ஜாதகம் – 10
இந்த ஜாதகத்தில்
(10) குரு நீசம். ஆனாலும் சனியுடனான கிரக பரிவர்த்தனை காரணமாக குருவின் பாதிப்பு பாதியாகக்
குறைவதோடு, நீசமும் பங்கமாகிறது. சூரியன் நீசம் பெற்றுள்ளான். சூரியனுக்கு சுக்கிரனுடனான
கிரக பரிவர்த்தனை சூரியனின் பாதிப்பை குறைப்பதோடு, நீசமும் பங்கமாகிறது. இதே போன்று
சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை நீச சந்திரன், நீச செவ்வாய் ஆகிய இருவரின் பாதிப்பைக்
குறைத்து, நீசமும் பங்கமாகிறது. இது ஒரு சிறப்பு நிலை. இங்கு இவ்விரு கிரகங்களுமே தங்கள்
சுயவீடுகளிலேயே இருப்பதாகக் கொள்ளலாம்.
உ. ஜா. 10
|
செவ்
|
||
குரு
|
சுக்
|
||
சனி
|
சந்
|
சூரி
|
புத
|
ஜாதகம் - 11
புத
|
|||
உ. ஜா. 11
|
இராகு
|
||
செவ்,சுக்
கேது
|
|||
சனி
|
இந்த ஜாதகத்தில் (11) நீச புதன் குருவின் பரிவர்த்தனையால் உச்ச பலனைப் பெறுகிறது.
பரஸ்பர பரிவர்த்தனையால் நீச கிரகம் உச்ச நிலை பெறுவது ஒரு சிறப்பு நிலையாகும். சனி
உச்சம் பெற்றுள்ளது. சுக்கிரனுடனனா பரிவர்த்தனை முன்னர் குறிப்பிட்ட பரிவர்த்தனையான
கிரகங்களைப் போல் உச்சம் அடைவதில்லை. மாறாக ஆட்சி பலம் மட்டுமே அடைகிறது. ஏனெனில்,
சனி தனது தீவிர பகை கிரகங்களான செவ்வாய் மற்றும் இராகு உடன் இருப்பதே காரணமாகும். இதன்
காரணமாக சனி பலம் இழக்கிறது. அதுவும் நீச நிலைக்கும் கீழாக பலம் இழக்கிறது. இந்த கிரக
நிலைகளின் காரணமாக ஜாதகர் மதிப்புமிக்க வேலையில் சேர்ந்து, அங்கே தனது செல்வாக்கை பயன்படுத்தி
நினைத்த போதெல்லாம் தனக்கு சாதகமான இடத்திற்கு பணிமாற்றம் பெற்றுக் கொள்வார். அதுவும்
தன் இருப்பிடத்திற்கு மிக அருகிலுள்ள இடத்திற்கோ அல்லது மாமனார் வீட்டுக்கு அருகிலோ
மாற்றல் வாங்கிக் கொள்வார். மாற்றல் காரணமாக தங்கள் உறவுகளுடன் மகிழலாம், சொத்துக்களுக்கு
மிக அருகில் இருக்கலாம், குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோருடன் சந்தோஷமாக காலத்தைக்
களிக்கலாம் என்று நினைத்துக்கொள்வர். ஆனால், பல நேரங்களில் மாற்றலாகி ஏன் வந்தோம்
? – என்று வருத்தப்படும் அளவுக்கு அங்கே கஷ்டப்பட வேண்டியதிருக்கும். கர்மகாரகன் சனியின்
பலம் இழந்த நிலையே இதற்குக் காரணம். உச்ச சனி
மதிப்பு மிக்க பணியைத் தந்தாலும் பரிவர்த்தனை பலன் தராத நிலை, பகை கிரக தொடர்பு என்ற
நிலையால் வேலையில் அதிக கஷ்டங்களை அனுபவிப்பார். அவர் நினைத்தபடி சுகமாயிருக்கும் என
நினைத்த இடமாற்றம் தொல்லையாகிவிடும். எனவே, உச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றாலும்,
அது தனது சொந்த வீட்டில் பகை கிரகங்களுடன் இணையும் போது பலன் மாறும் அசாதாரண நிலை ஏற்படுகிறது.
No comments:
Post a Comment