திருமணம் - ஜாதக ஆய்வு - 2
ஜாதகம் – 4
7 ஆம் வீடு – 7 ஆம்
வீட்டில் இலாபாதிபதி சந்திரன், இராகுவுடன் இணைந்து உள்ளார். அசுபர்களாகிய 5 , 6 க்குரிய சனி, மற்றும் 3, 8 க்கு உரிய
செவ்வாய் இருவரும் பார்க்கின்றனர். 7 ஆம் வீட்டின் மீது எந்த சுபரின் பார்வையும் இல்லாததால்
பாதிக்கப்பட்டுள்ளது.
7
ஆம் அதிபதி -. 7 ஆம் அதிபதி குரு மறைவு ஸ்தானமான 6 ஆம் வீட்டில்
உள்ளார். குருவின் மீது எவ்வித பார்வையும் இல்லை.
களத்திரகாரகன் – சுக்கிரன்,
விரயாதிபதி சூரியன் மற்றும் இலக்னாதிபதி புதன் ஆகியோருடன் இணைந்து அசுபர் சனியால் பார்க்கப்படுகிறார்.
சுபர் தாக்கம் ஏதும் இல்லாததால் அவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சந்
இராகு
|
|
|
|
|
சனி
|
|
லக்
|
|
குரு
|
ஜாதகம்-4
இராசி
20-11-1950-அதிகாலை 3-00 -18°வ 55’,72° கி 54’
|
|
கேது
|
நவாம்சம்
|
இராகு
|
|||
|
|
|
சூரி
|
|||||
செவ்
|
சூரி, சுக்
புத
|
|
கேது
சனி,
லக்
|
புத,
குரு,சந்
|
|
|
செவ்
சுக்
|
புதன்
திசை இருப்பு – 13 வ – 7 மா – 6 நாட்கள்.
சந்திர இராசியில் இருந்து – 7 ஆம் வீட்டில் அசுபர்களான கேதுவும் சனியும் இணைந்துள்ளனர்.
7 ஆம் அதிபதியான புதன், காரகர் சுக்கிரனுடன் இருப்பது ஓரளவு நல்லது என்றாலும், அவர்
3, 8 க்கு உரியவராகி சந்திரனுக்கு 6 ஆம் அதிபதி சூரியனோடு இணைந்துள்ளதால் இந்த 7 ஆம்
வீடும் பாதிக்கப்பட்டுள்ளது
ஆய்வுக்
கருத்தின் முடிவு – ஜாதகர்
தனது சுக்கிர திசை, சுக்கிர புத்தியில் 1972 வருடம் திருமணம் செய்து கொண்டார். முன்னர்
கண்ட திருமண தசா விதிகளின்படி, திருமணக் காலம் சரியானதே. 1974 இல் கணவன்-மனைவிக்கு
இடையே வெறுப்பும், பிரச்சனைகளும் தலைதூக்கியது. இந்தப் பெண்ணும், அவள் கணவரும்
1974 இல் பிரிந்துவிட்டனர். இராகு மற்றும் சந்திரன் இலக்னத்துக்கு 7 இல் இருந்து சனி,
செவ்வாயால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கணவன் திசை மாறி கீழ்தரமான பெண்களுடன் தொடர்பு
கொள்ளச் செய்தது. களத்திரம் தொடர்பான அனைத்து நிலைகளுமே சுபர் தொடர்பின்றி பாதிப்பு
அடைந்ததால் ஜாதகிக்கு திருமணத்திற்குப் பின் இன்ப வாழ்க்கை அமையாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
ஜாதகம் – 5
7
ஆம் பாவம் – களத்திர
பாவத்தில் கேது அமர்ந்து, அசுபர் செவ்வாயின் பார்வையால் பாதிப்பு ஏற்படுகிறது. செவ்வாய்
5 ஆம் அதிபதியாகி நன்மை தந்தாலும், 12 இல் அமர்ந்து 7 ஆம் வீட்டைப் பார்ப்பது நல்லதல்லவே
?
7 ஆம் அதிபதி – களத்திராதிபதி புதன் நட்பு வீடான இலாபத்தில்,
இயற்கை அசுபர்களான சூரியன், செவ்வாய்க்கு இடையே அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் பெறுகிறார்.
களத்திர
காரகன் – சுக்கிரன்,
பகை வீடான 9 இல் அமர்ந்து, அசுபர் சனியின் பார்வையையும் பெறுகிறார். சுபர் தொடர்பும்
இல்லை.
சந்திர
இராசியில் இருந்து – 7 ஆம்
வீடு, கடகம் குருவின் சுப பார்வை பெறுகிறது. 7 ஆம் அதிபதி சந்திரன், இராகுவுக்கும்
சனிக்கும் இடையே அமர்ந்து பாபகர்த்தாரியில் உள்ளார். குருவின் பார்வை தவிர, சந்திரனுக்கு
7 ஆம் வீடும் பாதிக்கப்பட்டுள்ளது
|
|
|
கேது
|
|
|
|
லக்
கேது
|
|
சனி
|
ஜாதகம்-5
இராசி
08-10-1935-
காலை11-30 -13°வ 10’,76° கி 10’
|
|
செவ்
|
நவாம்சம்
|
சூரி
|
|||
சந்
|
சுக்
|
சனி
புத
|
சுக்
|
|||||
லக்
ராகு
|
செவ்,
குரு
|
புத
|
சூரி
|
குரு?
|
ராகு
|
|
சந்
|
செவ்வாய் திசை இருப்பு – 4 வ – 11 மா – 20 நாள்.
ஆய்வுக் கருத்தின் முடிவு – 7 ஆம் வீட்டின் கேதுவின் மீதான செவ்வாயின் பார்வை
திருமண வாழ்க்கையில் கணவன் – மனைவிக்கு இடையே ஆன மூர்க்கத்தனமான போராட்டத்துக்கு வழி
வகுத்தது. சுக்கிரனுக்கு 7 ஆம் வீட்டில் அமர்ந்த சனியின் பார்வை மகிழ்ச்சியான மணவாழ்வைத்
தரவில்லை. ஒரு ஆறுதலாக, இவ்வளவு நடந்தும், சந்திரனுக்கு 7 இல் ஏற்பட்ட குருவின் பார்வையால்
இவர்களின் வாழ்க்கை துன்பமயமானாதாய் இருந்தாலும், இருவருக்குள்ளும் பிரிவினை ஏற்படாமல்
தடுக்கப்பட்டது.
ஜாதகம் – 6
7 ஆம் வீடு – ஓர் உபய இராசி. அதில் 5 ஆம் அதிபதி சந்திரன் அமர்ந்ததைத்
தவிர வேறு சிறப்பில்லை. குடும்ப மற்றும் பாக்கியாதிபதியான இயற்கை அசுபர் செவ்வாய்,
விரய பாவத்தில் அமர்ந்து, தனது 8 ஆம் பார்வையாலும், 6 ஆம் பாவாதிபதி இயற்கை அசுபர்
சூரியன் பார்ப்பதாலும் களத்திர பாவம் பாதிப்பு அடைகிறது.
7 ஆம் அதிபதி – புதன், செவ்வாயுடன் கூடி, விரய பாவத்தில் அமர்ந்து,
இலக்னாதிபதி குருவாலும், கர்ம, இலாபாதிபதி சனியாலும் பார்க்கப்படுகிறார்.
களத்திர காரகன் – சுக்கிரன் தனது நட்புவீடான, இலாப ஸ்தானத்தில்
அமர்ந்துள்ளார்.
லக்
சூரி
|
கேது
|
சனி
|
குரு
|
|
செவ்
|
புத
இராகு
|
சந்
|
|
புத,
செவ்
|
ஜாதகம் - 6
இராசி
24-3-1883-
காலை06-00 - 30 -13°வ 00’, 77° கி 35’
|
|
|
நவாம்சம்
|
|
|||
சுக்
|
|
சனி
|
|
|||||
|
|
இராகு
|
சந்
|
|
|
கேது,
லக்,சூரி
குரு
|
சுக்
|
சந்திர திசை இருப்பு – 6 வருடங்கள்.
சந்திர இராசியில் இருந்து – 7 ஆம் வீடு ஓர் உபய இராசி. சந்திரனுக்கு விரயாதிபதி
சூரியன் அமர்ந்துள்ளார். 7 ஆம் அதிபதி புதன் செவ்வாய் மற்றும் கேதுவுக்கு இடையில் பாபகர்த்தாரியில்
உள்ளார். 6 ஆம் அதிபதி குரு உபய இராசியான, தசம கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
ஆய்வுக் கருத்தின் முடிவு – களத்திர காரகன் சுக்கிரனின் இலாப பாவ அமர்வு,
இலக்னத்தில் இருந்தும், சந்திர இராசியில் இருந்தும் 7 ஆம் வீடுகள் உபய இராசிகளிலும்,
களத்திர ஸ்தானாதிபதி குருவும் உபய இராசியில் இடம் பெற்றதும் ஜாதகருக்கு இரு திருமணங்களைத்
தந்து மகிழ்ச்சியற்ற மண வாழ்வையும் தந்தது.
இந்த ஜாதகத்தையும், 1 வது ஜாதகத்தையும் ஒப்பிட்டுப்
பார்க்கும் போது, அதில் 7 ஆம் அதிபதி குருவும், களத்திர காரகன் சுக்கிரனும் உபயத்தில்
இருந்தாலும், ஜாதகருக்கு ஒரு திருமணமே நடந்தது. ஏனெனில், களத்திர பாவாதிபதியும், களத்திர
காரகனும் தங்களுக்குள் பரஸ்பர பார்வை பார்த்துக் கொண்டதே, திருமண வாழ்வு சீராகச் செல்லக்
காரணமாயிற்று.
No comments:
Post a Comment