Search This Blog

Wednesday, 25 July 2018

குருப் பெயர்ச்சி -2018







குரு பெயர்ச்சி பலன்கள்பரிகாரங்கள் -2018
                   நிகழும் சுப ஶ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று நாழிகை 40 – 00 இரவு மணி 10 – 05 க்கு ரிஷப இலக்னத்தில், துலா இராசியில் விசாகம் – 3 ஆம் பாதத்தில் இருந்து விசாகம் – 4 ஆம் பாதம் விருச்சிக இராசிக்கு, தேய்பிறை ஏகாதசி திதியில், சித்த யோகத்தில், பத்திரை கரணத்தில்  குரு பகவான்  பெயர்ச்சி ஆகிறார்.


லக்///


சுக்,
கேது
செவ்

சூரி,சனி
குரு




இராசி
இரவு 10-05 – குரு - விருச்சிகம்
சந்
ராகு



நவாம்சம்
கேது செவ்,


லக்///
சனி
சுக்
குரு

சூரி,புத
சந்

ராகு
புத




கிரகங்களின் பாத சார விவரங்கள்
கிரகங்கள்
பாகை - கலை
நட்சத்திர பாதம்
இராசி
நவாம்சம்
சூரியன்
17 - 17
அஸ்தம் - 3
கன்னி
மிதுனம்
சந்திரன்
17 - 26
ஆயில்யம்-1
கடகம்
தனுசு
செவ்வாய்
13 - 20
திருவோணம்-1
மகரம்
மேஷம்
புதன்
27 - 24
சித்திரை-2
கன்னி
கன்னி
குரு
28 - 29
விசாகம்-3
துலாம்
மிதுனம்
சுக்
26 - 04
சுவாதி-4
துலாம்
மீனம்
சனி
09 - 04
மூலம்-3
தனுசு
மிதுனம்
இராகு
08 - 07
பூசம் - 2
கடகம்
கன்னி
கேது
08 - 07
உத்திராடம் - 4
மகரம்
மீனம்
இலக்னம்
25-03
மிருகசிரீடம்-1
ரிஷபம்
சிம்மம்

                            குருவைப் பற்றி ...................
குரு ஸ்தோத்திரம்.
                        தேவானா ம்ச ரிஷினாம்ச
                        குரும் காஞ்சன ஸந்நிபம்
                        புத்தி பூதம் த்ரி லோகேசம்
                        தம் நமாமி பிரகஸ்பதிம்.
குரு காயத்ரி
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் பரவரஸாய வித்மஹே
குரு வ்யக்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் குரு தேவாய வித்மஹே
பரம குருப்யோ தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் குரு தேவாய வித்மஹே
பரப்ரம்மாய  தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் ஆங்கிராய வித்மஹே
சுரசார்யாய  தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
                   குரு காயத்ரி, ஸ்தோத்திரம் ஆகியவற்றை அனுதினமும் பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலமும், மன நலமும் சிறப்படையும். நினைத்த காரியங்கள் கைகூடி, பல நன்மைகளும் ஏற்படும்.
                  இன்று பலரும்  நவக்கிரகங்களில் ஒருவராகிய சுபராகிய குருவை ( வியாழன்பிரகஸ்பதி ) வழிபடுவதாக நினைத்து தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்கி, விளக்கு வைத்தல் பொன்ற பரிகாரங்களை செய்ய ஆரம்பிக்கின்றனர். இது தவறு. ஏனெனில் தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். குருவோ தேவர்களுக்கு குரு ஆவார். குரு – ‘ கு என்றால் இருள், ‘ ருஎன்றால் நீக்குபவர் என்று பொருள். ஜாதக தோஷங்களை நீக்க வல்லவர். குரு பார்க்கக் கோடி நன்மை என்பது வழக்கு. குரு, ஞானம், செல்வம், ஒழுக்கம், பெருமை ஆகியவற்றைத் தரவல்லவர்.
                  குரு, சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ மகரிஷியின் புத்திரர். இவரின் மனைவி தாரா வனப்பு மிக்க அழகியாவார். குருவுக்கு தனுசு, மீனம் ஆட்சி வீடாகும். உச்ச வீடு கடகம். நீச வீடு மகரம், ரிஷபம், துலாம், மிதுனம், பகை வீடும், மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியவை தோழமை வீடுகளாகும். அதிதேவதைஇந்திரன், பிரத்யதி தேவதைபிரம்மன் ஆவர். இவர் உத்திராயண காலத்தில் வலிமை மிக்கவர் ஆவார். இவருக்கு உரிய நட்சத்திரங்கள் புனர் பூசம், விசாகம், பூரட்டாதி ஆகும்.

                  குருவுக்கு ஆகாத இல்லங்களான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இல்லங்களில் இடம் பெற்றவர்களுக்குத் தீய பலன்கள் ஏற்படுமாதலால், தீமைகள் விடுபட குருவுக்கு விசேஷமான கோவில்களில் பிரார்த்தனை அனுஷ்டிப்பது  தீமைகளைக் குறைக்கும். அதுபோல் நன்மை தரும் இடங்களான 2, 5 ,7, 9, 11 ஆகிய இடங்களில் குரு இடம்பெற அவர்கள் செய்யும் ஆலய வழிபாடுகள் நன்மையைக் கூட்டும் அல்லவா ?

      

குரு வழிபாட்டுக்கான சிறப்புத் தலங்கள்
                   தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் சாலையில் நீடாமங்கலம்கும்பகோணம் செல்லும் வழியில் ( இரும்பூளை ) எனும் ஆலங்குடி குருவின் தலமான அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்ழுவார் குழலி திருக்கோவிலில், குருவாரத்தன்றோ, குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி வரும் நாட்களில் மஞ்சள் வஸ்திரம், முல்லைப் பூமாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, கடலை மற்றும் சர்க்கரை கலந்து, நிவேதனம் செய்து அனைவருக்கும் அளித்தல் சிறப்பு.
                  குருவே, சூரியனை வழிபட்ட ஸ்தலமான சூரியனார் கோவில் ( கும்பகோணம்ஆடுதுறை ) உள்ள அனைத்து கிரகங்களையும் ஆராதிப்பது அல்லல்களைக் குறைக்கு மன்றோ ?
                 திருவாரூர் தியாகேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் உள்ள குரு, மதுரை அருகே உள்ள குருவித்துறை. பட்ட மங்கலம்  ஆகிய கோவில்களில் உள்ள குருவை வழிபாடு செய்ய நலமே வாழலாம்.
                 எளிய வழிபாடாக உள்ளூர் கோவில்களிலுள்ள நவக்கிரகங்களில் தேவகுருவை அவருக்கு உரிய வஸ்திரம், மலர் சாற்றி மனதார வேண்டி பிரார்த்தனை செய்ய வந்த வினைகள் வந்த வழியே செல்லும்.
         
        
2018 – மூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள்.

           ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம்  (தங்கம்)  ரஜதம் (வெள்ளி),  தாமிரம்  (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்

   கிரகப் பெயர்ச்சியன்று -

             ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.

இராசி
சுப/அசுபத்
தன்மை
குரு இருக்கும்
பாவம்/பொது
விதி
அளவு
1
சிறப்பு விதி
மூர்த்தி
நிர்ணயம்
அளவு


2
மொத்த
அளவு
1 + 2
பலன்
அளவு
பலன்
மேஷம்
 4 இல் சந்
8
உலோக
மூர்த்தி
0.0625
0.0625
1/16
தீமை
ரிஷபம்
 3  இல் சந்
7
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க நன்மை
மிதுனம்
 2  இல் சந்
6
ரஜத
மூர்த்தி
0.250
0.250
¼
சுமார்
கடகம்
 1  இல் சந்
5
0.500
சுவர்ண
மூர்த்தி
0.500
1
1
மிக்க
நன்மை
சிம்மம்
 12 இல் சந்
4
உலோக
மூர்த்தி
0.0650
0.0650
1/16
தீமை
கன்னி
11 இல் சந்  
3
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை
துலாம்
 10 இல் சந் 
2
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க
நன்மை
விருச்சிகம்
9 இல்சந் 
1
ஜத
மூர்த்தி
0.250
0.250
1/4

சுமார்
தனுசு
8 இல் சந் 
    12
 
உலோக
மூர்த்தி
0.0650
0.0650
1/16
 தீமை
மகரம்
7 இல் சந்
11
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க
நன்மை
கும்பம்
 6 இல் சந்
10
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
1/2
நன்மை
மீனம்
 5 இல் சந்
9
0.500
ரஜத
மூர்த்தி
0.250
0.750
3/4
மிக்க
நன்மை




        குரு இம்முறை பொது விதிப்படி துலாம் (2), மகரம் (11), மீனம் (9), ரிம் (7), கடகம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார்.

          ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.

        சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம்.

                   துலாம் -    2 - தாமிர மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை சிறிது          குறைகிறது. 85%
                  மகரம் -  11  - தாமிர மூர்த்தியாவதால்  நன்மை சிறிது குறைகிறது. 85%

          மீனம் - 9 - ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. 85%

          ரிம் – 7 - தாமிர மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை சிறிது குறைகிறது. 80%

                   கடகம் – 5 - சுவர்ண மூர்த்தியாவதால்  முழு நன்மை அளிக்கிறார். 95%


      சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை   சிம்மம், கன்னி, விருச்சிகம்,  தனுசு, கும்பம், மேஷம்  மற்றும் மிதுனம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம்.

       சிம்மத்திற்கு  உலோக மூர்த்தியாகி சுப பலன் பெரும்பாலும் குறையும். (4) 50%

       கன்னிக்கு -  சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 80%

       விருச்சிகத்திற்கு   ரஜத மூர்த்தியாக  சுமாரான பலன்கள் ஏற்படும்.  (1) 70%

       தனுசுக்கு -  உலோக மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் பெரும்பாலும் குறையும்.(12) 60%
       கும்பத்துக்கு -  சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (10) 80%

       மேஷத்துக்கு -  உலோக மூர்த்தியாக இருப்பதால் சுப பலன்  குறையும். (8) 50%

       மிதுனத்துக்கு   ரஜத மூர்த்தியாக இருப்பதால், சுப பலன் குறையும்  (6).70%


      மூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும் போது, கடகம், கன்னி மற்றும் கும்ப  இராசிக்காரர்களுக்கு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால்  நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம். மேற்படி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி  நன்மை அளிக்கும்.     

       மிதுனம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

       ரிஷபம், துலாம், மகரம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.


       மேஷம், சிம்மம், தனுசு ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     

No comments:

Post a Comment