Search This Blog

Tuesday, 26 June 2018

நாடி முறை




நாடி முறை





கோசார கிரகத்தின் மூலமாக நிகழ்வுகளின் பலன் காண கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்.



ஜாதகம் – 23


சூரி, செவ்
சுக்




உ. ஜா. 23





சனி,குரு


         இந்த உதாரண ஜாதகத்தில், செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டுமே ஆண் மற்றும் நெருப்பு கிரகங்கள் ஆகும். இரண்டுமே ஒளி மிக்க கிரகங்கள் ஆகும். இவர்களுடன் சுக்கிரனும் மீனத்தில் இணைந்துள்ளது. சுக்கிரன் ஒரு பெண்கிரகம் ஆதலால் சூரியன், செவ்வாயுடன் முழுவதுமாக பலத்தை இழக்கிறது. இதன் காரணமாக ஜாதகருக்கு குழந்தைப் பிறப்பில் பிரச்சனை, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஆகியவை ஏற்படுவதோடு, இவரிடமுள்ள பணம் அனைத்தும் அரசாங்கத்தால் கைப்பற்றப்படும். இந்த கிரக நிலைகளை மட்டும் வைத்து சுக்கிரனின், குருவின் பரிவர்த்தனை தொடர்பை சம்பத்தப்படுத்தி பார்க்காமல் எந்த ஜோதிடராவது ஜாதகத்தைப் பார்த்தவுடன் துரிதமாக பலன் சொல்ல முடியுமா?. ஆனால், இந்த பரிவர்த்தனையை கருத்தில் கொண்டால் சரியான பலன் கீழ்க்கண்டவாறு அமையும்.  ஜாதகனின் பணம் எதிரகளின் கைகளிலோ அல்லது முட்டாள் அரசியல்வாதிகள் கைகளிலோ அல்லது அரசாங்கத்திலோ மாட்டிக்கொண்டாலும், மரியாதைக்குரிய, மதிப்புமிக்க மனிதர்களின் உதவியால் பணம் மீண்டும் அவர் கைக்கு வந்து சேரும். இந்த விதி ஜனன ஜாதக கிரக இணைவு மற்றும்  இதே போன்ற கோசார கிரக இணைவுகளுக்கும் பொருந்தும்.    
1.   அஸ்தமன கிரக தாக்கங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
2.   ஒரு குறிப்பிட்ட இராசியில் 3 அல்லது 4 கிரகங்கள் இருக்கும் போது அவற்றின் பாகைகளின் வரிசைப்படி கணக்கிட்டு அதன்படி அவைகளின் தாக்கங்களைக் கண்டறிய வேண்டும்.
        ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் இவை தவிர மேற்கொண்டும் உள்ள பல விதிகளின் மூலமாக ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படப் போகிற பலன்களைக் காணுகின்ற வழிமுறைகளை  அடுத்துவரும் பத்திகளில் காணலாம்.
ஜாதகம் – 24
        நாடி காரணிகள் – கீழ்க்கண்ட ஜனன ஜாதகத்தில் கர்ம காரகன் எனப்படுகிற சனி, நீசமாகி, தன் பகைவன் கேதுவுடன் இணைந்துள்ளார்.
குரு
சனி,கேது

சுக்

உ. ஜா. 24
சூரி,சந்
லக்//, புத
செவ்



இராகு


         இந்த நீச சனி தன் பகைவன் கேது எனும் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளார்.
         அடுத்து, மேஷத்திலுள்ள நீச சனி. மகரத்தில் உள்ள உச்ச செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். எனவே, கிரக இணைவுகளானது சனி + கேது + செவ்வாய் ஆகும் இதற்கு பலன் காணும்போது, ஜாதகர் வேலைகள் நிரந்தம் இல்லாமல் தடைப்பட்டு, விட்டு விட்டு பணிகளைச் செய்வார்.  குருவுக்கு இரண்டாம் இடத்தில் இந்த இணைவு இருப்பதால் தொழில், வேலைகளில் சிறிது முன்னேற்றங்கள் இருக்கும். ஆனால், அது நிரந்தர பலன் தராது எனலாம்.
         மேற்கு திசையைக் குறிக்கும் மிதுனத்தில் மனைவியைக் குறிகாட்டும் சுக்கிரன் உள்ளார். மற்றுமொரு மேற்கு திசை இராசிநான துலாத்தில் இராகு உள்ளார். இது அந்த ஜாதகரின் திருமணம் பாழானதைக் குறிகாட்டுகிறது.  மேலும் செவ்வாய் தனது பகைக் கிரகம் புதனுடன் 7 ஆம் வீடான கடகத்தில், அங்கே  சந்திரனும் சூரியனும் உள்ளனர். இந்த புதன் மற்றும் செவ்வாயின் பகையான இணைவு ஜாதகரின் வாழ்க்கையின் சந்தோஷம் மற்றும் அமைதிக்கு முள்ளாக இருப்பதாக அர்த்தம் தருகிறது.
         கைரேகை விஞ்ஞான ஜோதிடப்படி இந்த ஜாதகரின் உள்ளங்கையில் புதன் மேட்டில் கேதுவின் காரணிகள் தென்படும். செவ்வாய், சனி கிரக பரிவர்த்தனையால் அவர்களுடன் கேதுவும் இணைவதாகக் கொள்ளாலம்.
         எனவே, புதன் ரேகை உடைந்து உள்ளங்கையின் கீழாக இருக்கும். இந்த சனி, செவ்வாய் பரிவர்த்தனை குருவுக்கு 2 ஆம் இடத்தில் ஏற்படுவதால், குருவின் தாக்கம் ஜாதகரை வாழ்க்கையில் துறவு நிலைக்குக் கொண்டு செல்லும். அதன் இறுதி முடிவானது ஜாதகருக்கு ஏற்படும் பணி, தொழில் களில் தடைகள், மன அமைதியின்மை, உறவுகளுடன் (பெற்றோரோடு பிறந்தவர்கள்) சண்டை சச்சரவுகள், திருமண முன்னேற்றத்தில் தடைகள் ஆகியவையாகவே இருக்கும். செவ்வாய்க்கு 2 – 12 இல் கிரகங்கள் இல்லை. மகரத்தைப் போன்ற தென் திசை இராசிகளிலும் கிரகங்கள் இல்லை. செவ்வாய், சனிக்கு 5 ஆம் மற்றும் 9 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை. இந்த நிலைகளின் காரணமாக ஜாதகர்க்கு வாழ்க்கையில் எள்ளவும் அமைதியும், சந்தோஷமும் இல்லாமல் போயிற்று எனலாம்.   
ஜாதகம் – 25


குரு, லக்//



உ. ஜா. 25
 புத,கேது
இராகு
சூரி,சந்
சுக்

செவ்

சனி

        இந்த பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் தனது ஆட்சி வீடான சிம்மத்தில் உள்ளார். பெண் ஜாதகத்தில் சுக்கிரனே ஜீவன் ஆதலால் பலன்களை சுக்கிரனை வைத்தே பார்க்க வேண்டும். சந்திரனுடன், சுக்கிரன் இணைந்துள்ளதால் ஜாதகி குற்றம் சொல்வதற்கு தகுதியானவள் ஆகிறாள். கணவன் காரகன் செவ்வாய் வட திசையான விருச்சிகதில் உள்ளார். இதே வடதிசை இராசியான கடகத்தில் புதன் கேது இணைவு உள்ளது.  இது அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையேயான சண்டை சச்சரவுகளை குறிகாட்டுகிறது. மேலும் இவளின் கணவன் (செவ்வாய்) மற்றுமோர் பெண்ணுடன் (புதன்) காதலில் விழுந்துள்ளதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் செவ்வாய், புதன், கேது ஆகியோரின் வடதிசை இராசிகளில் உள்ள தொடர்பே ஆகும்.  
         குருவுக்கு 5 இல் சூரியன் இருப்பது ஜாதகிக்கு மதிப்பு மிக்க, புகழ் பெற்ற புத்திரன் இருப்பதை குறிகாட்டுகிறது. சந்திரன், சுக்கிரன் இணைவு சூரியன், குரு பார்வையைப் பெற்றதால் இவளுக்கு பெண் குழந்தை இல்லை. மேலும் பெண் குழந்தை பிறந்தாலும், அக்குழந்தைகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஜாதகி பிறந்ததில் இருந்து இரண்டாவது முறையாக கோசார கேது விருச்சிகத்தைத் தொடும் போது, இவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிவினையில் முடியும் என்று கூறலாம்.  பிறகு, ஜாதகி பிறந்த நாளில் இருந்து கோசார குரு மூன்றாவது முறையாக, சுமார் 40 அல்லது 41 வது வயதில் கன்னியிலுள்ள சனியைத் தொடும் போது கணவன், மனைவிக்குள் மீண்டும் சமாதானமாகி, ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்வர்.
         இதைப் போலவே, கோசார கேது கடகத்தில் உள்ள புதன் மேல் வரும் போது ஜாதகி தனது சகோதரர்களுடன் அடிக்கடி சண்டையிட்டும், வழக்கு விவகாரங்களில் ஈடுபடவும் செய்வாள். அதேபோல் கோசார இராகு தனுசு இராசியைத் தொடும்போதும் மேற்சொன்ன பலனையே ஜாதகி அனுபவிப்பாள். இரண்டாவது முறையாக கோசார இராகு வரும்போது அதன் பாதிப்புகள் அதிகம் இருக்கும்.
ஜாதகம் – 26
         இந்த ஜாதகத்தில் கிரகங்கள் நாடி விதிப்படி, ஒரு திசைக் கிரகங்கள் வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன. வடக்கு – இராகு – மீனத்தில் உள்ளார். கிழக்கு – சூரியன், சந்திரன், புதன் தனுசுவிலும், சனி – சிம்மத்திலும், தெற்கு திசை இராசிகளான கன்னி மற்றும் மகரத்தில் கேது, செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் உள்ளனர்.

இராகு




உ. ஜா. 26
இராசி

சுக், குரு
சனி
சூரி,சந்
லக்//,புத


கேது,செவ்

         கோசார சனி மகரத்தில் வந்த போது ஜாதகர் ஜோதிடரிடம் ஆலோசனைக்கு வந்தார். ஜனன ஜாதகத்தில் அங்கே சுக்கிரனும், குருவும் உள்ளனர்.
         தென் திசை கிரகங்களான கேது, செவ்வாய், குரு, சுக்கிரன் உள்ளனர். குருவுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் கேதுவும் செவ்வாயும் உள்ளதால் ஜாதகருக்கும், அவர் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. சுக்கிரன் (மனைவி) செவ்வாய் (கணவன்) கேது (வழக்கு விவகாரங்கள், சண்டை சச்சரவுகள்) குரு (நீதிபதி) ஆகியவற்றைக் குறிகாட்டுவதால் ஜாதகத்தில் கோசார சனியின் நகர்வின் போது ஏற்பட்ட நிலையை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
         இதன் காரணமாக இருவரும் கோர்ட்டுக்குப் போனார்கள். கோசார குரு கன்னிக்கு வந்தபோது தீர்ப்பு வெளியானது. மகரம் கணவன் காரகன் செவ்வாயின் உச்ச வீடு ஆனதாலும், அங்கே குரு இருந்ததாலும் கணவனுக்கு சாதகமாகவே நன்மையான தீர்ப்பு வந்தது.
         மகரத்தில் கோசார சனி வந்த போது கோசார இராகு தனுசு இராசியில் வர மனோகாரகன் சந்திரன், புத்திக்கு காரகன் புதன் ஆகியோர் இராகுவின் தீய தாக்கத்தால் ஜாதகரின் பெற்றோர்க்கும், சகோதரர்களுக்கும் பல இன்னல்களை ஏற்படுத்துவார். இந்த நிலை இராகு விருச்சிகத்தை அடையும்வரை நீடிக்கும். 

Sunday, 24 June 2018

மூன்று கிரக இணைவுகள்.





மூன்று கிரக இணைவுகள்.

         சூரியன் + செவ்வாய் + புதன் = ஜாதகரின் சகோதரர்களுடன் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஜாதகர் அதிகாரம் மிக்க மற்றும் பலம் மிக்க முக்கியஸ்தர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாவார்.
         ஜனன ஜாதகத்தில் செவ்வாய், புதன் இணைவு இருந்து அதன் மேல் கோசார சனி வரும்போதும் ஜாதகருக்கு மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.
         நீச சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரின் இணைவு இருக்க ஜாதகர் கீழ்தரமான மக்களாலும், மற்றும் இரு எதிரிகளாலும் தொல்லைகளை அனுபவிப்பார். நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில்புரிபவர்களுக்குள்ளும் இதேபோல் தொல்லைகள் காரணமாக கூட்டு உடைந்துவிடும்.
         மேஷத்தில் உச்ச சூரியன், செவ்வாய், புதன் இணைவு உள்ள ஜாதகத்தில் கூட்டு வியாபாரம், தொழில் செய்யும் நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவர்களில் அதிக பலம்மிக்க கூட்டாளிகளில் ஒருவரின் குறுக்கீடும், உறுதித் தன்மையாலும் தொழில் கூட்டில் முறிவு ஏற்பட்டுவிடாது.
         ஜாதகத்தில் சனி, புதன், கேது ஆகியவற்றின் இணைவு வியாபாரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும், பூமி விஷயங்களிலும் பிரச்சனைகள் ஏற்படும்.  நெருங்கிய நண்பர்கள் கூட ஜாதகருக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்வர்.
        ஜனன ஜாதகத்தில் புதன் மற்றும் சந்திரன் இணைந்து கேது இவர்கள் இருவருக்கும் நடுவில் இடம்பெற  ஜாதகருக்கு நில விஷயங்களில் பிரச்சனைகள், வழக்குகள், இவருக்கும் இரு பெண்களுக்கு இடையே சண்டைகள் மற்றும் ஏமாற்றப்படுதல், வஞ்சிக்கப்படுதல் ஆகியவையும் நிகழும்.
        ஜனன ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவுக்கு இடையே கேது இடம்பெற தந்தை மகனுக்கு இடையே சண்டை சச்சரவுகள் இருக்கும். மேலும், இராஜ சபையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஜாதகருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
        ஜனன ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் சனி மீது கோசார கேது வரும் காலத்தில் உடன் பிறப்புக்களிடையே உப்புப் பெறாத விஷயங்களுக்கு எல்லாம் சண்டைகள் நடக்கும். மேலும், பணியிடத்தில் எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பார்.
        ஜனன ஜாதகத்தில் இருக்கும் சூரியன் மற்றும் செவ்வாய்க்கு இடையே கேது இருக்க ஜாதகர் தன் இரத்த உறவுகளால் பிரச்சனைகளையும், சண்டை சச்சரவுகளையும் அனுபவிப்பார்.
       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது + சுக்கிரன் இணைவு ஜாதகருக்கு பரம்பரைச் சொத்து மற்றும் பண விவகாரங்களில் வழக்கு விகாரங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.
       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது + சனி இணைவு ஜாதகருக்கும் அவரது தந்தைக்கும் இடையே சண்டை சச்சரவுகளை, வழக்கு விவகாரங்களை ஏற்படுத்தும். மேலும், தொழில் மற்றும் வேலைகளில் தடைகள் ஏற்படுத்துவதோடு, பலம் மிக்க, அதிகார தோரணை மிக்க மேலதிகாரிகளால் தொல்லை ஏற்படும்.
       ஜனன ஜாதகத்தில் சூரியன் + கேது  இணைவு, இராகுவின் பார்வை பெற ஜாதகரின் தந்தை பல கஷ்டங்களை சந்திப்பார். அவை அவராலேயே அவருக்கு ஏற்படுத்திக் கொண்டதாக இருக்கும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + செவ்வாய் இணைவு ஜாதகருக்கு அவர் விஷயங்களில் குடும்பப் பெரியவர்கள் மற்றும் மரியாதைக்குரிய பெரிய மனிதர்கள் ஆகியோரின் தலையீடு காரணமாக மனப் படபடப்பு, மன உளைச்சல், மன அமைதியின்மை ஆகியவை ஏற்படும்.  
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + குரு இணைவு ஜாதகருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. சூரியன், குரு ஆகியோரின் கோசார நிலையில் ஜனன ஜாதக சந்திரனைத் தொடும் போது ஜாதகருக்கோ அல்லது அவர் மகனுக்கோ வேறு வெளி இடத்தில் கௌரவம், மரியாதை கிடைக்கும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + சுக்கிரன் இணைவு குடுப்பத்தில் பொருளாதார கஷ்டங்களுக்குக் காரணமாகிறது. தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பத்தின் செல்வநிலை அதிக அளவு விரயமாகும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + சனி இணைவு ஜாதகரின் பெற்றோர்கள் மற்றும் இரந்த உறவுகள் அவரின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கு குறுக்கே வருவதன் காரணமாக அவர் விருப்பத்துக்கு செயல்பட முடியாத நிலை ஏற்படும். சொந்த பந்தங்களே அவரின் முன்னேற்றங்களுக்குத் தடையாகும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + இராகு இணைவு ஜாதகரின் தந்தைக்கு மிகப் பெரிய கஷ்டங்களைக் கொடுக்கும். அந்த கஷ்டங்கள் சரியாக சுமார் 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம். இவை செயற்கையான வழிமுறைகளில் அவருக்கு அவரின் நண்பர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் ஏற்படுத்தும் கஷடங்கள் ஆகும்.
       ஜனன ஜாதகத்தில் சந்திரன் + சூரியன் + கேது ஆகியோரின் இணைவு ஜாதகரின் குடும்பத்தாருக்கு விரக்தியான மனநிலையையும், பெரிய கஷ்டங்களையும் தரும். அதன் காரணமாக அவர்கள் தெய்வீக சிந்தனையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவர். ஆனால், இந்த வேண்டுதல்களினால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களில் இருந்து உடனடியாக விடுதலை கிடைக்காது. 
கோசார கிரகத்தின் மூலமாக நிகழ்வுகளின் பலன் காண கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்.
1.   தினமும் கோசார கிரக நிலைகளை குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பாகை/கலைகளில் வருமாறு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2.   பலன் காண வருகின்ற ஜாதகரின் ஜாதகம் பஞ்சாங்க கணிதப்படி சரியாக கணிக்கப்பட்டுள்ளதா ? என உறுதி செய்து கொள்ளவேண்டும்.
3.   ஜாதகத்திலும், கோசாரத்திலும் வக்கிர கிரகங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
4.   ஜாதகத்திலும், கோசாரத்திலும் கிரகங்கள் பரிவர்த்தனை பெற்ற நிலைகளைக் கண்டு கொள்வதும் அவசியமாகிறது.
5.   ஒவ்வொரு கிரகங்களின்  காரகத்துவங்களை தனித் தனியாக மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.
6.   ஜாதகத்திலுள்ள கிரகங்களின் பாகை அளவு நிலைகள் மற்றும் அந்த நிலைக்கு வர அவை எடுத்துக் கொள்ளும் கால அளவுகளையும் அறிந்து கொள்ளவேண்டும். மேலும், ஒரு இராசிக்கு பகை கிரகங்கள் வரும்/இருக்கும் கால அளவுகள் (நாள்/மாதம்/வருடம்) ஆகியவற்றையும் அறிய வேண்டும்.
         உதாரணமாக – ஜாதகத்தில் மகரம் 15° யில் செவ்வாய் இருக்க, கோசார சனி அந்த இராசிக்குள் நுழைந்து செவ்வாய் இருக்கும் 15° யைத்தொட 15 மாத கால அவகாசம் எடுக்கும். எனவே, இந்த 15 மாத காலத்தில் ஜாதகருக்கு வேலைகளில் பல தொந்திரவுகள், கஷ்டங்கள் ஏற்படும். அதுவே, சனி ஒரு சுப கிரகத்தைக் கடக்க நேர்ந்தால் ஜாதகருக்கு நல்ல பலன்களே நடக்கும் என பலன் காணவேண்டும்.
         மற்றுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஜாதகத்தில் சந்திரன் அஸ்வினி முதல் பாதத்தில் இருக்கும் போது, கோசார இராகு அதே பாதத்தைக் கடக்கும் போது, ஜாதகருக்கு மனக் குழப்பங்கள், மனோபயங்கள், மனதில் ஒரு துக்கம் ஆகியவை அந்தக் காலத்தில் ஏற்படும் என பலன் கூறவேண்டும். கோசார இராகு என்று அஸ்வினி நட்சத்திரத்தை தாண்டுகிறதோ அன்று முதல் ஜாதகருக்கு மனவலிமை, மனஅமைதி போன்ற அனுகூலமான பலன்கள் நடக்கும்.
7.        இதே போன்று இரு கோசார அசுபக் கிரகங்கள் பரஸ்பர பரிவர்த்தனை ஆகி ஒரு குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் போது, அதற்கு 7 ஆம் இடத்தில் கோசார சுக்கிரன், குரு ஆகிய சுபர்கள் கடக்கும் போது, அந்த அசுப கிரகங்களால் ஆபத்துக்கள் ஏற்படும்.
     உதாரணமாக – ஜனன ஜாதகத்தில் ஒர் இராசியில் செவ்வாய், சூரியன் இணைவு இருந்து,  கோசார இராகு  அதன் மேல் வர, கோசார குரு இந்த இராசிக்கு 7 ஆம் இடத்தைக் கடக்கும் போது ஜாதகருக்கு கடவுளின் அருளாலோ அல்லது நண்பர்களின் உதவியாலோ இதுநாள் வரை ஏற்பட்டிருந்த கவலைகளும், கஷ்டங்களும், தொல்லைகளும் நீங்கிவிடும்.  
8.        இதே போன்று இரு ஒருவருக்கொருவர் பகையான கிரகங்கள் ஓர் இராசியில் இணைந்து அதில் ஒரு கிரகம் மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை ஆகி இருந்தால் அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்.


Tuesday, 19 June 2018

ஜனன சனி மீதி கோசார கிரக பலன்








ஜனன ஜாதகத்தில் சனி இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –



         கோசார சூரியன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழிலில், பணியில் அமைதியின்மை, சஞ்சலம், மனவருத்தம் ஆகியவை ஏற்படும். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், முயற்சித்தாலும் செய்யும் தொழிலுக்கு பணிக்கு நியாயமான பங்கை அளிக்க முடியாது. அதன் காரணமாக ஜாதகர் தனது உயர் அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுவார். பொருளாதாரக் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும்.
        கோசார சந்திரன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் குற்றஞ்சாட்டப்படுவார். தேவையற்ற பணச் செலவுகள் ஏற்படும். மனதளவிலும் அமைதியற்ற நிலை நிலவும்.
         கோசார செவ்வாய் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகருக்கு பணியிடத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தி, தொல்லைகளைத் தருவர். வியாபாரத்திலும் எதிரிகளால் அதிக தடைகளை, தொல்லைகளை அனுபவித்து, பண இழப்புக்கும் ஆளாக நேரும். ஜாதகியானால், அவள் கணவருக்கு விரும்பத்தகாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அதன் காரணமாக மனதில் அமைதியின்மையும், வெட்டிச் செலவுகளும் ஏற்படும்.
         கோசார புதன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் வர்த்தக   பரிவர்த்தனைகளில் பல நன்மைகளைப் பெறுவார். ஓரளவு பூமி இலாபம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
         கோசார குரு - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் பணியில் பதவி உயர்வுகளைப் பெறுவார். தொழிலில் மதிப்பு மரியாதை, கௌரவம் உயரும். ஆனால், சனிக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்க கோசார குரு சனியைக் கடக்கும் போது எதிரிகளின் தலையீட்டால், தடைகளால் ஜாதகருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வில் தடைகள் ஏறபடும்.  
         சனி மற்றும் சந்திரன் இணைந்து ஒரே இராசியில் இருக்க, கோசார குரு ஜனன ஜாதக சனி, சந்திரனைக் கடக்கும் போது பணியிடத்தில் தன் பதவி உயர்வுக்காக பணச் செலவுகள் ஏற்படும். அப்படி பணம் செலவழிக்காமல் பதவி உயர்வு பெற்றால் வேறு இடத்திற்கு இட மாறுதலோடு கிடைக்கும்.
         ஜாதகியானால், அவள் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 180° யில் இருந்து ஜனன சனியை, கோசார குரு கடக்கும் போது அவள் கணவன் அவளின் காமத்திற்கு அடிமையாவான். சனி,புதன் இணைவு இருந்து அதற்கு 180° யில் புதன் இருந்து, சனி, புதன் ஜாதக இணைவை கோசார குரு கடக்கும் போது அவளை மக்கள் பலவழிகளிலும் தண்டிப்பர். அடிப்பர். பணி செய்யும் பெண்ணாயிருந்தால் அவள் வேலையில் முன்னேற்றங்கள் இருக்கும்.   கோசார குரு ஜனன சனி மீது வரும் போது பணியில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.      
         கோசார சுக்கிரன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் பொருளாதார முன்னேற்றங்களை அடைவார். பொருளாதார வகையில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள், விழாக்கள் கொண்டாட்டங்கள் ஆகியவை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். கடன் நிலவரங்களும் கட்டுக்குள் இருக்கும்.
         கோசார இராகு - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர்  தனது பணிகளில் கடமையை செய்ய முடியாத அளவுக்கு தடைகளை எதிர் கொள்வார். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். புகைப்படக் கலை, ஸ்கிரீன் பிரிண்டிங் போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட்டு அதையே தனது பொழுதுபோக்காகக் கொள்வார். பூதம், பிசாசு, பேய் போன்ற அமானுஷ்ய முறைகளில் ஆவல் கொள்வார்.
                                                                                                                                                                                                                                                                                                                  
         கோசார கேது - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர்  தொழிலில், வேலையில் பலவித இன்னல்களையும், காரணமில்லா தடைகளையும், அதிகாரிகளின் தொல்லைகளையும், வழக்கு விவகாரங்களையும்  எதிர் நோக்குவார். இதன் காரணமாக ஜாதகர் தன் வேலையை விட்டுவிடக் கூட எண்ணுவார். செவ்வாயும், கேதுவும் சனியின மீது வரும்போது, ஜனன ஜாதகத்தில்  குரு, புதன் மற்றும் சுக்கிரன் சனிக்கு 2 ஆம் வீட்டிலோ அல்லது 12 ஆம் வீட்டிலோ இருக்க ஜாதகர் நிச்சியமாக வேலையை இழந்துவிடுவார்.
         கோசார செவ்வாய், கேது மற்றும் சந்திரன் ஆகியோர் ஜனன ஜாதகத்தில் சனிக்கு 2 ஆம் இடத்தைக் கடக்கும்போது ஜாதகர் பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை இழப்பார்.
        அதுவே பெண்ணின் ஜாதகமானால் கோசார செவ்வாய், கேதுவின் ஜனன ஜாதக சனியின் மீதான நகர்வு ஜாதகிக்கு வீட்டுக்கு வெளியில் எதிரிகளின் தொந்திரவாலும், வீட்டுக்குள் கணவனின் தொந்திரவாலும் ஜாதகி கஷ்டங்களை அனுபவிப்பார். கோசார சந்திரன், செவ்வாய், கேது இருவருடனும் ஜனன ஜாதக சனியை கடக்கும் போது  அவள் பிறரால் பழி சுமத்தப்பட்டு, தூற்றப்பட்டு, குற்றமும் சாற்றப்படுவாள்.
        ஜோதிடத்தில் சனி கர்மகாரகன், தொழில் காரகன் என்ற புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. இந்த உலகமே கர்மாவை சுற்றியே அல்லது கடமையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் சில முக்கிய கர்மாக்களை அல்லது கடமைகளைச் செய்யவே படைக்கப்பட்டுள்ளான்.  ஆணோ பெண்ணோ அவரவர்க்கு விதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் கடமைகளைச் செய்வதில் இருந்து எவரும் தப்பிக்க இயலாது. கர்மாதிபதியான சனியின் தலைமைக்கு உட்பட்ட, அவனால் தீர்மானிக்கப்பட்ட மேற்சொன்ன கடமைகளை மற்ற கிரக இணைவுகள் தரும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள், அது நல்லதோ, கெட்டதோ அனைத்துமே ஜாதகரின் ஜாதகத்தில் இடம்பெற்றுள்ள கிரக அமைப்புகளைப் பொறுத்தே அமையும்.
         துறவிகள், புனித மகான்கள் மற்றும் சுவாமிகள் ஆகியோர் இந்த இகலோகத்தில் இருந்து முற்றும் துறந்து மோட்சத்தை அடையும் விருப்பம் அவர்கள் உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் இருக்கும் வரை அவர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், தியானம், நோன்புகள், பிராயச்சித்தங்கள் இன்னபிற கர்மாக்களை அல்லது கடமைகளை கண்டிப்பாக, ஒழுங்கு முறையுடன் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். இந்த கைங்கர்யங்களை செய்ய நீருக்கு உரிய சந்திரன், வாயு அல்லது காற்றுக்கு காரகன் சனி ஆகியோரின் அனுகூலம் அவர்களுக்கு வேண்டும். மனதை ஒருநிலையில் வைக்க உதவும் மனோகாரகன் சந்திரனின் ஒத்துழைப்பு அவர்களுக்கு வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்கும் நோன்புகளை நிகழ்த்த தூய, புனிதமான, சிறந்த இடங்கள் வேண்டும். அதற்கு பூமிக்கு உரிய இறைவியான பூதேவியின் அருள், கருணை, ஆசிகள் அவர்களுக்கு வேண்டும். சூரியனின் வெப்பம், வருணனின் மழை, வாயுவின் காற்று ஆகியவற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல வசிப்பிடமும் அவர்களுக்கு அவசியமாகிறது. தன் தினசரி பூஜைகளை, நோன்புகளை தடையின்றி நிறைவேற்ற குறைந்த பட்சம் ஒரு குகையேனும் வேண்டும். எங்ஙனம் பணியாற்ற வேண்டும்? எப்படி பூஜா கைங்கரியங்களை செய்யவேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன ? - இவை அனைத்துமே இந்து மத நூல்களில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளாக, கர்மாக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மேன்மையான, முக்கியத்துவம் மிக்க தத்துவங்களை புனிதர் பரம பூஜ்ய ஶ்ரீமதானந்த தீர்த்த ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மத்வாச்சாரிய சுவாமிகள் தனது துவைத கிரந்தங்களில் விளக்கி அருளியுள்ளார்.
         இதன் காரணமாகவே பெரிய ஞானிகள் சன்யாசிகள், மத குருமார்கள் ஆகியோர், தங்களுக்கு உலக பந்தங்களைவிட்டு மோட்சம் கிடைக்க விதிக்கப்பட்டிருக்கிறாதா? – என்ற கேள்வியை சிறந்த ஜோதிடர்களிடம் கேட்கத் தவறுவதில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், மெய்விளக்க கோட்பாடான, தெய்வீக ஜோதிடமானது முனிவர்களையும், ஞானிகளையும், புனிதர்களையும் தன் ஆதிக்க வரம்புக்குள் கொண்டுவந்துள்ளது.
         காரண காரியங்களுடன் கூடிய, அனுபவம் மிக்க, செயல்பாடுகளாலான பரந்த உலகில் சனி கிரகம் ஜாதகரின் ஆயுளையும், கர்மாவையும் தீர்மானிக்கிறது. இதில் எந்த அளவுக்கு சனியுடன் இணையும் பிற கிரகங்களின் ஒத்துழைப்பு ஜாதகரின் ஜாதக பலன்களை தீர்மானிக்கின்றன என்பதை ஜாதகத்தில் ஏற்படும் மூன்று கிரக இணைவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இராசியை, கோசார கிரகங்களின் தாக்கங்கள் –






ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –



         கோசார சூரியன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு பிரபலமான, மதிப்பு மிக்க மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும். பண்பட்ட நபர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் ஜாதகரின் அந்தஸ்து, மதிப்பு மரியாதையும் மேலும் உயரும்.
         கோசார சந்திரன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு பெண்களுடன் தொடர்பு, தீடீர் பயணங்கள், இரவு உணவு பார்ட்டிகள் ஆகியவை ஏற்படும்.
         கோசார செவ்வாய் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு சிறிது இரத்த அழுத்தம் கூடும். இரத்த உறவுகளை சந்திப்பார். ஜாதகருக்கு பிடிவாத குணமும், வேகமான செயல்பாடுகளும் அதிகரிக்கும். தொழிலில் அஜாக்கிரதை உணர்வோடு திகழ்வார். சரியாக வேலை பார்க்கமாட்டர். இச்சமயம் இவரின் நண்பர்களின் பிடியில் உள்ள இவரின் எதிரிகள் இவருக்கு தொல்லை கொடுக்க சரியான நேரத்தை எதிர் நோக்கியிருப்பர். ஜாதகருக்கு உடலில் அதிகப்படியான உஷ்ணமா இருக்கும். அக்னி மூலமான ஆபத்துக்கள் ஏற்படலாம். ஜாதகியானால், அவளின் கணவர் வசிக்கும் இருப்பிடத்தை மாற்றுவார். புதிய வீடு அவருக்கு அனுகூலமானதாகவும், நன்மை தருவதாகவும் அமையும்.
         கோசார புதன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகரின் ஆன்மிக அறிவு அதிகரித்து ஒரு புதிய அனுபவத்தை பெறுவார். அவருள் ஒரு மேதாவித்தனம் உதிக்கும். வேதங்களைக் கற்றுத் தேர்வார். ஜாதகியானால், தன் கணவனைத் தவிர மற்றவர்கள் மிகச் சிறப்பானவர்கள் என்பதை உணரத் தொடங்குவதோடு, அவரை கணவனை விட அதிகமாக விரும்புவாள். அவள் தன் மனதைக் கவர்ந்த கௌரவம் மிக்க நண்பர்களுடனும் மற்றும் தன் நலம் விரும்பிகளுடனும் அதிக நேரத்தைச் செலவிடுவாள். குடும்பத்தில் உள்ள இளம் வயதினர் வேறு இடங்களில் சந்தோஷத்தை பெறுவர்.
         கோசார சுக்கிரன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எழும். ஜாதகரின் பொருளாதார நிலை மதிப்பு மிக்க நிலையில் உயரும். ஜாதகருக்கு அழகிய பொருட்கள் கிடைக்கும். ஜாதகரின் மனைவி புனிதமான பெரியவர்களை சந்தித்து மத சம்பந்தமான விழாக்களை நடந்த திட்டமிடுவாள்.
         கோசார சனி - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு நன்மை அளிக்கும் வகையில் அவருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். அவருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்து, மதிப்பும் மரியாதையும் கூடும். பணியிடத்தில் உள்ள மிகப் பெரிய மதிப்புமிக்க மனிதர்களின் கூட்டு ஏற்பட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். ஜாதகர் வயிற்றில் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுவார். 
         கோசார இராகு - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகர் மனப் பிரமையால் கஷ்டப்படுவார். மேலும், வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதென  பய உணர்வு ஏற்படும். அவர் கும்இருட்டில் குடியிருப்பது போன்ற உணர்வில் இருப்பார். அவர் மூட்டுவலியால் கஷ்டப்படுவார்.
         கோசார கேது - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகர் தெய்வீக சிந்தனைகளில் ஈடுபட்டு, சிறப்பான ஆன்மிக விழாக்களைக் கொண்டாட நினைப்பார். இந்த பூலோக வாழ்க்கை நிலையற்றது என்ற எண்ணத்திலே வாழ்வார். துறவரம் பூணும் எண்ணம் எழும். ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். தெய்வபக்தியுள்ள மனிதர்களை சந்திப்பார்.
ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
         கோசார சூரியன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவி ஆரோக்கயக் குறைவால் கஷ்டப்படுவார்.  ஜாதகர் பொருளாதார விஷயங்களில் கஷ்டங்களை அனுபவிப்பார்.
         கோசார சந்திரன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகர் பொருளாதார நிலை குறைவதாலும், கடன்களாலும் அவதிப்படுவார். பொருளாதார விஷயங்களால் ஜாதகர் சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்களில் ஈடுபட நேரும். ஜாதகரின் மனைவிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்படும் கோளாறு காரணமாக இன்னலுறுவார். அதன் காரணமாக அவருக்கு ஆரோக்கியக் குறைவு தொடர்ந்து இருக்கும். ஜாதருக்கு சூது நிறைந்த மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும்.
         கோசார செவ்வாய் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகியானால், அவரின் கணவனுக்கு பலவழிகளிலும் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஜாதகர் இரத்த பந்தங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் சந்திப்பை எதிர்பார்க்கலாம்.  
         கோசார புதன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு புதையல் கிடைக்கும். நில பரிவர்த்தனை மூலமான பணவரவுகள் இருக்கும். வீடு வாசல் சேரும். நெருங்கிய நண்பர்கள் சந்திப்பு, கேளிக்கை, இனிய விழாக்கள் போன்றவற்றால் சந்தோஷம் பெருகும்.
         கோசார சனி - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகர் மனைவியை எதிர்பார்க்கலாம். ஒரு தோழியையும், செல்வ நிலையையும் எதிர்பார்க்கலாம். ஜாகரின் மனைவி தனது குடும்பக் கடமைகளை சீராக, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வார்.
         கோசார இராகு - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு பொருளாதார வரவுகள் தடைப்படும். வீடு போன்ற சொத்துக்களில் வழக்கு விவகாரங்கள் ஏற்படும். ஜாதகரின் மனைவிக்கு உடல் ஆரோக்கியம் குறையும். குடுப்பத்தாரிடையே சண்டை சச்சரவுகள் இருக்கும்.
         கோசார கேது - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு புதிய, அழகிய, நவீன நான்கு சக்கர (கார்) வாகனத்தை வாங்குவார். ஜாதகர் கபட நாடகமாடும் பெண்ணின் சதிவலைக்குள் மாட்டிக்கொள்ள நேரலாம்.