Search This Blog

Thursday, 3 May 2018

மனம் போல் மாங்கல்யம்





மனம் போல் மாங்கல்யம்


 

காதல் திருமணத்திற்கான இணைவுகள்


1.  7 ஆம் அதிபதி. 7 ஆம் வீட்டுடனான 5 ஆம் அதிபதியின் நெருங்கிய தொடர்பு -                இணைவோ, பார்வையோ, பரிவர்த்தனையோ இருப்பின் காதல் திருமணம்     உண்டு
2.  குரு அதிகமாக பாதிப்படைந்து, 7 - ஆம் அதிபதி இலக்னாதிபதியை விட பலம் பெற்றும்         மற்றும் சனி, செவ்வாய் அல்லது  இராகு 9 - ஆம் வீட்டில் இருக்க.
3.   இலக்னாதிபதியோ அல்லது சந்திரன,   7 ஆம் அதிபதியோடு இணைந்து கேந்திர மேற
4.   சந்திரனும்,   சுக்கிரனும் இணைந்து  7  இல் இருக்க.
5.   7   இல் சுக்கிரன் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட.
6.   செவ்வாய், சுக்கிரன்,   இராகு இணைந்து 7   இல் இருக்க ....
7.  7 ஆம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரனை, சனி அல்லது செவ்வாய்               பார்க்க

கலப்புத் திருமணத்திற்கான இணைவுகள்

1.  சுக்கிரனும்,  இராகுவும் இணைந்து  6 அல்லது 11 - இல் இருக்க ...
2.   7 ஆம் இடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க.
3.   சந்திரனும், செவ்வாயும் 6 / 8 ஆக
4.   சுக்கிரனும் செவ்வாயும் கோணத்தில் இருக்க அல்லது 12 இல் இருக்க
5.   துலாம் அல்லது கும்பம் 7 ஆம் இடமாகி அதில் குரு இடம் பெ.ற
6.   7 - ஆம் அதிபதியுடன் செவ்வாய் ,  இராகு இணைய ....
7.  5 - ஆம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க, 7 மற்றும் 12 ஆம் இடங்களில் ஆண்         கிரகங்கள் இடம் பெற.
8.  7 - ஆம் அதிபதி சனியுடன் இணைத்து 12 இல் இருக்க.
9. 7 - ஆம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன், சனி அல்லது நிழல்              கிரகங்களால் பார்க்கப்பட.

ஆத்மார்த்தமான தம்பதிகளாக வாழ்வதற்கான இணைவுகள்

1.   மேஷம் அல்லது விருச்சிகத்தில்,  சுக்கிரனோடு ஏழாம் அதிபதி இணைந்து இருக்க ...
2.   அதே இரண்டு இராசிகளில் சுக்கிரனோடு பத்தாம் அதிபதி இணைந்து இருக்க ...
3.   7   இல் குரு இருக்க
4.   உச்ச சுக்கிரன் 7 இல் இருக்க.
5.   7   இல் குரு , சந்திரன் இணைந்து இருக்க.
6.    சுக்கிரன்   7 ஆம் அதிபதியாகி,  குருவோடு இணைய அல்லது குருவால் பார்க்கப்பட ...
7.   7   ஆம் வீடு சிம்மமாகி நற்கோளால் பார்க்கப்பட
8.   சுக்கிரன் 7 ஆம் அதிபதியாகி நற்கோள் இணைவு அல்லது பார்வை பெற
9.   கேந்திரத்தில் 7 ஆம் அதிபரோடு நற்கோள் இணைவுற
10.  7 ஆம் வீடு குருவால் பார்க்கப்பட

வெற்றிகரமான தம்பதிகளுக்கான, இராசி மற்றும் இலக்ன நிலைகள் –

1. ஒருவரின்   7  ஆம் அதிபதி , மற்றவரின் இலக்னத்திலோ அல்லது இராசியிலோ          இருக்கவும். ஒருவரின் இலக்னாதிபதி மற்றவரின் இராசியிலோ அல்லது நவாம்ச             இராசியிலோ இருக்க
2.   ஒருவரின் நவாம்ச இராசி மற்றவரின் இலக்கினமாக அமைய
3.   ஒருவரின் ஏழாமிடம் மற்றவரின் இலக்கினமாக அமைய
4.  சுக்கிரன் மற்றும் 7 ஆம் அதிபதியின் பலத்தை ஒப்பு நோக்குகையில், இவற்றில் பலம்     மிக்க ஒன்று மற்றவரின் இலக்னத்திலோ அல்லது இராசியிலோ இடம் பெற
5.  இராசியிலிருந்தோ அல்லது நவாம்ச இராசியிலிருந்தோ, 7 ஆம் இடத்தில் மற்றவரின்         9 ஆம் அதிபதி அல்லது இலக்னாதிபதியோ இடம் பெற ...
6.  சந்திர அஷ்டவர்க்கத்தில் அல்லது சர்வாஷ்டவர்க்கத்தில் எந்த இராசியில் மற்றவரின்          இலக்னமாகவோ அல்லது இராசியாகவோ அமைய
7.  ஆண் ஜாதகத்தின் இலக்னாதிபதி பாகையும் சுக்கிரனின் பாகையும் கூட்டி வரும்        பாகையில் பெண்ணின் இராசி அமைய
8.  அதேபோல, இலக்னாதிபதி பாகையும், 7 - ஆம் அதிபதி பாகையும் கூட்ட வரும்           பாகையில் பெண்ணின் இராசி அமைய
9.  இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி நீச இராசியிலோ அல்லது உச்ச இராசியிலோ                அமைய
10.  துவாதசாம்ச கட்டத்தில் சந்திரனின் நிலை மற்றவரின் இராசியாக இருக்க, மேலும்               ஆணின் 7 ஆம் அதிபதியோடு, பெண்ணின் 7 ஆம் அதிபதி, சம்பந்தம் பெற               இருவருக்கும் இடையே வெற்றிகரமான மணவாழ்க்கை அமைகிறது.

திருமண விஷயங்களில் நவாம்சத்தின் தாக்கம்

1.        தீய கிரக வீட்டில் நவாம்ச   இலக்னம் அமைவது வரவேற்கதக்கதல்ல.
2.        நவாம்சத்தில், இலக்னத்தில் சனி, செவ்வாய் அல்லது சூரியன் இடம் பெறுவது மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு வழி வகுக்காது.
3.        நவாம்ச இலக்னாதிபதியுடன் சனி, செவ்வாய், சூரியனின் இணைவு மோசமானது.
4.        நவாம்ச இலக்னத்தை சனியும், செவ்வாயும் பார்த்தாலோ அல்லது இருந்தாலோ அல்லது 7 ஆம் அதிபதியோடு இணைந்தாலோ, திருமண வாழ்க்கை பாதிப்படையும்.
5.         நவாம்ச இலக்னாதிபதியோடு இணைந்த செவ்வாய் விவாகரத்துக்கு    வழிவகுக்கிறார்.
மனைவிக்கு மரணம் நேரும் நேரம்
         கணவனின் ஜாதகத்தில், 7 ஆம் அதிபதி, சுக்கிரன் மற்றும் அவர்களுக்கு இடம் கொடுத்த கிரகங்கள் ஆகியவை பலம் மிக்கதாக இருக்க மனையாளுக்கு பூர்ண ஆயுள் உண்டு.
சுமாரான பலம் - மத்திய ஆயுள்
பலம் குறைந்தால் - அற்ப ஆயுள் எனலாம்.


No comments:

Post a Comment