நாடியில் இரண்டாம் பாவ பலன்கள்.
போஜன சுகம்
53. இலக்னாதிபதியும்,
சுக்கிரனும் தனபாவத்தில் இருந்து, 2 ஆம் அதிபதி
கேந்திர / கோணத்தில், குரு மற்றும் சந்திரனோடு இருக்க ஜாதகர் வாய்க்கு ருசியான வக்கணையான
இராஜ போஜனத்தை உண்டு மகிழ்வார்.
பலம் மிக்க தன பாவாதிபதி அல்லது ஒரு உச்ச கிரகம்
2 இல் இடம் பெற அல்லது சுபரோடு கூடிய 2 ஆம் வீடு அமைய ஜாதகருக்கு இதே நற்பலன்கள் ஏற்படும்
எனலாம். அதே, பலம் மிக்க அசுப கிரகங்கள் 2 ஆம் வீட்டோடு தொடர்புற ஜாதகர் எவ்வளவு பெரிய
செல்வந்தராய் இருந்தாலும் நேரத்துக்கு சுவையான ஏன் சுமாரான உணவும் கிடைக்காது.
54. சந்திரன், சுக்கிரன்,
குரு ஆகியோர் 2 ஆம் பாவத்தில் இருக்க ஜாதகருக்கு எப்போதும் இராஜ உணவு கிடைக்கும்.
55. இலக்னத்தில்,
இலக்னாதிபதி, தனாதிபதி மற்றும் விரயாதிபதி ஆகியோர் இணைந்திருக்கவும் சந்திரன் 9 ஆம்
இடத்திலும், குரு 2 ஆம் இடத்தைப் பார்க்கவும்
ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக் கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
56. கன்னி இலக்னமாகி சுக்கிரன் 4 ஆம் இடத்திலும், புதன்
5 ஆம் இடத்திலும், குரு இலாப பாவத்திலுமாக அமர்ந்திருக்க ஜாதகர் பேரரசருக்குப் பரிமாறப்படக்
கூடிய உயர்தர உணவுகளை உண்டு மகிழ்வார்.
57. சந்திரனும்,
புதனும் கேந்திரத்தில் அமர்ந்து, 2 ஆம் அதிபதி இலக்னத்தில் இருக்க மேற்சொன்ன பலன்களே
ஏற்படும்.
58. சுக்கிரன்
10 ஆம் இடத்திலும், 11 ஆம் இடத்தில் குருவும் அமர ஜாதகர் பால், குளிர் பானம் போன்ற
உயர்தர பானங்களைக் அருந்தும் பாக்கியம் உடையவராக இருப்பர்.
பேச்சில்
தடங்கல், ஊமை.
59. 2 ஆம் அதிபதி
6, 8, 12 இல் சுக்கிரன் அல்லது புதன் இருக்க தடைப்படும் பேச்சுக்கான பலனை உறுதிப்படுத்துங்கள்.
(காலபுருஷ தத்துவத்தில் 2 ஆம் இராசிக்கு அதிபதி
சுக்கிரன் ஆவார்).
60. 6 ஆம் அதிபதி, சுக்கிரன் மற்றும் தூமன் இணைந்து
6 ஆம் இடத்தில் அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கவும், 8 ஆம் அதிபதியும், 2 ஆம் அதிபதியும்
பலம் இழந்து காணப்பட ஜாதகர் ஊமையாக இருப்பார்.
61. பலம் இழந்த குரு
2 இல் இருக்க ஜாதகர் திக்கி திக்கி பேசும் திக்குவாய் காரராக இருப்பார். வளர் சந்திரன்
2 இல் இருந்தால் திக்குவாய் சரியாகும். தேய்பிறை சந்திரன் 2 இல் புதனுடன் இருக்க இந்த
திக்குவாய் பிரச்சனை தீராது. இராகுவுடன் இணைந்து தேய்பிறைச் சந்திரன் இருக்கும் ஜாதகர் ஊமையாக இருப்பார்.
62. 2 ஆம் அதிபதி
12 இல் இருக்க, அவருடன் குளிகன் இணைந்து இலக்னத்தில் யமகண்டன் நிற்கவும், தூமன் 2 ஆம்
இடத்தைப் பார்க்கவும் ஜாதகருக்கு தீர்க்க முடியாத பேச்சுப் பிரச்சனை இருக்கும் அல்லது
நிரந்தர ஊமையாய் இருப்பார்.
63. 2 ஆம் அதிபதி, தூமன் அல்லது எமகண்டனுடன் இணைந்து
குருவால் பார்க்கப்பட பேச்சு குறைபாடு இருக்கும்.
64. இலக்னத்தில்
இருந்து முதல் நான்கு வீடுகளின் அதிபதிகள் பலம் இழந்து காணப்பட்டால் ஜாதகர் உண்மையே
பேசமாட்டார். கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவார். பிறரை ஏமாற்றிப் பிழைப்பதிலேயே குறியாய்
இருப்பார்.
65. 4, 5 மற்றும்
8 ஆம் அதிபதிகள் இணைந்து 12 இல் இருக்க அல்லது பலம் இழந்து காணப்பட மேற்சொன்ன பலன்களே
நடக்கும்.
66. 2 மற்றும் 4
ஆம் அதிபதிகள் வீழ்ச்சி அடைய இவர்களில் ஒருவரை 8 ஆம் அதிபதி பார்க்க மேற்சொன்ன பலன்களே
நடக்கும்.
67. சனி இரண்டிலும்
இராகு 5 அல்லது 11 இல் இருக்க ஜாதகரின் பேச்சு அர்த்தமற்றதாகவும், சீரற்றதாகவும் இருக்கும்.
கொன்னிக் கொன்னி பேசுவார். பொய்யே பேசுவார்.
கண் பாதிப்பு,
இணைவுகள்
68. 8 ஆம் அதிபதி
2 இல், 4 இல் அசுபக்கிரகங்கள் குருவின் பார்வை பெறாத நிலையில் இருக்க ஜாதகர் பிறவிக்
குருடர் ஆவார்.
குருவின் தாக்கம்
கண்ணில்லாதவருக்கு மாற்று மருந்து எனினும், சுக்கிரன் அல்லது சந்திரன் அல்லது சூரியன்
ஆகியோர் பலம் பொருந்தியவர்களாக இருக்க கண் பார்வை இன்மை இருக்காது.
69. 12 ஆம் அதிபதி
2 இல் இருந்து, இராகு 4 இல் இருக்க கண்களில் இரணம் காரணமாக கண்கள் பாதிப்பு ஏற்படும்.
இராகு திசையிலோ அல்லது 4, 2, 12 ஆம் அதிபதிகளின் திசைகளிலோ கண்ணில் ரணம் ஏற்படக் கூடிய
பயம் ஏற்படும்.
70. 2 ஆம் வீட்டை
சூரியன் பார்க்கவும், 3 ஆம் அதிபதி 6 இல் இருக்கவும் ஜாதகருக்கு இரு கண்களிலும் பிரச்சனை
எழலாம்.
71. 8 ஆம் அதிபதி
6 இல் இருந்து சனி பார்க்க அல்லது 2 ஆம் அதிபதி பலம் இழந்து இலக்னாதிபதிக்கும், விரயாதிபதிக்கும்
நடுவில் உள்ளதால் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.
72. 2 ஆம் அதிபதி,
சூரியனோடு இணைந்து ருண பாவத்தில் இருக்க இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
73. 2 ஆம் வீடு
மற்றும் சுக்கிரன் இருவரும் சனியால் கெட இளமையிலேயே பார்வை பாதிப்புகள் ஏற்படும்.
74. கடக இலக்ன ஜாதகருக்கு
சனி, செவ்வாய், சூரியன் ஆகியோர் 2 ஆம் பாவமான சிம்மத்தில் இருக்க கண் பார்வைக் கோளாறுகளை
ஏற்படுத்தும்.
75. சுக்கிரனும்,
குருவும் 6 இல் இருக்க அவர்களுடன் 6 மற்றும் 10 ஆம் அதிபதியும் இணைந்திருந்தால் விபத்தில்
கண்களை இழப்பார்.
76. 2 இல் குளிகன்,
செவ்வாய் மற்றும் 2 ஆம் அதிபதி ஆகியோர் இருந்து, குருவின் பார்வை இல்லையெனில் ஜாதகர்
இளமையிலேயே கண் பார்வை அற்றவர் ஆவார். பலம் மிக்க 2 ஆம் அதிபதி மற்றும் குருவின் பார்வை
இருக்க இந்த பாதிப்பு இருக்காது.
77. தங்கள் பகை வீடுகளில்
2 ஆம் அதிபதி, சுக்கிரன், சந்திரன் இருக்க மாலைக்கண் நோய் ஏற்படும். சந்திரனுக்கு பகைவர்
இல்லை ஆதாலால் அவளுக்கு பாதகமான வீடுகளை எடுத்துக் கொள்ளலாம்.
78. இலக்னாதிபதி,
2 ஆம், 7 ஆம் அதிபதிகள், சந்திரன் ஆகியோர் 6 அல்லது 8 ஆம் பாவத்தில் இருக்க கண்பார்வையைத் திரும்பப் பெற இயலாது.
79. 2 ஆம் இடத்தில்
பலம் இழந்த சுக்கிரனும், சூரியனும் இணைந்து குருவின் பார்வையின்றி இருக்க ஜாதகரை மின்னல்
தாக்கி கண்ணை இழக்க நேரிடும்.
80. இலக்னாதிபதி,
சனி, சுக்கிரன் ஆகியோர் 2 ஆம் வீட்டில் இருக்க கண்ணில் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
81. 2 ஆம் வீடு, 3, 12, 6 ஆம் வீடுகளில் முறையே சனி,
சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் நிற்க எல்லா விதமான பார்வைக் கோளாறுகளும்,
பாதிப்புகளும் ஜாதகருக்கு ஏற்படும்.
82. 2 ஆம் அதிபதி
6 இல் சுக்கிரனுடன் இணைந்து இருக்கவும், 2 ஆம் வீட்டில் ஒரு கிரகமும் இல்லாவிடில் ஜாதகருக்கு
சிறிதளவு பார்வை பாதிப்புகள் இருக்கும்.
83. இலக்னாதிபதி
இலக்னத்திலோ அல்லது 2 ஆம் இடத்திலோ சூரியன் மற்றும் 6 ஆம் அதிபதியோடு இணைந்து இருக்க
ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
84. 2 ஆம் அதிபதி 8 இல் நிற்க, சந்திரனும் சனியும் இணைந்திருக்க,
2 இல் சூரியன் இருக்கவும் ஜாதகரின் கண்களின் வண்ணம் வித்தியாசமானதாக இருக்கும்.
85. 2 ஆம் அதிபதி
12 இல் இருந்து, 2 ஆம் வீடு சனியால் பார்க்கப்பட்டால் கண் பாதிப்புகள் இருக்கும்.
86. சுக்கிரனுக்கு
திரிகோணத்தில் சந்திரன் இருக்க அனைத்துக் கண் பாதிப்புகளும் சரியாகிவிடும்.
தொண்டை, குரல்வளை, பல் பிரச்சனைகள்
87. இராகு 6 அல்லது
8 ஆம் இடத்தில் 2 ஆம் அதிபதியோடு இருந்து 8 ஆம் அதிபதி மற்றும் செவ்வாயால் பாதிக்கப்பட
தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
88. இலக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சந்திரனில் இருந்து
2 மற்றும் 3 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க தொண்டை அல்லது குரல் வளையில் பாதிப்பு ஏற்படும்.
89. 4 ஆம் பாவத்தில்
இராகு ஒரு சுபரோடு இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற அளவுக்கு நீண்ட பற்கள்
இருக்கும்.
90. இதே நிலை
ஏற்பட, 2 ஆம் அதிபதி 6 ஆம் வீட்டிலும், சூரியன் 8 இல் இருக்க வேண்டும்.
91. 2 ஆம் வீட்டில்
அசுபர், 2, 8 மற்றும் 9 ஆம் அதிபதிகள் இணைந்து இருக்க ஜாதகருக்கு வெளியில் தெரிகிற
அளவுக்கு நீண்ட பற்கள் இருக்கும்.
92. 4 ஆம் வீட்டில்
இராகு இருந்து, 4 ஆம் அதிபதி சந்திரனோடு இணைந்து 6 அல்லது 8 அல்லது 12 ஆம் வீட்டில்
இருக்க பற்கள் சொத்தை ஆகும்.
93. மிதுன இலக்னத்தில்
ஜனித்தவர்களுக்கு சுக்கிரன் நீசமாகி, 6 ஆம் வீட்டில் சந்திரன், செவ்வாய், கேது இருக்க
பற்களில் பாதிப்புகள் இருக்கும்.
94. 6 ஆம் வீட்டில்
குருவும், 2 இல் இராகுவும், சுக்கிரன் 2 ஆம் அதிபதியோடு இணைந்து 8 ஆம் வீட்டிலும் இருந்தால்
ஜாதகருக்கு உடைந்த பற்கள் இருக்கும்.
95. 2 ஆம் அதிபதி
, பலம் இழந்த சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகியோர் 8 ஆம் வீட்டில் இடம் பெற ஜாதகருக்கு
சீக்கிரமே பற்கள் விழுந்துவிடும்.
No comments:
Post a Comment