Search This Blog

Tuesday, 29 May 2018

ஒரே திசை கிரகம் தரும் பலன்கள்.

ஒரே திசை கிரகம் தரும் பலன்கள்.

ஜாதகம் – 20
சந்,சனி

கேது
செவ்,சூரி
புதன்
குரு (வ)

உ. ஜா. 20
சுக்

இராகு

         இந்த ஜாதகத்தில் (20) கடக சுக்கிரன் அழிவற்ற அன்னையையும், விருச்சிகம், மீனம் மற்றும் கடகம் ஆகியவை வடதிசையையும், இராகு, சந்திரன், சனி மற்றும் சுக்கிரன் ஆகியோர் இந்த இராசிகளிலும் இருக்கின்றனர். ஜீவன் காரகன் கடகத்தில் உள்ளார். அவர் வக்ர குருவின் 7 ஆம் பார்வையாக சுக்கிரன் மகரத்தில் இருந்து பெறுகிறார். சுக்கிரன் + சந்திரன் +சனி + இராகு ஆகிய கிரக இணைவுகள் அழிவற்ற அன்னையை அல்லது இந்து கதைகளில் வரும் இறைவி தேவியைக் குறிக்கிறது. தெய்வீக கிரகம் வக்ர குருவின் பார்வை மனைவிக்கான காரகன் சுக்கிரன் மீது விழுகிறது. அதனால் இந்த ஜாதகரின் திருமணம் புனிதமான இடத்தில் அதாவது கோவிலில் நடந்தது என்பதைக் குறிகாட்டுகிறது. சமஸ்கிருதத்தில் “விவாகோ மங்களம் திவ்யம் தேவ சன்னிதி ந சந்தேகம்” – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாதகரின் புனித திருமணச் சடங்குகள் சந்தேகமின்றி கடவுள் சன்னிதியில் நடத்தப்பட்டது என்பதே அதற்கான அர்த்தமாகும்.
         இந்த உதாரணங்களின் மூலமாக நாடி ஜோதிடத்தில் ஜாதக ஆராய்ச்சிக்கு இராசிகளின் திசைகள், ஒரு கிரகத்துக்கு 5 ஆம் பாவம் ஆகியவையும் கிரகங்களின் பலமும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
ஜாதகம் – 21
சூரி

புத
சுக்

உ. ஜா. 21
கேது

இராகு

சனி, சந்
குரு
செவ்

இந்த ஜாதகத்தில் (21) திசைப்படி வரிசையாக உள்ள கிரக நிலைகள்.

கிழக்கு
புத,சனி
சந்திரன்

வடக்கு
சூரி,குரு
கேது

தெற்கு
சுக்கிரன்
இராகு

செவ்வாய்
மேற்கு

ஜாதகம் – 22
சந்,சனி

கேது
செவ்,சூரி
புதன்
குரு (வ)

உ. ஜா. 22
சுக்

இராகு

ஜாதகம் 21 ஐ போல் 22 ஐ யும் கிரகங்களை திசைப்படி வரிசையாக எழுதுவோம்.

கிழக்கு

வடக்கு
சனி,சந்
சுக்,
இராகு

தெற்கு
கேது

சூரி,புத
செவ்வாய்.
குரு
மேற்கு

         இவ்வாறாக, கிரகங்களை இராசிகளின் திசைப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு திசையிலுள்ள கிரகங்களின் படி பலன் எடுக்க வேண்டும் என “சப்தரிஷி பிரம்ம நாடி” யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலும் அதே விதிகளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
        இந்த முறைப்படி, இந்த ஜாதகத்தில் (22) ஜாதகரின் மனைவி காக்காய் வலிப்பு நோய் உடையவள். வடக்கு திசையிலுள்ள கிரகங்கள் சுக்கிரன் + சந்திரன் + சனி + இராகு. இந்த இணைவுகளில் சுக்கிரன் பாதிப்படைந்துள்ளதால் ஜாதகரின் தங்கையும் மகிழ்ச்சியாக வாழவில்லை, மனைவிக்கும் வலிப்பு நோய் உள்ளது என்பதே பலனாகும். சந்திரன் சளியையும், சனி வாய்வு மற்றும் சளி போன்ற நோய்களையும், சுக்கிரன் மனைவி மற்றும் தங்கையையும் குறிகாட்டுகின்றன.
        இவ்விதமாக நாம் ஒரேதிசை கிரகங்களையும், 5 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களையும் வைத்து பலன் உரைக்கவேண்டும். 5 ஆம் வீடு என்று சொல்லும்போது, ஒரு குறிப்பிட்ட கிரகத்திலிருந்து அதன் 5 ஆம் வீடு எனக் கொள்ளவேண்டும். இதுவரை ஜாதகங்களை கிரக பரிவர்த்தனை, வக்கிரநிலை, திசைப்படி கிரகங்கள் இடம்பெற்ற நிலை ஆகியவற்றின்படி ஆய்வு செய்தோம். இவை கோசார நிலையின்படி பலன் காண்பதற்கு முன் செய்யவேண்டிய நியதி ஆகும். முதலில் நாம் முன்னர் சொன்னபடி ஜாதகத்தின் அடிப்படை நிலைகளை புரிந்த கொண்ட பின்னரே ஜாதகத்தில் கோசார நிலையை வைத்துப் பலன் பார்க்க வேண்டும்.
         ஒரு பிறப்பு ஜாதகத்தில் எந்தவிதத்தில் அவ்வப்போது இடைவெளி விட்டு கோசார கிரக அடிப்படையில் பலன் காணும் முறைகள் - 
        முதலில் நாம் கிரகங்களின் காரகத்துவங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனன ஜாதகத்துக்கும், கோசார நிலையிலும் கிரகங்களுக்கான காரகங்கள் சிறிது மாறுபடும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு 6 அல்லது 7 வயதாகும் போது அது திருட்டு, திட்டுதல் என பல தவறுகளை, குற்றங்களை செய்தாலும் அது புரியாமல், அறியாமல் செய்த குற்றங்கள் ஆதலால் அதற்கு தண்டனை அளிக்க முடியாது. அதுவே 18 வயதில் அவனுக்கு அதன் பாதக நிலைகள் தெரியும் ஆதலால் அவன் நியாயத்துக்கும், தருமத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
        அதேபோல் ஒரு பெண் குழந்தையாய், அழகாய் பார்க்கும் போதே கொஞ்ச வேண்டும் என்று இருக்கும் போது அதைக் கொஞ்சினால் எவரும் அதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதுவே, வளர்ந்து பெரியவளான பின் அவ்வாறு அத்தகைய சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாதல்லவா ? அதைப் போன்றே கிரகங்களும் கோசாரத்திற்கு வரும்போது மாறுபட்ட குணாதிசயங்களை ஜனன ஜாதக இராசிகளில் வெளிக்காட்டுகிறது.
         கோசாரத்தில் இந்த மாறுபாடுகள் முதல்முறை வரும்போது அதன் தாக்கங்கள் சாதாரணமானதாகவும், 2 வது முறை ஜாதகரின் இளமைக் காலத்தில் நகரும் போது அதன் தாக்கம் அதிகபட்சமானதாகவும், அதுவே மூன்றாவது முறையாக ஜாதகரின் முதுமைக் காலத்தில் கோசார கிரக தாக்கம் நடுத்தரமாகவும் இருக்கும். வருஷ கிரகங்களான குரு, சனி ஆகியவற்றின் கோசாரம் இந்த மூன்று வித வயதுகளில் முதலாவது குழந்தைப் பருவத்திலும், 2 வது இளமையிலும், 3 வது முதுமையிலும் ஆக பலன் மாறுபட்டுக் கொடுப்பதே இதற்குக் காரணமாகும்.
        இதை மனித குணத்தோடு ஒப்பிடும் போது ஒரு தம்பதிகளை எடுத்துக் கொண்டால் திருமணத்துக்கு முன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்கள், எனவே பேசும் போது கூட எச்சரிக்கையுடன், பார்த்துப் பேச வேண்டும். திருமணத்துக்குப் பின் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி எந்தவித தயக்கமும் இன்றி கண்ணே! மணியே! எனக் கொஞ்சத் தடையில்லை அல்லவா? அவர்களே முதுமை அடையும் காலத்தில் பொது இடத்தில் அதிக நெருக்கத்தைக் காட்டமுடியாத சூழ்நிலை எழும். ஒழுக்கத்தையும் பேணவேண்டும் அல்லவா ? இதுபோல் கோசார கிரகங்களும் வயதுக்கு தக்க தாக்கத்தை மாறுதலாகத் தரும். கோசார கிரகங்களின் தாக்கத்தால் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இன்பமாகவோ, துன்பமாகவோ அமையும் என்பது நிச்சியம்.
        இந்து திருமணங்களில், குடும்பத்தினர், திருமணத்தை நடத்தி வைக்கும் ஆச்சாரியார், உறவுகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் சுற்றி நிற்க மாவிலை, தோரணங்கள், மலர்களாலும் சிறப்பாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடுவில் நின்றிருப்பர். தீர்மானிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் ஆச்சாரியார் (குரு) ஒரு வெள்ளைத் திரையை (கேது) மணமகன் (செவ்வாய்) மணமகள் (சுக்கிரன்) இருவருக்கும் நடுவில் பிடிப்பார். பின்னர் வேத மந்திரங்கள் முடிந்த பின்னர் திரையை விலக்குவார். மங்கல நாண் கட்டி மாலை மாற்றி தம்பதிகளாவர். இதைப் போலவே கிருத்துவர்கள் பங்குத்தந்தை முன் (குரு) விரலில் மோதிரம் (கேது) மாற்றிக் கொண்டும், உறுதி மொழி மேற்கொண்டும் கணவன் மனைவியாவர்.
       முகமதியர்கள் மௌல்வி (குரு) முன் அவர்கள் குல வழக்கப்படி புனித குரான்படியும் தம்பதிகளாக இணைவர்.  எனவே, திருமணத்தைப் பொறுத்தவரை குருவின் பார்வை, சேர்க்கை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை அறிகிறோம். இதுவே, மனித வாழ்க்கை நிகழ்வுகளில் கிரக காரகத்துவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்துகிறது.

Thursday, 24 May 2018

ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். ஜாதகம் - 18 & 19

ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். 

ஜாதகம் - 18 & 19

ஜாதகம்-18
சுக்,சூரி
புத

சனி,செவ்
இராகு

உ. ஜா. 18

குரு
கேது
சந்

         இந்த ஜாதகத்தில் (18) சிம்மம் குருவுக்கு நன்மை தரும் இராசியாகும். அதற்கு 2, 12 மற்றும் 7 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை. எனவே, ஜாதகர் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வெகுதூரம் சென்று யாருடைய உதவியும் கிடைக்காமல் வாழ்வார். சில நேரங்களில் வாழ்க்கை அபாயகரமானதாக இருக்கும். ஆயினும், சூரியன், குரு பரிவர்த்தனையால் ஒவ்வொரு கிரகமும் பிற கிரகங்களின் இராசிகளில் இடம் பெறுவதால் அவருக்கு ஏற்பட்ட இந்த அசுப பலன்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றங்களும், வெளி நாட்டில் குடியிருக்க வீடும் பெற்று மகிழ்ந்தார்.
அஸ்தமன கிரகங்களின் விளைவுகள்
         இந்துக்கள் முகூர்த்தம் வைப்பதற்கு முன் ஜோதிடரை அணுகி நல்ல நாள் பார்க்கச் சொல்கிறார்கள். சுக்கிரன் பெண்ணுக்கு ஜீவன் காரகன், ஆணுக்கு மனைவி காரகன் ஆவார். அவர் சூரியனுக்கு மிக அருகே வரும் போது ஜோதிடர்கள் திருமண நாளை ஒத்திப் போட்டு சுக்கிரனின் அஸ்தமனம் நீங்கி சூரியனை விட்டு சுக்கிரன் விலகிய பின்பே நாள் குறித்துத் தருவார். எனவே, சுக்கிரனின் நிலை, பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் நடக்கும் வரை   திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியமானதாகிறது. ஜோதிடத்தில் சுக்கிரனும், சூரியனும் மிக அருகே நெருங்கி வரும்போது மற்றும் இரண்டும் ஒரு நட்சத்திரத்தின் ஒரே பாதத்தில் இருக்கும் போதும் சுக்கிரன் அஸ்தமனம் ஆவதாகக் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் அஸ்தமனம் ஆகும் போது ஆண் பெண் இருவருக்குமான இனப் பெருக்க சக்தி குறைகிறது. சூரியன், சுக்கிரன் இருவரும் ஒரே நட்சத்திர பாதத்தில் இருக்கும் போது ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது. ஆகையால், ஒரு கிரகம் அஸ்தமனமாகி உள்ளதா ? இல்லையா என்பதை அறிதல் அவசியமாகிறது.
        சுக்கிரன் அஸ்தமனம் ஆனாலும் புதன், குரு ஆகிய கிரகங்களுடன் பரிவர்த்தனை பெறும் போது, சுக்கிரனுக்கு அஸ்தமன நிலையால் ஏற்படும் பலம் இழப்பு நீங்கி முழு பலத்தைப் பெற்றுவிடுகிறது.
        சூரியன் இராகுவோடு இணைந்து கிரகணமாகி, சுக்கிரனும் நெருங்கி அஸ்தமனம் ஆனால் சூரியனின் பலம் மட்டுமே குறையுமே அன்றி சுக்கிரனின் பலம் குறையாது. ஆகையால், பிற கிரகங்களின் சூரியனுடனான அஸ்தமன நிலை, அவை பரிவர்த்தனை பெற்றால் அந்த நிலைகளை தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
        சூரியன், இராகு மற்றும் சுக்கிரனுடன் இணையும் போது, சுக்கிரன் அஸ்தமனம் ஆக அந்த ஜாதகர் ஆண்மகவினை இழந்து துன்பங்களை அனுபவிப்பார். ஆண் குழந்தை பெறும் முயற்சி தடைப்படும். ஆனால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
         நாடி ஜோதிடத்தில் ஜாதகரின் ஜாதகத்தில் 12 இராசிகளில் உள்ள கிரக நிலைகளை மட்டுமே ஆராய்ந்து பலன் உரைக்க எடுத்துக் கொள்ளப்படுகிறது. அஷ்டவர்க்கம், வர்க்கக் கட்டங்கள், பிந்து சோதனை, தசா புத்தி பலன்கள் இன்ன பிற நிலைகள் பலன் உரைக்க எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நாடியில் பலன் அறியும் முன் ஒருதிசை கிரகங்களின் நிலைகள் ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஜாதகம் – 19
சூரி

புத
சுக்

உ. ஜா. 19
கேது
லக்//,
இராகு

சனி,
சந்
குரு
செவ்

          உதாரணமாக – இந்த ஜாதகர் (19) புகழ் பெற்ற ஆலய ஸ்தலத்தில்,நீர் நிலைக்கு அருகில் உள்ள பெரிய கோவில் அருகே பிறந்திருப்பார். இதை பாரம்பரிய முறையில் கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால், நாடி ஜோதிடத்தில் ஜீவன் காரகன் குரு ஆத்ம காரகன் சூரியன், விடுதலை, மோட்ச காரகன் கேது ஆகியோர் வட திசையைக் குறிக்கும் விருச்சிகம், மீனம் மற்றும் கடகம் ஆகிய இராசிகளில் உள்ளன. இதனால் குரு, சூரியன், கேது ஆகியோர் தொடர்பில் உள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் நிலைகளைக் கொண்டு இவர் புண்ணிய ஸ்தலத்தில், நீர்நிலை அருகே பிறந்ததை உறுதி செய்கிறோம். கடகம் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பார்க்கடலைக் குறிக்கிறது. இது அவர் பிறந்த ஊரின் புனிதத்தையும், மிகப் பெரிய கோவிலின் அருகாமையையும் குறிகாட்டுகிறது.

Monday, 21 May 2018

ஆ ய் வு ஜா த க ம் -15 - 16 -17 நா டி

ஆ ய் வு ஜா த க ம் -15 - 16 -17

நா டி 

ஜாதகம் - 15
         இந்த பெண்ணின் ஜாதகத்தில் (15) தந்தைக்கு குறிகாட்டியான சூரியன் தனது ஆட்சி வீட்டில் உள்ளார். அதற்கு 2 ஆம் வீட்டில் பரம எதிரிகளான இராகு மற்றும் நீச சுக்கிரன், உச்ச புதன் ஆகியோர் உள்ளனர். சூரியனுக்கு 7 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை. சூரியன் (சூரியன் ஆண் மகவுக்கும் காரகம் பெறுவதால்) மிகவும் பாதிப்பு அடைவதால் ஜாதகிக்கு சகோதரன் இல்லை. 

கேது
செவ்
குரு,சனி

உ. ஜா. 15
குரு
சந்

லக்//,சூரி

இராகு,சுக்
புத
ஜாதகம்-16

குரு

இராகு

உ. ஜா. 16

சூரி

சந்,கேது
செவ்

புத
        
         இந்த ஜாதகத்தில் (16) நீச சந்திரன், மோட்சத்திற்கு உரிய கேதுவுடன் இருப்பதால் நீசம் பங்கம் ஆகிறது. நீச சந்திரனால் (மனித மனம்) ஜாதகர் கீழ்தரமான மனதை உடையவர் ஆகிறார். எனவே, ஜாதகர் பல நேரங்களில் குறுகிய மனநிலையால் கஷ்டப்பட்டார். ஆனால், சந்திரன் கேதுவுடன் (இரக்ககுணம்) இணைந்து நீச பங்கம் ஆனதால் ஜாதகருக்கு பிறருக்கு உதவும் குணமும் இருந்தது. உச்ச புதன் + நீச சந்திரன்+ கேது + செவ்வாய் (புதனின் பரம எதிரி) அதன் காரணமாக புதன் பலம் இழந்து, ஜாதகரின் கல்வி நிலையில் தடைகளைத் தருகிறார். அத்துடன் கீழான நண்பர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், சுய வீட்டில் உள்ள புதனை பலம் மிக்க குரு 7 ஆம் வீட்டில் இருந்து பார்ப்பதால் ஜாதகர் மெல்ல மெல்ல முன்னேறி நன்கு படித்து சமூகத்தில் நல்ல கௌரவத்தையும் மதிப்பையும் பெற்று சிறக்கிறார்.
ஜாதகம் - 17

சனி

உ. ஜா. 17
சூரி
குரு

செவ்

         இந்த ஜாதகத்தில் (17) ஜீவன்- நீச குருவால் ஜாதகரின் ஆரோக்கியமும், ஆயுளும் கேள்விக்குறி ஆகிறது. ஆனால், குருவுக்கு 7 இல் ஆத்ம காரகன் சூரியன் இருப்பதால் குருவின் நீசம் பங்கமாகிறது. அத்துடன் குருவுக்கு இருபுறமும் சனி, செவ்வாய் என நட்பு, சம கிரகங்கள் உள்ளன. இதுவும் குருவுக்கு பலத்தை அளிக்கின்றன. எனவே, ஜாதகருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.