Search This Blog

Saturday, 18 August 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19




குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 


மகரம்





( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
                 கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட அலைந்து கொண்டே இருப்பவரும், சாதிக்கும் வலிமையும், பலன் கருதி உதவுபவருமான மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு  புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று இலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவிந்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இதுவரை நீங்கள் செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் யோகபலன்களை அனுபவிக்க்க் காத்திருக்கிறீர்கள். 3, 5, 7 ஆகிய பாவங்களைப் பார்வை செய்வதால் இரு பாலருக்கும் தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். சீக்கிரமே குழந்தை பாக்கியமும் ஏற்படும். அன்பும், பாசமும் மேலோங்க தம்பதிகளின் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகத் திகழும். சுற்றமும், நட்பும் ஒற்றுமையுடன் உங்கள் கரத்துக்கு வலுச் சேர்ப்பர். பொது வாழ்வில் பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு, நட்பும் பலப்படும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும்.  இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, பின்னர் இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். மகான்களின் தரிசனம் கிடைத்து லௌகீக வாழ்க்கை சிறக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான வில்லங்கங்கள் ஒழிந்து உங்கள் கைக்கு வந்து சேரும். மாணவ மணிகளின் கல்வித் தரம் உயரும். குடும்பத்துடன் இனிய புனித பயணங்கள் மேற் கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும்.

       குரு தனது 5 ஆம் பர்வையால் தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் வங்கிக் கடன்களில் இருத்த பொன் நகைகள் மீட்கப்படும். சிலரின் சொந்த வீட்டுக் கனவுகள் சீக்கிரமே நனவாகும். ஆய்வு தொடர்பான உயர் கல்வியில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களின் அறிவு விருத்தியாகி சிறப்பாக செய்து முடிப்பர். சகோதர வகையில் புதிய முயற்ச்சிகள் வெற்றி தரும். முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும், தாய்க்குப் புதிய பயணங்களும் ஏற்படும்.

       குரு தனது 7 ஆம் பார்வையால் 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும். பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் தன வருமானம் வீடு தேடிவரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.  அரசியலில் உள்ளவர்கள் புதிய உயரிய பதவிகளை எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் திறமைகள் வெளிப்பட்டு, பரிசுகள் பலபெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர் அதன் காரணமாக வீட்டில் சந்தோஷம் நிலவும்.

       குரு தனது 9 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக  தம்பதிகளின் உறவுகளில் பரஸ்பர சந்தோஷம் நிலவும். குடும்ப ஒற்றுமை ஓங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தந்தை வழியில் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டு ஒப்பந்தங்கள், பிராயாணங்கள் ஏற்படும். 

                    மகர இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு பலன்களின் வகையில் இவர்களுக்கு மிக்க நன்மையான பலன்களே ஏற்படும். 85%


     ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.




Thursday, 16 August 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - தனுசு




குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - தனுசு


தனுசு




( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
              தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், சுகவான், தனவான் என வான் போல் உயர்ந்த நாணயமும், நானயமும் உடைய தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி  தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு, புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று விரயபாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். எவ்வளவு பொருள் வரவுகள் இருந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். வீடு அல்லது கட்டிட சம்பந்தமான செலவுகள் ஏற்படும். சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.  தொலை தூரப் பயணங்கள் மூலமான செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். மூத்த சகோதரர்களுக்குப் பல வழிகளிலும் நல்ல வருமானம் இருக்கும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. வேளாவளைக்கு வாய்க்கு ருசியான உணவு கிடைக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பிறருக்குப் பிணையாகக் கையெழுத்துப் போட்டு வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். கடன் வாங்கிக் கடல் வாணிபம் செய்தாலும் நஷ்டங்கள் ஏற்படும். அரசுடன் தேவையற்ற பகை உண்டாகும். சுப விரயமும், அசுப விரயமும் மாறிமாறி ஏற்படும். கௌரவ பங்கத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டு தோல்வி அடைய நேரும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் கைபணம் சமயத்தில் உதவாது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். ‘வன்மை யுற்றிட இராவணன் முடி பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்என்ற பழம் பாடலுக்கு ஏற்ப பதவி இழக்க நேரும். வேலைமாற்றங்கள் ஏற்படலாம்.
     குரு 5 ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக வீடு, மனை வாங்கவோ, கட்டவோ நல்ல யோகம் ஏற்படும். புதிய பாடப் பிரிவுகளை கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைய சகோதரர்களுக்கு தனவருமானம் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாயாரின் மதிப்பும், மரியாதையும் கூடும். தந்தையால் நடத்தப்படும் வழக்குகள் வெற்றி அடையும். தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும். விவசாயத் தொழிலில் இலாபம் ஏற்படும்.

       குரு 7 ஆம் பார்வையாக 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகள் மறைவர். எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். ஆயினும், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுப்பதோடு அவமானப்படுத்தவும் செய்பவர்கள். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும். தாய் தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றியும் ஆடையும்.

       குரு 9 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். தெய்வீகப் பயணங்களால் பசவிரயங்கள் கூடும். கோர்ட் கேஸுகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் மீண்டும் நடைபெறும். வட்டி யில்லா கடன் உதவிகள் கிடைக்கும். பிறரின் பணங்கள் கைவந்து சேரும். இன்ஷியூரன்ஸ், லாட்டரி, பந்தயங்கள், போட்டிகள் மூலமாக எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும், புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக, நிதானமாக ஓட்டிப் பழகவேண்டும். 

தனுசு இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி நற்பலன்கள் ஏற்படுவது அரிது. 60%


      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.


Monday, 13 August 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19



குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19


விருச்சிகம்



( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட சோர்விலாத மனத்தையும், இனிமையான பேச்சையும், கேட்பவர்களுக்கு மறுக்காது கொடுப்பவருமான  விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி  தரும்  பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 முதல் சஞ்சரிக்கிறார். ‘ ஜென்ம இராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும் ‘ – என வரும் பழம் பாடல் படி இராம பிரானுக்கே அந்த கதி என்றால் நமக்கு. அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு பள்ளமென அலைந்து திரிய நேரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. உங்கள் செயல்பாடுகளில் எப்போதும் ஓர் அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இராஜகோபமும், பொன், பொருள் இலாபமின்மை ஆகியவை ஏற்படும். தகவல் தொடர்பு ஐ. டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்பட்டு, வெளிநாடு செல்வர். குழந்தை இல்லாதவர்கள் புதிதாக குழந்தை தத்தெடுக்க சரியான காலமாகும். சிலருக்குக் குழந்தைகளின் திறமையான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். அடிக்கடி மன மாற்றங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதன் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் முகவும் இணக்கமான சூழல் நிலவும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தெய்வ அனுகூலமும், தெய்வீக புருஷர்களை சந்தித்து, இவர்களின் அருளாசி பெறுவீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.   

       குரு தனது 5 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய பாவங்களைப் பார்வை செய்வதால்  மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் பாதிப்புகள் குறைந்து, சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். தெய்வீக கைங்கரியங்கள் செய்து தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். காதல் விவகாரங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும்   நிவர்த்தியாகும்.

       குரு தனது 7 ஆம் பார்வையாகக் களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஓங்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான உறவு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இன்பமான, இணக்கமான வாழ்க்கை வாழ்வார்கள்.  புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விக்கான பிறரின் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

       குரு தனது 9 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் சமுதாயத்துக்கும், மக்களுக்குமான பொதுச் சேவைகளில் ஈடுபட்டுனுயர்வு அடைவார்கள். கோவில் திருப்பணுகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவர். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள், விவசாயம் ஆகியவை  மேம்பாடு அடையும். இலாபமும் கூடும்.  


 விருச்சிக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.  சுமாரான பலன்களே ஏற்படும். 70%
       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.


Friday, 10 August 2018

குரு பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - துலாம்



குரு பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - துலாம்

துலாம்


(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை விளம்பியும், சுகந்த பரிமளப் பிரியரும், வினோதமான குணமுள்ளவருமான துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       .
       துலா இராசிக்கு தைரிய, ருண பாவங்களுக்கு அதிபதியான குரு விருச்சிக இராசிக்கு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் காலம். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் வருமானங்கள் பெருகி, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். தேவதை போன்ற அழகிய மனைவி அமைவாள். குழலைவிட இனிதான குரலுடைய குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும் புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றம் அடைவர். அந்தஸ்து, கௌரவமும் கூடும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுச் சேவையில் ஈடுபட்டோருக்கு இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். மக்கள் பணியில் உள்ளவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடிவரும். அதன் காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும். சிலருக்கு தெய்வீக அருளால் கோவிலில் அறங்காவலர் போன்ற பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தர்ம காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும்.    
       குரு 5 ஆம் பார்வையாக ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து குடும்ப ஆரோக்கியம் குறையும். உடன் பிறப்புக்களுக்கு யோகம் ஏற்பட்டு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். அன்பு தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். உங்கள் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும்.

        குரு 7 ஆம் பார்வையாக  ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தீர்க்க முடியாது என்று நினைத்த நோய்கள் மருத்துவர்கள் உதவியுடன் நிரந்தரமாக சரியாகும்.  மங்கையருக்கு நிச்சியக்கப்பட்ட மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும்.  வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.  பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  நல்ல செய்திகள் கிடைக்கும்.   

       குரு தனது 9 ஆம் பார்வையால் கர்ம பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல உயர்வான வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, சிறப்பான பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் குவியும். புதிய வீடு, மனை  வாங்கும் யோகங்களும் அமையும்.  விவசாயிகள், தொழில் துறையைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பர்.

துலா இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். 85%           

       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.