Search This Blog

Friday, 4 May 2018

திருமண காலம்






திருமண காலம்


        திருமணம் நிகழும் காலத்தைப் பொறுத்தவரை, பண்டைய நூல்களில் பல வழிமுறைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
        இராசியில் 7 ஆம் அதிபதி நிற்கும் இராசியதிபதி அல்லது நவாம்சத்தில் நிற்கும் அதிபதியின் தசா காலத்தில் திருமணம் நடக்க வழி ஏற்படும். களத்திர காரகன் சுக்கிரன், சந்திரன் தசா காலத்திலும் திருமணம் நடக்கலாம். இவற்றில் பலம் மிக்க கிரக தசா காலங்களில் திருமண பந்தம் ஏற்படும். 7 ஆம் அதிபதி, சுக்கிரனோடு இணைந்து இருக்க அந்த தசா காலங்களில் திருமணம் நிகழலாம். குடும்பாதிபதி அல்லது அவருக்கு நவாம்சத்தில் இடம் கொடுத்தவன் ஆகியோரின் தசா காலங்களிலும் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். முந்தைய தசாக் காலங்களில் திருமணக் கனி கனியாவிட்டாலும் பாக்கியாதிபதி, கர்மாதிபதி தசாக் காலங்களில் கனிந்துவிடும். 7 இல் உள்ள கிரகம் மற்றும் 7 ஆம் அதிபதி தசாக் காலங்களில் திருமணம் நடக்க வழியுண்டு.
        இலக்னாதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி நிற்கும் பாகை அளவுகளைக் கூட்டி வரும் இராசியையோ அல்லது திரிகோணத்தையோ கோசார குரு கடக்கும் காலத்தில் திருமண காலம் கனிந்து வரும். அதேபோல் சந்திரன் மற்றும் 7 ஆம் அதிபதி நிற்கும் பாகை அளவுகளைக் கூட்டி வரும் இராசியையோ அல்லது திரிகோணத்தையோ கோசார குரு கடக்கும் காலத்தில் திருமண காலம் கனிந்து வரும்.
        திருமணக் காலம் கனியப் பல கிரகங்கள் காரணமான போதும், திருமண தாமதத்தைத் தரும் கிரக நிலைகளையும் இதர காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  இலக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றில் இருந்து, 7 ஆம் அதிபதி மற்றும் 7 ஆம் இடம் சனியால் பார்க்கப்படும் போது சம்பந்தப்பட்ட தசாதிபதி வலுவிழந்து காணப்பட்டால் திருமண தாமதத்திற்கு வழி வகுக்கும். 7 ஆம் அதிபதி அல்லது 7 ஆம் வீடு, களத்திர காரகன் ஆகியோர் 6, 8, 12 ஆம் அதிபதிகளுடன் தொடர்புற திருமண தாமதத்திற்குக் காரணமாகிறது. இவ் விஷயங்களில் கோசார நிலைகளைவிட, ஜாதக நிலைகளுக்கும், தசா, புத்திக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இல்லறத் துணையின் இழப்பு.
      மனைவி இழப்பு, முக்கியமாக பெண்ணுக்கு கணவன் இழப்பு என்பது சமூகத்தில் அவளுக்குத் தீராத துன்பமாக அமைந்துவிடுகிறது. வாழ்க்கைக் கூட்டாளியின் இழப்பானது இருபாலருக்கும், உணர்ச்சி பூர்வமான இழப்புக்களோடு மேலும் பல காரணிகளும் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கிறது. குடும்பத்தைக் கொண்டு செலுத்தல், பொருளாதார விஷயங்கள், பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குதல் என மலை போன்ற பிரச்சனைகள் இழப்பின் போது சம்பந்தப்பட்டவர்களின் கண் முன் தோன்றி மறையும். எனவே, எந்தவொரு ஜாதகத்திலும் துணையின் ஆயுள் பங்கமில்லாமல் இருக்கிறதா ? – என ஆழ்ந்து ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகிறது.
        திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையின் இழப்புக்கான முக்கிய இணைவுகளை வரும் பத்திகளில் பார்ப்போம். குடும்ப பாவத்திலும், களத்திர பாவத்திலுமான அசுபக் கிரக அமர்வு துணையின் இழப்புக்குக் காரணமாகிறது. ஆனால், மற்றவரின் ஜாதகத்திலும் இதே இணைவு இருக்குமானால், பாதிப்புக் குறைந்து, குழந்தை குட்டிகளுடனும், சொத்து சுகங்களுடனும் இனிதே வாழ ஆசிர்வதிக்கப்படுவர்.
        இலக்னத்தில் இருந்து 5 ஆம் வீடு அல்லது 7 ஆம் வீட்டில் அசுபர் தொடர்பு ஏற்பட ஜாதகர் திருமணம் செய்து கொள்ளமாட்டார், அப்படி செய்து கொண்டாலும், வாழ்க்கைத் துணை உயிர் வாழமாட்டார். கன்னி இலக்னமாகி அதில் சூரியன் அமர்ந்து, களத்திர பாவத்தில் சனி அமர துணைக்கு மரணம் நிகழும். 7 ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க மனைவிக்கு மாரகம் ஏற்படும். 7 ஆம் வீடு அசுபத் தொடர்பால் பாதிக்கப்படாமல் இருக்கவும், இலக்னத்திலிருந்தோ, சுக்கிரனில் இருந்தோ 7 ஆம் அதிபதி 7 இல் இருக்கவும், கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் மரணம் எய்துவர்.
         குடும்பம், களத்திர பாவாதிபதிகள் சுக்கிரனுடனோ அல்லது அசுபருடனோ மோசமான தொடர்பு பெறவும், அத்துடன் துர்ஸ்தானத்தில் இடம் பெற்றுள்ள கிரக எண்ணிக்கையைப் பொருத்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகள் மரணிக்கலாம். 7 ஆம் வீட்டில் சுக்கிர நவாம்சத்தில் செவ்வாய் இருக்க 7 ஆம் அதிபதி 5 இல் இருக்கவும், ஜாதகர் தனது மனைவியை இழப்பார். இலக்னம், 7 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடங்களில் அசுபர் அமரவும், க்ஷீண சந்திரன் 5 ஆம் வீட்டில் அமரவும் ஜாதகருக்கு மனைவி அமையமாட்டாள் அல்லது அவர் மலட்டுப் பெண்ணை மணப்பார். குடும்ப, சுக, களத்திர, ஆயுள் அல்லது விரய பாவங்களில் அங்காரகன் அமர ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையை மரணத்தின் வாயிலாக இழப்பார்.
இதர பாதிப்புகள்
       இலக்னம் அல்லது களத்திர வீட்டில் சந்திரன் இருந்து, இராகு, கேது இணைவாலோ, அசுபர் அசுப திரேகாணங்களான சர்ப்ப, பக்க்ஷி, பாச மற்றும் நிகத திரேகாணங்களில் இருக்கவோ அல்லது இராசி சந்தியில் இருக்கவோ ஜாதகரின் மனைவி விதவையாவார். ஆணின் ஜாதகத்தில் இலக்னத்திலிருந்து 7 ஆம் வீடு செவ்வாயின் வீடாகவோ அல்லது செவ்வாய் நவாம்சத்தில் அமையவோ அல்லது நவாம்ச இலக்னத்தில் இருந்து 7 ஆம் வீட்டின் அதிபதி பலம் இழந்தோ அல்லது இராகு கேதுவோடு அமர்ந்தோ இருக்க ஜாதகர் தனது மனைவியை ஒதுக்கிவிடுவார் அல்லது அவள் இளமையிலேயே கற்பினை இழந்தவளாவாள். பெண்ணின் ஜாதகம் எனில், மேஷ, விருச்சிக இலக்னமாகி அல்லது செவ்வாயின் நவாம்சம் ஏறி, 7 ஆம் அதிபதி மேலே சொல்லியுள்ளபடி நவாம்சத்தில் பாதிக்கப்பட்டால், அவள் ஓர் பணிப் பெண்ணாய் இருப்பாள் அல்லது இளமையிலேயே வழி தவறியவளாய் இருப்பாள். கணவனால் ஒதுக்கி வைக்கப்படுவாள்.
       7 ஆம் வீட்டில் அசுபர் இருக்க, விதவையாவாள். அதுவே, சுபரும் அசுபரும் இணைந்து இருந்தால் அவள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாள். 7 ஆம் வீட்டில் பலம் இல்லாத அசுபர் இருந்து, சுபரால் பார்க்கப்பட்டால் அவள் கணவனால் விலக்கி வைக்கப்படுவாள். 7 ஆம் வீடு அசுப வீடாகி, சனி இடம்பெற ஜாதகி விதவையாவாள். 8 ஆம் வீட்டில் அசுபகிரகம் இருந்து, அசுபரால் பார்க்கப்பட்டு அதுவே அசுப வீடும் ஆனால் கணவன் மரணம் எய்துவான். இத்துடன் நவாம்சத்தில் 8 ஆம் அதிபதி இடம்பெற {அசுபர்) இந்த பாதிப்பு தீவிரமாகிறது. 8 இல் சுபர்  இருக்க கணவனுக்கு முன் செல்வாள். அசுபர் 7 அல்லது 8 ல் இடம்பெற்று, 9 ஆம் வீட்டில் சுபர் இடம்பெற்றால், ஜாதகி தன் கணவனுடன், நீண்ட காலத்துக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்.
        7 ஆம் அதிபதியும் 8 ஆம் அதிபதியும் 8 ஆம் வீட்டில் இணைய, 7 இல் இராகுவும், 7 ஆம் அதிபதியும், சூரியனும் 8 ஆம் அதிபதியால் பார்க்கப்பட அல்லது இராகு, சூரியன் மற்றும் சனியுடன் 7 அல்லது 8 ஆம் வீட்டில் இணைந்து இருக்க, இளமையிலேயே விதவைக் கோலம் பூணுவாள்.
        களத்திராதிபதியும், அஷ்டமாதிபதியும் இணைந்து விரய பாவத்தில் இருக்க, 7 ஆம் வீட்டை அசுபர் பார்க்கக் கைம்பெண் ஆவாள். 7 ஆம் வீடோ அல்லது 7 ஆம் அதிபதியோ பாபகர்தாரி யோகத்தில் சுபர் தொடர்பின்றி (பார்வை) அமைய ஜாதகி கணவனை இழப்பாள்.
        சுக்கிரனும், செவ்வாயும் நவாசத்தில் பரிவர்த்தனை பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புகள் இருக்கும். இந்த இரு கிரகங்களும் சந்திரனுடன் இணைந்து களத்திர பாவத்தில் இருந்தால், கணவன் கண்டும் காணாதிருக்க ஜாதகிக்கு வெறு ஒருவருடன் தொடர்பு இருக்கும். இலக்னாதிபதியாக சனி அல்லது செவ்வாய் மற்றும் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்து அசுபர் பார்வை பெற ஜாதகியும், அவரது தாயும் விலைமாதாகத் திரிவர். இலக்னம் கடகமாகி, நவாம்சம் கும்பத்தில் விழுந்து, சுக்கிரனும், செவ்வாயும் நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்றோ அல்லது பரஸ்பர பார்வை செய்தாலோ ஜாதகி காமம் மிக்கவளாக இருப்பாள்.
        இராசியிலும், நவாம்சத்திலும் 7 ஆம் பாகத்தோடு தொடர்புடைய கிரகங்கள், அல்லது சுக்கிரன் அல்லது இராசியிலும், நவாம்சத்திலும் 2 ஆம் இடத்திற்குத் தொடர்புடைய கிரகங்கள் அல்லது பாக்கிய, கர்ம பாவாதிபதிகள் அல்லது சந்திரன்  ஆகியவை மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து அமையக் கூடிய தசா – புத்தி காலங்கள் திருமணத்தை நடத்தவல்லன ஆகும். களத்திர பாவம், பாவாதிபதியின் மீதான சுபரின் தாக்கம் மகிழ்ச்சியான மண வாழ்க்கையைத் தருகிறது. மாறாக அசுபரின் தாக்கம் ஜாதகருக்கு மண வாழ்க்ககையில் கஷ்டங்களையும், மரணத்தையும் அல்லது பிரிவினையையும் ஏற்படுத்தக் காரணமாகிறது. 7 ஆம் வீடு உபய இராசியாகி அல்லது சுக்கிரன் உபயத்தில் இருக்க ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஏற்படும்.
இனி சில ஜாதகங்களை ஆய்வு செய்வோம் –
        முதலாவது ஜாதகத்தில் கன்னி இலக்னம், 5, 6 க்கு உரிய சனி களத்திர பாவத்தில் இருப்பது நல்லதல்ல. பாதிப்புக்குக் காரணமாகிறது. 7 ஆம் வீட்டு அதிபதி குரு சதுர்த்த கேந்திரத்திலும், 7 ஆம் வீட்டுக்கு தசம கேந்திரத்திலும் இருக்கிறார். அவர் இராசியிலும், நவாம்சத்திலும் தனது மூலதிரிகோண வீட்டில் உள்ளார்.  ஆனால், நவாம்சத்தில் இராகு மற்றும், உச்ச சனியால் பாதிப்பு அடைந்துள்ளார்.
        களத்திர காரகன் – குடும்ப மற்றும் பாக்கியாதிபதியான சுக்கிரன், தனது நட்பு வீட்டில், தசம கேந்திரத்தில் நல்ல நிலையில் உள்ளார். 7 ஆம் அதிபதியும், சுபருமான குருவாலும் தைரிய மற்றும் ஆயுள் பாவாதிபதியான அசுபர் செவ்வாயாலும் பார்க்கப்படுகிறார். சுக்கிரனுக்குக் கொஞ்சம் குறை ஏற்பட்டாலும் குருவின் பார்வை நலம்பயக்கிறது.

சனி

கேது
சுக்


சூரி,சுக்

கேது

ஜாதகம் - 1
இராசி
16-8-1937-
காலை 8-30,13°வ 00’,77° கி 35’

லக்


   நவாம்சம்


சூரி,புத
சந்

குரு
செவ்,
ராகு,சந்

லக்
குரு,புத
ராகு

செவ்,சனி


புதன் தசை இருப்பு – 6 வ – 0 மா – 8 நாட்கள்.

        சந்திர இராசியில் இருந்து பார்க்கும் போது – 7 ஆம் வீடு சுப வீடான ரிஷபம் ஆகும். அங்கு கேது அமர்ந்து, செவ்வாய், இராகு மற்றும் சந்திரனால் பார்வை பெறுகிறது. செவ்வாய் ஆட்சி பெற்று நல்ல நிலையில் இருந்தாலும் இணைந்துள்ள இராகு, சந்திரனால் பாதிப்பு அடைகிறது. மேலே குறிப்பிட்டபடி, களத்திர காரகன் நல்ல நிலையிலேயே உள்ளார்.
      ஆய்வுக் கருத்து – 7 ஆம் வீடு நல்ல நிலையில் இருந்தாலும், அசுப தாக்கத்தை ஒதுக்கிவிட முடியாது. குருவின் பலத்தால் நல்ல குணமுள்ள கணவன் அமைந்தாலும், சந்திரன், செவ்வாய் மற்றும் இராகுவின் நிலை சுயநலக்காரராக மாற்றிவிடுகிறது. இந்த பாதிப்பு அவர்களிடையே தற்காலிக மோதல்களைத் தந்தாலும், 7 ஆம் வீட்டில் சனி இருப்பதும், குரு, சுக்கிரனின் பரஸ்பர பார்வை நிலையும் இருவருக்கும் இடையே ஆழ்ந்த அன்பை உருவாக்கி, நிலையான மாண வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
        6 ஆம் அதிபதி சனி 7 ஆம் வீட்டில் இருப்பது திருமண தாமதத்திற்குக் காரணம் ஆகிறது. திருமண வயதில் வரும் தசை, அதற்குப் பிறகு வரும் சுக்கிர, சூரிய, சந்திர, செவ்வாய் மற்றும் இராகு ஆகிய திசைகளில் திருமணம் நடக்கலாம்.
        திருமணத்திற்கு அனுகூலமான காலங்கள் – 1). இராசி, நவாம்சத்தில் 7 ஆம் அதிபதியின் திசா,புத்தி, 2) சுக்கிரன் 3). சந்திரன் 4). குடும்பாதிபதி நின்ற இராதியதிபதி. 5). கர்மாதிபதி 6) பாக்கியதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி, 7 இல் உள்ள கிரகங்களின் காலங்கள் திருமணத்தைத் தரும்.
        எனவே, மேற்கண்ட ஜாதகத்தில் கீழ்க்கண்ட கிரகங்கள் அவைகளின் தசா புத்தி காலங்களில் திருமணத்தைத் தரவல்லனவாகும்.
1.   இராசி மற்றும் நவாம்சத்தில் 7 ஆம் அதிபதிக்கு இடம் கொடுத்தவன் – குரு, குரு.
2.   சுக்கிரன்.
3.   சந்திரன்.
4.   2 ஆம் அதிபதி சுக்கிரனுக்கு இடம் கொடுத்தவன். = புதன்
5.   கருமாதிபதி. = புதன்.
6.   பாக்கியாதிபதி = சுக்கிரன்.
7.   7 ஆம் அதிபதி – குரு, 7 இல் உள்ள சனி – 7 ஆம் இடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் = எதுமில்லை.
            இந்த ஜாதகத்தைப் பொருத்தவரை – இளமையிலேயே புதன் திசை
முடிந்துவிட்டதால், அதன் பிறகு வரக்கூடிய சம்பந்தப்பட்ட சுக்கிரன் திருமணத்தைத் தரலாம். குரு, சனி, சந்திர திசைகள் மிகவும் தாமதமாகவே வரும். 7 ஆம் அதிபதி சனி திசை தாமத்த்தைத் தரலாம். ஆயினும், காரகன் சுக்கிரன் மற்றும் 7 ஆம் அதிபதி குருவின் பலம் திருமணத்தை மேலும் தள்ளிப் போடாது. எனவே, சுக்கிரனே திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் பெறுகிறான்.  சுக்கிர தசாக் காலத்தில் வரும் புத்திகளான சுக்கிர புத்தி மிகவும்  சீக்கிரமே வரும் ஆதலால், ஆட்சி நிலையாலும், பார்வையாலும், களத்திர பாவாதிபதி என்பதாலும் குரு புத்தியில் திருமணம் நடக்கவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆம். 1961 இல் இவருக்கு சுக்கிர திசை, குரு புத்தி காலத்தில் திருமணம் நடந்தது.
         கால தேச வர்த்தமானத்தைப் பொருத்து சீக்கிரத் திருமணம் அல்லது தாமத

 திருமண காலங்கள் நிச்சியிக்கப்பட வேண்டும். பண்டைய காலத்தில் திருமணக் 

கொண்டாட்டங்கள் குழந்தைப் பருவமான 5 – 6 வயதுகளிலேயே கொண்டாடப்பட்டன. 

அதன் பிறகு 10 – 12 வயதுகளில் திருமணங்கள் நடந்தன. 1960 க்குப் பிறகு 25 வயது 

திருமணம் கால தாமதத் திருமணமாகக் கருதப்பட்டது. தற்காலத்தில் பையன்களுக்குப் 

பெண் கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கிறது. எனவே, திருமணம் பற்றிய ஆய்வு ஜாதகர் 

எந்த பிராந்தியத்தை சேர்ந்தவர், பிரிவைச் சேர்ந்தவர், சமூகப் பொருளாதார நிலை, 

பின்புலம் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment