Search This Blog

Thursday, 16 August 2018

குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - தனுசு




குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - தனுசு


தனுசு




( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
              தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், சுகவான், தனவான் என வான் போல் உயர்ந்த நாணயமும், நானயமும் உடைய தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி  தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு, புரட்டாசி மாதம் 18 ஆம் நாள், வியாழக் கிழமை, 04 – 10 – 2018 அன்று விரயபாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். எவ்வளவு பொருள் வரவுகள் இருந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். வீடு அல்லது கட்டிட சம்பந்தமான செலவுகள் ஏற்படும். சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.  தொலை தூரப் பயணங்கள் மூலமான செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். மூத்த சகோதரர்களுக்குப் பல வழிகளிலும் நல்ல வருமானம் இருக்கும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. வேளாவளைக்கு வாய்க்கு ருசியான உணவு கிடைக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பிறருக்குப் பிணையாகக் கையெழுத்துப் போட்டு வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். கடன் வாங்கிக் கடல் வாணிபம் செய்தாலும் நஷ்டங்கள் ஏற்படும். அரசுடன் தேவையற்ற பகை உண்டாகும். சுப விரயமும், அசுப விரயமும் மாறிமாறி ஏற்படும். கௌரவ பங்கத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டு தோல்வி அடைய நேரும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் கைபணம் சமயத்தில் உதவாது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். ‘வன்மை யுற்றிட இராவணன் முடி பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்என்ற பழம் பாடலுக்கு ஏற்ப பதவி இழக்க நேரும். வேலைமாற்றங்கள் ஏற்படலாம்.
     குரு 5 ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக வீடு, மனை வாங்கவோ, கட்டவோ நல்ல யோகம் ஏற்படும். புதிய பாடப் பிரிவுகளை கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைய சகோதரர்களுக்கு தனவருமானம் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாயாரின் மதிப்பும், மரியாதையும் கூடும். தந்தையால் நடத்தப்படும் வழக்குகள் வெற்றி அடையும். தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும். விவசாயத் தொழிலில் இலாபம் ஏற்படும்.

       குரு 7 ஆம் பார்வையாக 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகள் மறைவர். எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். ஆயினும், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுப்பதோடு அவமானப்படுத்தவும் செய்பவர்கள். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும். தாய் தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றியும் ஆடையும்.

       குரு 9 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். தெய்வீகப் பயணங்களால் பசவிரயங்கள் கூடும். கோர்ட் கேஸுகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் மீண்டும் நடைபெறும். வட்டி யில்லா கடன் உதவிகள் கிடைக்கும். பிறரின் பணங்கள் கைவந்து சேரும். இன்ஷியூரன்ஸ், லாட்டரி, பந்தயங்கள், போட்டிகள் மூலமாக எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும், புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக, நிதானமாக ஓட்டிப் பழகவேண்டும். 

தனுசு இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது மற்றும் சிறப்பு விதிகளின்படி நற்பலன்கள் ஏற்படுவது அரிது. 60%


      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.


No comments:

Post a Comment