
பிதுரார்ஜிதம்.
== சந்திரன் – மனநிலை.
== செவ்வாய் – காமவுணர்வு.
== சுக்கிரன் – காதல்
== இவைகளுடனான, இராகுவின் இணைவு மணவாழ்வின் ஆனந்தத்தை தடை செய்துவிடும்.
இக் கிரகத்துடன் இராகு இணைந்தால் :-
*** சூரியன் :- இருவரின் நிலைகளிலுள்ள ஏற்ற தாழ்வு காரணமாக கௌரவப்
பிரச்சனை ஏற்படுகிறது.
*** சந்திரன் :- மாறுகின்ற மனநிலையைத் தருகிறது.
*** செவ்வாய் :- பிடிவாதகுணம், தம்பதியர் இடையேயான உணர்வுகளை காயப்படுத்தலாம்.
*** சுக்கிரன் : - பெற்றோர் சம்பந்தமின்றி காதல் அல்லது வேறொருவர் மீது
காதல் கொண்டவரோடு திருமணம் நடக்கலாம்.
== 7 ஆம் வீடு, சுத்தமாக மற்றும் சுபர் தொடர்பு பெற, மேற்கண்ட நிலைகள்
ஏற்படாது. ஆனால், இரு நிலைகளில் இராகுவால்
பாதிப்பு ஏற்பட :-
### சந்திரன் + சுக்கிரன் + இராகு = ஆரோக்கியமற்ற காம உணர்வைத் தூண்டுகிறது.
7 ஆம் வீடும் பாதிக்கப்பட்டால்
ஆணானாலும், பெண்ணானாலும்
காம வெறியுடையவர்களாக மாற
வழியுண்டு.
## செவ்வாய் + சுக்கிரன் + இராகு = வெட்கங் கெட்ட காம உணர்வை வெளிப்படுத்துவர்.
## இவற்றில் இரு நிலைகளில் பாதிப்பு ஏற்பட, தம்பதியர் இடையேயான
உறவுகள் பாதிக்கப்படும். எல்லா
நிலைகளும் இராகுவால் பாதிப்படைய (4)
இருவரிடையேயான உறவு சீர்திருத்த
முடியாத நிலையை அடையலாம்.
## பாதிப்பால் ஏற்படுகிற முடிவுகள், சுப / அசுப இணைவைப் பொருத்தே
அமையும்.
III. திருமண காலம் :-
1. இளமையில், சீக்கிரமே திருமணம் நிகழ்தல் :- (18 வயது முதல் 22 வரை )
## 7 ஆம் வீடு, அதிபர், காரகர் ஆகியோர் சுபரோடு இணைவு.
## இலக்னத்தில் சுபர் (வக்ரமில்லாத மற்றும் அஸ்தமனமாகாத சுக்கிரன் )
அல்லது 7 இல் சுபர் மற்றும் பலம்
மிக்க 7 ஆம் அதிபதி மற்றும் 2 / 8 ஆம்
வீடுகளில் அசுபர் இடம் பெறாமை.
## 7 ஆம் அதிபர் 7 ஆம் வீட்டைப் பார்க்க.
## சுயவீடு, கேந்திர / கோணங்களில் 7 ஆம் அதிபர் அல்லது சுப கிரக பார்வைபெற
## பாதிப்பு அடையாத 7 ஆம் அதிபர் மற்றும் 7 ஆம் வீடு. 2 ஆம் சுபர் சாரம் பெற்றிருக்க.
.## சுக்கிரன்
கேந்திரத்தில் ( 7 ஆம் பாவத்தைத் தவிர ) திரிகோணத்தில் இருக்க.
அஷ்டவர்க்கத்தில் சுக்கிரனின்
பிந்து 5 க்குக் குறையாமல் இருக்க.
## இலக்னாதிபதி, 7 ஆம் அதிபதி, சுக்கிரன் இவர்களில் இருவருடன், மற்றும்
சுபருடன் இணைவு பெற.
## 7 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன் 4 ஆம் பாவத்தில் இடம்பெற.
## 2, 7 மற்றும் இலக்ன பாவாதிபதிகள் சுபருடன் இணைவு பெற.
## சுபர் வக்ரம் ஆகாதிருக்க மற்றும் சுக்கிரன் அஸ்தமனமாகாது இருக்க.
## சீக்கிர திருமணத்திற்கு மற்ற இணைவுகள் :-
>> 5 / 7 ஆம் பாவங்களில் பலம் மிக்க சந்திரன்
இருக்க.
>> அசுபர் தொடர்பில்லாத காரகர் + இலக்னாதிபதி
அல்லது 7 ஆம் அதிபதி + இலக்னாதிபதி, சுப இராசியில் இருக்க அல்லது
சுபரோடு இணைய.
>> பாதிப்பில்லாத சுக்கிரன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சம்பந்தப்பட்ட
கிரகம்
நீர் ராசியில் இடம்பெறவும்.
2. ## தக்க நேரத்தில் திருமணம்.:-
( 22 முதல் – 25
வயது வரை )
>>> திருமண நிலைகளில் சனி,
சந்திரனால் பாதிப்பில்லாமல்,
சூரியன், இராகு அல்லது கேதுவால் சிறிதளவு
பாதிப்பு ஏற்பட.
>>>
சுபர் வக்கிரமாகாமல் ,சுக்கிரன் அஸ்தமனமாகாதிருக்க ஆனால்
7
ஆம் அதிபதி பாதிப்படைய.
3. ### தாமதத் திருமணம் (
26 முதல் 33 வரை ).:-
>>> தற்காலத்தில் வேலை முதலிலும்,
பின்னர் திருமணமும் ஏற்படுகிறது.
கற்று தெளிந்த குடும்பங்களில்,
இக்காலத்தில், ஆணுக்கு 28 – 30
ஆம் வயதிலும், பெண்ணுக்கு 25 –28
ஆம் வயதிலும் திருமணம் நடந்தாலும், அது தாமதத் திருமணமாகக்
கருதப்படுவதில்லை.
>>> தாமதத்
திருமணத்திற்கு :-
<<< 7 ஆம் வீடு / 7 ஆம் அதிபதி – சுக்கிரன் – சந்திரன் – குரு
( கணவன் காரகன்)
2 /
4 / 5 ஆகிய பாவங்கள் மற்றும் அப் பாவாதிபதிகள் --- இவற்றில்
இரு
நிலைகளில்
செவ்வாய் மற்றும் சனி ஆகிய பலம் மிக்க அசுபர்களால் பாதிப்பு ஏற்பட .
<<< சுபர் வக்கிரமாக மற்றும்
சுக்கிரன் அஸ்தமனமாக.
<<< மேற்கண்டவற்றை இராசியிலிருந்தும்
பார்க்க மற்றும் நவாம்சத்தில் கிரகங்கள்
அசுப நட்சத்திரத்தில் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்..
<<< சுப இணைவு தாமதத்தைக்
குறைக்கிறது.
<<< இரண்டு அல்லது மூன்று,
இராகுவுடனான மற்றும் சனியுடனான நிலைகளில் தாமதத் திருமணம்
குறிகாட்டப்படுகிறது.
<<< விவாஹ சகம் பாதிப்படைய. ( சுக்கிரன்
--- சனி + லக்னம் )
<<< ஒரு ஆண் மற்றும் பெண் கிரகம்
இருக்கும் வீட்டிலிருந்து 7 ஆம் வீட்டில்
சனி
மற்றும் / அல்லது செவ்வாய் இருந்து சுபர் இவர்களைப் பார்க்க
ஒருவர்
தனது முதிர்ந்த வயதில், ஒரு முதிர்கன்னியை மணம் முடிப்பார்
>>> ஜோதிட இணைவுகள்
--- தாமதத் திருமணத்திற்கு -
<<< 7 இல் அசுபர் அல்லது 7 ஆம் வீடு
மற்றும் 7 ஆம் அதிபதியை அசுபர் பார்க்க.
<<< 7 இல் சனி
மற்றும் கேது.
<<< 7 ஆம்
அதிபதி அல்லது 7 ஆம் வீட்டுடன் சனி இணைவு அல்லது பார்வை.
<<< லக்னத்தில் கேது மற்றும் புதன்.
<<< 7 இல் சூரியன் , பலமிழந்த சந்திரன் மற்றும் இராகு.
<<< புதன், குரு
அல்லது சுக்கிரன் வக்கிரமாகி இலக்னத்தில்.
<<< 2 வது
அல்லது 3 வது வீட்டில் 7 ஆம் அல்லது 12 ஆம் அதிபதி இருக்க.
<<< 2 ஆம் வீட்டில் சூரியன்,
செவ்வாய் அல்லது சனி இருக்க.
<<< 8 ஆம் அதிபதி 7 இல் அல்லது 7 ஆம்
அதிபதி 8 இல் இருக்க.
<<< சுக்கிரன் திருக் பாவத்தில்
இருக்க.
<<< சுக்கிரன் அல்லது 7 ஆம் அதிபதி
சனியால் பார்க்கப்பட அல்லது
இராகு அல்லது கேதுவுடன் இணைந்து இருக்க.
<<< 7 ஆம் வீட்டில் செவ்வாய்
மட்டும் இருக்க.
<<<
7 ஆம் அதிபதி வக்கிரமாகி மற்றும் 8 ஆம் அதிபதி செவ்வாயாக.
<<< 7 ஆம் அதிபதி, இலக்னத்திலிருந்தோ
அல்லது 7 ஆம் வீட்டில் இருந்தோ
6 / 8 / 12 இல் இருக்க.
<<< 6 / 8 / 12 இல் சந்திரன் மற்றும்
4 இல் சுக்கிரன் இருக்க.
<<< லக்னத்தில் சுக்கிரன் மற்றும் இராகுவும்,
7 இல் செவ்வாய் இருக்க.
<<< சூரிய, சந்திரரை சனி பார்க்க.
<<< 5 ஆம் வீட்டில் 8 ஆம் அதிபதி
இருக்க.
<<< இலக்னம் / இராசி / சுக்கிரனில் இருந்து
7 ஆம் வீட்டில் நீசமடைந்த அல்லது அஸ்தமனமாகிய
கிரகம் இருக்க .
<<< அசுப கிரகம் 7 இல் இருக்க அதை
சனி பார்க்க.
<<< 5 அல்லது 7 அல்லது 9 ஆம்
வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருக்க,
சனியால் பார்க்கப்பட.
<<< இலக்னம் அல்லது இராசியிலிருந்து
6 / 8 / 12 இல் நீச குரு இருக்க.
<<< நீச சுக்கிரன், அஸ்தமனமாகிய 7 ஆம்
அதிபதி, 7 ஆம் வீட்டில் சந்திரன் மற்றும் இராகு
இருக்க.
<<< இலக்னம் மற்றும் / 7 ஆம் வீடு
மற்றும் 7 ஆம் அதிபதி / சுக்கிரன் அனைத்தும் ஸ்திர
இராசியிலும், சந்திரன் சர இராசியில் இருக்க.
<<< இலக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து,
அல்லது நவாம்ச இலக்னத்தில் இருந்தும் 6
/ 8 இல் அசுபர் இருக்க.
<<< சுக்கிரன் 5 பிந்துக்களுடன் நீச
ராசியில் அல்லது நவாம்சத்தில் இருந்து,
செவ்வாயால் பாதிப்படைய.
### திருமண வயதைக் குறிகாட்டும் இணைவுகள்:-
<<< 30 வயது : 3 இல் சுக்கிரன்
மற்றும் 7 ஆம் அதிபதி 9 இல் இருக்க.
<<< 31 வயது : 2 இல் இராகு மற்றும் 3
இல் சுக்கிரன் இருக்க.
<<< 30 – 32
வயது : இராகு 5 இல் , சுக்கிரன் 5 இல் மற்றும் சனி 7 இல் இருக்க.
<<< 35 வயது : இலக்னாதிபதி +
சுக்கிரன் மற்றும் 8 ஆம் அதிபதி 8 இல் இருக்க.
<<< 35 வயது : பாதிக்கப்பட்ட 7 ஆம்
அதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட சுக்கிரன்
5
அல்லது 9 ஆம் வீட்டில் இருக்க .
No comments:
Post a Comment