திருமண நிலைகள் (தொடர்ச்சி)
4. >>>
அஷ்டவர்க்க முறை :-
>>>
ஜனன சந்திரனுக்கு 5 / 9 ம் இடம் மீது அல்லது சுக்கிரன் அஷ்டவர்க்கத்தில்
5 அல்லது அதற்கு மேல் பிந்துக்கள்
கொண்ட சுக்கிரன் மீது.
>>>
கீழ்க்கண்ட கணக்கீட்டின் மீதி மேல் ( நட்சத்திரம் அல்லது ராசி அல்லது
அதில் இருந்து திரிகோணத்தில் ) .
>>>
( சுக்கிரனின் சோத்திய பிண்டம் ) * ( சுக்கிரனின் பீ ஏ வி யில், சுக்கிரனுக்கு 7 ஆம் பாவத்தில் உள்ள பிந்துக்கள் ) வகுத்தல்
27 அல்லது 12 ஆல்.
>>>
மேற்கண்ட நட்சத்திராதிபதி மற்றும் இராசியதிபதி, திருமண காலத்தின்
தசாதிபதி / அந்தர தசாதிபதியையும் காட்டுகிறது.
V. >>> அஷ்டகவர்க்கம் மற்றும் பொருத்தம் :-.
1. >>> சந்திரனின் அஷ்டவர்க்கம்
மற்றும் பொருத்தம் :-
>>>
பெண்ணின் சந்திர ராசியின் பிந்துவும், பையனின் அஷ்ட்டவர்க்க சந்திரன்
பிந்துவும் அதிக அளவு இருக்கவேண்டும்.
இதுவே ஆணுக்கு மாறிவரும்.
>>>
பையனின் காரகாம்ச இலக்னமும், பெண்ணின் சந்திரராசியும் ஒன்றாக இருக்க வேண்டும்,
சந்திரன் பையனின் அஷ்டகவர்க்கத்தில் ஒரு
பிந்து கொடுத்திருக்க வேண்டும்.
>>>
பெண்ணின் சந்திர அஷ்ட்டகவர்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள இராசியில்,
பையனின் இராசி அல்லது லக்னம் அமைய
வேண்டும்.
>>>
மேலே சொல்லப்பட்டவையை, நண்பரகள், உயர்அதிகாரிகள், உடன் பணிபுரிபவர்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள், அரசர் அல்லது மனைவி ஆகியவர்களுக்கும்
பயன்படுத்தலாம்.
>>>
அப்படிப்பட்டவர்களின் முகத்தில் காலையில் எழுந்தவுடன் விழிக்கலாம்.
>>>
இப்படி பொருத்தமானவர்களுக்கு ஆடைகள் வாங்கித்தர ஜாதகரின்
வாழ்க்கையில் மிகுந்த முன்னேற்றம்
ஏற்படும்.
>>>
சந்திரனனின் அஷ்டகவர்கத்தில் குறைவான பிந்துக்கள் இருக்க
நேர்மாறாக இருக்கும்
2.
>>>> சுக்கிரனின் அஷ்டகவர்க்கமும் பொருத்தமும் :-
>>>சுக்கிரனின்
பின்னாஷ்டவர்க்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள இராசியின்
மீது
கோசார சுக்கிரன் வரும்போது, கீழ்க் கண்டவற்றிற்கு நல்லது :-
>>> இசை கற்க.
>>>
திருமணஞ்செய்ய.
>>> படுக்கை, துணிமணிகள் மற்ற பொருள்கள் வாங்க.
>>> இந்த இராசியின் திசையில் படுக்கையறை அமைத்தால், மணப்
பெண் வருவாள் மற்றும் மதிப்பிற்குரிய
பெரியவர்களை சந்திப்பதற்கும்
நல்லது.
>>> இந்த இராசியின் திசையில் இருந்து மணமகள் வந்தால் மகிழ்ச்சி, புத்திர
பாக்கியம், ஆயுள், மற்றும் நல்யோகம் ஆகியவை
ஏற்படும். சுக்கிரனின்
பின்னாஷ்ட வர்க்கத்தில் குறைந்த அளவு பிந்து இருக்கும்
இராசியின் திசையில் இருந்து வந்தால்,
துன்பங்கள், துயரங்கள் மற்றும்
நோய்கள் ஆகியவை ஏற்படும்.
>>>
சுக்கிரனின் அல்லது சந்திரனின் நவாம்சாதிபதியைப் பொருத்துப்
பெண்ணின் நிறம், தோற்றம் மற்றும் குணங்கள்
இருக்கும். 7 ஆம்
அதிபதியைப் பொருத்து கற்பு, நல்லொழுக்கம்
அமையும்.
>>>
பொருத்தம் :- மகிழ்ச்சியான, காதல் மிக்க, மனமொத்த திருமணத்திற்கு :-
>>>
பையனின் சந்திர அஷ்டவர்க்கத்தில், சந்திரனின் காரகாம்ச அதிபதியால் அளிக்கப்பட்ட பிந்துக்கள்
அதிகமாக உள்ள இராசியில், பெண்ணின் சந்திர ராசியாய் அமைய. அதேபோல் ஆணுக்கும்.
>>>
பையனின் சுக்கிர அஷ்டவர்க்கத்தில் சுக்கிரனுக்கு 7 ஆம் பாவத்துக்கு
பெண்ணின் பிறந்த நட்சத்திராதிபதியால்
கொடுக்கப்பட்ட பிந்து
கீழ்க்கண்ட கிரகங்களால்
கொடுக்கப்படபடிருந்தால்.
>>> சூரியன் :- (
பெண்ணின் நட்சத்திராதிபதி சூரியனின் நட்சத்தில் இருந்தால் அதாவது கார்த்திகை,
உத்திரம்,உத்திராடம் ) கணவனுக்கு,
அவனின் ஆன்மா போல் ஒன்றுபட்டு அன்பு
செலுத்துவாள்.
>>> சந்திரன் :- மிகப் பெரிய
மனப்பொருத்தம் உள்ளவளாக அமைவாள்.
>>> செவ்வாய்
:- கணவன்
இன்னலில் இருக்கும்போது தோளோடு தோள்
கொடுத்து துணை நிற்பாள்.
>>> புதன் :- அவள் கீழ்ப்படிதல் உள்ளவளாகவும், கணவனுடன் உடன்பட்டு
நடப்பவளாகவும் இருப்பாள்.
>>> சுக்கிரன் :- சுக்கிரன், தனக்கு 7 ஆம் இடத்திற்கு எந்தவித பிந்துவும்
அளிப்பதில்லை. எனவே, இலக்னதில் இருந்து 7 ஆம்
பாவத்திற்கு, சுக்கிரனின்
பிந்து கிடைத்தால், கணவனுக்கு நிகரான காமப் பசியுடையவளாக
இருப்பாள்.
>>>
சனி :- கணவனுக்கு ஒரு அடிமைபோல், பணி செய்துகிடப்பாள்.
மேலே
சொல்லப்பட்ட விதிகள் லக்னத்திற்கு 7 ஆம் இடத்திலிருந்தும் பார்க்கப்பட
வேண்டும்
>>>
பையனின் சுக்கிர அஷ்டவர்க்கத்தில், சுக்கிரனுக்கு 7 ஆம் பாவத்தால்
கொடுக்கப்பட்ட
அதிக பிந்துக்கள உள்ள இராசியில் சந்திரன் இடம்பெற
அல்லது பெண்ணென்றால் மாறிவர, காம
விஷயத்தில் இணைவான
பொருத்தம் இருக்கும்.
>>> மனப் பொருத்ததிற்கு, கணவனின்
சந்திர அஷ்டவர்க்கத்தில் அதிக அளவு
பிந்து பெண்ணின் இராசி உடைத்தாய் இருக்க
வேண்டும்.
>>> மற்ற அனைத்துப் பொருத்திற்கும், கணவனின்
சர்வாஷ்டவர்க்கத்தில் அதிக
அளவு பிந்து பெண்ணின் இராசி உடைத்தாய் இருக்க
வேண்டும்.
>>>
திருமண நேரம் :-
>>> சீக்கிர திருமணம் :-செவ்வாயால் பார்க்கப்படாத சுக்கிரன், 4 அல்லது
அதற்கு மேலான பிந்துக்கள் ,கேந்திர அல்லது
திரிகோணங்களில்
இருக்க.
>>> செவ்வாயால் பார்க்கப்பட்ட, இராசி அல்லது நவாம்சத்தில் நீசமடைந்த
சுக்கிரன் 5 பிந்துக்களோடு இருக்க.
>>> சுக்கிரனின் சோத்திய பிண்டம் * சுக்கிரனுக்கு 7 இல் உள்ள
பிந்துக்களின்
எண்ணிக்கை, வகுத்தல் 27 அல்லது 12 ஆல்
வகுத்தது போக மீதி ---
மேஷத்திலிருந்து எண்ணவரும் இராசி மீது அல்லது
திரிகோண இராசியில் கோசார
குரு வருங்காலம் திருமணம் நடக்கும்.
>>>
துர்மரணம்
:- மேற்சொன்ன நிலையின் மீது கோசார சனி வருங்காலம்.
>>>
மேற்சொன்ன
சூத்திரத்தில் 27 ஆல் வகுக்க வரும் மீதி - இராசி அஸ்வினி
முதலாக எண்ணவரும் நட்சத்திரத்தின் மீது அல்லது
அதற்குத் திரிகோணத்தின் மீது கோசார குரு வருங்காலம்.
>>> இதே
போன்று, கோசார சூரியன் வருங்காலம்.
அமைதியில்லா மணவாழ்க்கை:-
## 6
/ 8 / 12 ம் வீடுகளில், பிந்துக்கள் குறைந்த சுக்கிரன் மீது, செவ்வாய் மற்றும்
சனியின் தாக்கம் சந்தேகம் நிறைந்த குணத்தைக்
கொடுக்கிறது.
## 7 ஆம் பாவத்தில் செவ்வாய் அல்லது சனி
மற்றும் 7 ஆம் அதிபதி, செவ்வாய்
அல்லது சனி நவாம்சத்தில் இருக்க, ஒழுக்கம் கெட்ட
மனைவி அமைவாள்.
## 7 ஆம் வீட்டில் 5 அல்லது அதற்கு மேலான
பிந்துக்களுடன், செவ்வாய் அல்லது
சனியிருக்க மற்றும் 7 ம் அதிபதி செவ்வாய்
அல்லது சனி நவாம்சமேறி, அல்லது இருவரில்
ஒருவரால் பாரக்கப்பட – மனைவியின்
குணம் சந்தேகத்திற்கு உட்பட்டதாக
இருக்கும்.
மானக்கேடான மனைவி :-
## சுக்கிரன் 4 பிந்துக்களுடன் இராசி அல்லது,
நவாம்சத்தில் நீசமாக மற்றும் செவ்வாயும் நீசமாக.
## சுக்கிரன், இராசி அல்லது, நவாம்சத்தில்
நீசமாகி, செவ்வாயால் பார்க்கப்பட.
கள்ள உறவு
கொள்ளும் மனைவி:-
## சனியின் இராசி அல்லது நவாம்சத்தில் 1
-- 3 பரல்களுடன் சுக்கிரன் இருக்க மற்றும் சனியன்
இராசியில் செவ்வாய் இருக்க.
## 7 ஆம் பாவத்தில் அல்லது 12 ஆம் பாவத்தில்
அசுப நவாம்சத்தில் சந்திரன் இருக்க
மற்றும் அசபர் இணைவுடன், குறைந்த பரல்களுடன்
சுக்கிரன் இருக்க.
## செவ்வாய் அல்லது சனியின் நவாம்சத்தில் 7 ஆம்
அதிபதி இருக்க மற்றும்
# செவ்வாய் அல்லது சனியால் 7 ஆம் வீடு பார்க்கப்பட அல்லது
# செவ்வாய் அல்லது சனியின் ராசியில் 7 ஆம் அதிபதி இருக்க.
## செவ்வாயின் ராசி அல்லது நவாம்சத்தில் 5
அல்லது அதற்கு மேலான பரல்களுடன் சுக்கிரன்
இருக்க மற்றும் சுயவீட்டில் செவ்வாய் இருக்க, பிறன் மனை நாடும் தீவிர பழக்கத்துக்கு அடிமையாவார்.
## இராசி அல்லது நவாம்சத்தில், சுக்கிரன் 4
அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன் மற்றும்
உச்சநிலை பெற மற்றும் பலம்மிக்க செவ்வாயால் பார்க்கப்பட
ஒருவர் அதிக
காமவேட்கையுடன் திகழ்வார்.
## கேந்திரம் அல்லது திரிகோணத்தில், 4 அல்லது
அதற்கு அதிகமான பிந்துக்களுடன்
சுக்கிரன்
இருப்பானாகில், அது அநேக திருமணங்களைக் குறிகாட்டுகிறது. (
சீக்கிர திருமணத்தையும் குறிகாட்டுகிறது ) சுக்கிரன்
பாதிப்படையாத நிலையில் சுகமான மற்றும் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமைகிறது.
செவ்வாயால் பார்க்கப்பட திருமணத்திற்கு பதிலாக பல பெண்களோடு தொடர்பு
கொள்ளவைக்கிறது
## திரிகோணத்தில்,சுக்கிரன் 8 பிந்துக்களுடன்
இருந்தாலும், 2 ம் வீட்டில் பாதிக்கப்பட்டு
இருக்க திருமணத் தடைகள் ஏற்படுகின்றன.
## செவ்வாயின் நவாம்சத்தில் 5 அல்லது அதற்கு
மேற்பட்ட பிந்துக்களை உடைய
சுக்கிரன் மற்றும் சுயவீட்டில் உள்ள செவ்வாய்
அந்த நபர் பெண் பித்துப் பிடித்தவராவார்
## சுக்கிரனின் அஷ்டவர்க்கத்தில், செவ்வாய் 5
அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன்
7ம் வீட்டில் இருக்க மற்றும் 5 ஆம் அதிபதியும், 7 ஆம் அதிபதியும் திரிகோண பரிவர்த்தனையாக, ஒருவர் தன்
மனைவியைக் கைவிடுவார்.
@@ வாகனங்கள்
மற்றும் சொத்துக்கள் :-
## சுக்கிரன் 5 பரல்கள் அல்லது அதற்கு மேலான
பரல்களுடனோ, இலக்னத்தில்
அல்லது 10 ஆம் வீட்டில் இருக்க, ஒன்றுக்கு
மேற்பட்ட வாகனங்களைக் கொடுக்கிறது.
## மேஷத்தில் அல்லது விருச்சிகத்தில்,
சுக்கிரன் 5 பிந்துக்களுக்கு மேலாகப் பெற்று,
சுபரால் பார்க்கப்பட, வாகனங்கள், செல்வம்
மற்றும் சொத்துக்கள் பெறுவார்
## சுக்கிரனுக்கு இடங்கொடுத்தவன்,கேந்திர
அல்லது திரிகோணத்தில், 5 பிந்துக்களுக்கு மேல்
பெற்றிருக்க,ஜாதகர் சொத்து சுகங்களோடு மிகவும் மகிழ்ச்சிகரமான
வாழ்க்கை வாழ்வார்.
## சுக்கிரனுக்கு இடங்கொடுத்தவன்,
சுக்கிரனில் இருந்து 6 வது அல்லது 8 வது அல்லது திரிகோணத்தில்,
5 க்கு மேற்பட்ட பரல்களோடு இருக்க மனைவியைப் பெறுவார் மற்றும்
ஏழையாவார்.
@@ மனைவிகளின்
எண்ணிக்கை :-
## மிகவும் அதிகமாக ( பலம்மிக்க 7 ஆம் அதிபதி
) மற்றும் மிகவும் குறைவாக (பலமற்ற 7
ஆம் அதிபதி ) கீழ்க்கண்டவற்றின் பரல்களின் எண்ணிக்கையைப் பொருத்து
# சுக்கிரனிலிருந்து 7 ஆம் பாவாதிபதி
# சுக்கிரனிலிருந்து 9 ஆம் பாவாதிபதி
#
இலக்னம் அல்லது சந்திரனிலிருந்து 9 ஆம் பாவாதிபதி
# சுக்கிரனிலிருந்து 7 ஆம் அதிபதியின் உச்ச அல்லது நீச ராசி்
VI. வரன் வரும் திசை மற்றும் தூரம்:-
1. 7
ஆம் வீட்டின், அதிபதியின், மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் இராசிகளின்
திசைகளில் இருந்தும்.
2. மேற்சொன்ன
கிரகங்களில் பலம்மிக்க கிரகத்தின் திசையில் இருந்தும்.
# 7 ஆம் பாவத்தில் உள்ள கிரகம்.
# 7 ஆம் பாவத்தைப் பார்க்கும் கிரகம்.
# சந்திரனிலிருந்து 7 ஆம் அதிபதி
# சுக்கிரனிலிருந்து 7 ஆம் அதிபதி.
3. நிலை
மற்றும் பார்வையால் 7 ம் வீட்டை பாதிக்கும் கிரகம் இருக்கும் இராசியின் திசையில்
இருந்து.
4. கணிதமுறை
:-
##
7 ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன் பாகைகளைக் கூட்டிவரும் பாகை விழும்
திசை.
5. தூரம்
:-
## இராசியின்
இயற்கை குணங்களின் படி ( 7 ஆம் அதிபதி + சுக்கிரன் )
# சரராசி எனில் – மிகவும்
தொலைவான தூரத்திலிருந்தும்
# ஸ்திரராசி எனில் – உள்ளூர்
/ அருகிலிருந்தும்.
# உபயராசி எனில் – நடுத்தரமான
தூரத்தில் இருந்தும்.
VII . மனைவியின் குணம் :-
1. நல்ல
மனைவி :-
# 7
ஆம் அதிபதி அல்லது சுக்கிரன், குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட.
#
7 ஆம் அதிபதியுடன் சுபர் இணைவு / சுப நவாம்சம் கேந்திரத்தில் பெற.
# 7 ஆம் பாவத்தில் குரு இருக்க.
# 7 ஆம் அதிபதி 4 இல் அல்லது 10 இல் இருக்க.
#
7 ஆம் பாவத்தை / அதிபதியை சுபர் பாரக்க.
#
கடகம் 7 ஆம் வீடாகி அதில் செவ்வாய் மற்றும் சனி இருக்க, அழகான மற்றும் நன்நடத்தையுடைய
மனைவி அமைவாள்.
#
7 ஆம் அதிபதியாக சூரியன் அல்லது சுக்கிரன் இருந்து சுபரால் பார்க்கப்பட
#
பலம் மிக்க 7 ஆம் அதிபதி குருவோடு இணைய அல்லது பார்க்கப்பட.
# சிம்மம் 7 ஆம் வீடாகி, சுபரால்
பார்க்கப்பட.
#
7 ஆம் பாவத்தில்,
7 ஆம் அதிபதியாகி, புதன் உச்சம் பெற.
2. துஷ்ட மனைவி :-
#
7 ஆம் பாவத்தில் சூரியன் அல்லது 7 ஆம் அதிபதியின் நவாம்சாதிபதி அசுபராக. அவனுக்கு
விருப்பமற்ற மனைவியமைவாள்.
#
7 ஆம் வீட்டில் சனியிருக்க, அருவருப்பான, நோயுள்ள, தீய வார்த்தைகளைப்
பேசக்கூடிய மனைவியமைவாள்.
#
7 ஆம் அதிபதி அல்லது சுக்கிரன், நீச நவாம்சம் பெற.
#
சூரியன் அல்லது சந்திரன் 7 ஆம் அதிபதியாகி, அசுபரால் பாதிப்படைந்து மற்றும் அசுபராசியில்
அல்லது அசுப நவாம்சம் பெற.
No comments:
Post a Comment