Search This Blog

Monday, 2 July 2018

நாடி ஜாதக ஆய்வு 28,29





நாடி ஜாதக ஆய்வு 28,29







ஜாதகம் – 27 அ - ஆ

         கீழ்கண்ட ஜாதகங்களில் ஒன்று ஜாதகரின் (27.அ) ஜனன ஜாதகம், மற்றொன்று ஜாதகர் ஆலோசனை கேட்க வந்த நேரத்துக்கு உரிய ஜாதகம் (27ஆ) ஆகும்.

சூரி,சந்
புத
சுக்,கேது


உ. ஜா. 27.அ
இராசி
குரு .(வ)
செவ்


இராகு,
சனி



         இங்கு கோசார செவ்வாய் விருச்சிகத்தில் நுழைந்துள்ளது. ஜனன ஜாதகத்தில் சனி அங்கு பூட்டப்பட்டு உள்ளார். கோசார சனி மகரத்தில் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் அங்கே உள்ளார். அவர் கேள்வி கேட்ட நாளில் செவ்வாய், சனி ஆகியோர் தங்களின் ஆட்சி வீட்டிலேயே உள்ளனர். கோசார இராகு தனுசு வீட்டில் உள்ளார். கோசார ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் கிரக யுத்தத்தில் உள்ளனர். ஆகையால், கோசாரத்தில் கேள்வி நேரத்தின் போது நெருப்பு கிரகம் செவ்வாய், புதனுடன் இணைந்து, ஜனன ஜாதக விருச்சிக இராசியில் சனி மீது வருகின்றனர். நெருப்பு கிரகமான சூரியனும் விருச்சிகத்தில் பிரவேசிக்கிறார். சூரியன், சனிக்கு பகைவர் ஆவதால், ஜாதகர் வேலை பார்த்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையை பாழாக்கியது.
        



கேது
சந்
உ. ஜா. 27.ஆ
கோசாரம்

சனி
குரு
இராகு
சூரி,செவ்
புத
சுக்


         இந்த நெருப்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் ஆகியவை மிகப் பெரிய தீ விபத்தைக் குறிகாட்டுகிறது. விருச்சிக இராசி உலோகங்களால் ஆன இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள தொழிற்சாலையைக் குறிகாட்டுகிறது. சூரியன் + செவ்வாய் + புதன் = ஜாதகர் வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட மிக அதிகமான கொள்ளை போதல், தீ வைப்பு மற்றும் கலகத்தைக் குறிகாட்டுகிறது.
ஜாதகம் – 28 அ - ஆ
         ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் குரு கடகத்தில் உள்ளார். ஜாதகருக்கு ஏற்படும் கஷ்டங்கள் சீர்பட, சமன்பட குருவின் பார்வை உள்ளதா? இல்லையா? – என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், ஜனன ஜாதகத்தில் குரு வக்ரமானதாலும், கோசார த்தில் குரு சிம்மத்தில் இருப்பதாலும் குரு பார்வை 5 ஆம் வீட்டின் மீது இல்லாததால் அவரின் கஷ்டங்கள், துன்பங்கள் சீராகாது


செவ் (வ)
23°
சனி (வ)

உ. ஜா. 28.அ
இராசி
இராகு
குரு(வ)

கேது


சந், சூரி
புத

சுக்




கேது

உ. ஜா. 28.ஆ
கோசாரம்

சனி
குரு
இராகு
சூரி
செவ், புத
சுக்

சந்

         இதையே, ஜாதகியின் ஜனன ஜாதகமாகி, செவ்வாய் 23° யில் வக்கிரமாகி உள்ளது. மிதுனத்தில் உள்ள சனியும் வக்கிர நிலை பெற்று பின் பார்வையால் செவ்வாயைப் பார்க்கிறது. ஜாதகியானதால் சுக்கிரனே ஜீவகாரகன். அதிலிருந்தே அவளது விதி நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், அவளது ஜனன ஜாதகத்தில் 28.அ. சுக்கிரன் நீசம் பெற்று அதற்கு திரிகோண இராசியில் கேதுவுடன் இணைவு பெறுகிறது. இது ஜாதகி வாழ்க்கையில் வகையாக மாட்டிக்கொண்டதை குறிகாட்டுகிறது. சுக்கிரனில் இருந்து 9 ஆம் இடத்தில் வக்கிர செவ்வாய் இடம் பெற்றுள்ளது. எனவே, சுக்கிரன் + கேது + செவ்வாய் இணைவு ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படப்போகிற சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்களைக் குறிகாட்டுகிறது. சுக்கிரன் குறிகாட்டும் ஜாதகி மற்றும் செவ்வாய் குறிகாட்டும் அவளின் கணவன், இவர்களுக்கு இடையே உள்ள தடைகளுக்கு, பிரிவினைக்குக் காரணமாகும் கேது ஆகியவை இவர்களுக்கு இடையேயான பிணக்குகளையும், பிரிவினையையும் குறிகாட்டுகிறது.
        கோசார நிலைகளைப் பார்க்கும் (28.ஆ) போது மகரத்தில் சனி, ஜனன ஜாதக (28.அ) கேது மீது வருகிறார். இது ஜாதகி பிரச்சனைகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாகப்பொகிறார் என்பதைக் குறிகாட்டுகிறது. சனிக்குப் 12 ஆம் வீட்டில் வக்கிர செவ்வாய்  உள்ளார். சுக்கிரனுக்கு 9 இல் உள்ள வக்ர செவ்வாய், பின்ஒரு இராசியில் வந்து (மேஷம் = கிழக்கு) கிழக்கு திசை இராசியான சிம்மத்தில் இணைவு பெறுகிறார். இது, கணவன் மனைவியை தனியாய் தவிக்கவிட்டு, ஓடிவிட்டதைக் குறிகாட்டுகிறது. கோசார கிரக நகர்வின் போது, கேது, ஜனன ஜாதகத்தில் மிதுனத்தில் உள்ள சனியின் மீது வரும்போது, ஜாதகிக்கும் அவள் கணவனுக்கும் இடையே சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்கள் ஏற்படுகிறது.
         ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் ஜாதகி கேள்வி கேட்க வந்த போது கோசார சந்திரன் கன்னியில் சுக்கிரன் மீது நகர்வு. சந்திரன் நகர்வுக்கும், குற்றம் சுமத்துதலுக்கும் காரணமாவதால் ஜாதகியை அவள் கணவன் தனியாக விட்டுவிட்டு ஓடிவிட்டான்.
         இரண்டாவது கேள்வி - ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் அதன் மீது கோசார சந்திரன் வரும் நிலை ஜாதகி ஒரு பெண் குழந்தைக்குத் தாய் என்பதைக் குறிகாட்டுகிறது. சுக்கிரன் மற்றும் சந்திரன் இணைவு குருவுக்கு 2 இல் இருப்பது ஜாதகியின் மகள் ஒரு மருத்துவராகவோ அல்லது இராசாயன பாடத்தில் விரிவுரையாளராகவோ ஆகும் நிலையைக் குறிகாட்டுகிறது. இந்த 2 வது கேள்விக்கு பதில் = ஜாதகியின் மகள் பிற்காலத்தில் மதிப்பு மரியாதையும் பெற்று வாழ்க்கையில் மிகப் பெரிய கௌரவத்தையும் அடைவார்.


No comments:

Post a Comment