கணவனின் தன்மை :-
1. நல்ல
கணவன் :-
#
7 ம் வீடு சொந்த வீடாகி அல்லது சுய நவாம்சமாகி, அதில் குரு அல்லது
புதன் அல்லது
சுக்கிரன் அல்லது சந்திரன் இருக்க.
#
7 ஆம் வீடு சுயவீடாகி அல்லது சுய நவாம்சமாகி அதில் செவ்வாய் இருக்க, காதல் கணவனாகி,
ஆனால் கோபமிக்கவனாக அமைகிறான்.
#
இரட்டைப்படை இராசியில் சுபர் இருக்க மற்றும் 7 ஆம் வீடு சுபர் தொடர்பு பெற.
#
8 ஆம் வீட்டில் சனி இருக்க, உண்மையான கணவன் அமைகிறான்.
2. தீய
கணவன் :-
#
பலங்குறைந்த 7 ஆம் வீடு, 7 இல் உள்ள கிரகம் சுபர் பார்வை பெறாதிருக்க,
தொழில் அல்லது வேலை அற்ற கணவன்
அமைவான்.
#
7 ஆம் வீட்டில் புதன் மற்றும் சனி இருக்க ஆண்மையற்ற கணவன் அமைவான்
# இராசி அல்லது நவாம்சத்தில், 7 ஆம் வீடு, சுய
வீடாகி, சனி அதில் இருக்க, வயது முதிர்ந்த மற்றும்
முட்டாளான கணவனைக் கொடுக்கிறது.
#
8 ஆம் வீட்டில் சனியிருக்க , நோயாளி கணவனைக் குறிகாட்டுகிறது.
#
இலக்னத்தில் அல்லது 8 ஆம் பாவத்தில், இராகு அல்லதி கேது இருக்க இழிவான மற்றும்
அசுத்தமான கணவன் அமைகிறான்.
#
நவாம்சத்தில், சரராசியில் 7 ஆம் வீடு மற்றும் 7 ஆம் அதிபதி அமைய எப்போதும் வீட்டைவிட்டு
வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் கணவனே அமைகிறான்.
#
கும்பமே 7 ஆம் இடமாகி தன் சுய வீட்டில், எவ்வித சுபர் தொடர்புமற்ற சனி
வயது முதிர்ந்த கணவனைக்
குறிகாட்டுகிறான்.
IX. எவ்வகையான திருமணம் ?
# காதல் திருமணம் ( முதலில் காதல், பிறகு திருமணம். ) :-
#
மிகச் சிறந்ததாக 5 / 7 / 9 / 10 அல்லது 11 ஆம் வீடுகளில், 5 ஆம் அதிபதியும்
7 ஆம் அதிபதியும்
இணைவு அல்லது திரிகோண பரிவர்த்தனை அல்லது 3 / 11 தொடர்பு ஆகியவை
காதல் திருமணத்தை நிறைவேற்றும். மேற்கண்ட
இணைவுகள் 6 / 8 /12 இல் விழ காதலர்கள் தங்கள்
காதலைத் தியாகம் செய்துவிட்டு, பிரிவுக்கு உடபடுத்தப்பட்டு, வேறொரு, தெரியாத நபரை மணக்க
நேரிடும்.
#
காதல் திருமணத்திற்கு, 5 ஆம் வீடு, சந்திரன், செவ்வாய், சுக்கிரன் அல்லது இராகுவால் பார்க்கப்பட்டு
மற்றும் பலமற்ற 9 ஆம் வீடும் அமைய வேண்டும்.
#
5 ஆம் வீடு / 5 ஆம் அதிபதி 7 ஆம் வீடு / 7 ஆம் அதிபதி இராகு / கேதுக்களின்
இணைவு அல்லது
பார்வை பெற .
#
7 ஆம் அதிபதி 5 இல் இடம் பெற்று, சுக்கிரன் – சூரியன்,
செவ்வாய் அல்லது இராகுவால் பாதிப்படைய.
#
5 ஆம் அதிபதி இருக்குமிடத்தில், இராகு அல்லது கேது உச்சம்பெற.
#
குரு அல்லது சுக்கிரனை , இராகு அல்லது கேது பார்வை புரிய.
#
இலக்னத்தில் இராகு இருக்க
#
7 இல் சனி + கேது இருக்க.
#
9 ஆம் வீட்டில் சுக்கிரன் இருக்க.
#
சந்திரன், இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி லக்னத்தில் அல்லது 7 ஆம் இடத்தில் இடம்பெற.
#
7 ஆம் அதிபதியோடு செவ்வாய் இலக்னத்திலிருக்க / 7 ஆம் வீட்டில் இருக்க அல்லது 5 ஆம் அதிபதியோடு
5 ஆம் வீட்டிலிருக்க.
#
சுக்கிரன், இலக்னாதிபதியோடு இலக்னத்தில் அல்லது 7 ஆம் வீட்டில், 7 ஆம் அதிபதியோடு இருக்க.
#
7 ம் அதிபதியோடு, லக்னாதிபதி பரிவர்த்தனையாக.
#
7 ஆம் அதிபதி 7 ஆம் வீட்டில் இருக்க.
#
5 ஆம் அதிபதியோடு அல்லது 9 ஆம் அதிபதியோடு இலக்னாதிபதி பரிவர்த்தனையாக
/ பார்க்க அல்லது இணைய.
#
5 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதியோடு இணைய அல்லது 7 ஆம் அதிபதி 9
ஆம் அதிபதியோடு இணைய.
#
5 ஆம் வீட்டிலோ, அல்லது 9 ஆம் வீட்டிலோ செவ்வாய் இருக்க மற்றும் 7
ஆம் அதிபதியோடு 11 ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற.
#
இலக்னத்தில் இருந்து அல்லது சந்திரனில் இருந்து 5 ஆம் இடத்தில் சுக்கிரனிருக்க.
#
இலக்னாதிபதியைவிட, 8 ஆம் அதிபதி பலம் பெற்றவராக இருக்க மற்றும் 9
ம் வீடும், குருவும் பாதிப்படைய, கீழ் சாதிப் பெண்ணுடன்
திருமணம் நடக்கும்.
#
# வெற்றிகரமான காதல் திருமணம்:-
#
இராசி மற்றும் நவாம்சக் கட்டங்களிலும், செவ்வாயும், சுக்கிரனும் பரிவர்த்தனை பெற.
#
கட்டங்களில், ஆணின் செவ்வாயும், பெண்ணின் சுக்கிரனும், இணைய அல்லது பார்க்க.
இதுவே மாறி வர.
#
ஆணின் குரு, பெண்ணின் சுக்கிர இராசியில் இருக்க.
## வெற்றி பெறாத காதல் திருமணம் :-
# ஆணின் இராகு, பெண்ணின் சுக்கிர இராசியில்
அல்லது மாறி வர – விவாகரத்து அல்லது
தொடரும் துன்பம்.
# ஆணின் சுக்கிரன், பெண்ணின் சனியின் இராசியில்
அல்லது மாறி வர.— நீண்டு கொண்டேயிருக்கும்
கவலைகள் மற்றும் கஷ்டங்கள்.
# ஆணின் சுக்கிரன், பெண்ணின் இராகுவின் இராசியில் – ஆணின்
மூர்க்கத்தனமான காம வெறியால் விவாகரத்து ஏற்படலாம்.
# ஆணின் சுக்கிரன், பெண்ணின் சூரிய ராசியில் – விவாகரத்து
அல்லது பிரிவினை.
#
பெண்ணின் செவ்வாய், ஆணின் இராகு இராசியில் – பெண்ணின்
மூர்க்கத்தனமான காம வெறியால் விவாகரத்து ஏற்படலாம்.
2 ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் :-
#
லக்னாதிபதி 7 ஆம் பாவத்தில் இருந்து, சனியால் பார்க்கப்பட.
#
9 ஆம் அதிபதி குருவாகி, சனி மற்றும் இராகு அல்லது கேதுவால் – குரு,
7
ஆம் வீடு, 9 ஆம் வீடு அனைத்தும் பாதிக்கப்பட.
#
புதன் பாகை + 7 ஆம் அதிபதி பாகையின் கூட்டுப் பாகை, சனி, இராகுவால் பாதிக்கப்பட.
#
சுக்கிரன் பாகை + 7 ஆம் அதிபதி பாகை + 9 ஆம் அதிபதி பாகையின் கூட்டுப்
பாகை, சனி
மற்றும் இராகுவால் பாதிக்கப்பட.
#
2 ஆம் பாவம் பாதிக்கப்பட, சுக்கிரன், சனியோடு அல்லது இராகு மற்றும் இலக்னத்தோடு தொடர்புற,
சந்திரன் மற்றும் சுக்கிரன் 7 ஆம் பாவதிபதியோடு தொடர்பு கொள்ள
#
காதலுக்கான இணைவுகள், ஜாதி மாறித் திருமண இணைவுகள் 6 / 8 / 12 இல் ஏற்பட அல்லது
ஒருவரின் சுக்கிரன் மற்றவரின் சனியின் இராசியில்,
இராகு, சூரிய இராசியில் விழ.
X மறுமணம் :-
# இறப்பு மற்றும் விவாகரத்துக்குப் பிறகு
மறுமணம் நியாயமாக கருதப்படுகிறது. பொதுவாக,
மனைவிகளின் எண்ணிக்கை, 7 ஆம் அதிபதியின் நவாம்ச எண்ணிக்கை அல்லது
7 ஆம் அதிபதியை பார்க்கும் கிரகங்களின் எண்ணிக்கையைப் பொருத்து அமைகிறது.
குறிப்பிட்ட யோகங்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
1.
ஆணின் மறுமணம்.:-
# இரு திருமணங்கள் :-
# இலக்னாதிபதி
இலக்னத்தில்
# 8 ஆம் அதிபதி 7 இல்
அல்லது லக்னத்தில்
# 6 இம்
வீட்டில் இலக்னாதிபதி.
#
6 ஆம் வீட்டில், 2 ஆம் அதிபதி மற்றும் 7 ஆம் வீட்டில் அசுபர்.
# 7 ஆம்
அதிபதி அல்லது சுக்கிரன், சுபரோடு இணைந்து, நீச வீட்டில் அல்லது
பகை
வீட்டிலிருக்க மற்றும் 7 ஆம் வீட்டில் அசுபர் இருக்க.
# அசுபரால்
சுக்கிரன் பாதிக்கப்பட.
# 7 ஆம்
வீட்டில், இராகு அல்லது கேதுவுடன் இணைந்து சுக்கிரன் இருக்க, அதுவே, அவனின் உச்ச வீடு அல்லது
சுயவீடாக.
# இலக்னாதிபதி,
இலக்னத்தில் இருக்க மற்றும் 2 ஆம் அதிபதி, 7 ஆம் அதிபதியோடு பரிவரத்தனையாக.
# 7 ஆம் அதிபதி
பாதிக்கப்பட மற்றும் சுபரோடு சுக்கிரன் இணைய.
# 7 ஆம்
அதிபதியோடு சனி இணைய.
#
7 ஆம் அதிபதி மற்றும் இராகு தொடர்புற.
# வாழ்கின்ற இரு மனைவிகள் அல்லது ஒருத்தி மனைவி மற்றவள் காதலி
#
பாதிப்படைந்த 7 ஆம் வீட்டில், பலமற்ற 7 ஆம் அதிபதி இருக்க.
# பாதிப்படைந்த
2 ஆம் வீட்டில், பலமற்ற 2 ஆம் அதிபதி இருக்க.
# 12 இல்
செவ்வாயிருக்க, 7 மற்றும் 8 ஆம் வீடுகள் பாதிப்படைய.
# இலக்னாதிபதி
அல்லது 7 ஆம் அதிபதி நீசமாக அல்லது பகை வீட்டில் இருக்க அல்லது அஸ்தமனமாகி இருக்க.
# 7 ஆம்
வீட்டில் சூரியன், இராகு இணைந்திருக்க.
# 7 ஆம்
வீட்டில், 7 ஆம் அதிபதியாக, புதனிருக்க மற்றும் சுபர் இணைவில்லாமல் சுக்கிரனிருக்க.
# இலக்னாதிபதி,
இலக்னத்தில் இருக்க மற்றும் 2 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாக.
# மூன்று திருமணங்கள் :-
# 2 ஆம்
வீட்டில் அல்லது 7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அசுபர்கள் இருக்க, அவர்கள் முறையே 2 ஆம்
அதிபதியாலும் 7 ஆம் அதிபதியாலும் பார்க்கப்பட.
# 7 ஆம்
அதிபதி நீசமாக அல்லது பகைபெற அல்லது அஸ்தமனமாக மற்றும்
இலக்னத்தில்
/ 2 ஆம் பாவத்தில் / 7 ஆம் பாவத்தில் அசுபர் இடம்பெற.
# மூன்றுக்கு
மேற்பட்ட பெண்கள் அல்லது திருமணங்கள் :-
# பலம்
மிக்க சந்திரன், சுக்கிரன் இணைவு.
# 7 ஆம்
அதிபதி, 11 ஆம் அதிபதி இணைவு அல்லது 7 ஆம் அதிபதி இலக்னாதிபதி இணைவு.
# இலக்னத்தில்
ஒரு கிரகம் உச்சம்பெற.
# உச்ச
நிலையில் அல்லது சுயவீட்டில் இலக்னாதிபதி இருக்க.
# பலம்
மிக்க சுக்கிரன் 7 ஆம் பாவத்திலிருக்க அல்லது பார்க்க.
# பலம்
மிக்க 7 ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இணைந்து இருக்க அல்லது பார்க்க.
# 7 ஆம்
அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகியோருடன் உள்ள கிரகங்களின் எண்ணிக்கை.
# 7 ஆம்
வீட்டில் அசுபருடன் இணைந்த லக்னாதிபதி + 2 ஆம் அதிபதி + 6 ஆம் அதிபதி.
# சனி 7 ஆம்
அதிபதியாகி அல்லது 2 ஆம் அதிபதியாகி, அசுபரால் பாதிப்படைய.
# 7 ஆம்
அதிபதிக்கு, 3 ஆம் இடத்தில் பலம் மிக்க சந்திரன் இருக்க.
# 3 ஆம்
வீட்டில் 2 ஆம் அதிபதியும் 12 ஆம் அதிபதியும் இணைந்து இருந்து குரு
அல்லது 9 ஆம் அதிபதியால் பார்க்கப்பட.
# சுப வர்க்கத்தோடு
கூடிய 7 ஆம் அதிபதி, கேந்திரம் அல்லது திரிகோணமேற
மற்றும்
10 ஆம் அதிபதியால் பார்க்கப்பட.
# 7 ஆம்
அதிபதி மற்றும் 11 ஆம் அதிபதி அல்லது 7 ஆம் அதிபதி மற்றும் இலக்னாதிபதி இணைந்திருக்க
அல்லது பரஸ்பர பார்வைபுரிய.
# 5 ஆம்
அதிபதியுடன், 7 ஆம் அதிபதி 11 இல் இணைய, 3 ஆம் அதிபதியால் பார்க்கப்பட.
No comments:
Post a Comment